ஈற்றடிகள்

14 views
Skip to first unread message

GOPAL Vis

unread,
Mar 21, 2026, 9:30:00 PM (2 days ago) Mar 21
to santhav...@googlegroups.com
எனக்கும் சில ஈற்றடிகள் தோன்றுகின்றன. ஆயினும் அவற்றை நான் இன்னும் 
வெண்பாக்களில் ஏற்ற முயன்றேன் அல்லேன். 
1) கயலுக்கு நீந்தும் கலை!
2) கனவிற் கனலுங் கனல்?
3) ஆசை அடங்கா அலை!
4) அன்புக்(கு) அடங்கும் அது!
5) உள்ளம் உருக்கும் உரை!
6) இரங்கும் இயல்பே இறை!
7) இரங்கா(து) இராதாங்(கு) இறை!
8) நன்றி நவிலவே நா!
9) நாணநீ நன்மை நவில்!
10) ஈட்டிய தோர்பங்கை ஈ!

நல்வாழ்த்துகள்
கோபால். 

Siva Siva

unread,
Mar 21, 2026, 10:13:45 PM (2 days ago) Mar 21
to santhav...@googlegroups.com
Good.
My general thinking is that one should write at least one veNbA - for a last line that one plans to propose - before posting that last line for others to try.

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Mar 21, 2026, 10:14:12 PM (2 days ago) Mar 21
to santhav...@googlegroups.com
நல்ல ஈற்றடிகள்

கற்றுக் கொடுக்காமல்  கைவருமே  நம் முள்ளே
உற்ற பதிவில்  உளகலைகள் -  முற்றும்
இயலாமல் போமா   இயல்பாய்ப் புனல்சேர்

கயலுக்கு நீந்தும் கலை!

தூங்கும் பொழுதில் தொடங்கித் தொடர்கின்ற
பாங்குக் கனவெல்லாம் பாவனைதான்- ஆங்கே
நனவைப் போல்  பற்றி  நடக்குமே  சூடு
கனவில் கனலும் கனல்

ஆசை அடங்கா அலையாய்த் தொடர்ந்தாலும்
வாசியில் கும்பம் வசப்பட்டால்- ஓசையின்றித்
தன்னளவில்  கொஞ்சம் தளர்ந்தே இறையிடம்கொள்
அன்பில் அடங்கும் அது

இலந்தை

On Sat, Mar 21, 2026 at 9:30 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtsScfbHbo%2BHd_U964_8kB6fJWUypFX2jv-ZY-j%2B%3DkR9qQ%40mail.gmail.com.

GOPAL Vis

unread,
Mar 21, 2026, 10:24:06 PM (2 days ago) Mar 21
to santhav...@googlegroups.com
I will try them along with others. 
Gopal. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Mar 21, 2026, 10:46:12 PM (2 days ago) Mar 21
to santhav...@googlegroups.com
ஆகா! வீட்டு வேலை (home work) கிடைத்து விட்டது. நேரக் கட்டுப்பாடு இல்லை என்பதனால் கொஞ்சம் அசை போடலாம்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 22, 2026, at 07:44, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Parthasarathy S

unread,
Mar 22, 2026, 12:36:08 AM (yesterday) Mar 22
to santhav...@googlegroups.com
அடியேனின் வெண்பா - அன்பினில் அடங்கும் அது என்ற ஈற்றடிக்கு

தெம்புடைத் தோரே திறத்தரோ? தீர்ப்பரோ?
அம்புவி வாழ்வும் அழிவுறுமோ - பம்மாதே
இன்பன் இறைவன் இதயம்வை ஈடிலா

அன்பில் அடங்கும் அது

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

GOPAL Vis

unread,
Mar 22, 2026, 12:49:37 AM (yesterday) Mar 22
to santhav...@googlegroups.com
1) கயலுக்கு நீந்தும் கலை!
அறிந்தோர்க் கறிவுரை ஆற்றாதே கற்றுச்
செறிந்த அறிவின் செருக்கால் - அறிஞர்
இயல்பாய்ப் பிறப்பதுண்(டு) இங்கார் உரைப்பார்
கயலுக்கு நீந்தும் கலை!

கோபால்
[22/03/2026]

GOPAL Vis

unread,
Mar 22, 2026, 2:12:39 AM (yesterday) Mar 22
to santhav...@googlegroups.com
2) கனவிற் கனலுங் கனல்!

வேதம் பயின்றவன் வேறொன்றைப் பற்றினேன்
காதம் கடந்து கருகுகிறேன் - ஓத
மனமுண்டு மீட்டு மறந்ததைப் பற்றல் 
கனவிற் கனலுங் கனல்!

கோபால்
[22/03/2026]

Parthasarathy S

unread,
Mar 22, 2026, 2:27:24 AM (yesterday) Mar 22
to santhav...@googlegroups.com
அடியேனின் வெண்பா - ஈற்றடி கயலுக்கு நீந்தும் கலை

தேவை யறிந்து தெருளிடுவான் வையத்தில்
யாவும் அளந்திடுவான் யாருக்கும் - ஆய்வீர்
வயலில் வளார்ச்சி விரிசிறகு புள்ளாம்

கயலுக்கு நீந்தும் கலை
புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Mar 22, 2026, 2:46:50 AM (yesterday) Mar 22
to santhav...@googlegroups.com
3) ஆசை அடங்கா அலை!

நிறைவுபெறா தொன்றுண்டேல் நிச்சயமஃ(து) ஆசை!
குறைப்பட்டுக் கொல்லாமற் கொல்லும்! - இறைவனுக்கும்
பூசைசெய ஆசையறு! பூவடியில் பத்திமிகு!
ஆசை அடங்கா அலை!

கோபால்
[22/03/2026]

GOPAL Vis

unread,
Mar 22, 2026, 5:35:51 AM (yesterday) Mar 22
to santhav...@googlegroups.com
4) அன்புக்(கு) அடங்கும் அது!

புயல்போலச் சிங்கமுகன் புகைவைத் தணிக்க
முயல்போல் மழலை முறுவலுக்(கு) இயன்றது!
வன்மைக்(கு) அடங்கா மதமோ வெறிக்குணமோ
அன்புக்(கு) அடங்கும் அது!

கோபால்
[22/03/2026

GOPAL Vis

unread,
Mar 22, 2026, 5:56:33 AM (yesterday) Mar 22
to santhav...@googlegroups.com
அரிய வெண்பாக்கள். 
கயலுக்கு நீந்தும் கலைபோல் வருமோ
அயர்விலும் வெண்பா அலை!

GOPAL Vis

unread,
Mar 22, 2026, 6:00:44 AM (yesterday) Mar 22
to santhav...@googlegroups.com
அழகான வெண்பா!
கோபால்

On Sun, Mar 22, 2026 at 10:06 AM Parthasarathy S <par...@goodearth.org.in> wrote:
அடியேனின் வெண்பா - அன்பினில் அடங்கும் அது என்ற ஈற்றடிக்கு

தெம்புடைத் தோரே திறத்தரோ? தீர்ப்பரோ?
அம்புவி வாழ்வும் அழிவுறுமோ - பம்மாதே
இன்பன் இறைவன் இதயம்வை ஈடிலா
அன்பில் அடங்கும் அது

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

On Sat, Mar 21, 2026 at 9:30 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
எனக்கும் சில ஈற்றடிகள் தோன்றுகின்றன. ஆயினும் அவற்றை நான் இன்னும் 
வெண்பாக்களில் ஏற்ற முயன்றேன் அல்லேன். 
1) கயலுக்கு நீந்தும் கலை!
2) கனவிற் கனலுங் கனல்?
3) ஆசை அடங்கா அலை!
4) அன்புக்(கு) அடங்கும் அது!
5) உள்ளம் உருக்கும் உரை!
6) இரங்கும் இயல்பே இறை!
7) இரங்கா(து) இராதாங்(கு) இறை!
8) நன்றி நவிலவே நா!
9) நாணநீ நன்மை நவில்!
10) ஈட்டிய தோர்பங்கை ஈ!

நல்வாழ்த்துகள்
கோபால். 

-- 

S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

--

GOPAL Vis

unread,
Mar 22, 2026, 6:05:05 AM (yesterday) Mar 22
to santhav...@googlegroups.com
தெருளிடுவான் = ?
கோபால்

--
S. Parthasarathy

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Mar 22, 2026, 6:07:53 AM (yesterday) Mar 22
to santhav...@googlegroups.com
திருத்தம்:
சிங்கமுகன் --> சிங்கன்

Parthasarathy S

unread,
Mar 22, 2026, 6:47:51 AM (yesterday) Mar 22
to santhav...@googlegroups.com
அடியேன். தெருள்- ஞானம். ஞானத்தை அளிப்பான் என்ற பொருளில் அமைத்தேன். தாஸன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
S. Parthasarathy
 98441 24542/9980794542

GOPAL Vis

unread,
Mar 22, 2026, 12:43:19 PM (20 hours ago) Mar 22
to santhav...@googlegroups.com
அடியேன். தெருள்- ஞானம். ஞானத்தை அளிப்பான் என்ற பொருளில் அமைத்தேன். தாஸன்

செய்வான்/செய்திடுவான் என்பது போன்ற அமைப்பானால்,
தெருள்வான்/தெருளிடுவான், யானறிந்த வரை தெளிவு பெறுவான்
என்று பொருள் பெறும். நீங்கள் தெருள் இடுவான் என்று எண்ணி
எழுதினீர்களோ?
கோபால். 

On Sun, Mar 22, 2026 at 4:17 PM Parthasarathy S <par...@goodearth.org.in> wrote:
அடியேன். தெருள்- ஞானம். ஞானத்தை அளிப்பான் என்ற பொருளில் அமைத்தேன். தாஸன்

GOPAL Vis

unread,
Mar 22, 2026, 10:42:47 PM (10 hours ago) Mar 22
to santhav...@googlegroups.com
5) உள்ளம் உருக்கும் உரை!

கல்விக் கழகு கனிவாதல் காவியத்தின்
சொல்விற் றெளியோரைச் சோர்வாக்கல் இல்லையாம்!
கள்ளங் கபடற்ற கல்லார்வா யும்பிறக்கும்
உள்ளம் உருக்கும் உரை!

கோபால்
[23/03/2026

Parthasarathy S

unread,
Mar 22, 2026, 11:38:49 PM (9 hours ago) Mar 22
to santhav...@googlegroups.com
ஆமாம் அடியேன்

On Sun, 22 Mar 2026 at 22:13, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
அடியேன். தெருள்- ஞானம். ஞானத்தை அளிப்பான் என்ற பொருளில் அமைத்தேன். தாஸன்

செய்வான்/செய்திடுவான் என்பது போன்ற அமைப்பானால்,
தெருள்வான்/தெருளிடுவான், யானறிந்த வரை தெளிவு பெறுவான்
என்று பொருள் பெறும். நீங்கள் தெருள் இடுவான் என்று எண்ணி
எழுதினீர்களோ?
கோபால். 

On Sun, Mar 22, 2026 at 4:17 PM Parthasarathy S <par...@goodearth.org.in> wrote:
அடியேன். தெருள்- ஞானம். ஞானத்தை அளிப்பான் என்ற பொருளில் அமைத்தேன். தாஸன்

-- 
S. Parthasarathy
 98441 24542/9980794542

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
1:57 AM (7 hours ago) 1:57 AM
to santhav...@googlegroups.com
அங்ஙனமாயின், தெருளருள்வான், தெருள்தருவான்/தெருடருவான்
போன்றிருப்பின் இன்னும் எளிமையாக விளங்கும் என்று எனக்குப் 
படுகிறது. 
நல்வாழ்த்துகள்
கோபால். 

GOPAL Vis

unread,
5:21 AM (4 hours ago) 5:21 AM
to santhav...@googlegroups.com
6) இரங்கும் இயல்பே இறை!

தவற்றுக்குத் தண்டம் தவறா தெனவே
எவரையும் காயும் இயல்புடைத் தவனும்
கரங்குவியக் கண்டு கருணையே ஆகி
இரங்கும் இயல்பே இறை!

கோபால்
[23/03/2026]

GOPAL Vis

unread,
5:25 AM (4 hours ago) 5:25 AM
to santhav...@googlegroups.com
திருத்தப் பட்ட வெண்பா

6) இரங்கும் இயல்பே இறை!

தவற்றுக்குத் தண்டம் தவறா தெனவே
எவரையும் காயும் இயல்புற் றவனும்
கரங்குவியக் கண்டு கருணையே ஆகி
இரங்கும் இயல்பே இறை!

கோபால்
[23/03/2026]

Parthasarathy S

unread,
7:28 AM (2 hours ago) 7:28 AM
to சந்தவசந்தம்
அடியேனின் உள்ளம் உருக்கும் உரை  என்ற ஈற்றடிக்கான வெண்பா

அந்திமத்தில் பக்தனை யான்நினைப்பன் என்றிட்டுத்
தந்தையும் கேழலாய்த் தாய்க்குரைத்தான் - முந்தைவினை
வெள்ளம் முடிக்குமுன் வீதலின்றி இன்றுகொண்டோம்

உள்ளம் உருக்கும் உரை!

அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்  என்ற வராஹ சரம ஸ்லோகத்தை ஒட்டி எழுதப்பட்ட வெண்பா

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

GOPAL Vis

unread,
8:47 AM (20 minutes ago) 8:47 AM
to santhav...@googlegroups.com
வெண்பா நன்று. 
அந்திமத்தில் வீதலின்றி - இறப்பில்லையேல் அந்திமத்தின் பொருள் என்ன?
முந்தை வினைகள் அனைத்தும் கரையும் வரை உலக வாழ்க்கையா?
நயாமி பரமாம் கதிம் இங்கு தொடப் பட்டதா?
கோபால். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages