அவ்வைக் காலத்திலும், அப்பர் காலத்திலும் 'ங' எழுத்தின் உருவம் எப்படி இருந்தது? பழம் தமிழெழுத்தின் உருவ மாற்றம் அறிந்த்தோர் விடை தந்தால் நன்று.
ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே
நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர்இல் சேவடியே புகல் ஆகுமே.

On Tue, Jul 23, 2019 at 7:40 AM Rathinam Chandramohan <rathinam.c...@gmail.com> wrote:’சேக்கிழார் அடிப்பொடி’ தி. ந. இராமச்சந்திரன் கூறும் பொருள் அருமையானது.திருவரங்கத்தில் ’அடையவளைஞ்சான் தெரு’ - எல்லோரையும் உள்ளடக்கிக் காப்பாற்றுவது எனப் பொருள்.அதுபோல், ஙகரம் அதன் வருக்க எழுத்துக்கள் எல்லாவற்றையும் அடையவளைந்து காப்பாற்றுவதுஎன அவ்வை பாடியிருக்கிறாள் என்பார்.தமிழில் பயிலா இவ்வெழுத்துக்கள் யாவும் மலையாளத்தில் பயன்கொள்கின்றனர். அவர்களுக்குஅண்டை நாடான கொங்கில் இதற்கு ஒரு ஜோக் சொல்வர், மலையாள நாட்டில் ஒரே மழை.சளிப்பிடித்துப் பேசும்போது ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ எல்லாம் பேச்சாகிவிட்டது. :)நா. கணேசன்
On Sun, Sep 1, 2019 at 2:45 AM nkantan r <rnka...@gmail.com> wrote:அவ்வைக் காலத்திலும், அப்பர் காலத்திலும் 'ங' எழுத்தின் உருவம் எப்படி இருந்தது? பழம் தமிழெழுத்தின் உருவ மாற்றம் அறிந்த்தோர் விடை தந்தால் நன்று.இப்பாடல், நெடுங்கணக்கு வரிசை பற்றி CTamil லிஸ்ட்டில் பேசினோம். றகரத்தை எங்கு வைப்பது என விட்டுவிட்டார் அப்பர்.அப்பொழுது இருந்தது வட்டெழுத்து. அதில் ஙகரம் ரிஷபம் போல் இருக்கும்.திமிலுக்கு அடுத்துள்ள முதுகில் கம்பளம் விரித்துள்ளதைக் காட்ட ஙகரத்தின் குழிவு என்று கொண்டார் போலும்.
இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.
இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்த ஓவியர் ஜீவா அவர்களுக்கு நன்றி.Labels : தமிழ், தமிழாய்வு, குடவாயில், ஙப் போல் வளை
’ccc
அதுபோல், ஙகரம் அதன் வருக்க எழுத்துக்கள் எல்லாவற்றையும் அடையவளைந்து காப்பாற்றுவதுஎன அவ்வை பாடியிருக்கிறாள் என்பார்.தமிழில் பயிலா இவ்வெழுத்துக்கள் யாவும் மலையாளத்தில் பயன்கொள்கின்றனர். அவர்களுக்குஅண்டை நாடான கொங்கில் இதற்கு ஒரு ஜோக் சொல்வர், மலையாள நாட்டில் ஒரே மழை.சளிப்பிடித்துப் பேசும்போது ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ எல்லாம் பேச்சாகிவிட்டது. :)நா. கணேசன்
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUd0R%2BYWZx-XPTYhfcxZLYqT20Jhs-zWzs%3DQidMqPoMU_g%40mail.gmail.com.
மந்தைவெளியில்(சென்னை) ஒரு அடஞ்சாமுதலித்தெரு உள்ளது. சுமார் 1 வருடம் யான் அங்கு வசித்தேன். அதன் முழுக்காரனம் இப்போதுதான் புரிந்தது கணேசனாரே! எல்லோரையும் அரவணைத்து வளைந்துகொடுத்த நகரம்.. சரியா?யோகியார்
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-K1E9f1RdLNNL76UP3TEd%3DqV4SSJ%3DrXZFHb4v20GziNLw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUchyPByQX6o7vgmQSaxef6-8_KxUhUZsppZQk5hARTjqA%40mail.gmail.com.
அப்பர் கால வட்டெழுத்தில் ஙகர எழுத்தின் உருவில் ரிஷபம் இருந்ததாகச் சொல்கிறார்.இது பற்றிய நல்ல பதிவு ஒன்று. குடவாயில் பாலசுப்பிரமணியன் விளக்கம்.ஙப் போல வருமா ? வியக்கத்தக்க ஆய்வு
ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி உள்ளார்.ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே
நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர்இல் சேவடியே புகல் ஆகுமே.
(சித்தத் தொகை திருக்குறுந்தொகை திருநாவுக்கரசர்)
இந்த பாட்டை ரொம்பப் பேர் ஆராய்ச்சி செய்தாங்க. தமிழில் ” ங “ என்ற எழுத்தை பாட்டின் முதல் எழுத்தாக பயன்படுத்தப் பட்டிருக்கு. இந்த எழுத்தை வழுவில் வார்த்தையின் முதல் எழுத்தாக பயன் படுத்தப் பட்டு இருக்கலாம் என்பது முதல் முடிவு. பொருள் இல்லாமல் இந்த வார்த்தையை எழுதி இருக்க முடியாது. இங்கு “ஙகர வெல் கொடியானொடு” என்பது சிவபெருமானுடைய இடபக் கொடியை குறிக்கிறது. (இடபம் = காளை)
இதை எப்படி விளக்க முடியும் என்பது தமிழ் ஆராய்சியாளர்களுக்கு பிடிபட வில்லை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் லிங்குஷ்டிக் டிபார்மெண்டில் பேராசிரியர் நெகமத்தை சேர்ந்தவர். (பெயர் தெரியவில்லை) ஏறத்தால 20 ஆண்டு காலம் முயற்சித்தும் விடை காண முடியவில்லை.
தஞ்சையில் ஒரு பெரிய புராண வகுப்பில் ஒரு நாள் டி.என்.ராமசந்திரன் சேக்கிழார் என்ற பெரியவர் இப்பாடலில் சிவபெருமானின் இடபக் கொடியை யே குறிப்பிடப் பட்டிருக்கிறது ஆனால் எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். கல்வெட்டு துறை பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் இது பற்றிய சிந்தனையில் ஈடு பட்டார். அவருக்கு ஒரு பொறி தட்டியது. இன்றைக்கு நாம் எழுதும் “ங” என்ற எழுத்தை வைத்து விடை தேட முற்பட்டால் இதற்கு விடை கிடைக்காது அந்தக் காலத்தில் இந்த எழுத்தை எப்படி பயன் படுத்தி இருப்பார்களோ அந்த கோணத்தில் ஆராய வேண்டும். அதுமட்டுமல்ல தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ரொம்ப பேர் கல்வெட்டுக்காக ஒரு எழுத்து ஒலைக்காக ஒரு எழுத்து என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள், அப்படி அல்ல. காலந்தோரும் தமிழ் எழுத்துக்கள் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. மகேந்திர பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர் அதனால் அந்த காலத்தை சேர்ந்த கல்வெட்டை வைத்து இந்த எழுத்துக்கான ஆய்வில் ஈடுபட்டார் (குடவாயில்). பல்லவர்களின் கொடி ”இடபக் கொடி” ஒரு இடபத்தின் உருவத்தை அவுட் லைன் போட்டு பார்த்தால் ”ங” என்ற எழுத்தின் வடிவம் தோற்றம் தருகிறது. இடபத்தை பார்த்த அப்பர் பெருமான் இந்த எழுத்தோடு இடபத்தை பொருத்தி தமது பாடலில் ”ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே” என சமயோசிதமாக பயன் படுத்தியுள்ளார். அப்பரின் கலை ஈடுபாடு வியக்க வைக்கிறது.இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.
On Mon, Sep 2, 2019 at 11:36 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:மந்தைவெளியில்(சென்னை) ஒரு அடஞ்சாமுதலித்தெரு உள்ளது. சுமார் 1 வருடம் யான் அங்கு வசித்தேன். அதன் முழுக்காரனம் இப்போதுதான் புரிந்தது கணேசனாரே! எல்லோரையும் அரவணைத்து வளைந்துகொடுத்த நகரம்.. சரியா?யோகியார்
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=5&Song_idField=50970&padhi=097&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC5.97.16ஙகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே.தருமை ஆதீன உரைநூலில் உள்ள குறிப்பு:ஙகரவெல் கொடியான் - இடபக்கொடியான். படுத்திருக்கும் வடிவில் இடபம் ங போன்றிருத்தலின் ஙகரவெல்கொடியான் என்றார்.ஆகவே, நீங்கள் தந்த செய்தி புதிது அன்றுபோல் தோன்றுகின்றது.
On Mon, Sep 2, 2019 at 9:52 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:அப்பர் கால வட்டெழுத்தில் ஙகர எழுத்தின் உருவில் ரிஷபம் இருந்ததாகச் சொல்கிறார்.இது பற்றிய நல்ல பதிவு ஒன்று. குடவாயில் பாலசுப்பிரமணியன் விளக்கம்.ஙப் போல வருமா ? வியக்கத்தக்க ஆய்வு
ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி உள்ளார்.ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே
நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர்இல் சேவடியே புகல் ஆகுமே.
(சித்தத் தொகை திருக்குறுந்தொகை திருநாவுக்கரசர்)
இந்த பாட்டை ரொம்பப் பேர் ஆராய்ச்சி செய்தாங்க. தமிழில் ” ங “ என்ற எழுத்தை பாட்டின் முதல் எழுத்தாக பயன்படுத்தப் பட்டிருக்கு. இந்த எழுத்தை வழுவில் வார்த்தையின் முதல் எழுத்தாக பயன் படுத்தப் பட்டு இருக்கலாம் என்பது முதல் முடிவு. பொருள் இல்லாமல் இந்த வார்த்தையை எழுதி இருக்க முடியாது. இங்கு “ஙகர வெல் கொடியானொடு” என்பது சிவபெருமானுடைய இடபக் கொடியை குறிக்கிறது. (இடபம் = காளை)
இதை எப்படி விளக்க முடியும் என்பது தமிழ் ஆராய்சியாளர்களுக்கு பிடிபட வில்லை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் லிங்குஷ்டிக் டிபார்மெண்டில் பேராசிரியர் நெகமத்தை சேர்ந்தவர். (பெயர் தெரியவில்லை) ஏறத்தால 20 ஆண்டு காலம் முயற்சித்தும் விடை காண முடியவில்லை.
தஞ்சையில் ஒரு பெரிய புராண வகுப்பில் ஒரு நாள் டி.என்.ராமசந்திரன் சேக்கிழார் என்ற பெரியவர் இப்பாடலில் சிவபெருமானின் இடபக் கொடியை யே குறிப்பிடப் பட்டிருக்கிறது ஆனால் எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். கல்வெட்டு துறை பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் இது பற்றிய சிந்தனையில் ஈடு பட்டார். அவருக்கு ஒரு பொறி தட்டியது. இன்றைக்கு நாம் எழுதும் “ங” என்ற எழுத்தை வைத்து விடை தேட முற்பட்டால் இதற்கு விடை கிடைக்காது அந்தக் காலத்தில் இந்த எழுத்தை எப்படி பயன் படுத்தி இருப்பார்களோ அந்த கோணத்தில் ஆராய வேண்டும். அதுமட்டுமல்ல தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ரொம்ப பேர் கல்வெட்டுக்காக ஒரு எழுத்து ஒலைக்காக ஒரு எழுத்து என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள், அப்படி அல்ல. காலந்தோரும் தமிழ் எழுத்துக்கள் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. மகேந்திர பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர் அதனால் அந்த காலத்தை சேர்ந்த கல்வெட்டை வைத்து இந்த எழுத்துக்கான ஆய்வில் ஈடுபட்டார் (குடவாயில்). பல்லவர்களின் கொடி ”இடபக் கொடி” ஒரு இடபத்தின் உருவத்தை அவுட் லைன் போட்டு பார்த்தால் ”ங” என்ற எழுத்தின் வடிவம் தோற்றம் தருகிறது. இடபத்தை பார்த்த அப்பர் பெருமான் இந்த எழுத்தோடு இடபத்தை பொருத்தி தமது பாடலில் ”ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே” என சமயோசிதமாக பயன் படுத்தியுள்ளார். அப்பரின் கலை ஈடுபாடு வியக்க வைக்கிறது.இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.--"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNATejtibnNj2N06dLeEEoUh4NB6GKM54jwZuxGGVBJSA%40mail.gmail.com.
இப்போது புரிகிறது " ஙப்போல் வளை " என்ற தொடர், ஆத்திசூடியின் அடையாளத்தைக் குறிக்கிறது என்பது!- புலவர் இராமமூர்த்தி .
அனைவருக்கும் வணக்கம்தமிழில் ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ இந்த எழுத்துக்களில் வார்த்தைகள் உண்டா?சுரேஷ்குமார்
{Entry: A01__448}
முற்கு வீளை இலதை - முதலியன ஒரோவழிப் பொரு ளுணர்த்தினவேனும், எழுத்து ஆகா ஒலிகளாம். கடலொலி சங்கொலி முதலியன பொருள் உணர்த்தாத, எழுத்தாகா ஒலிகளாம். முற்கு - வீரர் போர்க்கு அழைக்கும் அறைகூவல் கர்ச்சனை; வீளை - சீழ்க்கையிடும் ஒலி; இலதை - அடிநா அடியில் தோன்றுவதோர் ஒலிக்குறிப்பு; ஆடுமாடுகளை ஓட்டும் ஒலி. (தொ.பாயிரம், நச்.)
தன்னையே உணர்த்தும் கடலொலி இடியொலி முதலாயின வும், தன்னொடு மணவினையும் மகிழ்வும் முதலாய பிற பொருளையும் உணர்த்தும் சங்கொலி நகையொலி முதலா யினவும், சொல்லாதல் தன்மையொடு கூடியாயினும் தனித் தாயினும் உறுப்பாதல் தன்மை எய்தாமையின் எழுத்து எனப்படாத ஆயின. (பா. வி. பக். 170) http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/A01.html
{Entry: N14__427}
எழுத்து ஓசையல்லாத ஏனைய ஓசைகளாகிய முற்கும் வீளையும் இலதையும் அநுகரணமும் முதலியன. அவை செய்யுட்கண் வந்தால் அவற்றையும் செய்யுள்நடை அழியா மல் அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் பிழையாமைக் கொண்டு வழங்கப்படும்.
முற்கு - முக்குதல்; வீளை - சீழ்க்கை அடித்தல்;
இலதை - கோழையை வெளிப்படுத்தல் : அநுகரணம் - போலச் செய்வது; அஃதாவது வேறொன்று செய்வது போலச் செய்யும் ஒலிக்குறிப்பு; பறவை கத்துவது போலவும், விலங்கு ஒலிப்பது போலவும் ஒலித்தல் முதலியன.
எ-டு : ‘மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃ
கென்று திரியும் இடைமகனே - சென்று
மறியாட்டை உண்ணாமல் வண்கையால் வல்லே
அறியாயோ அண்ணாக்கு மாறு’
என ‘ உஃகுவஃகு ’ என்று வருதல் போல்வன. இவை இடைக் காடர் பாடிய ஊசிமுறியுள் காணப்படும். ‘ஊசிமுறி’ எழுத்தாணியால் முறையாக எழுதமுடியாத எழுத்தல்லாத ஒலிகள் எழுதப்பட இயலாமல் ஓராற்றான் குறிப்பிடப்பட வேண்டுதலின் பெற்ற பெயர். ஊசி - எழுத்தாணி; முறி - தடுமாறச் செய்தல். (யா. வி. பக். 395, 396)
http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/N14.html
On Ideophones from PiGkalantai NikaNTu.
[****** ]
[****** ]
[****** ]

