விரித்த செஞ்சடை ஆட ...
-------------------
ராஜேஷ் (இலவசக் கொத்தனார், ஆஸ்டின்) கர்நாடக சங்கீதத்தில் பிரபலமான பாடல், “விரித்த செஞ்சடை ஆட” யார் இயற்றியது எனக் கேட்டார்.
> கர்நாடக கச்சேரிகளில் இந்த விருத்தம் பாடிக் கேட்கிறேன். இது யார் எழுதிய பாடல் எனத் தெரியவில்லை.
> கூகிளில் தேடினாலும் சரியாகத் தெரியவில்லை. யாரேனும் உதவ முடியுமா?
ஆமாம். பிழையாகப் பல பெயர்கள் இணையத்தில் இப்பழைய பாடலுக்குத் தரப்பட்டுள்ளன.
https://youtu.be/JWgYjdYarKs முசிறி சுப்பிரமணியையர்
https://youtu.be/JQVdw3b_CCUhttps://youtu.be/4KeKoLhFPyo உடையாளூர்
துறைமங்கலம் வீரசைவப் புலவர்களில் சிவப்பிரகாசர், கருணைப்பிரகாசர், வேலையர் மூவரும் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவத்தை வளர்த்தனர். அவர்களது சகோதரியார் ஞானாம்பிகை அம்மையார் ஆவார்.
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2013/Apr/13/பேரிலக்கணம்-கற்ற-ஆசுகவி-662208.htmlதமிழின் கற்பனைக் களஞ்சியம் என்று புகழப்பட்ட துறைமங்கலம் சிவப்பிரகாசரின் தம்பி பெயர் வேலையர். அவர் தம்பி கருணைப்பிரகாசர். ஐயர், அந்தணர்
என்று வீரசைவக் குருக்களைச் சொல்வது தொன்மரபு. நாம் அறிந்த வாரியார் சுவாமிகள் போல, வீரசைவர்கள். மயிலம், பேரூர், ... வீரசைவ மடங்கள். ஊரன் அடிகள் தனிநூலே இயற்றியுள்ளார். திருத்தணி விசாகப்பெருமாளையர், சரவணப்பெருமாளையர், கந்தப்பையர் மக்கள் ஆவர்.
துறைமங்கலம் சிவப்பிரகாசர், வேலையர், கருணைப்பிரகாசர் மூவரும் சகோதரர்கள். கருணைப்பிரகாசர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய முன்னோர்.
https://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.htmlஅண்ணனும் தம்பியும் மாய்ந்தபோது, ”கணுவுக்கு மேலேயும், கீழேயும் இருந்த இனிப்புப் பாகம் கரும்பில் போயாச்சு, கணுவாக இருந்த நான் மாத்திரம் இருக்கிறேன்” என்று கவலைப்பட்டு வேலையர் பாடிய வெண்பா உருக்கமானது. முன்பு கிவாஜ இவ்வெண்பாவை விளக்கி எழுதிய கட்டுரை கொடுத்தேன். தேடினால் கிட்டும்.
அல்லிமலர்ப் பண்ணவனும் ஆராய்ந் தறிகவிதை
சொல்லும் இருவரிடைத் தோன்றியயான் - முல்லை
அரும்பிற் பொலியும் அணிமுறுவல் நல்லாய்
கரும்பிற் கணுநிகர்த்தேன் காண்
இத் துறைமங்கலம் வீரசைவப் பரம்பரையில் தோன்றிய கருணையையர் செய்த சிதம்பரநாதர் பதிகத்தில் முதல் பாடல்: “விரித்த செஞ்சடை ஆட” ... 18-ம் நூற்றாண்டுப் பாடல்கள் எனலாம்.
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0023716_சிதம்பரநாதர்பதிகம்.pdfஇப் பதிகப்பாடல்களை நன்முறையில் சீர்பிரித்து, மதுரை முன்னியத்தில் (
https://www.projectmadurai.org ) இணைய அம்பலம் ஏற்றுவோம்.
துறைமங்கலம் கருணை அய்யர் பற்றிய செய்தி, ஈழத்துப் புலவர் அர்ணால்ட் சதாசிவம் (1820 - 1895) இயற்றிய “பாவலர் சரித்திர தீபகம்” நூலில் (பக்கம் 89) காணலாம்.
https://archive.org/details/pavalarcharithth00jrar/page/88/mode/2upகருணையையர் செய்த சிதம்பரநாதர் பஞ்சரத்தினத்துறை இருக்கிறது என்கிறார்கள். கிடைத்தால் வலையுலாச் செய்வோம். கிடைக்கும்.
நா. கணேசன்