மதுரை மீனாட்சி வெண்பா!

8 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 8, 2025, 10:45:29 AMSep 8
to santhav...@googlegroups.com

.     மதுரை மீனாட்சி வெண்பா


கரிய விழியில் கருணை இருக்கும்,

உரிய வழியை உரைக்கும்,  - திரியும்

மனம்நிலைக்கும், நன்மை வளர்க்கும்,உலகில்

தினம்திறக்கும் ஞானத் தெளிவு(1)



ஞானத் தெளிவுவரும்,நல்லற வாழ்வுதரும்,

வானும்நம் கையின்மேல்  வந்தமரும், - மீனை

விழியுடைய மங்கைவரம் மேவ, விதியும்

வழிவிடும் இங்கு மகிழ்ந்து(2)



இங்கு மகிழ்தல் இயல்பாம், கருங்கயல்கள் 

தங்கும் விழியாளின் தாள்சேர்ந்தால், - எங்கும்

முழவொலிக்கும்,சங்கு முழங்கும், மதுரை

விழவிதுகாண் என்று விதந்து(3)


                    

தந்தவள், இன்று தருபவள்,நாளைவந்து

முந்துவதும் அன்னையவள் மொய்கருணை,- சிந்துமெழில்

மாட மலிகூடல் மாநகர் ஆள்பவள்,

வாட விடுவளோ மற்று?(4)



மற்றொன்று சூழினும் வந்துவிதி முந்துமென்பார்,

பற்றியவள் பாதம் பணிந்துவிட்டேன், - உற்றவினை

செற்றுவிடும்,தீமையற்றுத் தீய்ந்துவிடும்,இவ்வுலகில் 

எற்றுக்கும் அஞ்சேன் இனி! (5)


                             தில்லைவேந்தன்.

Siva Siva

unread,
Sep 8, 2025, 10:50:08 AMSep 8
to santhav...@googlegroups.com

பற்றியவள் பாதம் பணிந்துவிட்டேன், - உற்றவினை

செற்றுவிடும்,தீமையற்றுத் தீய்ந்துவிடும்,இவ்வுலகில் 

எற்றுக்கும் அஞ்சேன் இனி! (5) /

Impressive level of devotion! 
Vazhga!

V., Subramanian

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 8, 2025, 10:52:38 AMSep 8
to santhav...@googlegroups.com
Thanks Sri Siva siva 

    —தில்லைவேந்தன்.

Arasi Palaniappan

unread,
Sep 8, 2025, 11:20:03 AMSep 8
to சந்தவசந்தம்
சிறப்பான வெண்பா அந்தாதிப் பஞ்சகம்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhJ-21gEMHxOEw35DOqhsPnUYb1Nsq5pAtNqZXZXW2-ew%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 8, 2025, 11:21:32 AMSep 8
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு பழனியப்பன் 

           —தில்லைவேந்தன்

Ram Ramakrishnan

unread,
Sep 8, 2025, 10:35:39 PMSep 8
to santhav...@googlegroups.com
மிக அருமையான வெண்பாக்கள், வேந்தரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 8, 2025, 10:59:03 PMSep 8
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

    —தில்லைவேந்தன் 

GOPAL Vis

unread,
Sep 9, 2025, 3:26:33 AMSep 9
to santhav...@googlegroups.com
மிக அருமை.
கோபால்.

On Mon, Sep 8, 2025 at 8:15 PM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

.     மதுரை மீனாட்சி வெண்பா


கரிய விழியில் கருணை இருக்கும்,

உரிய வழியை உரைக்கும்,  - திரியும்

மனம்நிலைக்கும், நன்மை வளர்க்கும்,உலகில்

தினம்திறக்கும் ஞானத் தெளிவு(1)

. . . . . 

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 9, 2025, 5:31:04 AMSep 9
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு கோபால்

        —தில்லைவேந்தன்

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 9, 2025, 6:49:08 AMSep 9
to santhav...@googlegroups.com
நேற்று(08/09/2025), அடியேன் இட்டிருந்த ஐந்து வெண்பாக்களைப் பாராட்டிய பெருமக்களுக்கு நன்றி.

அந்தப் பாராட்டு அளித்த ஊக்கத்தால் மேலும் ஐந்து வெண்பாக்கள் எழுதிப் பதிகத்தை இன்று நிறைவு செய்தேன் .
அதனை (முழு வடிவத்தில்) இங்குப்  பதிவு செய்கின்றேன்:


            .       மதுரை மீனாட்சி வெண்பா!


கரிய விழியில் கருணை இருக்கும்
உரிய வழியை உரைக்கும்  -திரியும்
மனம்நிலைக்கும் நன்மை வளர்க்கும் உலகில்
தினம்திறக்கும் ஞானத் தெளிவு(1)



ஞானத் தெளிவுவரும் நல்லற வாழ்வுதரும்
வானும்நம் கையின்மேல்  வந்தமரும் - மீனை
விழியுடைய மங்கைவரம் மேவ விதியும்
வழிவிடும் இங்கு மகிழ்ந்து(2)



இங்கு மகிழ்தல் இயல்பாம் கருங்கயல்கள் 
தங்கும் விழியாளின்  தாள்சேர்ந்தால் - எங்கும்
முழவொலிக்கும் சங்கு முழங்கும் மதுரை
விழவிதுகாண் என்று விதந்து(3)

           
         
தந்தவள் இன்று தருபவள் நாளைவந்து
முந்துவதும் அன்னையவள் மொய்கருணை -சிந்துமெழில்
மாட மலிகூடல் மாநகர் ஆள்பவள் 
வாட விடுவளோ மற்று?(4)



மற்றொன்று சூழினும்  வந்துவிதி முந்துமென்பார்
பற்றியவள் பாதம் பணிந்துவிட்டேன் - உற்றவினை
செற்றுவிடும் தீமையற்றுத் தீய்ந்துவிடும் இவ்வுலகில் 
எற்றுக்கும் அஞ்சேன் இனி (5)



அஞ்சேன் இனியெவர்க்கும், அன்னையவள்,ஆழியெழு
நஞ்சேயுண் கார்மிடற்றான் நாயகி, - நெஞ்சே
புகுந்தவள், நானுன் புணையென்(று) உரைத்தாள்,
சுகந்தரும்  என்றுமச்  சொல்(6)



சொல்லாய், பொருளாய், சுவையாய் இவற்றினை
எல்லாம் கடந்த இயல்பினளாய்,- கல்லாய்
இருந்த மனத்தை எழிற்சிற்பம் என்று
திருந்தச் சமைத்தாள் சிறந்து(7)



சிறந்த வரம்கேட்டுச்  சிக்கெனத்தாள் பற்ற
அறுந்தது மீள்பிறவி அற்று - பிறந்ததோர்
ஒப்பில்லாப் பேரின்பம் ஓருவமை தேடிநின்றேன்,
அப்பப்பா, ஆரமுதோ அஃது?(8)



ஆரமுதாம் அஃதென்பேன், அன்புமழை என்றுரைப்பேன்,
காரமுதம் கண்ணின் கடைப்பார்வை, - சீரமுதச்
செந்தமிழில் தித்திக்கும் செய்யுளில்நான் செப்புவேன்
அந்தமில் அன்னை அருள்(9)



அன்னை அருளே அனைத்தும், ஒளிவீசும்
மின்னை நிகர்த்தவம் மெல்லியலாள் - ‘என்னை’ 
உணர்த்த, உளத்தில் உருவாகும், அந்தக் 
கணத்தில் கவிதைக் கரு!(10)


                                    – தில்லைவேந்தன்.

.......



 
















Arasi Palaniappan

unread,
Sep 9, 2025, 6:55:50 AMSep 9
to சந்தவசந்தம்
பதிகச் சிறப்போ அதிகம்! அதிகம்!
மதிமுக மீனாள் மகிழ்ந்தே அருள்வளே!



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 9, 2025, 7:02:15 AMSep 9
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி தம்பி திரு பழனியப்பன் 

                       —தில்லைவேந்தன்

Ram Ramakrishnan

unread,
Sep 9, 2025, 8:40:40 AMSep 9
to santhav...@googlegroups.com
அருமையான பதிகமமைத்தீர், வேந்தரே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 9, 2025, at 07:02, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 9, 2025, 8:48:34 AMSep 9
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்
 
   —தில்லைவேந்தன்.

Siva Siva

unread,
Sep 9, 2025, 9:10:53 AMSep 9
to santhav...@googlegroups.com
அந்தாதி நன்று.

வி. சுப்பிரமணியன்

On Tue, Sep 9, 2025 at 6:49 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
நேற்று(08/09/2025), அடியேன் இட்டிருந்த ஐந்து வெண்பாக்களைப் பாராட்டிய பெருமக்களுக்கு நன்றி.

அந்தப் பாராட்டு அளித்த ஊக்கத்தால் மேலும் ஐந்து வெண்பாக்கள் எழுதிப் பதிகத்தை இன்று நிறைவு செய்தேன் .
அதனை (முழு வடிவத்தில்) இங்குப்  பதிவு செய்கின்றேன்:


            .       மதுரை மீனாட்சி வெண்பா!


கரிய விழியில் கருணை இருக்கும்
உரிய வழியை உரைக்கும்  -திரியும்
மனம்நிலைக்கும் நன்மை வளர்க்கும் உலகில்
தினம்திறக்கும் ஞானத் தெளிவு(1)
....

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 9, 2025, 9:29:17 AMSep 9
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு சிவசிவா 

       —தில்லைவேந்தன்
Reply all
Reply to author
Forward
0 new messages