173
அவர் மனைவி செல்லம்மா சொல்லியிருப்பது:
"கூடுமான வரையில் சர்க்கார் கையில் அகப்படாமல் தேச வி
டுதலைக்கு வேலை செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலா¡ன
தேசபக்தர்களின் நோக்கமாக இருந்தது. புதுச்சேரிக்குச்
சென்றால் பிரிட்டிஷ் சர்க்காரின் சட்டத்துக்குள் அகப்படாமல்
வேலை செய்யலாம் என்று அவருடைய நண்பர்கள் யோசனை
சொன்னார்கள். அதற்கு ஒப்பி, குவளை கிருஷ்ணமாச்சாரியாரி
ன் ஷட்டகர் சிட்டி குப்புசாமி அய்யங்காருக்கத் தமது சினேகிதர்
கொடுத்த கடிதத்தை எடுத்துக் கொண்டு பாரதியார் புதுவைக்குப்
புறப்பட்டார். சைதாப்பேட்டையிலிருந்து புறப்பட்டு, ரயிலேறி,
இரவு முழுவதும் துயிலின்றிக் கண்விழித்துச் சோர்ந்து புதுவை
வந்து சேர்ந்தார்."
> --பாரதியார் சரித்திரம், செல்லம்மா பாரதி
--Police Archives Volume XXI, 1908.
எப்படிப் புதுச்சேரி சென்றார் என்பதைப் பற்றி பாரதியின் நண்பர் நீலகண்ட பிரமச்சாரி கூறியுள்ளதாவது: “வழக்கமான தனது கிராப்புத் தலையை வைதீகக் குடுமித் தலையாக மாற்றிக் கொண்டு, எழும்பூரில் ரயிலேறினால் தெரிந்து விடுமென்று, சைதாப்பேட்டையில் ரயிலேறிப் புதுவை போய்ச் சேர்ந்தார். அவரது குடும்பம் சென்னையிலேயே இருந்தது.”
பாரதியார் புதுவை சென்றபோது இரயிலில் அவர் மனம் என்ன பாடுபட்டது என்பதைப் பாரதியின் மனைவி செல்லம்மா கூறுகிறார். “பாரதியாருக்கு மனதில் ஏதேனும் ஒன்று தோன்ற ஆரம்பித்து விட்டால், அது கொஞ்ச நேரத்தில் போகாது. இரயில் ஏறிய பிறகும் போலீசாரிடம் அகப்படாமல் புதுவை போய்ச் சேர வேண்டுமே என்று கவலைப்பட்டாராம். இரயிலில் யார் வந்து ஏறினாலும், டிக்கெட் பரிசோதகர் வந்தாலும், ஸ்டேஷன் மாஸ்டர் வந்தாலும், போலீசாரால் அனுப்பப்பட்டுத் தம்மைக் கவனிக்க வந்த நபர்களாகவே தோன்றுமாம். பின்பு அச்சமுற்றோன் அழிவான் என்ற மொழிகளை ஞாபகப்படுத்தி மனத்தைத் தேற்றிக் கொள்வாராம்.”
பாரதி சென்னையை விட்டுச் சென்றது 26 ஆகஸ்ட் 1908 அன்று. பாரதியைக் கண்காணித்த சிஐடி எழுதி
வைத்திருக்கும் குறிப்பு இது:
"CID. Madras city. 28.9.1908. This individual left Madras with his family for
his native place in Tinnevely on the 26.8.1908."
சென்னையிலிருந்து, மனைவியை அழைத்துக் கொண்டு திருநெல்வேலிக்குத்தான் முதலில் இரயிலேறியிருக்கிறார்.
பிறகு 5.9.1908 அன்று போலிஸ் டிஐஜி-யின் Personal Assistant அரசின் தலைமைச் செயலாளருக்கு
(Chief Secretary to Government, Oothacamund( ரகசியக் குறிப்பு ஒன்று எழுதியுள்ளார்
(Advance copy of a Paragraph of Political Abstract. P G Confidential,
Supplement No.36. dated 12th September 1908)
CID. An Officer of this Department report that this individual* who is the proprietor of Indian Printing Agency, Broadway and who is
believed to be the real owner of Tamil paper India, and C. Subramania Bharathy have left Madras for Pondicherry fearing arrest and prosecution and that they do not propose to
return for some time."

