மெய் வாய் கண் நாசி காது - வெண்பா

32 views
Skip to first unread message

Siva Siva

unread,
Sep 6, 2025, 8:06:53 PMSep 6
to santhavasantham

மெய் வாய் கண் நாசி காது

என்ற சொற்றொடர்கள் பஞ்சேந்திரியங்களைச் சுட்டாது வரும் வெண்பா.

இப்படி வரும் பாடல் முன்னர் ஏதேனும் உள்ளதா?

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Sep 7, 2025, 11:46:13 AMSep 7
to santhav...@googlegroups.com
மெய்க்கண் வருவாய் பெறுநா சிவவென்னும்
செய்ய தமிழ்க்கவிஞன் சீருரைப்பேன்- பொய்கூறின்
நல்ல வருவாயை நல்கும் பதவியிலும்
சொல்மெய்யாய் வாழ்ந்தார்பொய்க் காது

மெய் - உண்மை
கண்- ஏழனுருபு, வருவாய் வரும்படி நாசிவ பெயர்,  பொய்க்காது- பொய்க்காமல் 

இலந்தை

வருவாய்த் துறையில்  பதவியிலிருந்தும் மெய்வழியே  வருவாய் பெற்று வாழ்ந்த நாசிவ (நா சி வரதராஜன் -சுருக்கமாக நாசிவ என்போம்)

மெய் வாய்கண் நாசிகா து  இப்படி ஈற்றடி வேண்டுமெனில் சிலேடை வெண்பா எழுதவேண்டும் 

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOiJz3E1o_OCyG3nQnVrkqCE7B-Kr%2BWWjePLcYou6SFQw%40mail.gmail.com.

Siva Siva

unread,
Sep 7, 2025, 11:50:54 AMSep 7
to santhav...@googlegroups.com
/ மெய்க்கண் வருவாய் பெறுநா சிவவென்னும்  /

ஐந்தில் நான்கினை ஒரே அடியில் வரச்செய்தது அருமை!

வி. சுப்பிரமணியன்

Ram Ramakrishnan

unread,
Sep 7, 2025, 1:21:38 PMSep 7
to santhav...@googlegroups.com
The one and only one Thalaivar. Excellent.

எனது சிந்தனைக்கு எட்டாத ஒன்று மிகச் சுலபமாக எழுதிய விதம் அருமை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 7, 2025, at 11:50, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 7, 2025, 2:03:31 PMSep 7
to santhavasantham

2025-09-06

பஞ்சேந்திரிய வெண்பா

----------------

பாற்கடல்வாய் வந்த படுநஞ்சுண் கண்டனெரி

போற்சடையன் பல்லூர்கள் போய்ப்பலியை - ஏற்பவன்

காதுநமற் காய்ந்துமெய்க் காதலரைக் காத்தமறை

ஓதுமவி நாசிபெயர் உன்னு.

V. Subramanian

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 7, 2025, 2:16:52 PMSep 7
to santhav...@googlegroups.com
அருமை!

அனந்த்

Ram Ramakrishnan

unread,
Sep 7, 2025, 2:50:43 PMSep 7
to santhav...@googlegroups.com
ஆகா! மிக அருமை, திரு. சிவசிவா.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 7, 2025, at 14:16, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

கவிமாமணி

unread,
Sep 7, 2025, 3:14:21 PMSep 7
to சந்தவசந்தம்
அருமை

Siva Siva

unread,
Sep 7, 2025, 3:35:29 PMSep 7
to santhav...@googlegroups.com
Thanks.
பஞ்சேந்திரியங்கள் வரும் பாடல்கள் இன்னும் இரண்டு எழுதினேன்.
நாசி என்ற சொல்லல்லாது மூக்கு என்ற சொல்லோடு.

வி. சுப்பிரமணியன்

On Sun, Sep 7, 2025 at 3:14 PM கவிமாமணி <kavim...@gmail.com> wrote:
அருமை

Siva Siva

unread,
Sep 8, 2025, 9:01:33 AMSep 8
to santhav...@googlegroups.com

2) --- மெய் வாய் கண் மூக்கு காது ---

கொண்மூக் குலவுசெங் கோடுநீங் காதுறைவான்

பெண்கூ றுடையான் பெருங்காட்டின் - கண்மா

நடமாடி மெய்ஞ்ஞான நாயகன் பாதம்

அடைவாய்க்கும் இன்ப அருள்.

V. Subramanian

Siva Siva

unread,
Sep 10, 2025, 9:23:58 AMSep 10
to santhav...@googlegroups.com

3) --- மெய் வாய் கண் மூக்கு காது ---

கோலக் குடமூக்கு குற்றாலம் கோபுரம்சூழ்

ஆலவாய் கண்டியூர் ஐயாறு - சோலையணி

தென்கோடி காதுறையூர் சேரார் புரமெய்

என்கோன் இருக்கும் இடம்.

V. Subramanian

On Mon, Sep 8, 2025 at 9:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2) 

Arasi Palaniappan

unread,
Sep 10, 2025, 9:26:45 AMSep 10
to சந்தவசந்தம்
அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 10, 2025, 10:22:24 AMSep 10
to சந்தவசந்தம்
பொய்க் *கா(து)* இருந்துலகம் போற்றுகிற வாய்மையெனும் 
 *மெய்* யின் *கண்* 
பற்றுவைத்த மேலோர்க்கு - மெய்யுணர்வால்
 *வாய்* க்கும் அவி *நாசி*; மற்றுள்ள பொய்யர்க்கு
வாய்க்கும் நரகாம் வரம்!

விநாசம்- அழிவு
அவிநாசம்-அவிநாசி- அழிவற்ற தன்மை

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 10, 2025, 10:58:16 AMSep 10
to santhav...@googlegroups.com
1)
பொய்த்தல் - பொய்யாது என்று வரும். இக்காலத்தில் பொய்க்காது என்ற வடிவமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றா?

2)
புணர்ச்சியோடு பார்க்கும்பொழுது பாடலில் "காது" என்று இல்லையே.

வி. சுப்பிரமணியன்

Arasi Palaniappan

unread,
Sep 10, 2025, 8:56:38 PMSep 10
to சந்தவசந்தம்
வணக்கம் 
பொய்க்காது வழக்கு இருக்கிறது. நளவெண்பாவில் பொய்க்கா என்ற சொல் வருகிறது 

பொய்க்காது இருந்துலகம் -

பொய்க்காது வாழ்ந்துலகம் என மாற்றலாம்.

நன்றி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Sep 11, 2025, 9:28:30 AMSep 11
to Santhavasantham
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் 
உள்ளத்துள் எல்லா முளன்.

Ramamoorthy Ramachandran

unread,
Sep 11, 2025, 9:47:46 AMSep 11
to Santhavasantham
மெய் வாய் கண் மூக்கு செவி 

மெய்யார வீழ்ந்தேன்! வாய்ஓயா
தேபேசிக்

கண்கள்நீர் மல்க மூக்கால் - 
கழல்முரன்றேன்! 

செவியாரக் கேட்டேன் சிவனை நினைந்தேன்!

தவித்தேனே வைப்பாய் தயை!

- புலவர் இராமமூர்த்தி 

Siva Siva

unread,
Sep 11, 2025, 10:52:25 AMSep 11
to santhav...@googlegroups.com
பஞ்சேந்திரியங்களையே சுட்டுமாறு அமைத்துள்ளீர்கள்.

இதுவம் நன்றே.

வி. சுப்பிரமணியன்

On Thu, Sep 11, 2025 at 9:47 AM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
மெய் வாய் கண் மூக்கு செவி 

மெய்யார வீழ்ந்தேன்! வாய்ஓயா தேபேசிக்
கண்கள்நீர் மல்க மூக்கால் - கழல்முரன்றேன்! 
செவியாரக் கேட்டேன் சிவனை நினைந்தேன்!
தவித்தேனே வைப்பாய் தயை!

- புலவர் இராமமூர்த்தி 

Siva Siva

unread,
Sep 14, 2025, 12:09:43 PMSep 14
to santhavasantham
Interestingly, அவிநாசி is the next padhigam I am posting in the மதிசூடி துதிபாடி thread today!

V. Subramanian

Saranya Gurumurthy

unread,
Sep 14, 2025, 10:31:52 PMSep 14
to சந்தவசந்தம்
வணக்கம் 

முன்பு எழுதிய குறள் ஒன்று.

செவிநாசி கண்வாய்மெய் தேயும்முன் நெஞ்சே
அவிநாசி தன்னை அடை

Regards,
Saranya

Siva Siva

unread,
Sep 14, 2025, 10:56:03 PMSep 14
to santhav...@googlegroups.com
நன்று.

வி. சுப்பிரமணியன்

இமயவரம்பன்

unread,
Sep 15, 2025, 9:05:52 AMSep 15
to santhav...@googlegroups.com, santhavasantham
எனது முயற்சி :

உரகத் தணைமேல் உறங்கா துறங்கும்

ஒருமெய்ப் பொருளுருவை ஓர்ந்தேன் - அருளைக்

கொடுக்கின்ற கொண்மூக் குளிர்மழைபோல் வந்தென்

இடுக்கண் களைவாய் என. 

(உரகம் = பாம்பு; கொண்மூ = மேகம்

- இமயவரம்பன் 

On Sep 6, 2025, at 8:06 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 15, 2025, 9:09:38 AMSep 15
to சந்தவசந்தம்
மிக அருமை 

Siva Siva

unread,
Sep 15, 2025, 9:10:30 AMSep 15
to santhav...@googlegroups.com
மிக நன்று.

வி, சுப்பிரமணியன்

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 15, 2025, 9:13:26 AMSep 15
to santhav...@googlegroups.com
Excellent இமயவரம்பரே

      —தில்லைவேந்தன்.

Ram Ramakrishnan

unread,
Sep 15, 2025, 9:20:08 AMSep 15
to santhav...@googlegroups.com
அற்புதம், திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 15, 2025, at 09:09, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

இமயவரம்பன்

unread,
Sep 15, 2025, 9:20:58 AMSep 15
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்புடன் வாழ்த்திய திரு. பழனியப்பன், திரு. சிவசிவா, திரு. தில்லைவேந்தன் ஆகியோருக்கு மிக்க நன்றி! 

On Sep 15, 2025, at 9:13 AM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Sep 15, 2025, 9:22:02 AMSep 15
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு. ராம்கிராம்!

On Sep 15, 2025, at 9:20 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

அற்புதம், திரு. இமயவரம்பன்.

Ramamoorthy Ramachandran

unread,
Sep 15, 2025, 10:24:58 AMSep 15
to Santhavasantham
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ramnath Bhagavath

unread,
Oct 2, 2025, 1:07:13 PM (2 days ago) Oct 2
to சந்தவசந்தம்
அன்பு வணக்கங்கள் :)
எனது முயற்சி: 

நாசித்தம் கண்ணுயர் நான்மறைமெய் நிற்க-அறு
மாசுகள் தங்காது மாயுமே - தேசுறும்
வாழ்வெல்லாம் எத்தரு வாயிலுமே ! முன்செய்த
பாழ்வினையும் போகும் பறந்து

நா சித்தம் = நாவும் சித்தமும் என உம்மைத் தொகை ஆகும். எனவே நாச்சித்தம் என வாராது. நாச்சித்தம்  என்றால் நாவின் சித்தம் என அனர்த்தம் ஆகும். 

நாவிலும் சித்தத்திலும் நான் மறை மெய்யாகிய ஆண்டவனை (யாராகிலும்) நிறுத்த, ஆறு மாசுகள் மாயும்.
ஆறு மாசுகள் இங்கே காம க்ரோத மோஹ லோப மத மாத்சர்யம் எனும் ஆறு பகைவரைக் குறிக்கும்.

பகைவரை ஏன் மாசு எனக்குறிப்பிட்டேன்?
இந்த 6 பகைவரும் அகத்திலே மலம் சேரக் காரணமாகின்றன. மேலும், திருவள்ளுவரும் பொறாமையை (மாத்சர்யம்) அழுக்காறு என்று கூறுகிறார். அழுக்காறு என்றால் அழுக்கான வழி என்று பொருள். எனவே 6 அகப்பகையும் 6 அழுக்குகள்.

இராம்நாத் பகவத் 

Siva Siva

unread,
Oct 2, 2025, 5:08:40 PM (2 days ago) Oct 2
to santhav...@googlegroups.com
Nice.

/ எத்தரு வாயிலுமே /
எத்தரு வாய்தனிலும்?

By the way, I presume both தறுவாய் & தருவாய் - are acceptable spellings of this word.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Oct 2, 2025, 10:19:22 PM (2 days ago) Oct 2
to santhav...@googlegroups.com
மிகவும் அழகாக க் கோத்தளத்த வெண்பா, திரு. பகவத்.

என்னைப் பொறுத்தவரை தறுவாய் என்பதே சரி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 3, 2025, at 02:38, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ramnath Bhagavath

unread,
Oct 2, 2025, 11:27:45 PM (2 days ago) Oct 2
to santhav...@googlegroups.com
மிக்க மிக்க நன்றி Subramanian Sir and Ram Sir. தருவாய் தட்டச்சுப் பிழை. தறுவாய் என்பதே சரி. ஏனென்றால், தறு-தல் என்ற சொல்லிற்குக் கட்டுதல்/ பிணைத்தல் என்ற பொருள். வாழ்க்கையில் நாம் அனைவரும் காலத்தால் கட்டுண்டு தான் இருக்கிறோம். எனவே தான் நம்மைக் கட்டுகிற காலத்தைத் தறுவாய் என்று சொன்னார்கள்.

 மேலும், வாழ்க்கையில் இடர்ப்பாடு தந்து நம்மைக் கட்ட வரும் தறுவாய்கள் அதிகம் ஆதலால், வலுவாக எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், வலிமைக்குத் தறுகண் என்ற சொல்லையும் தமிழர் கொடுத்தார். 

நன்றி,
இராம்நாத் 

இமயவரம்பன்

unread,
Oct 3, 2025, 7:35:53 AM (22 hours ago) Oct 3
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
“ நா சித்தம்”

மிக நுண்ணிய சிந்தனையால் விளைந்த சொல் பிரயோகம். சிறப்பான வெண்பா!

- இமயவரம்பன்
Reply all
Reply to author
Forward
0 new messages