எத்தனை ஊர்வலங்கள்!
எல்லை யிலாக்கதிரை- தன்னுள்
ஏந்தி அடைகாக்கும்
புல்லின் பனிச்சுமைக்குள்-ஒரு
பூரணம் காணுகிறேன்
நாளை வரவேற்கும்- கடல்
நாயகி ஊஞ்சலிலே
கோளை இயக்குபவன் - ஒயில்
கூத்து நடத்துகிறான்
குன்று களுக்கிடையே- நெருப்புக்
கோளம் எரிகிறது
சென்று குறைகின்ற -இருட்டு
செம்மை பெறுகிறது
ஒற்றைப் பனைமரத்தின் -விசிறி
ஓலை மடிப்பிடையே
சற்றே ஒழுகுமொளி - தரையில்
தங்கம் இழைக்கிறது
கூட்டுப் பறவையொன்று - தனது
கோணல் சிறகிடையே
சூட்டைப் பெறுவதற்கு - சற்றே
சோம்பல் முறிக்கிறது
துள்ளி விழும்மீனோ - ஒளிச்
சோதிச் சுழற்சியிலே
வெள்ளையொடு வண்ணம்- மினுக்க
மேலே குதிக்கிறது
கட்டியம் கூறுகிற - உரிமை
காத்திடு மாப்போலே
பட்டுத் தலைக்கொண்டைச் -சேவல்
பண்ணை இசைக்கிறது
இருட்டை ஓட்டுபவன் - தன்னை
இருட்டெ னக் கருதி
விரட்டக் கூடுமென்றே-காகம்
வேண்டிக் கரைகிறது
மோட்டு வெளிவானம் - எங்கள்
முற்றத்தி லேயிறங்கி
வீட்டுக்குள்ளே விண்ணைக்-கொணர்ந்தே
விந்தை புரிகிறது.
வாய்க்கால் பனிப்புல்லில்- கால்கள்
வைத்து நடக்கையிலே
சாய்க்கும் கதிருரசி - இசையாய்ச்
சந்தம் கொடுக்கிறது
கருப்பன் கோயில்மணி - வீசும்
காற்றில் அசைகிறது
நெருப்பு வட்டமெனக் - கதிரும்
நேரே எழுகிறது
மாலை வரைகிறது - அங்கோர்
மாயம் நிகழ்கிறது
மேலைத் திரைவானில் - வண்ண
வேள்வி நடக்கிறது
வண்ணங்கள் இத்தனையா? - இவையும்
வானத்தின் குத்தகையா?
கண்ணுக்குள் காவியமா? - இதுதான்
காலத்தின் ஓவியமா?
மேக விளக்குகளை - யாரே
விண்ணிலே ஏற்றுகிறார்?
ஆகம் புதுப்புதிதாய் - ஒளி
அள்ளியே ஊற்றுகிறார்?
தங்கச் சரிகைகளும் - எந்தத்
தறியில் நெய்தனவோ?
தொங்கும் கிழிசலுக்கும்- ஓரம்
சொர்ணத்தில் குஞ்சங்களோ?
கண்ணை விழித்தபடி - எழில்
காட்சி ரசித்தபடி
எண்ணக் கனவுகளில் - அட
எத்தனை ஊர்வலங்கள்?
வீழ்ந்து மறையுமுன்னே - காட்டும்
விந்தை விளையாட்டின்
ஆழ்ந்த கருத்ததனை- எண்ண
யாவுமே இன்பமயம்
எத்தனை ஊர்வலங்கள்!
...
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDgJkEpaHqLsSACVuSbV%3DbLrMPBtDRDE57bhRQn5ZhF5w%40mail.gmail.com.
ஆஹா! ஆஹா!!
எத்தனை ஊர்வலங்கள்!
எல்லை யிலாக்கதிரை- தன்னுள்
ஏந்தி அடைகாக்கும்
புல்லின் பனிச்சுமைக்குள்-ஒரு
பூரணம் காணுகிறேன்
நாளை வரவேற்கும்- கடல்
எத்தனை ஊர்வலங்கள்!
எல்லை யிலாக்கதிரை- தன்னுள்
ஏந்தி அடைகாக்கும்
புல்லின் பனிச்சுமைக்குள்-ஒரு
பூரணம் காணுகிறேன்
.
--
அற்புதக் கவிதை!விந்தை விளையாட்டில் - தனதுவிழியைப் பறிகொடுத்துசொந்தக் கவிதைகளால் - அதைச்சொலிக்கப் படமெடுத்தான்!
....................
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtsjrFM4Nn6ayeiGSPcWH2L4S9RP7LiJwVUxTW3Si2M1Sg%40mail.gmail.com.
இலந்தை நடத்திய ஊர்வலங்கள்!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNPQxgGrWa1OFxCSPcStvWyUWGrJt5uJLsG3bddNG_H9Gg%40mail.gmail.com.
எல்லாம் இன்பமயம் - இதை
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNN48M04utUj7zjrw2zLzx2jguLdDLE-G7gRq1BJ8AHngg%40mail.gmail.com.