2022-07-20
பிள்ளையார்பட்டி விநாயகர் (காரைக்குடி அருகே உள்ள தலம்)
-----------------
(வண்ணவிருத்தம்;
தய்யனா தத்தத் .. தனதனன )
கள்ளதார் புட்பத் .. தொடைபலவும்
.. கையினால் இட்டுக் .. கழலிணையை
உள்ளுவார் கட்குத் .. துணைவனென
.. ஒல்லையே உற்றுத் .. துயர்களைவாய்
வள்ளிகோ னுக்குப் .. பெரியவனே
.. மல்லதார் எட்டுப் .. புயமுடைய
வெள்ளிமா வெற்பற் .. கினியவனே
.. பிள்ளையார் பட்டிக் .. கணபதியே.
வி. சுப்பிரமணியன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNnfTAfXLXXeOsqMBV43jOSvLWeCHRjvDs2B8JV-1Eauw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMtZy_G-jBGwXzhXD92dbcyjsOp6ERRzbVMb3wvAiwkHw%40mail.gmail.com.
2)
2022-07-20
பிள்ளையார்பட்டி - கற்பக விநாயகர் கோயில் (காரைக்குடி அருகே உள்ள தலம்)
-----------------
(வண்ணவிருத்தம்;
தத்ததன தானன .. தனதான )
வெற்றுரைசொல் வீணரை .. அடையாமல்
.. வெற்றிதரு தாளிணை .. பணிவேனே
சுற்றிவர மாமயில் .. உடையான்முன்
.. சொக்கனுமை யார்வலம் .. வருவாய்மா
பெற்றுமகிழ் வாரண .. எருதேறி
.. பெற்றசுத மூடிகம் .. உடையானே
கற்றவர்கள் நாடொறு .. நினைதேவா
.. கற்பகவி நாயக .. அருளாயே.
பதம் பிரித்து:
வெற்றுரை சொல் வீணரை அடையாமல்,
.. வெற்றி தரு தாளிணை பணிவேனே;
சுற்றிவர மாமயில் உடையான் முன்,
.. சொக்கன் உமையார் வலம் வருவாய்; மா
பெற்று மகிழ் வாரண; எருது-ஏறி
.. பெற்ற சுத; மூடிகம் உடையானே;
கற்றவர்கள் நாள்தொறும் நினை தேவா;
.. கற்பக விநாயக; அருளாயே.
V. Subramanian
Note: The following song was the final song on Pillaiyarpatti till this morning! But I wrote a song this morning. So, I will share that 4th song tomorrow.
3)
2022-07-20
பிள்ளையார்பட்டி - கற்பக விநாயகர் கோயில் (காரைக்குடி அருகே உள்ள தலம்)
-----------------
(வண்ணவிருத்தம்;
தனதன தானன தத்தனத் .. தனதனன )
வறுமையி னோடிடர் அற்றிடத் .. தமிழ்மலர்கள்
.. மலரடி மேலணி வித்துனைத் .. தொழுதெழுவேன்
அறுகிடு நேயர்தொ டக்கறுத் .. தருள்பவனே
.. அறுமுகன் நாடுகு றத்தியைத் .. தருதமையா
சிறுமதி சூடிய முக்கணற் .. கினியவனே
.. திரைமலி காவிரி தெக்கணத் .. திடையுலவக்
குறுமுனி யார்கர கத்தினைக் .. கவிழ்வலவா
.. குடைவரை மேவிய கற்பகக் .. கரிமுகனே.
பதம் பிரித்து:
வறுமையினோடு இடர் அற்றிடத் தமிழ்-மலர்கள்
.. மலரடிமேல் அணிவித்து உனைத் தொழுதெழுவேன்;
அறுகு இடு நேயர் தொடக்கு அறுத்து அருள்பவனே;
.. அறுமுகன் நாடு குறத்தியைத் தரு தமையா;
சிறுமதி சூடிய முக்கணற்கு இனியவனே;
.. திரை மலி காவிரி தெக்கணத்திடை உலவக்,
குறுமுனியார் கரகத்தினைக் கவிழ் வலவா;
.. குடைவரை மேவிய கற்பகக் கரிமுகனே.
V. Subramanian
2)
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/3IIitidEdjU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/105a45d3-0452-41d2-b303-decb443626d2n%40googlegroups.com.
பெருமலை....................எயிற்ற
(இ-ள்) பெருமலைச் சென்னியில்-பெரிய மலையினது உச்சியில், சிறுமதி கிடந்தென-இளம்பிறை கிடந்தாற்போல; கண் அருள் நிறைந்த-கண்ணின் கண் அருள்நோக்கம் நிரம்பிய (திருமுகத்தின்கண்); கவின்பெறும் எயிற்ற-அழகுபெற்ற கொம்பினையுடையோய் என்க.
(வி-ம்.)
சிறுமதி-இளம்பிறை இது கொம்பிற்கு உவமை. கண்ணருள் நிறைந்த திருமுகத்தின்கண் எனச்
சொல் வருவிக்கப்பட்டது. கவினிஅழகு. எயிறு-கொம்பு.
இந்த உவமை கொண்டு தான், அதிவீரராம பாண்டியர் நைடதத்துக்கு விநாயகர் வாழ்த்தை அமைத்தார் போலும்.
4)
2022-07-29
பிள்ளையார்பட்டி - கற்பக விநாயகர் கோயில் (காரைக்குடி அருகே உள்ள தலம்)
-----------------
(வண்ணவிருத்தம்;
தய்ய தானத்த .. தனதான )
செய்ய பாதத்தை .. மறவாத
.. செல்வ மேயுற்று .. மகிழேனோ
கையி னால்மட்டு .. மலர்தூவில்
.. கல்வி ஞானத்தை .. அருள்வோனே
ஐய வேழத்து .. முகநேயா
.. அல்லல் மாய்விக்க .. வலதேவா
பெய்யு மேகத்தை .. அடைசோலைப்
.. பிள்ளை யார்பட்டி .. உறைவோனே.
பதம் பிரித்து:
செய்ய பாதத்தை மறவாத
.. செல்வமே உற்று மகிழேனோ;
கையினால் மட்டு மலர் தூவில்,
.. கல்வி ஞானத்தை அருள்வோனே;
ஐய; வேழத்து முக நேயா;
.. அல்லல் மாய்விக்க வல தேவா;
பெய்யும் மேகத்தை அடை-சோலைப்
.. பிள்ளையார்பட்டி உறைவோனே.
V. Subramanian
3)
Final song of the Pillaiyarpatti set:
5)
2022-08-29
பிள்ளையார்பட்டி - கற்பக விநாயகர் கோயில் (காரைக்குடி அருகே உள்ள தலம்)
-----------------
(வண்ணவிருத்தம்;
தத்ததனா தனதனத் .. தனதான )
அச்சுறுமா றடைவினைத் .. தொகைமாய
.. அற்றுனையே நினைவதற் .. கருளாயே
உச்சியிலே மதியெருக் .. கணிகோல
.. உத்தமனார் அவரிடத் .. துமைபாலா
மெச்சிடுவோர் இடர்தனைக் .. களைவோனே
.. வித்தகனே குடைவரைத் .. தளிமேயாய்
கச்செனவோர் அரவசைத் .. திடுவோனே
.. கற்பகமே கரிமுகப் .. பெருமானே.
பதம் பிரித்து:
அச்சுறுமாறு அடை வினைத்தொகை மாய,
.. அற்று உனையே நினைவதற்கு அருளாயே;
உச்சியிலே மதி எருக்கு அணி கோல
.. உத்தமனார் அவர் இடத்து உமை பாலா;
மெச்சிடுவோர் இடர்தனைக் களைவோனே;
.. வித்தகனே; குடைவரைத் தளி மேயாய்;
கச்சு என ஓர் அரவு அசைத்திடுவோனே;
.. கற்பகமே; கரிமுகப் பெருமானே.
V. Subramanian
4)
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BWVYWMQqGO-L7Xgn1SdeqQMtJ%2BHzH-Sc39AYoXN7F1i7g%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXZH-9G5f5CJ800d5Jhkr2xzxyyxUAaRC9cbHjq4in-1ZQ%40mail.gmail.com.
om.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBG6_ZpARWUPAHbXe86phFrBwZs%3Dsx9Tj9N0wK%2B5d1eEg%40mail.gmail.com.