காய்ச்சீர் ஆக்கலும், காட்டலும் (பழைய வெண்பாக்கள்)

91 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 31, 2022, 6:37:00 AM10/31/22
to Santhavasantham, Thiruppur Krishnan, thiruppug...@gmail.com
இவ்விழையில், காளமேகம் வெண்பாப் போல, கனிச்சீரைக் காய்ச்சீராய் அலகிடும்
அரிதான பழைய உதாரணங்கள் தாருங்கள். பல இருக்கும். நன்றி.

----------------------------

KodaiMohan:
"கால்குலேட்டர் கைபோன் கணினிகடி காரமிவை
நாலும் உனக்களித்து நான்மகிழ்வேன்! -கோலக்
கணபதியே! வெண்பாக் கலக்க(ல்)விளை  யாட்டில்
பிணக்கின்றிக் காப்பாய் பெரிது".

MarabinMaindhan:
> அப்படி வழக்கம் இல்லை. கணக்கு விளை யாட்டில் என்று இருந்தால் தளை தட்டாது.

இதில் கால்குலேட்டர் - விளாங்காய்ச் சீர். நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
கால்குலேட் டர்போன் கணினிகடி காரமிவை  (முதலடி) எனலாமே.

விதிவிலக்கான இவைபோன்றவற்றுக்கு, ஒரு வழி தோன்றுகிறது:
"கால்குலேட்டர் கைபோன் கணினிகடி காரமிவை
நாலும் உனக்களித்து நான்மகிழ்வேன்! -கோலக்
கணபதியே! வெண்பாக் கலக்கல்விளை  யாட்டில்
பிணக்கின்றிக் காப்பாய் பெரிது".

>இவ்வெண்பாவில்,  கலக்கல்விளை --> யாட்டில் என்று வந்தால் கனிச்சீர் வருகிறது.
> அதைத்தவிர்க்க, நடுவிலுள்ள ல் லை அடைப்புக் குறிக்குள் போட்டு,  
> கலக்க(ல்)விளை --> யாட்டில் கனிச்சீரைக் காய்ச்சீராக்குவது சரியா?.

*கலக்க(ல்)விளை* - காய்ச்சீர் ஆக்க, ல் ஒலிக்காது.
என்பது போல எழுதலாம்.

இவற்றுக்குப் பல உதாரணங்கள் காட்டலாம். அவற்றைத் தொகுக்க வேணும்.
அரிதினும் அரிதாக, கணபதி வெண்பா போல வருவதுண்டு. பழைய நூல்களில் உள்ள
காட்டுகளைத் தொகுக்கலாம். கணினி உதவும் செயல் இது. காரைக்கால் அம்மை
போன்ற திருமுறைகள், ஆழ்வார்கள், தனிப்பாடல் வெண்பாக்கள், கலிவெண்பாப்
பிரபந்தங்கள் எனத் தேடல்வேண்டும்.

இலக்கண நூல்களில் சொல்லியிருப்பதும் சேர்த்தலாம். ஓர் ஐம்பது காட்டுகள்
தந்தால், வெண்பா இயற்றப் பயில்வாருக்கு உதவும்.

கந்த ஷஷ்டி சமயமிது. காளமேகம் முருகனைச் சொன்ன அகத்துறை வெண்பா.
இருபொருள் உண்டு.

செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல – மருப்புக்குத்
தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே  விளக்குமா றே !

*வீர(ர்)களை* - காய்ச்சீர் ஆக்க, ர் ஒலிக்காது.

அதே போல,

கால்குலேட் டர்போன் கணினிகடி காரமிவை
நாலும் உனக்களித்து நான்மகிழ்வேன்! -கோலக்
கணபதியே! வெண்பாக் கலக்கல்விளை  யாட்டில்
பிணக்கின்றிக் காப்பாய் பெரிது.

*கலக்க(ல்)விளை* - காய்ச்சீர் ஆக்க, ல் ஒலிக்காது.

----------

On Thu, Dec 19, 2019 at 8:46 PM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:

    ''பேரில் பெருந்தூண் பற்றி நின்மகன்
    ஊரில்  எங்குளான் என்பா  யாயின்
    எங்குளான்  என்பதை  அறியேன் ஆயினும்
    சுவைநீர்  பருகிய குவளை  போல
    ஈன்ற  வயிறோ  இதுதான்
    தோன்றுவன் திரைப்பட  அரங்கில் தானே!

    என்ற குறும்புப்  பாடல்  என்றோ  எழுதினேன்!
    அன்புடன் புலவர் இராமமூர்த்தி  


ஈரோடு தமிழன்பன் 25 ஆண்டு முன் இல்லத்தில் இருந்தபோது
நான் சொன்ன குறும்புப் பாடல்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்தெனக்கு நல்கிடுவாய் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நான்தருவேன்
சங்கத்  தமிழ்மூன்றும் தான்
                                                        - கணேசன்

N. Ganesan

unread,
Oct 31, 2022, 7:34:40 AM10/31/22
to Santhavasantham, Thiruppur Krishnan, thiruppug...@gmail.com

கனிச்சீர் வருமாயின், வகையுளியாய் அமைப்பர். திரு.வி.க. வெண்பா பாருங்கள்.

அண்ணாத் துரையென்னும் அண்ணல் தமிழ்நாட்டின்
வண்ணான் அழுக்கெடுப்பில்; வாய்மொழியில் பண்ணாவான்;
சிற்பனெழுத் தோவியத்தில்; செவ்வரசு நாவாயின்
அற்புதஞ்சூழ் மாலுமியென் றாடு    - தமிழ்த்தென்றல் திரு. வி. க.

N. Ganesan

unread,
Oct 31, 2022, 6:01:52 PM10/31/22
to Santhavasantham
ஆழ்வார் பாசுரங்களில் முதலாழ்வார் மூவர் பாசுரங்கள் வெண்பா என ஞாபகம். அவை சீர்பிரித்து, ஆனால் சொல் பிரிப்பு, தரிப்புக்குறி இடாமல் உள்ள தளம் இருக்கிறதா? நன்றி.

நா. கணேசன்

RAJAGOPALAN APPAN

unread,
Nov 1, 2022, 11:00:16 AM11/1/22
to santhav...@googlegroups.com
ஒரு சீரில் இடையில் வருகிற மெல்லின/இடையின ஒற்று, இயல்பான ஓசைக்குறைவினால்  அலகிடாமல் விடப்படுவதுண்டு. அப்படி வருகிற இடங்களில்,  வலிந்து,  ஒரு கனிச்சீரைக் காய்ச்சீராக மாற்றியதாகக் கருதமுடியாது.

ஈதலறம் தீவினைவிட் டீட்ட(ல்)பொருள் எங்ஙான்றும்
காத லிருவர் கருத்தொருமித் தாதரவு
பட்டதே இன்பம். பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

என்கிற ஔவை பாடலில், முதலடியில் 'ஈட்டல்பொருள்' என்பதில் ' ல்' அலகிடப்படாமல் கூவிளங்காயாகக் கொள்ளப்படவேண்டும்.

அ.ரா.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUd_CNEPPwH_kKhTYEaFrbN%2BZh0ytDV28z_UtquTAxm8jA%40mail.gmail.com.

Subbaier Ramasami

unread,
Nov 3, 2022, 12:01:08 AM11/3/22
to santhav...@googlegroups.com
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும். - காளமேகம்.

எடுத்துக்காட்டுகள் நிறையவுண்டு.  இடையில் உள்ள மெய் கணக்கில் சேராது.

இலந்தை

N. Ganesan

unread,
Nov 3, 2022, 9:28:40 PM11/3/22
to santhav...@googlegroups.com
On Tue, Nov 1, 2022 at 10:00 AM RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com> wrote:
ஒரு சீரில் இடையில் வருகிற மெல்லின/இடையின ஒற்று, இயல்பான ஓசைக்குறைவினால்  அலகிடாமல் விடப்படுவதுண்டு. அப்படி வருகிற இடங்களில்,  வலிந்து,  ஒரு கனிச்சீரைக் காய்ச்சீராக மாற்றியதாகக் கருதமுடியாது.

ஈதலறம் தீவினைவிட் டீட்ட(ல்)பொருள் எங்ஙான்றும்
காத லிருவர் கருத்தொருமித் தாதரவு
பட்டதே இன்பம். பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

என்கிற ஔவை பாடலில், முதலடியில் 'ஈட்டல்பொருள்' என்பதில் ' ல்' அலகிடப்படாமல் கூவிளங்காயாகக் கொள்ளப்படவேண்டும்.

அ.ரா.

எல்லாப் பெரும்புலவர்களும் வெண்பா பாடுகையில், கனிச்சீர் இல்லாமல் காய்ச்சீராகக் கொள்ளத்தக்கதாகச் செய்யுள்கள் இயற்றியுள்ளனர். அவற்றில் சில மதுரன் தமிழவேள் பார்த்துத் தந்தார்.

எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர் ஆவா - *ஒளிகொண்மிடற்*
றெந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழும் திறம்   - காரைக்கால் அம்மை

ஈதலறம் தீவினைவிட் *டீட்டல்பொருள்* எஞ்ஞான்றும்

காத லிருவர் கருத்தொருமித் தாதரவு
பட்டதே இன்பம். பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.   -  ஔவையார்

போதரிக்கண் மாதராள் பொன்மாலை சூட்டத்தான்
ஆதரித்தார் தம்மோ டவையகத்தே - சோதிச்
செழுந்தரள வெண்குடையாய் *தேவர்களும்* நீயும்
எழுந்தருள்க வென்றா ளெடுத்து           - நளவெண்பா

கொம்பிலையே தீனிதின்னுங் கொண்டகான்மேல் வெட்டுதலால்
அம்புவியி னன்னடைய தாதலால் –  *உம்பர்களும்*
தேடுநற் சோலைத் திருமலைரா யன்வரையில
ஆடுங்  குதிரையுநே ராம்  - காளமேகம்

வல்லரியாய் உற்றிடலான் *மாதர்கையில்* பற்றிடலான்
சொல்லரிய மாப்புடைக்கத் தோன்றுதலால் – வல்லோர்
அகந்தனிலே வாழ்தலா லன்றுலக ளந்த
முகுந்தனுமே யாகும் முறம்       - காளமேகம்

பெரியவிட மேசேரும் *பித்தர்முடி* யேறும்
அரியுண்ணும் உப்புமே லாடும் – எரிகுணமாம்
தீம்பொழியுஞ் சோலைத்l திருமலைரா யன்வரையில்
பாம்பும் எலுமிச்சம் பழம்      - காளமேகம்

நஞ்சிருக்குந் தோலுரிக்கு *நாதர்முடி* மேலிருக்கும்
வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது – விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்      - காளமேகம்

செருப்புக்கு *வீரர்களைச்*  சென்றுழக்கும் வேலன்

பொருப்புக்கு நாயகனைப் புல்ல – மருப்புக்குத்
தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே  விளக்குமா றே !  - - காளமேகம்


கால்குலேட் டர்போன் கணினிகடி காரமிவை
நாலும் உனக்களித்து நான்மகிழ்வேன்! -கோலக்
கணபதியே! வெண்பாக் *கலக்கல்விளை*  யாட்டில்
பிணக்கின்றிக் காப்பாய் பெரிது.  - கோதை மோகன்

உம்பர்தரும் தேனுமணிக் கசிவாகி - திருப்புகழில் காய்வரும் இடம்

ஆழ்வார்களின் வெண்பாக்களில் இதற்குக் காட்டுண்டா?

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Nov 4, 2022, 7:44:14 AM11/4/22
to santhav...@googlegroups.com
கவியன்பன் பாபு, கோவை >>
அய்யா யாப்பென்னும் உப்புக்கல் தேனாழியாகிறது உங்களால். தேனாழியின் மீன் நீங்கள். கரையோரக் கிளிஞ்சல் பொறுக்குகிறேன் நான். கையில் முத்துக் கிடைக்குமா? கிடைத்தால் கொண்டு வருவேன்.

          கூரைத் தகரம் குறும்பாய்வன் காற்றுருட்ட
          ஆரென் றதட்டும் அருங்கணவர்- மார்பில்
          ஒடுங்கியபெண் நல்லாள் உணர்ந்துநகை பூப்ப
          கடுங்காதல் *கூடல்தரும்* கார்.     - ம.லெ.தங்கப்பா

----------------------------------------------

கி. பாரதிதாசன், கம்பன் கழகம், பாரிஸ்

சில இடங்களில் ஒற்றுகள் அலகிடப் படாமையைக் குறித்து.

வண்ணப் பாடல்களில் சில இடங்களில் சீரின் இடையிலும் ஈற்றிலும் வரும் இடையின மெல்லின மெய்கள் அலகிடப்படுவதில்லை.

மக்கள்மனம் மாறியுளர் வானமனம் வந்தன்றித்
தக்கநலம் வாய்க்குமோ தான்

வெண்பாவில் பாடல்களில் கனி வருவதில்லை. இக்குறள் வெண்பாவில் "மக்கள்மனம்" என்ற சீரில் உள்ள "ள்" அலகிடப் படாமல் காய்ச்சீராய்ச் கொள்வர். "கன்னல்மொழி" "புலவர்பலர்" போன்ற சொற்களில் உள்ள "ல்" "ர்" அலகிடப்படமால் காய்ச்சீராய் வெண்பாவில் வரும்.

வெண்பா, கட்டளைக்கலித்துறை, விருத்தம், கட்டளைக்கலிப்பா முதலியவற்றிலே சீா் சிதையுழி, இருகுறிற்கு நடுநின்ற ஒற்றெழுத்து அவ்விருகுறிலும் இணைந்து நிரையசையாதல் வேண்டி நீக்கப்படுதலுமுண்டு. இசைகெடும்வழி ஒற்று வருவித்துச் சோ்க்கப்படுதலுமுண்டு.

எண்டிசையும் மன்னும் எழில்வா ளிளங்கதிரோன்
கொண்டல் பொழிலேழ் குலவரையோ - டண்டர்பதி
முட்டப் பரந்ததே வின்னா ணொலிமுற்றும்
வட்டத் திகரிசூழ் மண்
         பாரதவெண்பா

இவ்வெண்பாவில் அண்டா்பதி என்ற சீரில் "ர்" ஓற்று நீக்கி அலகிடப்பட்டு காய்ச்சீராய்க் கொள்ளப்படும்.

நல்லுறுப் பமையுநம் பியரின்முன் பவனயந்

உன்ற கலிவிருத்த அடியில் "பியரின்முன்" என்ற சீரில் உள்ள "ன்" அலகிடப்படாமல் கருவிளமாகக் கொள்ளப்படும்.

இசைநிறைக்கும் பொருட்டு ஒற்றுத் தோன்றி நிற்றலும் உண்டு

அம்பென ரைந்(து) உடைய்ய காமன்
   ஐய்ய னென்ன வந்தணன்
நம்பு நீர ரல்லர் நன்கு
   ரங்கு நீர ராயினும்
தங்கு ரவ்வர் தாங்கொ டுப்பி
   னெஞ்சு நொந்து தாழ்வர்தாம்
பொங்க ரவ்வ வல்கு லாரெ
   னப்பு கன்று சொல்லினான்
         சீவகசிந்தாமணி
இவ்விருத்தத்தில் உடைய்ய, ஐய்யன், குரவ்வர், அரவ்வ, என்பவைகளிலே ஒற்றுக்கள் இசை நிறைத்தற்பொருட்டு வருவிக்கப்பட்டன. உடைய, ஐயன், குரவர், அரவ என்று நிற்றலே இயற்கை.

இக்கருத்தை விருத்தப்பாவியல் நுாலில் ஒழிபியல் 5 ஆம் நுாற்பாவில் காணலாம்.

வறியா ரெனவல் லொலியோங் கலிலாக்
குறியே யெறியப் படுகொள் கையதே
நெறிவேண் டுழியே நிலையா மதுவே
வறியா ரொருகால் வகையா குவபோல்
         
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
மேலும், பல குறிப்புகள் (இலக்கணக்கடல் தி. வே. கோபாலையர், கி. பாரதிதாசன்)

------------------

தமிழறிஞர் ம ராபோ குருசாமி அவர்களின் வெற்றிவேலன் வெண்பாமாலை நூலில் பூச்சீர் கனிச்சீர் ஆகியவை தென்பட்டவை குறித்து ரசனை இதழில் முருகன் பூசனைக்கு பூக்களும் கனிகளும் வேண்டும் என்று ஐயா கருதி இருப்பாரோ என நான் குறிப்பிட்டிருந்தேன்.
அதற்கு அய்யா அவர்கள் எழுதிய பதில் கடிதம் இது. மரபின்மைந்தன் முத்தையா

WhatsApp Image 2022-11-01 at 6.59.02 AM.jpeg
WhatsApp Image 2022-11-01 at 6.59.03 AM.jpeg

எல்லாப் பெரும்புலவர்களும் வெண்பா பாடுகையில், கனிச்சீர் இல்லாமல் காய்ச்சீராகக் கொள்ளத்தக்கதாகச் செய்யுள்கள் இயற்றியுள்ளனர். அவற்றில் சில மதுரன் தமிழவேள் பார்த்துத் தந்தார்.

எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர் ஆவா - *ஒளிகொண்மிடற்*
றெந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழும் திறம்   - காரைக்கால் அம்மை

ஈதலறம் தீவினைவிட் *டீட்டல்பொருள்* எஞ்ஞான்றும்
காத லிருவர் கருத்தொருமித் தாதரவு
பட்டதே இன்பம். பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.   -  ஔவையார்

எண்டிசையும் மன்னும் எழில்வா ளிளங்கதிரோன்
கொண்டல் பொழிலேழ் குலவரையோ - டண்டர்பதி
முட்டப் பரந்ததே வின்னா ணொலிமுற்றும்
வட்டத் திகரிசூழ் மண்   - பாரத வெண்பா

Anand Ramanujam

unread,
Nov 4, 2022, 8:10:07 AM11/4/22
to santhav...@googlegroups.com
“உபதேச ரத்தின மாலை” என்னும் நூலில் மணவாள மாமுனிகள், பெரியாழ்வாரைக் குறித்துப் பாடிய வெண்பா ஒன்றில் ‘பட்டர்பிரான்’ என்று கனிச்சீர் வருவதாகத் தெரிகிறது:

மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் 
தங்களார் வத்தளவு தானன்றி - பொங்கும் 
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் 
பெரியாழ்வார் என்னும் பெயர்.

- இரா. ஆனந்த்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 4, 2022, 9:42:45 AM11/4/22
to santhav...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com
On Fri, Nov 4, 2022 at 7:10 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
“உபதேச ரத்தின மாலை” என்னும் நூலில் மணவாள மாமுனிகள், பெரியாழ்வாரைக் குறித்துப் பாடிய வெண்பா ஒன்றில் ‘பட்டர்பிரான்’ என்று கனிச்சீர் வருவதாகத் தெரிகிறது:

மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் 
தங்களார் வத்தளவு தானன்றி - பொங்கும் 
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் 
பெரியாழ்வார் என்னும் பெயர்.

- இரா. ஆனந்த்

சிவஞானபோதம் - மூன்று உதாரணங்கள்

உள்ளதே தோற்ற உயிர் அணையும் அவ்வுடலில்
உள்ளதாம் முற்செய்வினை உள் அடைவே - வள்ளலவன்
செய்பவர் செய்திப் பயன் விளைக்குஞ் செய்யேபோல்
செய்வன், செயல் அணையா சென்று. 10

நாம் அல்ல இந்திரியம் நம்வழியின் அல்ல, வழி
நாம் அல்ல நாமும் அரனுடைமை - ஆம் என்னில்
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லைவினை
முற்செய்வினை யும்தருவான் முன் 63

இங்குளி வாங்கும் கலம்போல ஞானிபால்
முன்செய் வினை மாயை மூண்டிடினும் - பின்செய்வினை
மாயையுடன் நில்லாது மற்றவன்தான் மெய்ப்பொருளே
ஆய அதனால் உணரும் அச்சு 65

N. Ganesan

unread,
Nov 4, 2022, 9:47:21 AM11/4/22
to santhav...@googlegroups.com
புறப்பொருள் வெண்பாமலையில், கனிச்சீர் காய்ச்சீராக அலகிடும் வெண்பா எது? நன்றி.
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0300.html

N. Ganesan

unread,
Nov 4, 2022, 10:41:53 AM11/4/22
to santhav...@googlegroups.com
On Fri, Nov 4, 2022 at 7:10 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
“உபதேச ரத்தின மாலை” என்னும் நூலில் மணவாள மாமுனிகள், பெரியாழ்வாரைக் குறித்துப் பாடிய வெண்பா ஒன்றில் ‘பட்டர்பிரான்’ என்று கனிச்சீர் வருவதாகத் தெரிகிறது:

மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் 
தங்களார் வத்தளவு தானன்றி - பொங்கும் 
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் 
பெரியாழ்வார் என்னும் பெயர்.

- இரா. ஆனந்த்

எத்தனைபேர் நட்டகுழி யெத்தனைபேர் தொட்டமுலை
யெத்தனைபேர் பற்றி யிழுத்தவிதழ் - நித்தநித்தம்
பொய்யடா பேசும் புவியின்மட மாதரைவிட்
டுய்யடா வுய்யடா வுய்           - பட்டினத்தார்

N. Ganesan

unread,
Nov 4, 2022, 6:24:28 PM11/4/22
to vall...@googlegroups.com
புறப்பொருள் வெண்பாமலையில், கனிச்சீர் காய்ச்சீராக அலகிடும் வெண்பா எது? நன்றி.
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0300.html


பாரதியின் குயில் பாட்டு (கலிவெண்பா):

காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 5
செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே, சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை,
நாற்கோணத் துள்ளபல நத்தத்து *வேடர்களும்*
வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை;-
அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே, 10

சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - பாரதிதாசன்

குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த
மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையநற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர்
ஊற்றுகள் உண்டு; கனிமரங்கள் மிக்கஉண்டு;
பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தொறும் சென்றுதே
னீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்;
வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு;
காட்டு *மறவர்களும்* *காதல்மணம்* செய்வதுண்டு.
நெஞ்சில் நிறுத்துங்கள்; இந்த இடத்தைத்தான்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்என்று சொல்லிடுவார்
 
 

N. Ganesan

unread,
Nov 8, 2022, 5:47:48 PM11/8/22
to vall...@googlegroups.com

மிகவும் அருமையான வெண்பாக்களைக் கொண்டது பதினோராந் திருமுறையில் உள்ள திரு ஈங்கோய் மலை எழுபது. 10-ம் நூற்றாண்டில் நக்கீரதேவ நாயனார் இதன் ஆசிரியர். இயற்கையின் அழகு சொட்டச் சொட்டப் பாடிய பிரபந்தம் இஃது. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் மாணாக்கர் திரிசிரபுரம் சுப்பராய செட்டியார், ஈழத்துப் புலவர்பெம்மான் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் பதிப்புகளைப் பார்த்தீர்களானால், 48-62 ஆக மொத்தம் பதினைந்து வெண்பாக்கள் இரா. அவர்களுக்குக் கிடைத்த ஓலைச்சுவடிகளில் ஒழிந்துபட்டன. திரு. மு. அருணாசலம் (திருச்சிற்றம்பலம், மாயூரம்) இவற்றை நெல்லைச் செப்பறை ஆதீனச் சுவடியிலே 1942-ல் கண்டு திருப்பனந்தாள் ஶ்ரீ காசிமடத்துப் பதிப்பிலே அச்சிடுவித்தார்கள். இருபது ஆண்டு கழித்து, பாலூர் கண்ணப்பர் 1962 நூல் முழுதுக்கும் உரை எழுதியுள்ளார். ~1000 ஆண்டாய் யார் கண்ணிலும் படாத பாடல்கள்! ஶ்ரீ மு. அருணாசலம் ஐயா இவ்வரிய வெண்பாக்களைக் கண்டதன் குறிப்பு:

பக்கம் 332, மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 10ஆம் நூற்றாண்டு. காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1972.
“இப்பாடல்களுள் 48ஆம் பாடல் தொடங்கி 62ஆம் பாடல் வரையில் எந்தப் பிரதிகளிலும் கிடைத்தில என்று சுப்பராய செட்டியார் பதிப்பு, ஆறுமுக நாவலர் பதிப்பு, காசி மடத்துப் பதிப்பு ஆகிய எல்லாப் பதிப்புகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. செப்பறை மடத்து ஏடு ஒன்றில் இப் பாடல்களை யாம் முதல்முதல் கண்டு, 1942-ஆம் வருஷம் திரு. வி. உலகநாத முதலியார் மணிவிழா மலரில் இவற்றை வெளியிட்டிருந்தோம். பின்னர் இவை அதிலிருந்து எடுத்துக் காசி மடத்து இரண்டாம் பதிப்பில் (1963) பதிக்கப்பட்டுள்ளன.”

ஈங்கோய் மலை: பெயர்க்காரணம்:
மா/மான், ஆ/ஆன், ... என்பது போல, கோ/கோன் - மிக அடிப்படையான பொருள் கோ/கோன் = மலை என்பது. இது எல்லா த்ராவிட பாஷைகளிலும் கோ/கோன் = மலை உண்டு. தமிழ் இலக்கியங்களில் காணலாம். உ-ம்: வில்லி பாரதத்தில் எண் கோ = அஷ்ட குல பர்வதங்கள். இவை யானைக்கு உவமை (பார்க்க: வை.மு.கோ உரை). மலை உயர்ச்சி ஆனதால், கோபுரம், கோ/கோன் = ராஜா என்ற பொருள்களும் பின்னர் ஏற்றுள்ளது. கோனேரி = மலை ஏரி. ஸ்வாமி புஷ்கரிணி.

சீமாறு = ஈஞ்சங்குச்சியால் செய்யும் துடைப்பம். சீ > ஈ (ஈங்கு/ஈஞ்சு/ஈந்து ...) ஈ + கோ(ய்) = சீ(ஈஞ்ச) மரங்கள் நிறைந்த மலை (=கோ). திரு ஈங்கோய் மலை எழுபது புகழ்பெற்ற இயற்கைவளன் பாடும் நூல். 15 வெண்பா கிடைக்கலை, ஆறுமுக நாவலர் போன்றாருக்கு. மாயவரம் மு. அருணாசலம் ஐயா, செப்பறை ஆதீனச் சுவடியில் அழிந்தது என அஞ்சிய 15 வெண்பாக்கண்டு பூர்த்தி செய்தார்.
https://groups.google.com/g/santhavasantham/c/N5YDmD_I4ok/m/I_EddIruBAAJ

ஏறத்தாழ 30+ ஆண்டுகளாக இவ்வெண்பாக் கிடைத்த வரலாற்றை இணையத்தில் சொல்லியிருக்கிறேன். 2011-ல் திரு. சிவசிவா, நியூ ஜெர்சி இட்ட மறுமொழி: https://groups.google.com/g/santhavasantham/c/GdyBonqY4mE/m/uBnIQHosS8AJ

----------------

ஈங்கோய் மலை எழுபது என்னும் திருமுறைப் பிரபந்தத்தில் கனிச்சீர் போல உள்ள வெண்பா, காய்ச்சீராக அலகிடுவது கண்டேன்.

சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி
சேரத் தருக்கி மதுக்கலந்து - வீரத்
தமரினிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே வெற்பின்
*குமரன்முது* தாதையார் குன்று.

NG

N. Ganesan

unread,
Nov 10, 2022, 11:38:38 PM11/10/22
to vall...@googlegroups.com
கஞ்சம் முகமலரக் காதலர்கள் கண்மலர
வஞ்சிஇடை மாதர்முகம் வாள்மலரத் - தஞ்சமுறும்
தானை புடைசூழத் தார்வேந்தன் தான்அடைந்தான்
நாணநீர்ச் சோண நதி....367

மதுரகவி ஸ்ரீனிவாச ஐயங்கார் இயற்றிய இராமாயண வெண்பா

Anand Ramanujam

unread,
Nov 11, 2022, 6:10:29 AM11/11/22
to santhav...@googlegroups.com, vall...@googlegroups.com
நன்றி!

திருவாசகத்தில் வரும் இந்தத் திருதசாங்க வெண்பாலிலும் 'தேவர்பிரான்' என்று கனிச்சீர் வருவதாகத் தெரிகிறது:

ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று. 

- இரா. ஆனந்த்
-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 11, 2022, 6:51:51 AM11/11/22
to santhav...@googlegroups.com, vall...@googlegroups.com
அருமை, ஆனந்த். நனிநன்றி.

RAJAGOPALAN APPAN

unread,
Nov 11, 2022, 7:47:18 AM11/11/22
to santhav...@googlegroups.com
மதுரகவி  ஶ்ரீநிவாசையங்கார் எழுதிய இராமாயண வெண்பாவை வாசித்துக் கொண்டிருக்கும் போது, தற்செயலாகக் கண்ணில் பட்டது. கிட்கிந்தா காண்டம் நாடவிட்ட படலம் 50ம் பாடல்.   இராமன், அநுமனிடத்தில் கணையாழி கொடுத்து, காகாசுர வதம் பற்றிச் சொல்லியது.  

கல்லிறுத்த தண்வரையில் காதல்பெறும் காகக்காய்ப்
புல்லிறுத்து முன்னம் புரந்தவும்  -- சொல்லி
அடைதியென ஆழி அளித்தான் கருணை
மடைதிறந்த கண்ணான் மதித்து.       (1770)

இதிலேயே இன்னும் பல இருக்கலாம்.

அ. ரா    

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 11, 2022, 8:00:35 AM11/11/22
to santhav...@googlegroups.com
On Fri, Nov 11, 2022 at 5:10 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
>
> நன்றி!
>
> திருவாசகத்தில் வரும் இந்தத் திருத்தசாங்க வெண்பாவிலும் 'தேவர்பிரான்' என்று கனிச்சீர் வருவதாகத் தெரிகிறது:

தேவர்பிரான், பட்டர்பிரான் வெண்பாக்கள் அருமை. பிரான், பிராட்டி - பிர்- தாது. இதன் தொல்லியல், சமயவியல்
செய்திகள் என்ன? யோசிப்போம்.

கண்டது நம்ஆனந்த் கண்டங் கறுத்தபிரான்
அண்டபிரான் என்றுபுக ழாடு.

புகழாடுதல் = பாராட்டுதல். மடலாடலில் சொல்கிறேன்.

NG
>
> ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
> சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்
> செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
> எம்பெருமான் தேவர்பிரான் என்று.
>

“உபதேச ரத்தின மாலை” என்னும் நூலில் மணவாள மாமுனிகள், பெரியாழ்வாரைக் குறித்துப் பாடிய வெண்பா ஒன்றில் ‘பட்டர்பிரான்’ என்று கனிச்சீர் வருவதாகத் தெரிகிறது:

மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் 
தங்களார் வத்தளவு தானன்றி - பொங்கும் 
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் 
பெரியாழ்வார் என்னும் பெயர்.

N. Ganesan

unread,
Nov 11, 2022, 8:01:57 AM11/11/22
to santhav...@googlegroups.com
அண்டர்பிரான்

On Fri, Nov 11, 2022 at 6:59 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Fri, Nov 11, 2022 at 5:10 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
>
> நன்றி!
>
> திருவாசகத்தில் வரும் இந்தத் திருத்தசாங்க வெண்பாவிலும் 'தேவர்பிரான்' என்று கனிச்சீர் வருவதாகத் தெரிகிறது:

தேவர்பிரான், பட்டர்பிரான் வெண்பாக்கள் அருமை. பிரான், பிராட்டி - பிர்- தாது. இதன் தொல்லியல், சமயவியல்
செய்திகள் என்ன? யோசிப்போம்.

கண்டது நம்ஆனந்த் கண்டங் கறுத்தபிரான்
அண்டர்பிரான் என்றுபுக ழாடு.

rathnam

unread,
Nov 11, 2022, 8:04:38 AM11/11/22
to santhav...@googlegroups.com
தப்பொன்றுமில்லை.... அண்டத்திற்கும் அவன் பிரான்தான்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 11, 2022, 8:09:53 AM11/11/22
to சந்தவசந்தம்

Anand Ramanujam

unread,
Nov 11, 2022, 12:36:13 PM11/11/22
to santhav...@googlegroups.com

நன்றி, திரு. கணேசன்!

- இரா. ஆனந்த்

N. Ganesan

unread,
Nov 12, 2022, 6:51:59 AM11/12/22
to santhav...@googlegroups.com
திங்கள்முகம் கண்டானச் சேய்
------------------------------------------------

எங்கேயோ வானில் இருக்கும் நிலவதனை
இங்கே வருமாஎன் றெண்ணினான்- அங்கமெலாம்
பொங்கிய தாயின் அரவணைப்பில் வானத்துத்
*திங்கண்முகம்* கண்டானச் சேய்!
                                     - புலவர் இராம. இராமமூர்த்தி, திருச்சி


மங்கும் இருளில் வயிற்றறையில் வாழ்ந்தபிள்ளை
கங்குல் பகலெதுவும் காணவில்லை  - தங்கிய
திங்களாம் ஐயிரண்டு தீர்ந்துவெளி வந்தவுடன்
*திங்கள்முகம்* கண்டானச் சேய்!

                                        - தில்லைவேந்தன்

ஆலால கண்டன் அயன்மால் முயன்றாலும்
ஏலாதென்(று) ஊர்சொல்லும் எல்லாமும் - தாலேலோ
சிங்கமகன் நீசெய்வாய் என்றதாய்  சீர்நகையில்
*திங்கள்முகம்* கண்டான்அச் சேய்
                                         - மதுரன் தமிழவேள்

முத்துச் சிரிப்பு மொழிபேசச் செந்தேனாய்த்
தித்தித் திருக்கும்வாய் நீர்தெறிக்கப் - புத்தொளிரும்
அங்கமெலாம் தான்குலுங்கக் கிண்கிணிக்கால் ஆட்டும்தாய்த்
*திங்கள்முகம்* கண்டானச் சேய்.          (1)

சின்ன விழிபரப்பிச் செம்பூஞ் சிரிப்புதிர்க்கும்
மின்னும் கரம்நீட்டி மெய்தீண்டும் - பொன்னொளிரும்
அங்கமலக் காலாட்டி ஆர்க்குமே அன்னையவள்
*திங்கள்முகம்* கண்டானச் சேய்.         (2)

சின்னஞ் சிறுவிழியில் முத்துச் சிரிப்பாடத்
தன்மென் கரப்பூந் தளிராடப் - பொன்னடம்செய்(து)
அங்கமலக் காலாடத் தாலாட்டும் அன்னையவள்  
*திங்கள்முகம்* கண்டானச் சேய்.       (3)

                                                              - இரா. ஆனந்த்

திங்கள்முகம் - ஒற்று நீக்கி அலகிடுக. இந்த ஈற்றடி
புலவர் அ. மு. குழந்தை அளித்தது.

On Fri, Nov 11, 2022 at 7:09 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Friday, November 11, 2022 at 7:04:38 AM UTC-6 rathnam wrote:
தப்பொன்றுமில்லை.... அண்டத்திற்கும் அவன் பிரான்தான்.

 🙏


On Fri, 11 Nov 2022 at 6:31 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
அண்டர்பிரான்

On Fri, Nov 11, 2022 at 6:59 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Fri, Nov 11, 2022 at 5:10 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
>
> நன்றி!
>
> திருவாசகத்தில் வரும் இந்தத் திருத்தசாங்க வெண்பாவிலும் 'தேவர்பிரான்' என்று கனிச்சீர் வருவதாகத் தெரிகிறது:

தேவர்பிரான், பட்டர்பிரான் வெண்பாக்கள் அருமை. பிரான், பிராட்டி - பிர்- தாது. இதன் தொல்லியல், சமயவியல்
செய்திகள் என்ன? யோசிப்போம்.

கண்டது நம்ஆனந்த்; கண்டங் கறுத்தபிரான்
அண்டர்பிரான் என்றுபுக ழாடு.

புகழாடுதல் = வாழ்த்துதல்/பாராட்டுதல். மடலாடலில் சொல்கிறேன்.

NG
>
> ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
> சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்
> செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
> எம்பெருமான் தேவர்பிரான் என்று.
>

“உபதேச ரத்தின மாலை” என்னும் நூலில் மணவாள மாமுனிகள், பெரியாழ்வாரைக் குறித்துப் பாடிய வெண்பா ஒன்றில் ‘பட்டர்பிரான்’ என்று கனிச்சீர் வருவதாகத் தெரிகிறது:

மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் 
தங்களார் வத்தளவு தானன்றி - பொங்கும் 
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் 
பெரியாழ்வார் என்னும் பெயர்.

- இரா. ஆனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/COdCmkYmGYs/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/389d2a75-da97-4ca1-9dc5-d59de1af8ee6n%40googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 12, 2022, 12:34:34 PM11/12/22
to santhav...@googlegroups.com
புறப்பொருள் வெண்பாமாலையில் கனிச்சீர் போல உள்ள  சீர் காணோம்.

அன்பின் முத்தையா அவர்களுக்கு,

என்னைச் சேர்த்து நால்வர் பார்த்துவிட்டோம். புறப்பொருள் வெண்பாமாலையில் இவ்வாறான கனிச்சீர் காய்ச்சீர் ஆகும் வெண்பா இல்லை.

உவேசா பதிப்பு:
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0000028_புறப்பொருள்_வெண்பாமாலை_மூலமும்_உரையும்.pdf

புலியூர்க் கேசிகன் உரை:
https://www.tamilvu.org/library/nationalized/pdf/59-puliyurkesigan/011.puraporulvenbamalai.pdf

நா. சிவபாதசுந்தரம், பு.வெ.மா. ஆராய்ச்சி: (650 MB!)
noolaham.net/project/747/74611/74611.pdf

நா. கணேசன்

WhatsApp Image 2022-11-12 at 11.16.27 AM.jpeg

N. Ganesan

unread,
Nov 14, 2022, 7:45:04 AM11/14/22
to santhav...@googlegroups.com

பேரா. ம. ரா.போ. குருசாமி அவர்களின் நூற்றாண்டு விழா வருகிறது. சமுத்தூர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை. மரபின் மைந்தன் முத்தையா செயலர். பேராசிரியரொடு நான் பழகியுள்ளேன். அதுபற்றிச் சொல்லலாம். கோவையில் நான் இருக்கும்போது அருட்செல்வர் நடத்தும் விழாக்களில் கட்டாயம் பேராசிரியர் வருவார்கள்.

மராபோவை மயங்கச் செய்த புறப்பொருள்வெண்பாமாலை வெண்பா இது. தமிழ்த்தாத்தா உவேசா பதிப்பில் இவ்வாறு உள்ளது:
       அடும்புகழ் பாடி யழுதழுது நோனா
       திடும்பையுள் வைகி யிருந்த - கடும்பொடு
       கைவண் குருசில் கற்கைதொழூஉச் செல்பாண
        தெய்வமாய் நின்றான் றிசைக்கு

இது கனிச்சீர் என்ற மயக்கந்தரும். சரியான அலகீட்டு வடிவம்:

       அடும்புகழ் பாடி அழுதழுது நோனாது
       இடும்பையுள் வைகி இருந்த - கடும்பொடு
       கைவண் குரிசில்கல் கைதொழூஉச் செல்பாண
       தெய்வமாய் நின்றான் திசைக்கு

உசாத்துணை: பேராசிரியர் மராபோ கடித நகல்:
https://groups.google.com/g/vallamai/c/LOLZoPFdwss/m/8PQsV7UlFAAJ

வெண்பாக் காட்டின ரா. ஆனந்துக்கு நன்றி.
NGScreen Shot 2022-11-12 at 12.40.08 PM.png

rathnam

unread,
Nov 14, 2022, 10:04:40 AM11/14/22
to santhav...@googlegroups.com
எதற்கு இப்படி அளபெடை ஆக்க வேண்டும்? விளங்கவில்லையே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 14, 2022, 10:34:53 AM11/14/22
to santhav...@googlegroups.com
On Mon, Nov 14, 2022 at 9:04 AM rathnam <irathin...@gmail.com> wrote:
எதற்கு இப்படி அளபெடை ஆக்க வேண்டும்? விளங்கவில்லையே!

செவியறிவுறூஉ போலக் கைதொழூஉ

rathnam

unread,
Nov 14, 2022, 10:41:20 AM11/14/22
to santhav...@googlegroups.com
தேவை?  அம்மாற்றத்தால் கூவிளாங்காய் ஆகிறது. ஓசை கெடுகிறது.   என்ன காரணமாய் இருக்கும் என்ற யோசனை!

N. Ganesan

unread,
Nov 14, 2022, 10:53:22 AM11/14/22
to santhav...@googlegroups.com
On Mon, Nov 14, 2022 at 9:41 AM rathnam <irathin...@gmail.com> wrote:
தேவை?  அம்மாற்றத்தால் கூவிளாங்காய் ஆகிறது. ஓசை கெடுகிறது.   என்ன காரணமாய் இருக்கும் என்ற யோசனை!

ஆவதில்லை. கூவிளம் தான்.

காரணம் சொல்லியுள்ளேன். செவியறிவுறூஉ போலக் கைதொழூஉ இப்படிப் பெயர்ச்சொற்களை அக் காலத்தில் அமைத்துள்ளனர். இப்போது, அறிவுறுத்தல், தொழுதல் என்பது போல. கைதொழூஉ - கூவிளம் தான்.

N. Ganesan

unread,
Nov 14, 2022, 10:56:43 AM11/14/22
to santhav...@googlegroups.com
கோதை மோகனுக்கு எழுதினேன்:

கோதை மோகன் சில மாதம் முன் ஒரு குறளைக் காட்டி இது “விளாங்காய்ச்” சீர் எனக் கூறலாமா எனக் கேட்டிருந்தார்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

இங்கே, அளபெடை அலகுபெறுவதில்லை. கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் - விளச்சீர்கள்.
இதே போல ஒன்று:

ஏரியும் ஏற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளமெல்லாம் - தேரின்
அரிகாலின் கீழுகூஉம் அந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரிசூழ் நாடு.
        (பொருநராற்றுப்படை)

சீரும் தளையும் சிதையின் அளபெடை அலகுபெறாது என்பது யாப்பிலக்கண விதி (யா.கா. 38).
-----------------------------------

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

உழாஅர் - அலகுபெற்று மாச்சீர் ஆகிறது.

------------------------------

rathnam

unread,
Nov 14, 2022, 11:02:04 AM11/14/22
to santhav...@googlegroups.com
மற்ற வகைப் பாடல்களில் சரி.  வெண்பாமாலையில்?  காரணம் விளங்கவில்லை.  விதிவிலக்கு இலக்கணமானால் நாளடைவில் இலக்கணம் விதிவிலக்காகி விடும் என்ற எண்ணம் வருகிறது.

N. Ganesan

unread,
Nov 14, 2022, 11:12:26 AM11/14/22
to சந்தவசந்தம்
அறிவுறூஉ, கைதொழூஉ - இரண்டும் காய்ச்சீரா? ஏன்?
இரண்டும் விளச்சீர் என நினைக்கிறேன். பிறர் விளக்கினால் நன்று.

rathnam

unread,
Nov 14, 2022, 11:20:15 AM11/14/22
to santhav...@googlegroups.com
கை முதலெழுத்து . நெடில். மாத்திரை குறுகவில்லை.
கை+தொழூ+உ. 
அறி+வுறூ+ உ
வெண்பாஙில் அளபெடை ... தளையானது தட்டாமற் இருக்க வரும். இங்கே வந்த காரணம் விளங்கவில்லை.

N. Ganesan

unread,
Nov 14, 2022, 2:16:50 PM11/14/22
to சந்தவசந்தம்
On Monday, November 14, 2022 at 10:20:15 AM UTC-6 rathnam wrote:

<<<
கை முதலெழுத்து . நெடில். மாத்திரை குறுகவில்லை.
கை+தொழூ+உ.
அறி+வுறூ+ உ
வெண்பாஙில் அளபெடை ... தளையானது தட்டாமற் இருக்க வரும். இங்கே வந்த காரணம் விளங்கவில்லை.
>>>

இன்னிசை காரணம்.

இந்த அளபெடைக்கும் செய்யுள் கட்டுதற்கும் தொடர்பில்லை.
பழங்காலங்களில் இன்னிசையுடன் பல பெயர்ச் சொற்களை
அமைத்துள்ளனர். இவற்றில் உள்ள இந்த இனிய இசை அளபெடைக்கு
அலகில்லை.

MTL:
ஆடூஉ (ஆண்), மகடூஉ (பெண்), அழிதூஉ (அலி), ஒரூஉ (ஒருவு), குழூஉ (குழு), செவியறிவுறூஉ, தழூஉ (அணைக்கை),
பரூஉ (பருமை), பழூஉ (பேய்), மரூஉ (மருவு), வழூஉ (வழுவு), வெரூஉ (வெருவு), புரூஉ (புருவம்).

புறப்பொருள் வெண்பாமாலையில் இருந்தே
இன்னொரு வெண்பா:

ஊடிய ஊடல் அகல உளம்நெகிழ்ந்து
வாடிய மென்தோள் வளையொலிப்பக் - கூடியபின்
யாமநீ டாகென்ன யாழ்மொழியார் கைதொழூஉம்
ஏமநீர்க் கச்சியெம் ஊர்


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

எடுப்பதூஉம், கெடுப்பதூஉம் என்று குறளில் அலகிடும்
அதேமுறையில், கைதொழூஉம் அலகிடவேண்டும். கூவிளம் ஆகும்.


      அடும்புகழ் பாடி அழுதழுது நோனாது
       இடும்பையுள் வைகி இருந்த - கடும்பொடு
       கைவண் குரிசில்கல் கைதொழூஉச் செல்பாண
       தெய்வமாய் நின்றான் திசைக்கு

துறவுக்கு இலக்கணம்
---------------------------------------------

எவ்வினைய ரேனும் இணைவிழைச்சொன் றில்லெனின்
தெவ்வுந் திசைநோக்கி கைதொழூஉம் - அவ்வினை
காத்த லிலரேல் எனைத்துணைய ராயினும்
தூர்த்தருந் தூர்ப்பார் அலர்
                                      - குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 14, 2022, 9:11:24 PM11/14/22
to vall...@googlegroups.com, Santhavasantham


On Mon, Nov 14, 2022 at 10:08 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
சொல்லிசை அளபெடை போல் தெரிகிறது. 

நுட்பமான பொருள் வேறுபாட்டிற்காக...

கைதொழுது செல்பாண= வணங்கிச் செல்கின்ற பாணனே 

கைதொழூஉச் செல்பாண = விடாது கைகளால் தொழுது; செல்கின்ற பாணனே...
அதாவது தொழுவதை/ வணங்குவதை நிறுத்தவில்லை. 

ஆம். ஆனால், சொல்லிசை அளபெடை பெயர்ச்சொல்லை -இ சேர்த்து வினைச்சொல் ஆக்கும்.
அளைஇ (குறள்), வளைஇ, தொகைஇ, ...

இங்கே தொழு- என்ற வினைச்சொல் அளபெடுத்து உகரம் சேர்ந்து நீளுகிறது.
பொருநர் ஆற்றுப்படை வெண்பா :
ஏரியும் ஏற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளமெல்லாம் - தேரின்
அரிகாலின் கீழுகூஉம் அந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரிசூழ் நாடு.
        (பொருநராற்றுப்படை)

கீழ்உகூஉம் என்பதுடன் கைதொழூஉம் என்னும் பு.வெ.மாலைச் செய்யுள்
பிரயோகத்தை ஒப்பிடலாம். இது இன்னிசை அளபெடை எனக் கருதுகிறேன்.

மேலும், முன்னர் க. பலராமன், குற்றெழுத்து அளபெடை என விளக்கியிருந்ததற்கும்
பொருந்துகிறது. வினைச்சொற்கள் பரூஉக்குறை, குரூஉக்கண், இடூஉ, படூஉ, பழூஉ
(நற்றிணை 256, பின்னத்தூரார் உரை) பற்றிச் சொல்லியிருந்தார். பேரா. க. பலராமனுக்கு
எழுதியுள்ளேன். பதில் வந்தால் பகிர்கிறேன். நன்றி.

On Monday, November 14, 2022 at 10:20:15 AM UTC-6 rathnam wrote:

<<<
கை முதலெழுத்து . நெடில். மாத்திரை குறுகவில்லை.
கை+தொழூ+உ.
அறி+வுறூ+ உ
வெண்பாஙில் அளபெடை ... தளையானது தட்டாமற் இருக்க வரும். இங்கே வந்த காரணம் விளங்கவில்லை.
>>>

இன்னிசை காரணம்.

இந்த அளபெடைக்கும் செய்யுள் கட்டுதற்கும் தொடர்பில்லை.
பழங்காலங்களில் இன்னிசையுடன் பல பெயர்ச் சொற்களை
அமைத்துள்ளனர். இவற்றில் உள்ள இந்த இனிய இசை அளபெடைக்கு
அலகில்லை.

MTL:
ஆடூஉ (ஆண்), மகடூஉ (பெண்), அழிதூஉ (அலி), ஒரூஉ (ஒருவு), குழூஉ (குழு), செவியறிவுறூஉ, தழூஉ (அணைக்கை),
பரூஉ (பருமை), பழூஉ (பேய்), மரூஉ (மருவு), வழூஉ (வழுவு), வெரூஉ (வெருவு), புரூஉ (புருவம்).

புறப்பொருள் வெண்பாமாலையில் இருந்தே
இன்னொரு வெண்பா:

ஊடிய ஊடல் அகல உளம்நெகிழ்ந்து
வாடிய மென்தோள் வளையொலிப்பக் - கூடியபின்
யாமநீ டாகென்ன யாழ்மொழியார் கைதொழூஉம்
ஏமநீர்க் கச்சியெம் ஊர்


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

எடுப்பதூஉம், கெடுப்பதூஉம் என்று குறளில் அலகிடும்
அதேமுறையில், கைதொழூஉம் அலகிடவேண்டும். கூவிளம் ஆகும்.

      அடும்புகழ் பாடி அழுதழுது நோனாது
       இடும்பையுள் வைகி இருந்த - கடும்பொடு
       கைவண் குரிசில்கல் கைதொழூஉச் செல்பாண
       தெய்வமாய் நின்றான் திசைக்கு
துறவுக்கு இலக்கணம்
---------------------------------------------

எவ்வினைய ரேனும் இணைவிழைச்சொன் றில்லெனின்
தெவ்வுந் திசைநோக்கி கைதொழூஉம் - அவ்வினை
காத்த லிலரேல் எனைத்துணைய ராயினும்
தூர்த்தருந் தூர்ப்பார் அலர்
                                      - குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்

நா. கணேசன்


யாப்பு பற்றிய தெளிவு எனக்குக் கிடையாது. 

சக 

rathnam

unread,
Nov 15, 2022, 1:21:57 AM11/15/22
to santhav...@googlegroups.com
இன்னிசை அளபெடை  ஓசை நயத்திற்காக வருவது அல்லவா? இங்கே விளாங்காயால் ஓசை நயம் குறையவில்லையா?  இந்த அளபெடையின் காரணத்தை தமிழ் அறிஞர்கள் சொன்னால்தான் உண்டு. 🙏🏻

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 15, 2022, 6:13:25 AM11/15/22
to santhav...@googlegroups.com, vallamai
On Tue, Nov 15, 2022 at 12:21 AM rathnam <irathin...@gmail.com> wrote:
இன்னிசை அளபெடை  ஓசை நயத்திற்காக வருவது அல்லவா? இங்கே விளாங்காயால் ஓசை நயம் குறையவில்லையா?  இந்த அளபெடையின் காரணத்தை தமிழ் அறிஞர்கள் சொன்னால்தான் உண்டு. 🙏🏻

இன்னிசை அளபெடை அலகு பெறாது. எனவே, யாழ்மொழியார் கைதொழூஉம், கைதொழூஉச் செல்பாண எனும்
பு.வெ.மாலையில் கூவிளம் தான் சீர். விளாங்காய்ச் சீர் இல்லை. இதைத் தான் தமிழறிஞர்கள் கூறியுளர்.

ஒருமுறை திருக்குறளில் உள்ள அளபெடைகளைப் பட்டியல் இட்டேன். புறப்பொருள் வெண்பா மாலை போலவே, குறளில் இன்னிசை அளபெடை உகரம் அலகு பெறுவதில்லை.

திருக்குறளில் இன்னிசை அளபெடை (கருவிளம், கூவிளம் கொண்ட விளச் சீர்கள்):
------------------------------------------------------
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன் சொலவர்க்கு

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றி கெடும்

சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்
ஈதல் இயையாக்கடை

நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடாது எனின்

நா நலம் என்னும் நலன் உடைமை அ நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று

அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல்

உறின்நட்டு அறினொரூஉம் ஒப்பு இலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும்

களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழத்தொறூஉம் காது அற்று உயிர்

குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
எ நலத்து உள்ளதூஉம் அன்று

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடி உண்டாயினும் இல்

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கு நிலை

இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
உள்ளதூஉம் இன்றி கெடும்

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடு காண வற்று ஆகும் கீழ்

நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது

----------------


திருக்குறளில் இசைநிறை அளபெடை ( மா, விளச் சீர்கள்):
------------------------------------------------------


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தேறினும் தேறாவிடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு

வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்  
வீழப் படாஅர் எனின்

துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பாய  தூஉம் மழை

குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை

பரியது கூர் கோட்டதுஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின்

துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும்

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள்

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை,
ஆஅதும் என்னு மவர்

--------
திருக்குறளில் மூன்று வகையான அளபெடைகள் நிறைந்துள்ளன.
https://thamizhvizhi.blogspot.com/2015/10/blog-post_21.html
இசைநிறை அளபெடைகள் மொத்தம்
ஐம்பத்து நான்கு (54) உள்ளன.
ஓர் எடுத்துக்காட்டு:-
"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
  னற்றா டொழாஅ  ரெனின்."   (#02)
இவ்வாறான அளபெடைகள் அமையப்பெற்ற குறள்களின் எண்களைக் கீழ்க்காணவும்.
02, 12, 14, 38, 46, 55, 238, 257, 347, 653, 702,
809, 824, 840, 848, 876, 921, 933, 1052, 1053,
1059, 1070, 1087, 1088, 1090, 1097, 1098,
1104, 1108, 1115, 1143, 1176, 1194, 1198,
1200, 1204, 1210, 1245, 1292, 1295, 1301,
1305, 1324.

(2) இன்னிசை அளபெடைகள் மொத்தம்
      முப்பத்தாறு (37) ஆகும்.
எ-கா.
" கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற்   றாங்கே
  எடுப்பதூஉ  மெல்லா  மழை."  (#15)

இதுபோன்ற அளபெடைகள் அமையப்
பெற்றக் குறள்களின் எண்கள் வருமாறு:-
15, 31, 32, 94, 166, 227, 230, 422, 425, 460, 461,
544, 546, 599, 641, 644, 713, 797, 812, 816,
820, 830, 845, 913, 928, 929, 931, 938, 940,
982, 1005, 1009, 1036, 1079, 1194, 1215,
1292
- (இக்குறளில் ,'செறாஅர்' -மட்டும்).

(3) சொல்லிசை அளபெடைகள்:-
திருக்குறளில் காணப்படும் இவ்வகையான
அளபெடைகள் மொத்தம் ஆறு (5) மட்டுமே.
எ- கா:
"இன்சொலா  லீர மளைஇப்  படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்." (#91)
இவ்வகையான அளபெடைகள் அமையப்
பெற்ற குறள்களின் எண்கள்:-
91, 182, 660, 1040, 1263.


lns2...@gmail.com

unread,
Nov 15, 2022, 6:25:20 AM11/15/22
to சந்தவசந்தம்
அலகும் பெறாது ஓசைநயமும் கெடாது என்றால் அளபெடுப்பதின் நோக்கம் என்ன?   ஒரு வேளை  மெலிஸ்மா-வா (Melisma)?

Thanks in advance for your explanation,

Srini

rathnam

unread,
Nov 15, 2022, 7:10:02 AM11/15/22
to santhav...@googlegroups.com
விளாங்காய் என்பதே ஓசை நயங்கெடும் என்பதற்காக வந்த சொல்.  இந்த அளபெடைகள் உச்சரிக்கப்படும் போதும் 'விளாங்காயாக' இருக்காதா? எப்படி 'உ'வை உச்சரிப்பார்கள்?  உச்சரிக்க மாட்டார்களா? அப்படியாயின் எப்படி இன்னிசை அளபெடையாகும்? 'மௌன இராகம்' என்பது போல் oxymoron ஆ?

N. Ganesan

unread,
Nov 15, 2022, 7:18:11 AM11/15/22
to santhav...@googlegroups.com
On Tue, Nov 15, 2022 at 6:10 AM rathnam <irathin...@gmail.com> wrote:
விளாங்காய் என்பதே ஓசை நயங்கெடும் என்பதற்காக வந்த சொல்.  இந்த அளபெடைகள் உச்சரிக்கப்படும் போதும் 'விளாங்காயாக' இருக்காதா? எப்படி 'உ'வை உச்சரிப்பார்கள்?  உச்சரிக்க மாட்டார்களா? அப்படியாயின் எப்படி இன்னிசை அளபெடையாகும்? 'மௌன இராகம்' என்பது போல் oxymoron ஆ?

தமிழறிஞர்கள் குறிப்பிடுவதைச் சொன்னேன்.

இன்னிசை அளபெடைக்கு அவர்கள் தரும் இன்னொரு பெயர்: குற்றெழுத்து அளபெடை. அதாவது, உகரம் ஏற்பது அரைக்குக் குறைவான மாத்திரை. எனவே தான், இன்னிசை/குற்றெழுத்து அளபெடை விளாஞ்சீர். விளாங்காய்ச் சீர் அன்று.

NG 

rathnam

unread,
Nov 15, 2022, 7:21:12 AM11/15/22
to santhav...@googlegroups.com
அலகில் விளாஞ்சீராகலாம்.... உச்சரிக்கும்போது?
மேலும் அலகில் விளாங்காய் இலக்கணப் பிழையாகாது...ஐயா. ஓசையில்தான்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 15, 2022, 7:23:34 AM11/15/22
to santhav...@googlegroups.com
On Tue, Nov 15, 2022 at 6:21 AM rathnam <irathin...@gmail.com> wrote:
அலகில் விளாஞ்சீராகலாம்.... உச்சரிக்கும்போது?
மேலும் அலகில் விளாங்காய் இலக்கணப் பிழையாகாது...ஐயா. ஓசையில்தான்.

ஓசையில் விளாங்காய்ச் சீர் புறப்பொருள் வெண்பாமாலையில் இல்லை.

rathnam

unread,
Nov 15, 2022, 7:25:57 AM11/15/22
to santhav...@googlegroups.com
எனக்கு விளங்கவில்லை. பணிவான வணக்கங்கள்.

Anand Ramanujam

unread,
Nov 15, 2022, 7:32:44 AM11/15/22
to santhav...@googlegroups.com
’எடுப்பதூஉம்’ என்னும் சீரில் வரும் இன்னிசை (அலகிடப்படாத) ‘உ’ -ஆல் வருவதில்லை என்றும், அந்த சொல்லினிமை ‘து’ என்னும் குறில்  ‘தூ’ என்னும் நெடிலாக மாறும்போதுதான் கூடுகின்றது என்றும் தோன்றுகின்றது. இந்தக் குறில்-நெடில் transformation நடக்கத் துணைசெய்வதே அளபெடைகளின்   நோக்கமென்றும் தோன்றுகிறது.  இவ்வாறு ’எடுப்பதூம்’ என்று ஒலிக்கும்போது, அசை ‘நிரைநிரை’ ஆதலால் இச்சீர் விளாங்காயாகவும் தெரிவதில்லை. 

எனது இந்த hypothesis சரியா?

- இரா. ஆனந்த்

N. Ganesan

unread,
Nov 15, 2022, 7:55:50 AM11/15/22
to santhav...@googlegroups.com
yes. The final -u consonant letter has less than 0.5 maatraa sound. Hence, it is kuuviLam or karuviLam. In sound "Osai", it is NOT viLaangaayc ciir.  This is according to Tamil professors and linguists.

NG

You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/COdCmkYmGYs/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNk_roTm4nd1EzAWgaZGWQTv4dUvMT2B81aj_eDfrbcJvkq7Q%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Nov 15, 2022, 7:57:56 AM11/15/22
to santhav...@googlegroups.com
Busy right now. There is a meeting honoring ministers. We at HTSC just got $300,000 from Govt. of Tamil Nadu. See my mail for Govt. official photo. I need to prepare a small speech. Excuse me for now.

rathnam

unread,
Nov 15, 2022, 8:15:55 AM11/15/22
to santhav...@googlegroups.com
வாழ்த்துகள். 🙏🏻

N. Ganesan

unread,
Nov 24, 2022, 9:52:54 PM11/24/22
to santhav...@googlegroups.com
On Fri, Nov 4, 2022 at 7:10 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
“உபதேச ரத்தின மாலை” என்னும் நூலில் மணவாள மாமுனிகள், பெரியாழ்வாரைக் குறித்துப் பாடிய வெண்பா ஒன்றில் ‘பட்டர்பிரான்’ என்று கனிச்சீர் வருவதாகத் தெரிகிறது:

மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் 
தங்களார் வத்தளவு தானன்றி - பொங்கும் 
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் 
பெரியாழ்வார் என்னும் பெயர்.

- இரா. ஆனந்த்


பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப்பாகத்தில் வெண்பாவின் செப்பலோசை நுட்பத்தைச் சொல்லியிருக்கிறார் பாம்பன் சுவாமிகள்.

ஈரடி கொண்ட குறள்வெண்பாவில் தொடங்கி ஆயிரம் அடிகள் வரை நீளும் கலிவெண்பா வரை மேற்சொன்ன பொதுவிலக்கணத்தின்படி பாடப்பெறும். எனினும் வெண்பாவில் விளாங்காய்ச்சீர் (விளா = குறில், நெடில் நிரை) வரலாகாது. ஏலவே சொன்னதைப் போல இது வேறு இடங்களில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மீளவும் இங்கு விரித்துரைக்காமல் பாம்பன் சாமிகள் கூறிய விளக்கத்தை இங்கே தருகிறேன்:

பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் “ திருவலங்கற்றிரட்டில்” இருந்து :

“ வெண்பாவுக்குரிய காய்ச்சீர் நான்கனுள் இடையில் குறில்நெடில் இணைந்த நிரையசை உடையனவும், இரண்டு மாஞ்சீராகப் பிரிக்கத் தகுவனுமான ‘தம்பிரானே’ என்பது போன்ற கூவிளங்காயும் , ‘சருவசாரம்’ என்பது போன்ற கருவிளங்காயும் வெண்பாவில் வரவொண்ணா எனவும், வரின் ஓசைநயங் கெடும் எனவும் அறிக. கலிப்பாவில் வரும் காய்ச்சீர்கட்கும் இந்நியாயங் கொள்க.”

நீங்கள் இங்கே வருமுன் என நினைக்கிறேன். திருக்குறளில், காளமேகம் பாடல்களில் விளாங்காய்ச் சீர் உள்ளது ஏராளம் எனப் பேசப்பட்டது. அவ்வாறு எதுவும் இல்லை. குறள், காளமேகம், ... பிற புலவோர் போலவே விளாங்காய்ச் சீர் இன்றிப்பாடினர் என்று விளக்கினர். பழைய ஆவணக் கிடங்கில் பார்க்கலாம்.

சித்தர்பிரான் பாம்பன் சுவாமிகள் செப்பிய
வெண்பாவின் ஓசை விளம்பு

பாம்பன் சாமியின் வரலாற்றைப் படித்துவருகிறேன். அதிசயமான சித்தர். முருகனால் ஆளப்பெற்ற அடியார்.

பாம்பன் சுவாமிகள் ஏன் பழனிக்கு செல்லவில்லை? | வாரியார்

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாஸ சுவாமிகளின்
அருள் ஞான வாழ்க்கைக் குறிப்பு:

1850 ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகள் அவதரித்த
வருடம் (1848 /1850 / 1852 மிகச்சரியான
வருடம் குறிக்கப்படவில்லை)

1866 சுவாமிகள் இராமேஸ்வரத்தில்
கிறிஸ்துவ கல்விச்சாலையில் சேர்ந்தார்.

1878 திருமணம் நடந்தது

1891 "யான் கூறும் வரை நீ பழனிக்கு
வரவேண்டாம்" என்று முருகன்
கட்டளையிட்டார்.

1891 மந்திரமறையாம் சண்முககவசம்
பாடினார்.

1891 பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடினார்

1892 திருத்தொடையல் பாடினார்

1892 திருவலங்கற்றிரட்டு முதற்கண்டம்
பாடினார்

1893 தென்திசை திருத்தலயாத்திரை சென்றார்

1893 திருவனந்தபுரத்தில் 22 நாட்கள்
தங்கியிருந்து யாப்பிலக்கணம் பயின்றார்

1893 திருவலங்கற்றிரட்டு இரண்டாம்கண்டம்
பல்சந்தப்பரிமளம் பாடினார்

1894 திருப்பிரப்பன்வலசையில்
மயானபூமியில் தவம் தொடங்கினார்
(மிகச்சரியாக 17/3/1894)

1894 அகத்தியர் அருணகிரிநாதருடன் முருகப்
பெருமான் காட்சிதந்து ஞானோபதேசம்
அருளினார் (சரியாக 23/3/1894) 25ம்நாள்
சித்திராபவுர்ணமியன்று தவத்தை முடித்தார்
சுவாமிகள் (சரியாக 20/4/1894)

1895 தூய துறவறம் மேற்கொண்டார்

1895 முருகப்பெருமான் ஆணைப்படி சென்னை
நகரம் வந்துசேர்ந்தார்.

1896 தகராலய இரகசியம் எனும் நூல்
அருளினார்

1896 பரிபூரணானந்த போதம் எனும் நூல்
அருளினார்

1897 திருப்பா அருளினார்

1898 அட்டாட்டவிக்கிரகலீலை அருளினார்

1901 திருவலங்கற்றிரட்டு முதற்கண்டம்
அச்சிடப்பட்டது.

1902 திருவலங்கற்றிரட்டு இரண்டாம்கண்டம்
அச்சிடப்பட்டது.

1902 காசியாத்திரை தொடங்கினார்.
யாசியாத்திரை மற்றும் சீவயாதனாவியாசம்
அருளினார்

1903 சஷ்டிவகுப்பு அச்சிட்டார்

1904 இலங்கையைச் சேர்ந்த புத்த மன்னனை
வாதில் வென்று அவனுடைய புதல்வி
ஊமைப்பெண்ணை ஸ்ரீவாதவூரடிகளார்
பேசுவித்தார். அந்ததிருத்தலம்தான்
பின்னத்தூர்த்தலம்
எனும் "மாணிக்கவாசகேசுரம்" என்று
சுவாமிகள் உலகுக்கு அறிவித்தார்

1905 குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி எனும்
நூலை அச்சிட்டார். மற்றும் சிறுநூல்திரட்டு
அச்சிட்டார்

1906 சேந்தன் செந்தமிழ் நூல் அச்சிட்டார்

1907 சஷ்டிவகுப்பு பத்துப்பிரபந்தம் எனும்
நூல்களை அச்சிட்டார்

1908 நாலாயிரப்பிரபந்தவிசாரம் என்னும் வசன
நூலை அச்சிட்டார். மற்றும் சைவசமயசரபம்
எனும் நூலை அச்சிட்டார்

1914 பரிபூரணாநந்த போதம் சிவசூரியப்
பிரகாசம் என்னும் உரையுடன் அச்சிட்டார்

1915 சென்னை இராயப்பேட்டையில் ஸ்ரீ
பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை
நிலையத்திற்கு அஸ்திவாரம் நிறுவினார்
(31/1/1915)

1916 தகராலய ரகசியம் சதானந்தசாகரம்
என்னும் உரையுடன் அச்சிட்டார்

1918 குமராஸ்தவம் அருளினார். மற்றும்
ஸ்ரீமத் அருணகரிசுவாமிகளின் குருபூஜையை
ஆனிமாதம் உத்தராயணத்து ஆறாவது
பவுர்ணமி தோறும் நடத்த சீடர்களுக்கு
போதித்தார்.

1918 குமராஸ்தவம் அருளினார். மற்றும்
ஸ்ரீமத் அருணகிரிசுவாமிகளின் குருபூஜையை
ஆனிமாதம் உத்தராயணத்து ஆறாவது
பவுர்ணமி தோறும் நடத்த சீடர்களுக்கு
போதித்தார்.

1919 சண்முக சகச்சிர நாமார்சசனை
அச்சிட்டார்

1919 சென்னை இராயப்பேட்டையில் ஸ்ரீ
பாலசுப்பிரமணிய பக்த ஜன சபையில்
"சைவமகிமை" என்ற தலைப்பில்
விரிவுரையாற்றினார் (17/2/1919)

1921 திருப்பா "நூல்திட்பம்" என்ற உரையுடன்
அச்சிட்டார்

1922 சிவஞானதீபம் வசனநூல் அச்சிட்டார்

1923 செக்கர்வேள் செம்மாப்பு, செக்கர்வேள்
இறுமாப்பு நூல்களை அருளினார்

1923 27/12/1923 அன்றுகால்முறிவு ஏற்பட்டு
சென்னை பொதுமருத்துவமனையில்
சேர்ந்தார். 28/12/1923 அன்று திரு சின்னசாமி
சோதிடர், திரு ஞானசாகர முதலியார், திரு
சிவசங்கரதம்பிரான் ஆகிய மூவரும்
சண்முகக்வசம் ஓதத்தொடங்கினர்.

1924 7.1.1924 அன்று பெரியமருத்துவமன
ையில் வானளாவத் தோகையை விரித்து இரு
மயில்கள் காட்சி அளித்தது. அன்றே
ஸ்ரீமுருகப்பெருமானின் அசரீரியாய் "கவலை
வேண்டாம். இன்னும் 15 நாட்களில்
கால்குணமாகும். அதுவரை இங்கே இருப்பாய்"
என்று அறிவித்தார்.

1924 அசோகசாலவாசம் அருளினார். சென்னை
நம்புலி ஐயர் தெருவில் "மயூரவாகன சேவன"
விழாவை தொடங்கினார்

1925 ஸ்ரீமத் குமாரசுவாமியம்,
ஸ்ரீசுப்பிரமணிய வியாசம் வசன நூல்
அச்சிட்டார்

1926 வில்சாசனம் (உயில்) எழுதிப்
பதிவுசெய்தார் (17/1/1926)

1927 காசிடில் என்னும் வில் அனுபந்த சாசனம்
எழுதினார் (19/2/1927)

1928 29/5/1928ல் பெங்களூருவில்
தங்கியிருந்து 15/7/1928 ல் சென்னை
திரும்பினார்

1929 சென்னை நம்புலி ஐயர் தெருவில் ஸ்ரீ
ஜெகந்நாத முதலியார் இல்லத்தின் மேல்
மாடியில் ஸ்ரீமத் சுவாமிகள் சுத்தாத்துவித
சித்தாந்த முத்திபெற்றார்.

குகசாயுச்சியநிலை (30/5/1929) மறுநாள் சென்னை மயூரபுரம்
என்னும் திருவான்மியூரில் திருக்கோவில்கொணடு எழுந்தருளினார்

 

சிவஞானபோதம் - மூன்று உதாரணங்கள்

உள்ளதே தோற்ற உயிர் அணையும் அவ்வுடலில்
உள்ளதாம் முற்செய்வினை உள் அடைவே - வள்ளலவன்
செய்பவர் செய்திப் பயன் விளைக்குஞ் செய்யேபோல்
செய்வன், செயல் அணையா சென்று. 10

நாம் அல்ல இந்திரியம் நம்வழியின் அல்ல, வழி
நாம் அல்ல நாமும் அரனுடைமை - ஆம் என்னில்
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லைவினை
முற்செய்வினை யும்தருவான் முன் 63

இங்குளி வாங்கும் கலம்போல ஞானிபால்
முன்செய் வினை மாயை மூண்டிடினும் - பின்செய்வினை
மாயையுடன் நில்லாது மற்றவன்தான் மெய்ப்பொருளே
ஆய அதனால் உணரும் அச்சு 65

Reply all
Reply to author
Forward
0 new messages