சிரித்த முகத்துடன் இருப்போம் - மீ. விசுவநாதன்

10 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
May 19, 2026, 6:52:20 PM (4 days ago) May 19
to Santhavasantham, M. Viswanathan
"சிரித்த முகத்துடன் இருப்போம்"
                  (மீ. விசுவநாதன்)

சிரித்த முகத்துடன் இருப்போம் - நட்பு
சேர்ந்த ஒளியுடன் கலப்போம்
விரித்த மலரென மணப்போம் - எந்த
வீணாம் கவலையும் துறப்போம் 

முடிந்த வரையிலே உழைப்போம் - பிறர்
துன்பம் துடைத்திட விரைவோம் 
கடிந்த மொழிகளைக் களைவோம் - நம்
கனிந்த உணர்வால் இணைவோம்

பிறரின் பொருளினைக் கொள்ளோம் - மன
பேத இருளினைக் கொல்வோம்
அறவோர் துணைவழிக் கொள்வோம் - புவி
அமைதி நிலைபெறச் செய்வோம்.

உயிர்கள் யாவுமே தெய்வம் - அதை
உயர்ந்து வணங்கிடல் இன்பம்
அயலாய் எதுவுமே இல்லை - இது
அன்பின் அனுபவ எல்லை. 
                        (20.05.2026)

Siva Siva

unread,
May 19, 2026, 7:23:46 PM (4 days ago) May 19
to santhav...@googlegroups.com
Nice.

1)
I presume the absence of mOnai in Stanza-2 Line-1 is intentional.

2)
/ உயிர்கள் யாவுமே தெய்வம் - அதை
உயர்ந்து வணங்கிடல் இன்பம் /

"உயிர்கள்" என்று பன்மையில் சொன்னபின் "அதை" என்றது ஒருமைபன்மைமயக்கம் என்று கருதவேண்டுமா?

V. Subramanian

Arasi Palaniappan

unread,
May 20, 2026, 7:52:01 AM (3 days ago) May 20
to சந்தவசந்தம், M. Viswanathan
அருமை அண்ணா!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vC3XrDov98EU4gA2Hj2uowp377w1JG3GLHkUOFgqQUTg%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
May 20, 2026, 9:42:05 PM (3 days ago) May 20
to Arasi Palaniappan, சந்தவசந்தம்
நன்றி.
Reply all
Reply to author
Forward
0 new messages