திருநாமப் பத்து
(கட்டளைக் கலிவிருத்தம்)
1.அச்சுதன்
இச்சை அற்ற இருதயத்(து) இன்னருள்
நச்சி நிற்க நலந்தரு நம்பனே
மச்ச மாகி மறைகளைக் காத்தவென்
அச்சு தாவென ஆகுலம் தீருமே.
(நச்சி = விரும்பி; மச்சம் = மீன்; ஆகுலம் = துயரம்)
2 .மாதவன்
ஓத வாரியில் ஓர்மலை தாங்கிடும்
கோதி லாத்திறற் கூர்மம தாகினாய்
காத லார்தமிழ்ப் பாட்டில் களிப்புறு
மாத வாவென மாறும் மயக்கமே.
3.நாரணன்
பாரி டத்தினைப் பண்டிடந்(து) ஓங்குயர்
கூரெ யிற்றிடைக் கொண்டவ ராகனே
கார ணாகரி யாய்கவி னார்கழல்
நார ணாவென ஞானம் சிறக்குமே.
(இடந்து = பெயர்த்து எடுத்து; எயிறு = கொம்பு)
On 23 Nov 2025, at 7:12 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/5425A6C3-B4F9-41F0-9F9F-6E3E28DBB0E8%40gmail.com.
--
மிகச் சிறப்பு—தில்லைவேந்தன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hh0p1-1aQQa%3DO2TBG5sXM_-iqU1B0294zJSHrG98JyJzA%40mail.gmail.com.
4.சீதரன் - நரசிம்மன்
தீதில் அன்பன் திறத்தொரு சீயமாய்
ஏத லன்மணி மார்விடந் தாய்,எந்தாய்
தாது லாமல ராள்தலை வா!சய
சீத ராவெனச் சிந்தை தெளியுமே.
(தீதில் அன்பன் = பிரகலாதன்;
அன்பன் திறத்து = அன்பனுக்கு அருள் பாலிப்பதன் பொருட்டு;
சீயம் = சிங்கம்;
ஏதலன் = பகைவன் (இரணியன்);
தாதுலாமலர் = தாது உலவும் மலர்;
சய = ஜெய)
5.வாமனன்
நாம நீர்க்கடல் ஞாலமும் வானமும்
தாமளாவிடத் தாவிய சீர்மையால்
தீமை யாவையும் தீர்த்துல கோம்பிய
வாமனாவென வன்றுயர் பொன்றுமே.
(நாம நீர் = அச்சம் தரும் நீர்; அளாவிட = அளவிட;)
6.கேசவன் - பரசுராமன்
பேசு(ம்) ஆயிரம் பேருடை மாயவா
வாச மாமல ராள்மரு மார்வனே
ஆசி லாப்பர சாயுதத் தாய்,அருட்
கேச வாவெனக் கேடற லாகுமே.
(மரு = கலந்து உறையும்; ஆசிலா = குற்றமற்ற)
7.அனந்தன் - இராமன்
வனைந்த வார்கழல் வாழ்த்தி வணங்குவார்
நினைந்த போதினில் நேர்படு சோதியே
முனைந்த நீள்சிலை யாய்முதல் மூர்த்தியென்
அனந்த னேயென அற்றிடும் அல்லலே.
(வனைந்த = அலங்கரிக்கப்பட்ட; வார்கழல் = நீண்ட கழல் அணிந்த திருவடிகள்; முனைந்த = (இராவணனை) எதிர்த்துப் போரிட்ட; சிலை = வில்; )
On 23 Nov 2025, at 6:28 PM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/7A119D39-31C8-44F3-A72F-05A8E8AA7264%40gmail.com.
8.இருடீகேசன் - பலராமர்
மருட டுத்து மனத்தொளி ஏற்றியோர்
அருள்சொ ரிந்தயர் வாற்றிடும் ஆற்றலாய்
ஒருவல் லேர்ப்படை ஓங்கிடும் தோளுடை
இருடீ கேசவென் றாலிடர் தீருமே.
பதம் பிரித்து:
மருள்த டுத்து மனத்து ஒளி ஏற்றியோர்
அருள் சொரிந்து அயர்வு ஆற்றிடும் ஆற்றலாய்!
ஒரு வல் ஏர்ப் படை ஓங்கிடும் தோளுடை
இருடீகேச! என்றால் இடர் தீருமே.
(ஆற்றிடும் = போக்கிடும்;)
9.கோவிந்தன் - கண்ணன்
தூவெண் மல்லிகை தூவித் துதித்திடப்
பாவ வல்வினை பாற்று பராத்பரா!
தாவில் கீதை தனஞ்சயற்(கு) ஓதிய
கோவிந் தாவெனக் கோளறுந் திண்ணமே.
(தூவெண் = தூய வெண்ணிறம் உடைய; பாற்று = போக்குகின்ற; தாவில் = குற்றமற்ற;)
10.மதுசூதனன்
தீதெ லாங்கெடத் தூயர் செழித்தறச்
சோதி ஓங்க யுகந்தொறும் தோன்றுவாய்
யாதும் ஆகிநின் றாயெனை ஆள்மது
சூதனாவெனத் துன்பலை ஓயுமே.
பதம் பிரித்து:
தீது எலாம் கெடத், தூயர் செழித்து, அறச்
சோதி ஓங்க, யுகம் தொறும் தோன்றுவாய்
யாதும் ஆகி நின்றாய், எனை ஆள் மது
சூதனா எனத் துன்பு அலை ஓயுமே.
திரு.ஸெளந்தர் அவர்கள் கொடுத்த ஊக்கத்தினால், மேலும் இரண்டு திருநாமங்களைப் பாடியுள்ளேன்.
11.பற்பநாபன்
பற்பல் லாண்டருட் பைந்தமிழ் பாடியுன்
அற்பில் ஆழ்ந்தவர்க்(கு) ஓரரண் ஆகினாய்
பொற்பெ லாமிகு பொன்னொளிர் மேனியென்
பற்ப நாபவென் றால்பயம் போகுமே.
(அற்பு = அன்பு; பொற்பு = அழகு)
12.தாமோதரன்
கோதை அன்பொடு சூடிக் கொடுத்ததோர்
போத லங்கல் பொலிந்திடும் மார்வனே
ஆத ராவென தாவியை ஆட்கொள்தா
மோத ராவென முன்வினை மாளுமே.
(போது அலங்கல் = மலர் மாலை;
ஆதரா = அன்புமிக்கவனே;)
On Nov 23, 2025, at 9:01 PM, Rajagopalan Soundararajan <rsou...@gmail.com> wrote:
நற்பணி. ஆழ்வார்கள் பன்னிரு நாமம் அமையும்படி பாடியுள்ளனர். அதையொற்றி அடுத்த கைங்கர்யமாய் பன்னிருநாமப் பாடல்கள் எழுதலாமே!ஸௌந்தர்