Fwd: பாட்டு மின்னல் உடைத்தாகுக

6 views
Skip to first unread message

sudha's creations

unread,
Dec 21, 2025, 9:07:36 AM (6 days ago) Dec 21
to santhavasantham
இந்த கவிதை இன்று பாரதி கலைக்கழக ஆண்டு விழாவில்
 பாட்டு மின்னல் உடைத்தாகுக என்ற தலைப்பில் படித்தேன்.. கவிஞர் நண்பர்கள்... கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்.. 
அன்புள்ள சுதா வேதம்

---------- Forwarded message ---------
From: sudha's creations <sudhave...@gmail.com>
Date: Sun, 21 Dec, 2025, 8:09 am
Subject: Re: பாட்டு மின்னல் உடைத்தாகுக
To: Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>


இதில் கருத்து இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளத்தான் உன்னை தொந்தரவு பண்ணுகிறேன் அதாவது உனக்கு புரிந்தால் எல்லாருக்கும் பிடிக்கும் அதுபோல்த.. அப்புறம் விருத்தம் எழுத விருத்தம் எதற்கு என்ற புத்தகம் திடீரென்று கையில் கிடைத்தது அதை ஊருக்கு எடுத்து போகலாம் என்று நினைக்கிறேன் அப்பா கவிதை எழுதுவதற்கு இல்லாவிட்டால் கவிதை ஏற்றி கணக்கு என்ற புத்தகமும் வைத்துக் கொள்ளனுமா...

On Sun, 21 Dec, 2025, 8:08 am sudha's creations, <sudhave...@gmail.com> wrote:
ரொம்ப நன்றிபா நேற்றிலிருந்து உன்னுடைய பதிலுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அம்மாவிடமும் சொன்னேன் ஆனால் நீ ரொம்ப அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்று சொன்னால் அதனால் தான் தொந்தரவு பண்ண விரும்பவில்லை..
நான் இன்னும் இரண்டு நாள் இங்கே இருப்பேன் என்று நினைக்கிறேன்.. ராஜன் என்ன ப்ரோக்ராம் சொல்கிறாரோ அதுபடி தான் நடக்க வேண்டும்.. அப்புறம் இறைவன் அருளால் திருவையாறு தியாகராஜ உற்சவத்தில் பாடுவதற்கு அழைப்பு வந்திருக்கிறது இறைவன் அருளால் நல்லபடியாக பாட வேண்டும்..
அன்புள்ள உனது மகள் சுதா

On Sun, 21 Dec, 2025, 7:09 am Kaviyogi Vedham, <kaviyog...@gmail.com> wrote:
abaaram.  karuththu arumai. no change.  pattu  seerukirathu.  minnal  irukku, vazga.
 appa


On Sat, Dec 20, 2025 at 1:11 PM sudha's creations <sudhave...@gmail.com> wrote:

சின்னச் சின்னத் தூறல் வலுத்து 

   சீறி மழையாய்ப் பெய்கிறதே!

மின்னி மின்னித் தோன்றும் மின்னல்

மிரட்டும் இடியைக் கொணர்கிறதே!

தின்ன தின்ன அறிவுப் பசியும் (எனக்கு)

 தீரா நிலைமை புரியலையே ! 

இன்னும் இன்னும் என்னுள் தேட 

இறைவன் கண் முன் தோன்றலையே !


வெட்டிப் பேச்சு வம்பர் கண்டால் 

வெறுத்து ஓடப் பார்க்கின்றேன்!

கொட்டும் குளவி போல மனத்தைக்

கொல்லும் வார்த்தை வெறுக்கின்றேன் ! (நானோ...)

பட்டுப் பூச்சி தாவும் அழகைப்

பார்த்துக் கண்கள் களிக்கின்றேன் !

சொட்டும் அழகு குழவி முகத்தில்

சொர்க்கம் முழுக்கக் காண்கின்றேன் !


 (என்னைப் போல)


கவிதை அருவி கணத்தில் பெய்யும்

கவிஞன் மனது அடங்காது !

 புவியில் புகழால் வாழத் துடிக்கும்

புலவன் நெஞ்சம் ஓயாது !

குவித்த எண்ணம் சீறிப்பாய்ந்து 

குறைகள் சுட்டத் தயங்காது !

 தவிக்கும் பேர்க்கு  அவனின் பேனா

 தடவிக் கொடுக்கும், சுணங்காது !


சிலரின் சூழ்ச்சி நாடகப் பொய்யைச்

 சீறிக் கேட்கப் புரட்சி வரணும் !

கலங்கி நிற்கும் நிலைமை வரினும்,

கடவுள் நினைப்பை நெஞ்சம் பெறணும்!

நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகள்

நித்தம் செயலில் கொண்டு வரணும் !

பலரின் சோர்வைப் போக்கும் உணர்ச்சிப்

பாட்டு மின்னல் ஒளியைத் தரணும்!  உடன்


 மனதின் மாயைக்   கலகம் விழணும்..! 




நன்றியுடன் சுதா வேதம் 

Arasi Palaniappan

unread,
Dec 21, 2025, 10:09:49 AM (6 days ago) Dec 21
to சந்தவசந்தம்
யோகியார் பெற்றமகள் ஓர்ந்து படைத்தகவி
ஆகச் சிறந்தகவி யாம்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CANcs5oYYPdWx5yW78exos71q%3DTELU%3D-aNzZbiaUyHF0O6D136w%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Dec 21, 2025, 10:52:21 AM (6 days ago) Dec 21
to santhav...@googlegroups.com
மிக அருமை, திருமதி சுதா அவர்களே. விருத்தங்களும் கருத்துகளும் மின்னுகின்றன.

கடைசி விருத்தம் ஓரடி மேல் வைப்பாகக் கொள்ள வேண்டுமெனில் இன்னும் ஓர் அரையடி சேர்க்க வேண்டும் என்பது என் கருத்து.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Dec 21, 2025, at 10:09, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



இமயவரம்பன்

unread,
Dec 21, 2025, 12:01:40 PM (6 days ago) Dec 21
to santhav...@googlegroups.com, santhavasantham
கலகத்தால் விளைந்த இன்னல் தீரக் கன்னல் தமிழில் திருமதி சுதா வேதம் அவர்கள் படைத்த மின்னல் கவிதை மிகச் சிறப்பு! 

Subbaier Ramasami

unread,
Dec 21, 2025, 6:53:56 PM (6 days ago) Dec 21
to santhav...@googlegroups.com
சுதா மிக அருமையான கவிதை. நீ இயற்கை அழகை முதல் இரண்டு விருத்தங்களில் மிக அழகாகக் காட்டியிருக்கிறாய்.

இலந்தை

--

GOPAL Vis

unread,
Dec 22, 2025, 10:26:10 PM (5 days ago) Dec 22
to santhav...@googlegroups.com

கவிதை அருவி கணத்தில் பெய்யும்

கவிஞன் மனது அடங்காது !

 புவியில் புகழால் வாழத் துடிக்கும்

புலவன் நெஞ்சம் ஓயாது !

குவித்த எண்ணம் சீறிப்பாய்ந்து 

குறைகள் சுட்டத் தயங்காது !

 தவிக்கும் பேர்க்கு  அவனின் பேனா

 தடவிக் கொடுக்கும், சுணங்காது !


மிக அருமை.

கோபால்


On Sun, Dec 21, 2025 at 7:37 PM sudha's creations <sudhave...@gmail.com> wrote:
இந்த கவிதை இன்று பாரதி கலைக்கழக ஆண்டு விழாவில்
 பாட்டு மின்னல் உடைத்தாகுக என்ற தலைப்பில் படித்தேன்.. கவிஞர் நண்பர்கள்... கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்.. 
அன்புள்ள சுதா வேதம்
.. . . . . .

sudha's creations

unread,
Dec 23, 2025, 11:20:30 AM (4 days ago) Dec 23
to santhavasantham
மிக்க நன்றி பழனியப்பன் சார்..
அன்புடன் சுதா வேதம்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages