கவிஞர் ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கான விருதுக் கவிதை
------------------------------------------------------------------பரியேறும் அழகர் போல் -- இவர்
பாட்டுக்கள் பவனி வரும் !
சரியான நேரத்தில்
சந்தங்கள் துள்ளி விழும் !
வரிவரியாய் இலக்கியமும் , (இவர்)
விளக்கத்தால் மெருகேறும் ! ஹரிகிருஷ்ணன் எனும் புலவர்-
இவர்புலமை உலகறியும்!!
கம்பரைத் தன் தமிழாலே ,
கற்பிக்கும் அழகாலே ,
நம்மனதை ஈர்த்திடுவார் !
நாகநந்தி மாணாக்கர்!
சும்மாவா விருது பெற்றார்.?! -தமிழ்ச்
சூரியனாய் உலா வந்தார் !!
அம்மம்மா , தமிழுக்காய்
அளப்பரிய தொண்டு செய்தார் !
வள்ளுவரும் ,பாரதியும் ,
வான் பறந்த அனுமாரும் ,
உள்ளபடி ஹரிதமிழால்
உவகையில் மிதந்தார்கள் !!
துள்ளிவரும் தமிழ்ப் பண்கள் ,
துவளாத கவிநெஞ்சம் ,
அள்ளித்தான் கற்பித்தார் !
ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் !
கலகலப்பாய்த் தமிழ்ப் பேசி ,
காந்தமாக இழுத்திடுவார் !
பலகாலம் முன்பிருந்தே,
பதிவேற்றிக் ,கணினியிலே, படைப்புகள் வைத்திட்டார் ! பொக்கிஷமாய் காத்திட்டார் !
நலமுடனே இறையருளால்,
நம் கவிஞர் வாழ்ந்திடுவார் !
உலகெங்கும் அவர் ரசிகர்
உளமாறப் பிரார்த்தியுங்கள் !!
என்றும் வணக்கங்களுடன் ,
🙏🙏🙏🙏🙏🙏🙏
சுதா வேதம்