இலந்தை ஐயா பெயரனவன்
இனிய சுப்ர பாரதியும்
நலஞ்சேர் செல்வி ரம்யாவை
நாடி மணந்தான்
ஞாயிறன்று
கலந்த மனத்தார்
மணம்கொள்ளும்
காட்சிக் களமோ
வெகுதூரம்
இலந்தைப் பெம்மான் நெஞ்சத்தில்
இந்த வாழ்த்தும் உடன் சேரும்
ஸ்ரீனி வாச ராகவனாம்
செம்மல் ஐயா ஆசானின்
தேனார் இனிய பெயர்கொண்ட
திருவார் மைந்தர் அவர்மணந்து
பானை பிடிக்க மனைவந்த
பாக்ய வதியாம் காயத்ரி
ஊனாய் உயிராய் இலங்குகிற
உயர்ந்த மைந்தன் பாரதியாம்
இஞ்சி புரத்தார் இராமகிருஷ்ணா
இனிய துணைவி மாதவியார்
அஞ்சி வளர்த்த
குலக்கொடியாம்
அருமை மகளாம் ரம்யாவை
விஞ்சு புலமைத் தெற்கிலந்தை
வியனார் குலத்தில் கொடுக்கின்றார்
மஞ்சள் நல்கும் மங்கலமாய்
மணம்கொள் இணையர் வாழ்வாரே
தாத்தா அப்பா தமிழ்தூவத்
தங்க மனத்துப் பாட்டி, உயிர்
நீத்தும் தாத்தா மனத்தினிலே
நித்தம் வாழும் திருமதியாம்
ஏத்திப் போற்றும் பானுபெயர்
இலங்கும் தேவி வானிருந்து
பூத்த வாடா மலர்தூவப்
பொலியும் பெயரன்
மணவாழ்வு
சந்த வசந்தச் சான்றோரும்
தமிழே கூறும் நல்லுலகும்
முந்தும் இணைய வழியினிலே
முறையே தமிழால் வாழ்த்துரைக்கச்
சொந்த பந்தம், சிகாகோவில்
சூழும் நண்பர், அந்நாட்டார்
வந்தி ருந்து வாழ்த்துரைக்க
மணந்தோர் வாழ்க பல்லாண்டு!
அன்புடன் வாழ்த்தும்
அரசி. பழனியப்பன்