சைவ சமயத்தின் திருநீற்று மகிமையைப் போற்றும் பாடல். திருப்போரூர் சன்னிதிமுறைப் பிரபந்தத் திரட்டு.
பிள்ளைத்தமிழ், காப்புப் பருவம்.
திருநீறு
சோதி மகரக் குழைசெறிசுந் தரத்தோ ளீரா றுடையானைச்
சுருதி யிறைக்குந் தண்டையந்தாள்
துணையென் முடியிற் பொறித்தானை
மாது வளருஞ் சமரபுரி வாழ்வை வானோர் சிகாமணியை
வடிவே லரசை மயிலரசை
வந்து புறங்காத் தளித்திடுமால்
ஆதி பகவன் ஞானவடி வழலிற் பூத்து நித்தியமாய்
அணிந்தோர் தமக்கு வசிகரமாய்
அருந்தி னோர்கட் காரமுதாய்
நீதி யறியும் பசுமலத்தை நீக்கு மொருநற் குறிகாட்டி
நிகழ்பே ரின்பக் கடலூட்டி
நின்ற புகழ்வெண் திருநீறே.
- திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.
------------------------------
மண்ணில் உயிரை வசிகரிக்கும் மந்திரமொன்
றெண்ணி விதிமுறையே நோக்கி யெதிர்சென்று
நண்ணிய வெஞ்சேனை நரலைநடு வட்புக்கான்
அண்ணல் அவுணற் கணித்தாய் அடைகுற்றான். ...... 23
- கந்தபுராணம்
================
இடிமின்னல் சேர்மழையாய் இன்பம் தருமோ
வெடிஎன்றால் அல்ல விடையும்! - வெடியால்
கொசுவொழி(ளி)யும்(!) தீயசக்தி கொட்டம்போம்(!), நம்மை
வசிகரிக்கும் தீபா வளி!
- அரசி. பழனியப்பன்
தீபாவளி வாழ்த்துகள்,
நா. கணேசன்