சந்தத்தைக் கண்டார் - வால்மீகி இராமாயணத்தின் தொடக்கம்

17 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 20, 2025, 9:42:58 AM (5 days ago) Sep 20
to Santhavasantham, appan.ra...@gmail.com, Mohanarangan V Srirangam, சௌந்தர்
சந்தத்தைக் கண்டார் - வால்மீகி இராமாயணத்தின் தொடக்கம் ------------------------------------------- அன்றில்/க்ரௌஞ்சம் = Red naped ibis அன்றில் பறவையின் ஆங்கிலப் பெயர் ஐபிஸ் (Ibis). வடமொழியிலே கிரவுஞ்சம் எனப்படும். கம்பர், அருணகிரிநாதர், ... போன்றோர் திருப்பாடல்களில் கிரவுஞ்சம் என அன்றிலைக் குறிப்பிடும் பாடல்கள் ஏராளம் உண்டு. அன்றில் பறவையின் பற்பல செய்திகளைச் சங்க நூல்களில் காண்கிறோம். இணைபிரியாக் காதலுக்கும், துணையைப் பிரிந்தால் ஏங்கி வருந்துவதற்கும் அன்றிலை உதாரணமாகக் கொண்டுள்ளனர். அன்றில்/கிரவுஞ்சம் புள்வகைகளில் குருகு என்பர். Ibis is a waterbird. முகலாயர் காலத்து ஓவியங்கள் சிலவற்றில் ஆதி காவியம் என அழைக்கப்படும் வால்மீகி ராமாயணம் தோன்றிய வரலாறு, கிரௌஞ்ச வதம் வரையப்பட்டுள்ளது. இவற்றில் சாருஸ் நாரை (Sarus crane) காட்டப்பட்டுள்ளன. ஆனால், வால்மீகி சுலோகங்களில் உள்ள செய்திகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் கிரவுஞ்சம் என்னும் 18-ம் நூற்றாண்டில் இருந்து வரையப்படும் சாருஸ் நாரைக்குப் பொருத்தமில்லை. தமிழில் "செந்தலைச் சூட்டு அன்றில்" எனத் திருப்புகழில் வருதலுடன், தாமிரச் சூடு கொண்ட கிரௌஞ்சப் பக்ஷி என்று வால்மீகி சுலோகம் பொருந்துகிறது. மேலும் திவாகர நிகண்டு கிரவுஞ்சத்தின் அளவைச் சேவலுடன் ஒப்பிடுகிறது. மாமல்லபுரம், தாராசுரம் சிற்பங்களும் அன்றில்/க்ரௌஞ்சம் செந்தலைச் சூட்டு ஐபிஸ் (Red naped ibis) என நிரூபிக்கிறது. மேலும் முக்கியமாக, சங்க நூல்கள் எல்லாவற்றிலும், பனை போன்ற நெடிதுயர்ந்த மரங்களில் அன்றில் கூடு கட்டி வாழ்வதும், கொஞ்சிக் குலாவிப் புணர்தலும், பிரிந்தால் விரகதாபமும் பற்றி விரிவாகப் பேசப்படுகின்றன. இதனைப் பறவையியலாரும் அன்றில்/க்ரௌஞ்சப் பறவைகள் பற்றிய அவதானிப்புகளில் கண்டு பதிந்துள்ளனர். ஆனால், சாருஸ் நாரைகள் மரங்களில் வாழ்வதோ, கூடு கட்டுதலோ இல்லை. எனவே, வால்மீகி காவிய வேடன் மரத்தில் இருந்த ஜோடியில், ஆண் அன்றிலை அம்பு எய்து கொன்றான் என்பதே பொருந்துகிறது. கங்கை முதலையில் (Gharial) உருவான மகரம், பட்டைத்தலை வாத்து (Bar-headed goose) உருவான ஹம்சம்/அன்னம் பிற்காலங்களில் முறையே சுறாமீனாகவும், ஸ்வான் பறவையாகவும் மாறுவதுபோலவே, அன்றில்/க்ரௌஞ்சம் சங்க காலம் மற்றும் வால்மீகி காலத்தில் அரிவாள் மூக்கன் (ஐபிஸ்) பறவையில் தொடங்கி, முகலாயர் காலத்தில் சாருஸ் நாரை என மாறியுள்ளது. தமிழ்நாட்டின் ஸ்ரீவைஷ்ணவ மரபில், பாலகாண்ட வேடன் மரத்தில் இருந்த அன்றில்/க்ரௌஞ்சத்தைக் கொன்றான் என்று விளக்குவர். இதற்கான சில நூல்களைத் தருகிறேன். பஞ்ச திராவிட தேசம் முழுதுமாக, கிரவுஞ்ச வதத்தில் அப் பறவை ஜோடி மரத்தில் இருப்பதாக, வி. ச. காண்டேகர் மும்முறை அவரது நாவலில் எழுதியுள்ளார். தமிழில் மொழிபெயர்த்த கா.ஶ்ரீ.ஶ்ரீ அவர்களும் இச்செய்தியைத் தந்துள்ளார். என் கேள்வி: நாத முனிகள் தொடங்கி வைணவ ஆச்சாரியர்களில் யார் வால்மீகியின் பாலகாண்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்? கிரவுஞ்ச வதம் பற்றிச் சொல்லியுள்ளனரா? நன்றி.

உசாத்துணை: 10 உதாரணங்களுடன்,

நா. கணேசன்

(1) சீதா சரிதம், காரப்பங்காடு வேங்கடாச்சார்யர்
acharya.org/bk/pb/KV/sc.pdf

(2) சந்தத்தைக் கண்டார், சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணம்), இராஜாஜி.
இப்படிச் சொல்லிவிட்டு ராம சரித்திரத்தைச் சுருக்கமாக விளக்கிச் சொன்னார். அதைக் கேட்ட வால்மீகி ரிஷி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். நாரதர் விடைபெற்றுச் சென்ற பிறகும், அதைப் பற்றியே தியானித்துக் கொண்டிருந்தார். பிறகு நதிக்கரைக்குப் போனார். குளிப்பதற்காக முனிவர் இடம் பார்த்துக்கொண்டு, ஆற்றங்கரையில் உலாவிக் கொண்டிருந்த அந்தச் சமயம் மரக்கிளையில் ஆணும் பெண்ணுமாக விளையாடிக் கொண்டிருந்த இரண்டு கிரௌஞ்ச பட்சிகளுள் ஒன்று எங்கேயோ நின்ற வேடன் எய்த அம்பு பட்டுக் கீழே விழுந்தது. பெண் பறவை தன் காதலன் திடீர் என்று அடிபட்டுக் கீழே விழுந்து புரள்வதைப் பார்த்துக் கதறிக் கதறி அழுதது.

(3) See the artist Kesav's drawings with Krauncha/Anril bird on the branches of a tree and the description of the episode

[...]

(10) Note that in the Pancha-Dravida deshams, it is a customary tradition to narrate that the pair of Krauncha birds were mating on the branches of a tree. The male bird of the pair was shot by an arrow by a hunter whom Valmiki muni cursed. Here is a page from V. S. Khandekar's Krauncha Vadam (Novel, Tamil translation). In the Marathi original, the Krauncha pair on a tree branch is mentioned three times. This matches very well with the descriptions of the ibis in Tamil Sangam literature, and helps in identifying that Krauncha bird in Valmiki is ibis, (and not sarus or any other crane). கிரௌஞ்ச வதம் வி. ஸ. காண்டேகர் தமிழ் வடிவம் கா. ஶ்ரீ. ஶ்ரீ. பாரதி பதிப்பகம், 1995 (முதலில் கலைமகள் காரியாலயத்தார் வெளியிட்டனர்)

உசாத்துணை: 10 உதாரணங்களுடன்,







Swaminathan Sankaran

unread,
Sep 20, 2025, 11:32:38 AM (5 days ago) Sep 20
to santhav...@googlegroups.com, appan.ra...@gmail.com, Mohanarangan V Srirangam, சௌந்தர்
நல்ல ஆய்வும், விளக்கமும், திரு. கணேசன்!

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUeqinLYM2F2vuKThV1jGDQu5%2B7Td7FzpWVrWHxAgDYs%3Dw%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

N. Ganesan

unread,
Sep 20, 2025, 11:55:59 PM (4 days ago) Sep 20
to santhav...@googlegroups.com, George Hart, Dr.Krishnaswamy Nachimuthu
On Sat, Sep 20, 2025 at 10:32 AM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
நல்ல ஆய்வும், விளக்கமும், திரு. கணேசன்!
சங்கரன் 

பாரசீக நாட்டில் இருந்து வந்த முகலாய அரசவை ஓவியர்களுக்கு அன்றில்/க்ரௌஞ்சம் பற்றித் தெரியவில்லை. ஸாருஸ் நாரை, டிமாய்செல் நாரை போன்றவற்றை வரைந்துவிட்டனர். அது பிழை. மறைந்த ஸம்ஸ்கிருதப் பேரா. ஜூலியா லெஸ்லீ (லண்டன்), வெண்டி டானிகர் (சிகாகோ) போன்றோருக்கு முகலாய ஓவியங்களுடன் சில ஆண்டு முன் விளக்கினேன். அவ்வரிய சித்திரங்களை ஓரிழையில் இடவேண்டும் (பழைய மடல் கண்டெடுத்து).

ஓவியர் கேசவ் என் நண்பர் தான். அவர் தான் கிரவுஞ்சம்/அன்றிலைச் சரியாக வரைந்தவர். வண்ண ஓவியமாகப் பொறுமையுடன் எழுதச் செய்யவேண்டும்.
வேடன் உரைத்த வேதாந்தம், 

மாமல்லபுரத்தில் செஞ்சூட்டுடன் கிரௌஞ்ச இணைகள் உள்ளன. முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தாராசுரத்தில் அப்பர் திருவையாற்றுப் பதிகத்தில் பாடிய உயிரிகளைச் சிற்பமாக்கியதைக் கண்டவர். அவர் தினமணியில் எழுதிய கட்டுரையில் என்னையும் குறிப்பிட்டுள்ளார். இங்கே அன்றில் பற்றிய மடல்களில் சில படித்துள்ளார். தாராசுரத்தில் நாரையாக அன்றில்/க்ரௌஞ்சம் இல்லை என விளக்கி அதன் அரிய படமும் கொடுத்துள்ளார்.
"தாராசுரம் சிவாலயத்தில் இரண்டாம் இராசராசசோழன் இப்பதிகம் பாடும் காட்சியை சிற்பமாக்கியுள்ளதை இக்கட்டுரை ஆசிரியர் தம் ஆய்வில் கண்டறிந்து வெளிப்படுத்தினார். அதில், அப்பர் பதிகம் பாடும் ஆறாம் காட்சியில் இணையாக மகன்றில் பறவைகள் நிற்க, அவை முன்பு உழவாரம் ஏந்தியவண்ணம் அப்பர் பாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அக்காட்சியில் திகழும் மகன்றில் பறவைகள் சிறிய வாத்துகள் வடிவில் திகழ்கின்றன. நாரை இனத்து அன்றில் பறவை வடிவிலிருந்து இவை வேறுபட்டுக் காணப்பெறுகின்றன."

-----

அன்றில் என்பது க்ரௌஞ்சம் என்னும் பறவை என முதலில் விளக்கினோர் இடையாற்றுமங்கலம் வை. அனந்தராமையர், வைத்தமாநிதி மு. கோபாலகிருஷ்ணமாச்சார்யர் ஆவர்.

என் கேள்வி: நாத முனிகள் தொடங்கி வைணவ ஆச்சாரியர்களில் யார் வால்மீகியின் பாலகாண்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்? கிரவுஞ்ச வதம் பற்றிச் சொல்லியுள்ளனரா? நன்றி.

கலைக்களஞ்சியம், இரண்டாம் தொகுதி, பக்கம் 70.  https://www.tamilvu.org/node/55231
சமஸ்கிருதத்தின் ஆதிகவி வால்மீகி, அன்றில் என்னும் கரிஞ்சம்/க்ரௌஞ்ச பறவைகளின் சோகம்பற்றிப் பாடியதால் காவிய சந்தம் பிறந்தது. காவிய சந்தம் பிறந்த கதை - தெய்வத்தின் குரல் http://www.kamakoti.org/tamil/Kural80.htm

"அன்றிலென்பது, ஒரு பறவை. அது, எப்பொழுதும் ஆணும்பெண்ணும் இணைபிரியாது நிற்கும். கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றை யொன்று இரண்டு மூன்றுதரம் கத்திக் கூவி அதன்பின்பும் தன் துணையைக் கூடாவிடின் உடனே இறந்துபடும். இதனை வடநூலார் க்ரௌஞ்சம் என்பர். ஆணும் பெண்ணுமான அந்த அன்றிற்பறவை இணைபிரியாமல் நெருங்கி ஒன்றோடொன்று வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னில் நெகிழ்ந்தவளவிலே துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொனியாகக் கத்துகின்ற மிக இரங்கத்தக்க சிறுகுரல் காமோத்தீபகமாய்ப் பிரிவாற்றாமைத் துயரை வளர்த்துப் பிரிந்த காமுகரை மிகவருத்தும்." (வை.மு.கோ)

குருகு என்பது waterbirds https://en.wikipedia.org/wiki/Water_bird . அன்றில்/க்ரௌஞ்சம் குருகுகளில் ஓர் இனம். குருகுகளின்  பல செய்திகளைத் தொகுத்துக் கூறியவர்  இடையாற்றுமங்கலத்தார் (இ.வை. அ). ஆனால், எல்லாக் குருகும் அன்றில் அன்று எனக் கூறவில்லை. குருகு என்பது பறவைகளில் ஒரு வகைக்கு (Waders) பொதுப்பெயர் என்று கொண்டால் தெளிவு பிறக்கும்.
"வடமொழியில் ‘க்ரௌஞ்சகிரி’ என்பது தமிழில் ‘குருகுபெயர்க் குன்றம்’ என்று கூறப்படுதலானும் க்ரௌஞ்சமென்பது அன்றிலின் பெயரென்பராதலானும் அன்றிலுக்கு “தடவுநிலைப் பெண்ணைக், கொழுமடலிழைத்த சிறுபொற்குடம்பைக், கருங்காலன்றிற் காமர் கடுஞ்சூல், வயவுப்பெடையகவும் பானாட்கங்குல்” எனப் பனைமடல்  வாழ்க்கையும் கருங்காலுடைமையும் துணைபிரியா வியல்பும் கூறப்படுதலாலும் குருகென்பது அன்றிலாவிருக்கலாமென்று தோற்றுகிறது; இன்னும் ஆராய்தற்பாலது. அன்றிலின் செய்தி கலி. 129 : 12 - ஆம் அடிக்குறிப்பிற் காணலாகும்." (இ.வை.அ, கலித்தொகை, பக். 765)

"அன்றிலென்பது நெய்தனிலத்துக்கு உரித்தாகக் கூறப்படுவதொரு பறவை; கழிமீன் முதலியவற்றையுண்டு பனைமரத்திற் சிறுகோலாற் கூடுகட்டிக்கொண்டு வதிவது; செந்தலையையும் வளைந்ததும் செந்நிறத்ததுமாகிய வாயையும் கரிய காலையுமுடையதென்று கூறப்படுகிறது; துணையின்மேன் மிக்க காதலையும் அதனைப் பிரியாத தன்மையையும் பிரியின் துயிலாது நடுங்கி வருந்திக் கதறுந் தன்மையையுமுடையது; நள்ளிரவின் அகவுவது; பிரிந்திருப்பவரைத் தன்குரலால் வருத்துவது; இவை,(அ) “தெண்ணீ ரிருங்கழி வேண்டுமிரைமாந்திப், பெண்ணைமேற் சேக்கும் வணர்வாய்ப் புணரன்றில்”(ஆ) “நெருப்பி னன்ன செந்தலை யன்றி, லிறவி னன்ன கொடுவாய்ப் பெடையோடு.............கட்சியிற் பிரிந்தோர் கையற நரலு நள்ளென்யாமத்து”(இ) “மனைசேர் பெண்ணை மடிவா யன்றி, றுணையொன்று பிரியினுந் துஞ்சாகா ணென”(ஈ) “பராரைப் பெண்ணைச் சேக்குங்கூர்வா, யொருதனி யன்றி லுயவுக்குரல் கடைஇய, வுள்ளே கனலுமுள்ள மெல்லெனக், கனையெரி பிறப்ப வூது, நினையா மாக்க டீங்குழல் கேட்டே”(உ) “செவ்வாய் வன்றி றுணையிழப்ப”(ஊ) “முழவுமுதலரைய தடவுநிலைப் பெண்ணைக், கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக், கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல், வயவுப்பெடை யகவும் பானாள்”(எ) “கனைத்ததங் காதலிற் கனவிற் கண்டிறந், தினைந்த போன் றிடையிடை நோக்கியின்குரல், புனைந்தகம் புணர்பெடை புல்லி மெல்லவே, யனந்தருண் முரன்றன வன்றிற் சேவலே”(ஏ) “புணர்பிரியா வன்றிலும்போ, னித்தலு நம்மைப் பிரியல மென்றுரைத்த, பொற்றொடியும்”(ஐ) “ஒன்றில் காலை யன்றில் போலப், புலம்புகொண் டுறையும் புன்கண் வாழ்க்கை”(ஒ) “துணைபிரிந்தயரு மன்றிற் சேவலிற் றுளங்குகின்றான்”(ஓ) “பெண்ணைமேற் பின்னுமவ் வன்றிற் பெடைவாய்ச் சிறுகுரலுக், குன்னி யுடலுருகி நையாதார்” என்பவற்றால் அறியப்படும்.பெரும்பாலும் இவ்வியல்பினதாக மகன்றிலென்று ஒருநீர்வாழ்பறவைகூறப்படுகிறது. இதுவும் அதுவும் ஒன்றென்னும் கூறுவர். அன்றிலென்பது வடமொழியில், ‘க்ரௌஞ்சம்’ என வழங்குமென்ப." (இ.வை.அ., கலித்தொகை, பக். 801).

கந்தர் அலங்காரம் கடைசிப் பாட்டு:
இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்
   கெடுதலி லாத்தொண் டரிற்கூட் டியவா! கிரெளஞ்ச வெற்பை
      அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை
         விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே.   ...   100 

~NG

Shanmuga ananth

unread,
Sep 21, 2025, 3:42:22 AM (4 days ago) Sep 21
to santhav...@googlegroups.com, George Hart, Dr.Krishnaswamy Nachimuthu
புதிய தகவல் எனக்கு. அன்றில் மகன்றில் பற்றிய நல்லதோர் ஆய்வு, நன்றி ஐயா!

அன்புடன்,
சண்முகானந்தம் 

N. Ganesan

unread,
Sep 21, 2025, 6:49:09 PM (4 days ago) Sep 21
to santhav...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com, karanthaijayakumar
ஏழு சுரங்களுக்குள் ஆறாம் சுரப்பெயர்: தைவதம் = விளரி
----------------------------------------

ஏழு ஸ்வரங்கள் சரிகமபதநி. இவற்றுக்கான விளக்கம் பொதுவாகச் சொல்லப்படுகிறது: "ஸங்கீத சாஸ்திரங்களைப் புரட்டிப் பார்த்ததில், ஷட்ஜமும் பஞ்சமும் (‘ஸ’வும் ‘ப’வும்) பிரக்ருதி ஸ்வரங்கள் என்பதாக ஈஸ்வரனைப் போலவே ஸ்வயம்புவாக இருப்பவை என்றும், விக்ருதி என்ற செயற்கை ஸ்வரங்களான மற்ற ஐந்துமே பரமேஸ்வரனின் ஐந்து முகங்களில் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொன்றாகத் தோன்றின என்றும் அர்த்தம் த்வனிக்கும் படிப் பிரமாணங்கள் அகப்பட்டன.

விக்ருதிகளான ரி, க, ம, த, நி-களில் ஒவ்வொரு ஸ்வரத்திலும் இரண்டு திநுஸு இருக்க ப்ரக்ருதியான ஸ, ப-வில் ஒவ்வொன்றேதான் இருக்கிறது.

ஷ்டஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பனவற்றின் முதல் எழுத்துக்களை வைத்தே ஸ-ரி-க-ம-ப-த-நி என்பது. ஏழு ஜந்துக்கள் இயற்கையாகப் போடும் சத்தத்தை வைத்தே இந்த ஏழு ஸ்வரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஷட்ஜம் என்பது மயிலின் நாதம். இந்த ‘ஸ’வுக்கு அடுத்த ‘ரி’யாக வருவது ரிஷபத்தின் கர்ஜனை. ‘க’ – ஆடு போடும் சத்தம். ‘ம’-க்ரௌஞ்ச பக்ஷியின் கூவல். ‘ப’-குயிலின் ஒலி. ‘த’ – குதிரைக் கனைப்பு. ‘நி’ -யானையின் பிளிறல்."  https://www.kamakoti.org/tamil/3dk245.htm

ஆழ்வார் பாசுரங்களில் அன்றில் எனப்படும் பறவைக்குக் க்ரௌஞ்சம் என உரை எழுதிய ப்ர. ப. அ. அவர்கள், சங்கீதத்தில் அன்றில்/க்ரௌஞ்சம் என்ற பறவைப் பெயர் உள்ளதை விளக்கியுள்ளார்.
"ஸம்ஸ்க்ருதத்தில், ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்தியமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்னும் ஸப்தஸ்வரங்கள் தமிழில் முறையே குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்னும் ஏழிசையெனப்படுதலால் விளரியென்றது. தைவதமென்னும் ஸ்வரமென்னலாம்; அன்றி, வடமொழிநிகண்டில் “க்ரௌஞ்ச: க்வணதி மத்யமம்” என்றதால் அன்றில் மத்யமமென்னும் ஸ்வரத்தை யொலிக்கிறதென்று தெரிதலால் விளரி யென்பதற்கு மத்யம ஸ்வரமென்று பொருள் கொள்ளுதலும் ஒன்று. விளரியென ஓர் பண்ணுமுண்டு."

அன்றில் பறவை வெவ்வேறு சமயங்களில் வேறுபட்ட ஒலியை எழுப்பும். எனவே, விளரி என்பதை மத்யம ஸ்வரம் எனக் கொள்ளத் தேவையில்லை.  விளரி என்பது தைவத  ஸ்வரம் (ஆறாவது சுரம்) . ஏன் அதற்கு தைவதம் என்ற பெயர் எனப் பார்ப்போம். அன்றில் துணையில் ஒன்று பிரிந்தாலும் குரல் எழுப்பும். இந்தக் குரலை ‘அகவல்’ என்பர். ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும்போது எழுப்பும் குரலை ‘உளறல்’ என்றும், பேடு கருவுற்றிருக்கும்போதும் எழுப்பும் குரலை ‘நரலல்’ என்றும் சங்கத்தமிழ் பாகுபடுத்தி வழங்குகிறது.

(1) உழை - மத்தியம சுரத்தின் தமிழ்ப்பெயர்
-------------------------------
மத்யம ஸ்வரம் (நான்காம் சுரம்) அன்றில் பட்சிகள் உயர்ந்த மரங்களில் (பனை, தென்னை, வாகை, electric tower...) கூடுகட்டிக்  கொஞ்சிக் குலாவிப் புணர்கையில் எழுப்பும் ஒலி ஆகும். Ibises form lifelong pairs.
https://x.com/Anir_banBhowmik/status/1898258265688940603
https://x.com/puregoldj/status/1918021037007966646
https://x.com/TathagatEcon/status/1774118882275717499
https://www.alamy.com/stock-photo-a-mating-couple-of-red-naped-ibis-in-the-forests-as-pond-herons-roost-103705739.html
https://birdsofnepal.wordpress.com/2017/04/17/black-ibis/

உழை=பக்கம்; உழையர்=பக்கத்திலிருப்பவர்,  சுற்றம்போல் (கிளை போல்) பக்கத்திருப்பவர்,  கிளை போல் குரலுடன் பொருந்தியிசைக்கும் நரம்பு உழை எனப் பெயர் பெற்றது. குரல்  - உழை உறவு என்பது பக்கத்தில் இருக்கும் சுற்றம் போன்ற உறவுத் தன்மை. உழைநரம்பு என்பது உறவினர் அல்லது சுற்றத்தார் அல்லது சொந்தக்காரர் போன்ற உறவுடைய நரம்பு எனப் பொருள்படுவது. தழையினும் உழையிற் போகான் (குறுந்தொகை, உழை = பக்கம்). அன்றில்/கிரவுஞ்சப் பட்சிகள் உழைந்து (நெருங்கி) வாயலகைக் கோத்துப் புணரும் கலவியோசை "உழை" மத்யம ஸ்வரம் எனக் கொண்டனர். உழை/மத்யம சுரத்தின் ஓசை க்ரௌஞ்சத்தின் ஓசை என்பது இதனால் தான்.

(2) விளரி - தைவத சுரத்தின் தமிழ்ப் பெயர்
---------------------------------

விள்- > விளர்-தல் (விளம்புதல்). விளரி (-‘த’ ஸ்வரம்)  இளி (ப) எனும் நரம்பினுக்கு அடுத்து ஒட்டிச் சற்று உயர்ந்து மெல்லியதாக ஒலிப்பது  விளரி. விளரி= கூவி அழைப்பது: சிறு நா ஒண்மணி விளரி ஆர்ப்ப (குறுந்தொகை). மென்மை ஒலியுடையது  விளர்=மென்மை. மிக உருக்கமான,  இரங்கற்குரிய மென்மையான நெய்தற் பண்ணுக்கு ‘விளரிப்பண்’ எனப் பெயருடைமையால்,  விளரி நரம்பு என்னும் சொல்லை விளங்கிக் கொள்ளலாகும்.
விளர்⁴-தல் viḷar- , 5 v. tr. cf. விளம்பு-. To call; கூப்பிடுதல். வையமுற்றும் விளரியதே (திவ். இயற். திருவிருத். 82).
விளரி² viḷari , n. prob. விளர்⁴-. 1. (Mus.) The sixth note of the gamut, one of seven icai, q.v.; ஏழிசையு ளொன்று. (திவா.) 2. (Mus.) A melody-type of the neytal class, suited for mourning; நெய்தற்குரிய இரங்கற்பண். விளரி யுறுதருந் தீந்தொடை நினையா (புறநா. 260). 3. Yāḻ; யாழ். (அக. நி.)

கூட்டில் உள்ள அன்றில் பேடு, ஆண்துணையைப் பிரியுங்கால் ஏங்கி ஏங்கி நீண்ட தூரம் கேட்கும் விளரிப் பண்ணை இசைத்துக்கொண்டேயிருக்கும். இதனைத் தான்,  வடமொழியில் சங்கீதவாணர்கள் "தைவத" ஸ்வரம் என அழைக்கலாயினர். நெய்தல் பண் விளரி. பிரிவுக்கும், இறப்புக்கும் தெய்வம் வருணன். அவனது திணையின் பண் அன்றில் இசைக்கும் விளரி ஆகும்.  தைவதம் என்றால் தெய்வத் தொடர்புடைய சுரம் என்ற பொருள் கொடுக்கிறது.  இது இராமனைப் பிரிந்த சீதாதேவியின் விளரிப்பண்,  ஆதிகாவியமும், அன்றில் பறவையை வேடன் கொன்றதும், அன்றிற்பேட்டின் ஆற்றாமையை வெளிப்படுத்திய விளரிப்பண்ணால் ஏற்பட்ட பெயர் ஆகும். அன்றிலின் சோகம், ச்லோகம் பிறக்க மூலமானது. பறவையாளர்களும் (Birders) அன்றில் (ஐபிஸ்) பறவைகளின் விளரிப்பண்ணை இரவு முழுதும் பதிவு செய்துள்ளனர். சாருஸ் நாரை போன்றவை இவ்வாறு விளரி இசைப்பதில்லை. எனவே தான், சாருஸ் நாரை  அன்றில்/க்ரௌஞ்சம் அல்ல என்ற முடிபுக்கு வந்தேன்.  https://www.kamakoti.org/tamil/Kural80.htm

மேலும், க்ரௌஞ்சம் கரிய நிறம் உடையது. Black ibis, Indian black ibis என்ப.  https://en.wikipedia.org/wiki/Red-naped_ibis சாருஸ் நாரைக்குக்  கரிய வண்ணம்  இல்லை. இதனைக் கம்பரும் சாற்றுகிறார்:
       அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என
       முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ
       இன்று இலங்கை அழிந்தது என்று ஏங்குவார்
       சென்று இலங்கு அயில் தாதையைச் சேர்ந்துளார்

அன்றிலின் சோகம், ச்லோகம் பிறக்கக் காரணம்:
https://www.valmikiramayan.net/utf8/baala/sarga2/balaroman2.htm
https://sacred-texts.com/hin/rys/rys1002.htm
39 samākṣaraiś caturbhir yaḥ pādair gīto maharṣiṇā
   so 'nuvyāharaṇād bhūyaḥ śokaḥ ślokatvam āgataḥ

Classical Sanskrit Tragedy: The Concept of Suffering and Pathos in Medieval India
https://api.pageplace.de/preview/DT0400.9780755617869_A40776749/preview-9780755617869_A40776749.pdf

Anandavardhana: Dhvanyaloka
https://gretil.sub.uni-goettingen.de/gretil/1_sanskr/5_poetry/1_alam/andhvy_u.htm
kāvyasyātmā sa evārthas tathā cādikaveḥ purā /
krauñca-dvandva-viyogotthaḥ śokaḥ ślokatvam āgataḥ // DhvK_1.5 //

vividha-vācya-vācaka-racanā-prapañca-cāruṇaḥ kāvyasya sa evārthaḥ sāra-bhūtaḥ /
cādikaver vālmīkeḥ nihata-sahacarī-viraha-kātara-krauñcākranda-janitaḥ śoka eva ślokatayā pariṇataḥ / śoko hi karuṇa-sthāyi-bhāvaḥ / pratīyamānasya cānya-bheda-darśane 'pi rasa-bhāva-mukhenaivopalakṣaṇaṃ prādhānyāt || DhvA_1.5 ||

ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ, - கபிலர்,  குறிஞ்சிப்பாட்டு.

விளரிப்பண்ணை வீழ்ந்த வீரர்களுக்குப் பாடுதலை நெடுங்கழுத்துப் பரணர் புறப்பாட்டில் சொல்லியுள்ளார். "விளரிப்பண் கண்ணினார் பாணர் களிறெறிந்து வீழ்ந்தார்க்கு " புறப்பொருள் வெண்பா மாலை.

"இரங்கற் பண் விளரி. அதைப் பாடிப் பிறர்பால் இரக்கம் உண்டாக்கினார்கள். சிவபெருமானால் கைலையின் கீழ் அமிழ்த்தப்பட்ட இராவணன் அவருக்கு இரக்கம் உண்டாக விளரியைப் பாடினான் என்ற பொருள்பட,
"விராய்மலர்ப்பூங் குழலிபங்கன் மகிழ்வி னோங்கும்
வெள்ளிமலைக் கீழ்க்கிடந்து விளரிபாடும், இராவணனார்"
என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார். இச் செய்யுட்பகுதி விளரி இரங்கற்பண் என்பதை நன்கு தெரிவிப்பது காண்க." உவேசா, https://s-pasupathy.blogspot.com/2015/10/56.html )
இச் செய்யுளை உவேசா அதிவீரராம பாண்டியர் செய்த கூர்மபுராணம் (பூருவகாண்டம்)  கொண்டுள்ளது.

"இசைக்கும் திறன்மிகு பெரும் புலவன்
வெள்ளி மலைக் கீழிருந்து விளரி பாடினான்" (ஏ. கே. வேலன், இராவணலங்கை).

வேய் குழல் விளரி நல் யாழ் வீணை என்று இனைய நாண
ஏங்கினள் இரங்கி விம்மி உருகினள்  - கம்பர்.

அராகம் > ராகம். அராகங்கள் இருவகைப் படும்: (1) பண் (ஜனக ராகம்) (2) திறம் (ஜன்ய ராகம்). நிறம் ஒளியால் கண் காண்கிறது. ஒளி ஏழு வண்ணங்களின் கலவை. அதுபோல, ஏழு சுரங்களின் கலவைக்கு "நிறம்" என்ற பெயரும் சொல்லலாம். நிறவாளத்தி niṟa-v-āḷatti , n. < id. + ஆளத்தி. An elaboration of musical modes; இசையின் ஆலாபனவகை. (சிலப். 3, 26, உரை.)  நிற ஆளத்தி = ராக ஆலாபனை. நிறங்களில் சிறந்தது அராகம் (அரக்கு) என்னும் சிவப்பு. அராகம் = சிவப்பு நிறம் என்கிறது பிங்கல நிகண்டு. ராகியின் நிறமும் சிவப்பு (கேழ்வரகு). பறக்கும்/நடக்கும் உயிர்களை “அரக்கினால்” அரத்தம் வரும். அராகம் சிவப்பு எனல் பொருத்தம். ராகம் வண்ணங்களுடன் தொடர்புடையது என்பது இந்திய சங்கீத சாஸ்திரம். வண்ணங்களில் சிறந்தது சிவப்பு நிறம், அதற்கான, அராகம் என்ற பெயர் எல்லா ராகங்களுக்குமாய் நிற்கிறது. உ-ம்: தாமரை என்றால் சிவப்பான பூ. வெள்ளைத்தாமரை, நீலத்தாமரை எல்லாவற்றுக்கும் ஆகிவருகிறது. அரங்கம் > ரங்கம், அராகம் > ராகம்,  அரம்பம் > ரம்பம் (அரம்பை(யர்) > ரம்பா), அரதனம் > ரதனம் > ரத்னம், அரத்தை > ரத்தம்,  ...

"இசைவகை:
இசையில் பண்களென்றும் திறங்களென்றும் இருவகை உண்டு. பண்கள் ஏழு நரம்புகளும் கொண்டன. நரம்பு என்பது இங்கே ஸ்வரம். ஏழு ஸ்வரமுங் கொண்டவை ஸம்பூர்ண ராகம். அதுவே பண்ணாம். வடமொழியில் மேளகர்த்தாவென்று கூறப்படுவதும் அதுவே. ஏழு ஸ்வரங்கள் வடமொழியில் ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று கூறப்படும்; அவற்றையே தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என வழங்குவர். யாவருக்கும் இயல்பான குரல் ஸட்ஜம் ஆகும். அதனைக் குரலென்றே வழங்கிய பெயரமைதி வியக்கற் பாலது. ஏழு ஸ்வரங்களுக்கும் ஸ, ரி, க, ம, ப, த, நி என்று இப்போது பயிலப்படும் எழுத்துக்களைப் போலவே தமிழ் முறையில் ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ என்ற ஏழு நெடிலையும் ஸ்வரங்களுக்கு எழுத்துக்களாகக் கொண்டு பயின்றனர். இந்த ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண்ணென்று முன்னரே சொன்னேன். ஜனகராகமென்பதும் அதுவே. அப்பண்களிலிருந்து திறங்கள் பிறக்கும். அவை இக்காலத்தில் ஜன்ய ராகங்களென்று வழங்கப்படும்.

"நிறைநரம் பிற்றே பண்ணென லாகும்
குறை நரம்பிற்றே திறமெனப் படுமே"

என்ற திவாகரச் சூத்திரத்தால் பண்கள், திறங்கள் என்பவற்றின் இலக்கணம் விளங்கும். பண்களுக்கு இனமாகத் திறங்கள் கூறப்படும். யாப்பருங்கல விருத்தி யுரையில் காணப்படும் மேற்கோட் செய்யுளாகிய,

"பண்ணுந் திறமும்போற் பாவு மினமுமாய்
வண்ண விகற்ப வகைமையாற் பண்ணின்
நிறம்விளரிக் கில்லதுபோற் செப்ப லகவல்
இசைமருட்கு மில்லை யினம்"

என்பதில் இது விளக்கப்பட்டிருத்தலைக் காணலாம். இப்படிப் பிறக்கும் பண்ணும் திறமுமாம் இசை வகைகள் ஒரு வழியில் தொகுக்கப்பட்டு 11,991 என்று கூறப்படுகின்றன."

Krauñca Bird of the Rāmāyaṇa: Its Identification from Sanskrit and Tamil sources. In this essay, I have tried to explain the Krauncha saaman of the Vedas, and its source as the bardic source of ViLari lament songs.
4. Ancient Oral Bardic Tradition and Indian Music. Last paragraph of this section,
"Vaudeville’s explanation will be very clear when juxtaposed with Tamil Sangam data in the identification of krauñca as black ibis. Also, note that the French Sanskritist differentiates between krauñca versus sārasa. Birders have recorded the female ibises crying throughout the nights, and female Sarus cranes never do this lament for hours together when their mates are separated. This is a main reason why ibis is the identification of krauñca bird, and not the sarus crane.  “The association between krauñca meaning a musical tone, a type of chant, and secondarily a class of water-birds with a pathetic call (such krauñca, sārasa, haṃsa) on the one hand, and śloka, meaning a "rhythmic cry," especially as uttered by the same kind of birds, is a natural association and must be very ancient, as already indicated in RV 3. 53, 10 where śloka is connected with haṃsa. The Valmikian episode under consideration is another illustration of the same association, but it introduces a romantic element, apparently based on popular belief: the cry of those water-birds is caused by sorrow or mourning, śoka, so that the śloka sung by krauñca birds is really "born of śoka" and expresses pathos, karuṇam. As we have seen, in the folk-tales, it is to the female of the species the krauñca or kurarī that this mournful lament is attributed.” (pg. 331, [2])"

பிற பின்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 21, 2025, 7:06:00 PM (4 days ago) Sep 21
to santhav...@googlegroups.com
அன்றிலின் செய்தி: தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளையவர்கள், முருகவேள் பன்னிரு திருமுறை தொகுதி 3
 
 அன்றில் போல் உளம் இரண்டொன்று மாயுற:
 அன்றில் - இது நெய்தல் நிலத்துக்கு உரிய பறவை - பனை மரத்தில் சிறு கோலாற் கூடு கட்டிக் கொண்டு வதிவது. தலை சிவந்திருக்கும்: கரியகால்; நள்ளிரவில் அகவும்: ஆணும் பெண்ணும் எப்பொழுதும் சேர்ந்து வாழும்; காதற் சிறப்பைக் காட்ட இப்பறவையை உவமானமாக எடுத்துக் காட்டுவர். தன் துணைப் பறவையைப் பிரிய நேரிடின் தான் துயிலாது நடுங்கி வருந்தும் தன்மையது. ஊதுகொம்பு போன்ற ஓசையை உடைய வளைந்த வாயை உடையது:
 
"நீண்ட பெண்ணை (பனைமரம்) மேல் அன்றில் வந்தனையும்", " மடற் பெண்ணைக் குரம்பை வாழ் முயங்கு சிறை அன்றில்காள்! பிரிவுறு நோய் அறியாதீர் மிகவல்லீர்" பொன்னமபூங் கழிக்கானற் புணர் துணையோடுடன் வாழும் அன்றில்காள் அகன்றும் போய் வருவீர்காள்!" (சம்பந்தர் - 2.50-1; 1-60-7; 3-63-2) " இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்! எம் போல இன் துணைப் பிரிந்தாரை யுடையையோ நீ" - (கலித்தொகை . நெய்தல் - 12); "ஏங்கு வயிர் இசைய கொடுவாய் அன்றில் ஓங்கிரும் பெண்ணை யகமடல் அகவ - குறிஞ்சிப் பாட்டு 219 - 220-; அன்றிற் பேடை யளிக்குர லழை இச் சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்ப" மணிமேகலை 5-127; "நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்... பெடையொடு... நரலும் நள்ளென்யாமத்து" . " சிறுகோற் குடம்பைக் கருங்கால் அன்றில்.... பெடை அகவும் பானாட்கங்குல்" குறுந்தொகை - 160, 301. சேவலோடுறை செந்தலை அன்றிலின்... நடுங்குவாள்" = கம்ப. ராமா - சூர்ப்ப - 76. -

N. Ganesan

unread,
Sep 21, 2025, 9:38:39 PM (4 days ago) Sep 21
to santhav...@googlegroups.com
கிரவுஞ்சம் அன்றில்
கிரவுஞ்சம் கோழிப்பறவைஅளவு ஆகும்  (சேந்தன் திவாகரம்)

கவுஞ்சம் அன்றில் கிரவுஞ்சமும் சாற்றும் - 8.மாப்பெயர் :8 31/1
அசுரநாளும் ஓர் பறவையும் அன்றில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 84/1
கிரவுஞ்சம் கோழி பறவை அளவு ஆகும் (பிங்கலந்தை)

கவுஞ்சம் அன்றில்
அன்றில் ஓர் புள்ளும் மூலநாள் என ஆம் இரண்டே  (மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு)

அசுரநாள் தானே அன்றில் (ச. வயித்தியலிங்கரவர்கள் இயற்றிய சிந்தாமணி நிகண்டு )

-----------------

அன்றில் = கிரவுஞ்சம் என முதலில் பதிவு செய்தவை தமிழ் நிகண்டுகள். மேலே பார்க்க.
ஆழ்வார் பாசுரங்களுக்கு மணிப்பிரவாள நடையில் பல வியாக்கியானங்கள் பல நூற்றாண்டுகளாக உள்ளன. அவற்றை ஆராய்தல் வேண்டும். இவற்றை நன்கறிந்த ப்ர. ப. அ. ஸ்வாமி எழுதின செய்திகள் சில.  https://x.com/Srivaishnava/status/1965849350179033187

https://www.dravidaveda.org/3826/
சிலஅன்றிற் பேடைகளை நோக்கி நீங்கள் உங்களுடைய ஆண்களோடே கூடிக்கொண்டு இனிமையான கூஜிதங்களைச் செய்து அதனாலே என்னை நலிகின்றீர்களே இது நியாயமா? இப்படி நலிய வேண்டா–என்று இரக்கிறாள்.  அன்றில் என்பது ஒரு பறவை;  குரரீ என்று வடமொழியிற் கூறப்படும்;  க்ரௌஞ்ச மென்னவும் படும். அது பெரும்பாலும் பனைமரத்தில் வாழும். அது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் இணை பிரியாது நிற்கும்;  கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டு பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறுக்க கில்லாமல் ஒன்றை ஒன்று இரண்டு மூன்று தரம் கத்திக் கூவி, அதன் பின்பும் தன் துணையைக் கூடாவிடின் உடனே இறந்துபடும். ஆணும் பெண்ணுமான அந்த அன்றிற் பறவை இணை பிரியாமல் நெருங்கி ஒன்றோடொன்று வாயலகைக் கோத்துக் கொண்டு உறங்கும் பொழுது அவ்வுறக்கத்தில் வாயலகு தன்னில் நெகிழ்ந்த வளவிலே துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொனியாக மிக இரங்கத்தக்க சிறு குரல் செய்து விரஹஜனங்களின் செவியில் விழுந்தால், பொறுக்க முடியாத துன்பமாகும்.  பெரிய திருமடலில், “பெண்ணைமேல் பின்னுமவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும், என்னுடைய நஞ்சுக்கோ ரீர்வாளா மென் செய்கேன்!” என்றதுங் காண்க. பெரிய திருமொழியிலும் “காவார் மடற் பெண்ணை யன்றிலரி குரலும், ஏவாயினூடியங்கு மெஃகில் கொடிதாலோ” என்றாற் போன்ற பாசுரங்கள் பலகால் வருவது காண்க.

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZI0kuUy/page/108/mode/2up

https://tidley.com/2022/11/15/ஸ்ரீ-திருவாய்-மொழி-9-5-இன்னு/

"தார்மிகராய் இருப்பார் வைத்த தண்ணீர்ப் பந்தலிலே வழியடிக்காரர் ஒதுங்குமாப்போலே, மடலெடுத்தாகிலும் நட்ட பனையிலே அன்றில் வந்து குடிபுகுந்தது" பெரியவாச்சான்பிள்ளை, ஸ்ரீஸூக்தி.
https://acharya.org/ar/vk/mv.pdf

‘இங்ஙனம் ஆயின், இப்பிரபந்தங்கள் 5‘எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை’ இவற்றோடு கூடிய பாவும் பா இனங்களுமாக அமைந்த வகை யாங்ஙனம்?’ எனில், பகவானுடைய திருவருள் அடியாகப் பிறந்த பிரபந்தங்கள் இவை ஆதலின், இவற்றில் கூடாதன இல்லை. சோக வேகத்தாலே பிறந்த 1‘மா நிஷாத’ என்னும் சுலோகமானது 2‘மச்சந்தாதேவ’ என்னும் சுலோகத்தின்படியே, அத்திக்காயில் அறுமான் போன்று, பகவானுடைய விபூதியில் ஒரு கூறனான பிரமனது திருவருளால் எல்லா இலக்கணங்களும் அமைந்த ஸ்ரீ ராமாயணமாகத் தோன்றியதை ஈண்டு நினைவு கூர்க. புருஷோத்தம நாயுடு, திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்.
https://www.tamilvu.org/slet/l4100/l4100d16.jsp?pgpass=405&number=23

தெரிவு,
நா. கணேசன்

On Sun, Sep 21, 2025 at 5:48 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Sep 21, 2025, 10:42:18 PM (4 days ago) Sep 21
to santhav...@googlegroups.com
https://youtu.be/L4IxvrY8Cy4?t=162
Courtship among Ibis birds is very unique. They males offer sticks as presents, and if the female agrees to his gifts, they start building a nest together and start a family.

நம்மாழ்வார் பாசுரத்தில் இச்செய்தியை அழகாகப் பாடியுள்ளார். முட்கோல்களைக் கொண்டு கூடுகட்டும் அன்றில்கள்.

நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 83

விளரிக் குரல் அன்றில் மென்பெடை மேகின்ற முன்றில் பெண்ணை
முளரிக் குரம்பை இதுஇதுவாக முகில் வண்ணன் பேர்
கிளரிக் கிளரிப் பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம்
தளரின் கொலோ அறியேன் உய்யல் ஆவது இத் தையலுக்கே? 83
(தோழி சொல்கிறாள்)

முன்றிலில் உள்ள பனை மரத்தில், முள் தாவரங்களின் கோல்களை அரிந்து செய்யப்பட்ட ஒரு கூடு, அங்கே ஓர் அன்றில் பறவை தன்னுடைய ஆண்  பறவையைப் பிரிந்ததால்  விளரி என்னும் பண்ணில் ஏங்குகிறது.

இதனைக் கேட்ட  என் தோழி, முகில்வண்ணனின் பெயரைப் பலவிதமாகச் சொல்லிப் பிதற்றுகிறாள், அவளுடைய மென்மையான உயிரோ நோகிறது, இவள் தளர்ந்துவிடுவாளோ? இவள் உயிர்வாழ்வதற்கு வழி உண்டோ? நான் அறியேன்.

முன்றில் பெண்ணைமேல்  முளரிக் கூட்டகத்து
அன்றிலின் குரல் அடரும் என்னையே? (பெரிய திருமொழி)

N. Ganesan

unread,
Sep 22, 2025, 10:44:13 PM (3 days ago) Sep 22
to santhav...@googlegroups.com
Excellent recording of the mating of the ibis pair.
https://x.com/rneelmani/status/1678947695048773634

Red-naped ibis is called Andril in Tamil Sangam texts and Krauncha in Sanskrit for 2000+ years. From the Moghul times, Krauncha changes to Sarus crane in paintings. This is akin to the change in Hamsa from bar-headed goose to swans in paintigs (e.g.Ravivarma), introduced in zoos by the British.

One such Indian black ibis pair was mating on a tall tree top, which we see now in electric pylons in the countryside. The male of the pair was shot by a hunter. He was cursed by Valmiki with shloka, and starts the Adi Kavya, Ramayana.


Classical Sanskrit Tragedy: The Concept of Suffering and Pathos in Medieval India
https://api.pageplace.de/preview/DT0400.9780755617869_A40776749/preview-9780755617869_A40776749.pdf

Reply all
Reply to author
Forward
0 new messages