விடையின்மேல் வருவானை ...

29 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 28, 2023, 5:42:36 AM10/28/23
to Santhavasantham
https://twitter.com/naa_ganesan/status/1718188289029468427

விடையின்மேல் வருவானை    
       வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானை    
       யாவர்க்கும் அறிவொண்ணா
மடையில்வா ளைகள்பாயும்    
       வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை தரித்தானைச்    
       சாராதார் சார்வென்னே!  - சுந்தரர்
https://youtu.be/sYrtu3V33oY

தெரிவு:
NG

Anand Ramanujam

unread,
Oct 28, 2023, 7:39:38 AM10/28/23
to santhav...@googlegroups.com
அருமையான தேவாரப் பாட்டும் காணொலியும் அளித்தமைக்கு மிக்க நன்றி, திரு. கணேசன்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUcQ6nkdccYhf-OEpZ1Uh5qxiXa56i7dzH0WzDRUVrG5Aw%40mail.gmail.com.

Kaviyogi Vedham

unread,
Oct 28, 2023, 11:19:07 AM10/28/23
to santhav...@googlegroups.com
அடையில்அன் புடையானை..
 என்பது யோகியார்  ஆகிய   எனக்கும்  பொருந்தும்.
 நேற்றிரவு என்  மருமகள்  வார்த்துப்போடப்போடஉண்டேன்..மனம் சலித்துவிட்டது அவட்கு,
 யோகியார்

N. Ganesan

unread,
Oct 29, 2023, 10:02:23 AM10/29/23
to சந்தவசந்தம்
On Saturday, October 28, 2023 at 10:19:07 AM UTC-5 Kaviyogi Vedham wrote:
அடையில்அன் புடையானை..
 என்பது யோகியார்  ஆகிய   எனக்கும்  பொருந்தும்.

சுந்தரர் கோயில் குருக்கள். எல்லாம் அறிந்தவர்.
உங்களை முந்தைய வரியிலும் சொல்லியுள்ளார்: வேதத்தின் பொருளானை
😁

Anand Ramanujam

unread,
Oct 29, 2023, 1:50:44 PM10/29/23
to santhav...@googlegroups.com
நகைச்சுவை சிறக்கும் அழகான உரையாடலுக்குத் திரு. கணேசன் அவர்களுக்கும் கவியோகியாருக்கும் நன்றி!

N. Ganesan

unread,
Oct 29, 2023, 2:24:36 PM10/29/23
to santhav...@googlegroups.com
On Sun, Oct 29, 2023 at 12:50 PM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
நகைச்சுவை சிறக்கும் அழகான உரையாடலுக்குத் திரு. கணேசன் அவர்களுக்கும் கவியோகியாருக்கும் நன்றி!

வேதம் கவிச்சுவை உண்டவர். அடையில் அன்பு கொண்டவர்.

ஔவை அநுபவம் வேறு:

வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக் கேள் – அண்டி
நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள்பசியாலே
சுருக்குண்டேன், சோறுண்டி லேன்

N. Ganesan

unread,
Oct 29, 2023, 2:41:47 PM10/29/23
to santhav...@googlegroups.com

திருவன்பார்த்தான் பனங்காட்டூர் பதிகம்:
(1) தருமபுரம் சுவாமிநாத ஓதுவார்: https://www.youtube.com/watch?v=-n5XDcS7urI
(2) மயிலை சற்குருநாத ஓதுவார்:  https://youtu.be/-wglAvzm6-4

Anand Ramanujam

unread,
Oct 29, 2023, 4:17:05 PM10/29/23
to santhav...@googlegroups.com
அருமை!

ஒளவையின் அனுபவம் காளமேகக் புலவரின் அனுபவம் போல் அல்லவா இருக்கிறது?:

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்றன் சத்திரத்தில் 
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் – குத்தி 
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம் 
இலையிலிட வெள்ளி எழும்.

- காளமேகப் புலவர்

N. Ganesan

unread,
Nov 2, 2025, 6:42:18 AM (7 days ago) Nov 2
to santhav...@googlegroups.com
On Sat, Oct 28, 2023 at 6:39 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
அருமையான தேவாரப் பாட்டும் காணொலியும் அளித்தமைக்கு மிக்க நன்றி, திரு. கணேசன்!


கயிலைக் காட்சி கண்ட அப்பர்

நல்ல ஓவியங்கள் கண்டேன். சைத்ரீகர்களின் கைவண்ணம்!

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம். - ஔவை

Reply all
Reply to author
Forward
0 new messages