இருளெலாம் ஒழியச் சுடர்ந்திடும் வடிவாம்
… இடரெலாம் கடந்திடும் வடிவாம்
முரணெலாம் தடுக்கும் அறம்வளர் வடிவாம்
… முடிவிலாத் தவம்திகழ் வடிவாம்
பரிவெலாம் புவிமேல் பரப்பிடும் வடிவாம்
… பயமெலாம் பறித்திடும் வடிவாம்
அருளெலாம் பெருகப் போதிநன் நிழலில்
… அமர்ந்தபே ரறிவனின் வடிவே.
இசையுடன்: https://youtube.com/shorts/UkCZ-ErKmNw?si=GVUNQi3ZS38tQumi
- இமயவரம்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/57685B6E-EDF2-48F7-B541-1E432C707AB2%40gmail.com.
--
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXawJypA9mJW9xwTbj0seczmeZNO7ech0-33b9oePfQmZQ%40mail.gmail.com.