பழந்தமிழ்ச் சுவடி - மீ. விசுவநாதன்

4 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Mar 17, 2026, 4:15:58 PM (21 hours ago) Mar 17
to Santhavasantham, M. Viswanathan
"பழந்தமிழ்ச் சுவடி"
      (மீ. விசுவநாதன்)

ஓலைக் குடிசை முதல்
உயர் சமஸ்தானம் வரை
ஊரூராய் அலைந்தது
ஒரு
பழந்தமிழ்ச் சுவடி!

தமிழுக்கு
அகமும் புறமுமாய்
மணிமேகலையும்
சிலம்பும்
தொகை பலவும்
பூட்டிப் 
பரிபாடல்
இசைத்த
கிழந்தமிழ்ச் சுவடி
"உவேசா" அன்றி எவடி?

ஒரு பூவுக்காய்
தமிழ்ச் சோலைத் 
தெரு பறந்த தேனீ!
விருதுக்காய்
பரக்காத எளிய ஞானி!

தமிழாசான் பிள்ளையிடம்
தமிழ்ப் பிச்சை ஏற்று
தரணிக்கே
தமிழ்ப்
பசி தீர்த்த ஊற்று!

தன்னடக்கப் 
பதிவாக
இன்தமிழின்
நதியாகப் பாய்ந்த 
கால வெள்ளப்
பொன் சரித்திரம்
உ.வே.சா.வின்
"என் சரித்திரம்!."
       (17.03.2026 22.38 pm)

Rajagopalan Soundararajan

unread,
Mar 17, 2026, 5:39:43 PM (20 hours ago) Mar 17
to சந்தவசந்தம்
ஒரு பூவுக்காய்
தமிழ்ச் சோலைத் 
தெரு பறந்த தேனீ!
விருதுக்காய்
பரக்காத எளிய ஞானி!

மிக அழகான, ஆழமான வரிகள்.
மலரின் வாசம் அறிந்தே - சிறகு விரிக்கும் அந்தத் தேனீ! மனதின் வாசம் அறிந்தே - மௌனம் தரிக்கும் இந்த ஞானி!
ஸௌந்தர் 

Kaviyogi Vedham

unread,
Mar 17, 2026, 9:22:33 PM (16 hours ago) Mar 17
to santhav...@googlegroups.com
abaram
yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-tJAn3G%2BtHVO9B5Rpvzp6UHvjnUsMJiYbS57GwCD6oaYg%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages