பஞ்சாயுத விருத்தம்

84 views
Skip to first unread message

Anand Ramanujam

unread,
Apr 25, 2023, 7:27:45 AM4/25/23
to santhav...@googlegroups.com
திருமாலின் ஐம்படைகளாகிய சக்கரம், சங்கு, கதை, வாள், வில் ஆகியவற்றைப் போற்றிப் பாடும் பஞ்சகம் : பஞ்சாயுத விருத்தம்.

திருச்சக்கரத்தையும் வலம்புரி சங்கையும் குறித்த பாடல்களை ஏற்கெனவே  ‘சித்திரமும் செந்தமிழும்" என்னும் இழையில் எழுதியிருக்கிறேன். அவற்றை இவ்விழையின் முதலிரண்டு பாடல்களாக அளிக்க விரும்புகிறேன்.

1. தழலுமிழ் திருச்சக்கரம்

தீயுமிழ்ந் தெழும்பும் செந்தழல் அலைகள்
...திசைதிசை பரவிட ஒளிர்வாய்
காய்சினம் தெறிக்கக் கனன்றெழுந் தசுரர்க்
...கடுந்தொழில் கெடச்செருக் கிளர்வாய்
ஆயிரம் இரவிக் கதிர்க்கரம் விரித்தே
...அஞ்சலென் றடைக்கலம் அருள்வாய்
தூயவர் துதிக்க மாயவன் கரத்தில்
...சுழன்றொளி துலங்குசக் கரமே!

2. நலமிகு பாஞ்சசன்னியம்

கோடிவெண் டிங்கள் குளிர்கிர ணங்கள்
...குழைத்தொளிர் வெள்ளிவொண் ணிறத்தாய்
காடுலாம் அரியின் கருச்சனை அதுபோல்
...கடுஞ்சமர் முழங்கிடும் வலத்தாய் 
ஈடிலா நாதத் தேழிசை யாவும்
...இயைந்திடும் இன்னொலிச் சுரத்தாய்
நாடரும் நலத்தாய் நாரணன் கரத்தாய்
...நவையறு பாஞ்சசன் னியமே!


இரா. ஆனந்த்

Anand Ramanujam

unread,
Apr 25, 2023, 7:46:53 AM4/25/23
to santhav...@googlegroups.com
இரண்டாம் பாட்டில் இரண்டாம் அரையடியில் “வெள்ளியொண் ணிறத்தாய்” என்று திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.

Anand Ramanujam

unread,
Apr 25, 2023, 12:26:53 PM4/25/23
to santhav...@googlegroups.com
Posting the last 3 three songs in this thread:

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

3. கெளமோதகி கதாயுதம்

மேருமால் வரைபோல் பெருந்திரு வுருவும்
...வென்றிவெந் திறலொளிர் வலியும்
பூரணப் பொலிவும் பொன்னொளி விரவும்
...பொருவரும் பொற்புமிக் குடையாய் 
சீரறத் திரியும் ஐவரைச் செறுத்துச் 
...சிந்தைசெவ் வழியுற அருள்வாய் 
ஏருற இலங்கும் நெடியவன் திருக்கை
...ஏந்துகெள மோதகிக் கதையே!


4. நந்தக வாள்

வெற்றிவாள் வயிரத் திண்திறல் ஒளிர்வாள்
...வீரவாள் மின்னுவெண் சுடர்வாள்
பற்றுறுத் தெண்ணில் பிறவியும் அறுத்துப்
...பழவினை அறுத்திடும் அருள்வாள்
குற்றமே பெருக்கிக் கொடுந்தொழில் புரிவோர்
...குலம்கெட வீழ்த்திடும் அடல்வாள்
நற்றவர் ஏத்தும் மதுசூத னற்கை
...நந்தக வாளென்றன் காப்பே! 

5. சார்ங்க வில்

வானெழும் இடிபோல் நாணதிர்ந் தொலிக்க
...வருமிடர் தொலைந்ததென் றுவந்தே
வானவர் வணங்க தானவர் நடுங்க
...மழையென அடுகணை பொழிவாய்
நானிலம் மகிழ நலமுடன் திகழ
...நலிதரும் பிணியொழித் தருள்வாய்
சானகி கேள்வன் தோளணி செய்யும்
...சார்ங்கமென் னும்தனிச் சிலையே.

இரா. ஆனந்த்

N. Ganesan

unread,
Apr 25, 2023, 2:00:32 PM4/25/23
to santhav...@googlegroups.com
🙏


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/28E96627-E11B-47C4-BFC3-5D7BCBE7BFE5%40gmail.com.

Siva Siva

unread,
Apr 25, 2023, 2:25:30 PM4/25/23
to santhav...@googlegroups.com
Nice.


On Tue, Apr 25, 2023 at 12:26 PM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
Posting the last 3 three songs in this thread:

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

3. கெளமோதகி கதாயுதம்

மேருமால் வரைபோல் பெருந்திரு வுருவும்
...வென்றிவெந் திறலொளிர் வலியும்
பூரணப் பொலிவும் பொன்னொளி விரவும்
...பொருவரும் பொற்புமிக் குடையாய் 
சீரறத் திரியும் ஐவரைச் செறுத்துச் 
...சிந்தைசெவ் வழியுற அருள்வாய் 
ஏருற இலங்கும் நெடியவன் திருக்கை
...ஏந்துகெள மோதகிக் கதையே!

--> /வென்றிவெந் திறலொளிர் வலியும்/
திறல் = ?

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 25, 2023, 2:31:15 PM4/25/23
to santhav...@googlegroups.com
மிக அழகான, பயனுள்ள துதி 
அனந்த்

N. Ganesan

unread,
Apr 25, 2023, 2:33:51 PM4/25/23
to santhav...@googlegroups.com
--> /வென்றிவெந் திறலொளிர் வலியும்/
> திறல் = ?

திறல் = திறன்.

சங்க நூல்களில் மிகுதியும் பயன்படும் சொல்: திறல்.
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOaJTTTP42hrG2CLhzTc%3DSprasS%3D90FLjksSLDpsM_3Cg%40mail.gmail.com.

Rajja Gopalan

unread,
Apr 25, 2023, 2:50:54 PM4/25/23
to santhav...@googlegroups.com
அற்புதம்

Sent from my iPhone

On 25 Apr 2023, at 17:26, Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:

Posting the last 3 three songs in this thread:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Apr 25, 2023, 3:06:03 PM4/25/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. கணேசன்.

Anand Ramanujam

unread,
Apr 25, 2023, 3:09:40 PM4/25/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசிவா, திரு. அனந்த், திரு. மீ.ரா. 🙏

சௌந்தர்

unread,
Apr 25, 2023, 3:54:45 PM4/25/23
to சந்தவசந்தம்
மிக நன்று. இன்று ஶ்ரீபகவத் இராமநுஜர் திருக்ஷத்திரம். சித்திரை திருவாதிரை. பஞ்சாயுதங்களும் ஒன்று சேர்ந்த அவதாரம் நம் ஆசாரியர் என்று கூறும் பாசுரம் இதோ.

அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன்கை ஆழியென்னும்
படையொடு நாந்த கமும்படர் தண்டும்ஒண் சார்ங்கவில்லும்
புடையார் புரிசங்கமும் இந்தப்பூதலங் காப்பதற்கென்று
இடையே இராமா நுசமுனி யாயின இந்நிலத்தே. (இரா. நூ. 33)

சௌந்தர் 

Anand Ramanujam

unread,
Apr 25, 2023, 4:29:45 PM4/25/23
to santhav...@googlegroups.com
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, திரு. செளந்தர்!

ஐம்படைகள் எல்லாம் சேர்ந்த அவதாரமாக இராமாநுஜர் துதிக்கப்படுகிறார் என்பதை இந்த  அருமையான இராமாநுச நூற்றந்தாதிப் பாடல் மூலம் அறிந்து கொண்டேன்.  நன்றி!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Apr 25, 2023, 8:03:08 PM4/25/23
to santhav...@googlegroups.com
தெளிவான பாடல்கள். வாளுக்கு மட்டும் காப்பே எனச் சொல்லவேண்டிய தனிச்சிறபென்ன?.
இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Apr 25, 2023, 8:38:43 PM4/25/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, இலந்தையாரே!

பொய்ம்மையின் மீதுள்ள பற்றைப் போக்க அருள்வதால் அப்படி எழுதியிருக்கலாம். 

ஆனால், உண்மையில் வாளுக்கு மட்டும் ஏன் காப்பு என்று அமைந்தது என்று தெரியவில்லை.   

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 25, 2023, 10:42:50 PM4/25/23
to santhav...@googlegroups.com
மிகவும் அழகான பாடல்கள்
சொக்க வைக்கும் சொல்லழகு

         — தில்லைவேந்தன்

….

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Apr 26, 2023, 1:10:00 AM4/26/23
to santhav...@googlegroups.com
அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு. தில்லைவேந்தன்!

Anand Ramanujam

unread,
Apr 26, 2023, 7:13:09 AM4/26/23
to santhav...@googlegroups.com
திறல் என்னும் சொல்லுக்கு வெற்றி, வலிமை போன்ற பல பொருள்கள் அகராதியில் காணப்படுகிறது:

  திறல் tiṟal 
திறல் tiṟal , n. cf. திறம்². 1. [K. tiruḷu.] Strength, vigour; வலி. துன்னருந் திறல் (புறநா. 3, 8). 2. Bravery, courage, valour; தைரியம். (W.) 3. Victory; வெற்றி. திறல் வேந்தன் புகழ் (பு. வெ. 9, 31, கொளு). 
 எனவே, மூன்றாம் பாட்டில் முதல் அடியில்,  “வென்றிவெந் திறலொளிர் வலியும்” என்பதை மாற்றி, “மேவலர் வெருவுவெந் திறலும்” என்று அளிக்க விரும்புகிறேன்.

மேலும், நாலாம் பாட்டில் இரண்டாம் அடியில் “பற்றுறுத்து” என்னும் தட்டச்சுப் பிழையை சரிசெய்து, “பற்றறுத்து” என்று மாற்ற விரும்புகிறேன்.

நன்றி, திரு. சிவசிவா!

-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 26, 2023, 7:54:16 AM4/26/23
to santhav...@googlegroups.com
On Wed, Apr 26, 2023 at 12:10 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு. தில்லைவேந்தன்!

ஐம்படை ஐம்பா - முழுதும் படித்தேன்.
சில கருத்துகள் எழுத ஆவல்.

உ-ம்: ஆழ்வார் பாசுரங்களில் நாந்தகம் என்ற சொல்லே பயிலுகிறது.
எனவே, பாட்டில் நந்தகம் இருக்கலாம்.

தலைப்பு: 4.  நாந்தக வாள்
என இருந்தால் சிறப்பு என நினைக்கிறேன்.

நா. கணேசன்

Anand Ramanujam

unread,
Apr 26, 2023, 8:09:07 AM4/26/23
to santhav...@googlegroups.com
தங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றி, திரு. கணேசன். 

“நாந்தகம் ஏந்திய நம்பி” என்று பெரியாழ்வார் பாசுரத்திலும் வருவதாகக் காண்கிறேன். அதன்படியே  “நாந்தக வாள்” என்று தலைப்பை மாற்றுகிறேன்.

Siva Siva

unread,
Apr 26, 2023, 8:47:34 AM4/26/23
to santhav...@googlegroups.com
Maybe நந்தகம் is more accurate form?

நந்தகம் nantakam , n. < nandaka. 1. Sword of Viṣṇu; திருமாலின் வாள். 2. Sword; வாள். (யாழ். அக.)

नन्दक nandaka a. [नन्द्-ण्वुल्1 Rejoicing, making happy, gladdening. -2 Delighting or rejoicing in. -3 Gladdening a family. -कः 1 A frog. -2 N. of the sword of Viṣṇuनित्यानन्दाय भूयान्मधुमथनमनोनन्दको नन्दको नः । विष्णुपादादिकेशान्तवर्णनस्तोत्रम् 4. -3 A sword in general. -4 Happiness. -5 Nanda, the foster-father of Kṛiṣṇa. -6 N. of a gem. Kau. A.2.11.


N. Ganesan

unread,
Apr 26, 2023, 8:49:49 AM4/26/23
to santhav...@googlegroups.com
On Wed, Apr 26, 2023 at 7:47 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
Maybe நந்தகம் is more accurate form?

In Sanskrit. Not in Tamil.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 26, 2023, 8:50:07 AM4/26/23
to santhav...@googlegroups.com, pandiya raja, Pandiyaraja, Dr.Krishnaswamy Nachimuthu, George Hart, sivasub...@sivasubramanian.in, sirpi balasubramaniam, Dr. Y. Manikandan, Subramanian T S, Whitney Cox, Sascha Ebeling, Ulrike Niklas, thiruppug...@gmail.com
On Wed, Apr 26, 2023 at 7:09 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
தங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றி, திரு. கணேசன். 

“நாந்தகம் ஏந்திய நம்பி” என்று பெரியாழ்வார் பாசுரத்திலும் வருவதாகக் காண்கிறேன். அதன்படியே  “நாந்தக வாள்” என்று தலைப்பை மாற்றுகிறேன்.


இந்த ஒரு பாசுரம் மட்டுமல்ல. எல்லா திவ்வியப் பிரபந்தப் பாட்டிலும் நாந்தகம் தான்.

    நாந்தக (1)
அற எறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே - நாலாயி:451/2

    நாந்தகம் (4)
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று - நாலாயி:111/1
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலி சார்ங்கம் திருச்சக்கரம் - நாலாயி:329/1
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம் புருடோத்தமன் நகர்தான் - நாலாயி:394/2
செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செரு செய்யும் நாந்தகம் என்னும் - நாலாயி:421/1

    நாந்தகமும் (1)
படையோடும் நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும் - நாலாயி:2823/2

இஃதறிய (அ)  தமிழ்ப் பரப்பில் எந்த ஒரு சொல்லின் வியாபகமும் அறிய, ஆய, பேரா. ப. பாண்டியராஜாவின், தமிழ் கன்கார்டன்ஸ் ( http://tamilconcordance.in/concordance_list-B.html ) துணைவருகிறது. அரசாங்க நிறுவனங்கள் பல இருப்பினும், தமிழ் ஆய்வுக்கு மிகப்பெரிய கொடையை ஈந்துள்ளார் கணிதப் பேராசிரியர். நான் கேட்டபடி, புறப்பொருள் வெண்பாமாலைக்குச் சொற்களைப் பிரித்து அவை எங்கெங்கு, எத்தனை முறை பு.வெ.மாலை இலக்கணத்தில் பயிலுகிறது என்று கொடுத்துள்ளார். ’செயற்கரிய செய்வார் பெரியர்’ என்றார் வள்ளுவர். பழைய, காலத்திற்கு ஒவ்வாத பல கருத்துகள் தமிழில் உள்ளன. உலகெங்கும் விஞ்ஞானம் விரிந்துவருகிறது. அவை உயிர்கள், வாழ்க்கை, சிந்தனை, தத்துவம், சூழலியல், .... பற்றிக் காட்டுவது அனேகம். பாரதி சொன்னதுபோல், அப் புதிய பேரறிவு, ஞானம், தொழிநுட்பு, ... எல்லாம் தமிழுக்கு 21-ம் நூற்றாண்டில் வரவேண்டும். இதற்கெல்லாம், தமிழை ஆழக் கற்கும் எதிர்கால ஆழ்வார்கள் செய்யவேண்டியது நிறைய. பேரா. வலைத்தளம் போன்றன இதற்கெலாம் உறுதுணை என்பது கரதலாமலகம்.  பேராசிரியர் வாழ்க்கைக் குறிப்பு:
http://tamilconcordance.in/ennaippaRRi.html

http://tamilconcordance.in தளத்தை தமிழாய்வோர், தமிழன்பர்கள் பயன்படுத்தினால் சிறக்கும். எதிர்காலத் தமிழ் ஆழம்பெறும். வாழ்க!

பிற பின்!
Dr. நா. கணேசன்
Senior Scientist, Space Structures
Houston, Texas, USA

சௌந்தர்

unread,
Apr 26, 2023, 10:09:04 AM4/26/23
to சந்தவசந்தம்
ஐம்படைகளுக்குள் 'உறை' (காப்பு) வாளுக்கு மட்டுமே என்பதனால் இயல்பாகக் 'காப்பே' என்று அமைந்திருப்பதாகக் கொள்ளலாமே.
சௌந்தர் 

N. Ganesan

unread,
Apr 26, 2023, 1:43:20 PM4/26/23
to santhav...@googlegroups.com

Prof. P. Pandiaraja, The American College, Madurai wrote in whatsapp:
> பாராட்டுக்கும், என் இணையதளம் பற்றிய செய்திகளுக்கும் மிக்க நன்றி ஐயா.

Anand Ramanujam

unread,
Apr 26, 2023, 4:32:30 PM4/26/23
to santhav...@googlegroups.com
அருமையான விளக்கம், மிக்க நன்றி, திரு. செளந்தர்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Apr 26, 2023, 9:13:59 PM4/26/23
to santhav...@googlegroups.com
பஞ்சாயுத விருத்தம் நன்முறையில் அமையக் கருத்தளித்தும் ஊக்கமளித்தும் வாழ்த்திய அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றி!

இப்பஞ்சகத்தின் திருந்திய பதிவை இங்கே காணலாம்:
நன்றி,
இரா. ஆனந்த்

On Tue, Apr 25, 2023 at 12:26 PM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:

Imayavaramban

unread,
6:50 AM (10 hours ago) 6:50 AM
to சந்தவசந்தம்
இப்பஞ்சகத்தின் சில பாடல்களை எனது Youtube Channel-ல் பதிவிடுவதற்காகச் சொற்களை எளிமையாக்கிக் கொண்டு வருகிறேன்.
அந்த முயற்சியில் விளைந்த முதல் பாடல் :

சாரங்க தனுசே துணை நீயே!

வானெழும் இடிபோல் நாண்முழங்க

… வானவர் முனிவர் தாம்வணங்க

வான்மழை எனவே சரம்பொழிய

… வாடிடும் அசுரர் உயிர்குலைய

நானிலம் முழுதும் இருள்மறைய

… நாடிடும் நலமே  நனிநிறைய

ஜானகி கணவன் தோள்பொலியும்

… சாரங்க தனுசே துணைநீயே!


- இமயவரம்பன்
Reply all
Reply to author
Forward
0 new messages