தை ஹஸ்தம். கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரம்

11 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Feb 6, 2026, 2:33:21 AM (22 hours ago) Feb 6
to santhav...@googlegroups.com
இன்று தை ஹஸ்தம். ஸ்ரீமாந் கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரம். அம்மகானின் பாதத்தில் இவ்விரண்டு அறுசீர் ஆசிரியப்பாவையிட்டு வணங்குகிறேன் .

கூரந் தனிலே குடியமரும்
                 கூரத் தாழ்வான் பதமதையே
ஆரத் தழுவி அகந்தையற
                அழுகண் ணீரில் நனைப்பதுவே
தீர மனதைத் தெளிவாக்கித்
                  திறமாய்க் குருவின் பதம்சேர்க்கும்
கோரக் கலியின் கொடுமையறக்
                   குருவை யரணாய்க் கொள்வோமே



மடியில் கனமே இல்லாதான்
                 மனமும் வாக்கும் செயலொன்றான்
விடியும் வாழ்வாய் விழிதந்தான்
                  வணங்கும் துறையை வாழ்வித்தான்
நொடியும் அடிமை நிலைமாறான்
                    நலமே பகைக்கும் நாடிடுவான்
முடியும் வஞ்ச முக்குறும்பும்
                    முன்வை அவன்தாள் முடியதிலே

_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

--
S. Parthasarathy

+91 98441 24542/9980794542

Ram Ramakrishnan

unread,
Feb 6, 2026, 9:40:17 AM (15 hours ago) Feb 6
to santhav...@googlegroups.com
அருமை, திரு. பார்த்தா.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 6, 2026, at 02:33, Parthasarathy S <spart...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNR9PciPFqgsYBEfEabX_-NOE3DVWABfmfsNxBNsgjKWD75_Q%40mail.gmail.com.

Parthasarathy S

unread,
Feb 6, 2026, 10:36:29 AM (14 hours ago) Feb 6
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்!



--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

Siva Siva

unread,
Feb 6, 2026, 10:39:09 AM (14 hours ago) Feb 6
to santhav...@googlegroups.com
It will be good to try for mOnai in the usual place (for a meter) as far as possible.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Feb 6, 2026, 11:28:08 AM (13 hours ago) Feb 6
to santhav...@googlegroups.com
திரு. சிவசிவா சொன்னதை அடியேனும் ஆதரிக்கிறேன்.

விருத்தப்பாடல்களிலும் மற்றவை போல் மோனை அமையப் பாக்கள் சிறக்கும்.

உங்களது பாக்கள் கருத்துடன் அமைக்கப் பட்டுச் சிறக்கின்றன. மோனையும் தகுந்தவாறே அமைக்கப் பெறின் இன்னும் சிறப்புடன் மிளிரும்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 6, 2026, at 10:39, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Parthasarathy S

unread,
Feb 6, 2026, 8:16:28 PM (4 hours ago) Feb 6
to santhav...@googlegroups.com
சிவசிவா அவர்களுக்கும் ராம்கிராம் அவர்களுக்கும் நன்றி!  மோனையில் அமைக்க முயற்சிக்கிறேன். தாஸன் 

Reply all
Reply to author
Forward
0 new messages