ஏடுகள் சொல்வதுண்டோ?

3 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
1:04 PM (5 hours ago) 1:04 PM
to santhavasantham

ஏடுகள் சொல்வதுண்டோ?

 

ஏடுகள் சொல்வதுண்டோ -மனத்து     

எண்ணங்கள் யாவையும் தாளின் எழுத்துகள்

என்றுமே வெல்வதுண்டோ?

தேடுதல் ஓய்வதுண்டோ - அந்தத்

தேடும் தேடல்களில் சிக்கிடும் யாவையும்

சிந்தனை வேய்வதுண்டோ?

 

ஈரக் கனல் பந்தெகிறிக் குதிப்பதை

            எல்லோரும் பார்ப்பதில்லை -எழில்

            ஏடுகள் சேர்ப்பதில்லை

சாரச் சாரச்  சாரச் சாரும் நினைவுகள்

            தாளிலே ஆர்ப்பதில்லை - வியர்வை

            தாகங்கள் தீர்ப்பதில்லை

 

நீட்டும் ஒளிக்கரம் காட்டின் இருட்குழல்

            நீவி இழைபிரிக்கும்- அங்கோர்

            நித்திலப் பூசிரிக்கும்

காட்டு மலரெழில் கங்குல் கசிவுகள்

            கண்விழித்தே முடிக்கும் - நாட்டில்

            காகிதப்பூ நடிக்கும்

 

சின்னஞ் சிறுபிள்ளை கன்னக் குழிவினில்

            தேன்மலர் பூத்திருக்கும் - அதில்

            தெய்வமே காத்திருக்கும்

மின்னலைச் சொல்லில் அடக்க முயல்கையில்

             வேடிக்கை பார்த்திருக்கும் - சொல்

            மெல்லவே நீர்த்திருக்கும்

 

வார்த்தை மறைகிற நேர்த்தி அவள்விழி

            வாகனம் தான்சுமக்கும் - நெருக்கம்

            வானை வரவழைக்கும்

பார்த்துப் பார்த்துப் பார்த்துப் பார்த்தவை யாவுமே

            பாவில் வரத்துடிக்கும் - ஆனால்

பாதி வழிகுடிக்கும்

 

நாட்டில் கொடுமைகள் ஒன்றிரண்டா அந்தோ

            நாற்றம் அடிக்கிறதே - மனம்

            நைந்து துடிக்கிறதே

ஏட்டுக்குள் பூச்சுகள் எத்தனை எத்தனை

            எல்லாம் குறைகிறதே - உண்மை

            ஏங்கி மறைகிறதே                       ஏடுகள் சொல்வதுண்டோ

 

ஏடுகள் ஓர்பாதி  ஊமைகளாம்அவை

            எல்லாம் கொடுப்பதில்லை- முற்றும்

            ஏற்று நடப்பதில்லை

ஏடு கொடுத்திடும் பாதியிலும் மனம்

            எல்லாம் எடுப்பதில்லைஎடுத்த

            எல்லாம் பிடிப்பதில்லை

 

கிட்டிய கொஞ்சமும் நெஞ்சம் அசைக்குமேல்

            கேடு கிடையாது - அதன்

கீர்த்தி முடிவேது?

தொட்ட சுகங்கூடத் தோளை உயர்த்துமே

தோயதல் அதன் எல்லை -என்றும்

தோல்வி அதில் இல்லை        ஏடுகள் சொல்வதுண்டோ?

Ram Ramakrishnan

unread,
1:15 PM (5 hours ago) 1:15 PM
to santhav...@googlegroups.com
ஏடுகள் சொல்லாதவற்றை விவரித்த விதம் மிக அருமை, தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDfwFvNOqwW1Vo1s7NZMFKjPLHPWeTdgxF60uNvoSBA3A%40mail.gmail.com.

Swaminathan Sankaran

unread,
1:18 PM (4 hours ago) 1:18 PM
to santhav...@googlegroups.com
"சாரச் சாரச்  சாரச் சாரும் நினைவுகள்

            தாளிலே ஆர்ப்பதில்லை - வியர்வை

            தாகங்கள் தீர்ப்பதில்லை"

 மிக,மிக, மிக அருமை!


Reminds one of Shakespeare's

'Tomorrow, Tomorrow and Tomorrow'

சங்கரன் 



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDfwFvNOqwW1Vo1s7NZMFKjPLHPWeTdgxF60uNvoSBA3A%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

Subbaier Ramasami

unread,
3:21 PM (2 hours ago) 3:21 PM
to santhav...@googlegroups.com
நன்றி

On Sat, Dec 27, 2025 at 12:18 PM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
"சாரச் சாரச்  சாரச் சாரும் நினைவுகள்

Subbaier Ramasami

unread,
3:21 PM (2 hours ago) 3:21 PM
to santhav...@googlegroups.com
நன்றி

On Sat, Dec 27, 2025 at 12:15 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
ஏடுகள் சொல்லாதவற்றை விவரித்த விதம் மிக அருமை, தலைவரே.

Arasi Palaniappan

unread,
4:52 PM (1 hour ago) 4:52 PM
to சந்தவசந்தம்
அற்புதம்!

என் முயற்சி

ஏடுகள் யாவையும் எண்ணச் சிறகினை 
      என்றும் விரிப்பதில்லை!
பாடுகள் பட்டபின் பாடிடும் பாடலின்
      பான்மை சிறப்பதுண்டு!
ஓடும் மனத்திடை உண்மையின் முத்திரை
       ஓடி ஒளிவதில்லை!
ஓடு மறைப்பினும் உண்மையும் பொய்யதன்
          உள்ளே ஒளிர்வதுண்டு!

ஆடத் தொடங்கையில் ஆண்டவன் சிந்தனை
       ஆங்கு வருவதில்லை! - அந்த
 ஆடவன் சிந்தனை ஆன்மா தொடுகையில்
       ஆட்டம் முடிந்துவிடும்!
வேடுவன் விலங்கின்மேல் வேட்டை தொடங்கையில்
       வேதனை நேர்வதில்லை - மனம்
நாடல் மறைந்தபின் 
வேட்டைப் புலன்களும்
நாணம் உறுவதுண்டு!



வெற்றியும் தோல்வியும் ஒன்றென நேர்ந்திடில்
     வேதனை என்றுமில்லை!
கற்றவர் தற்குறி காண்கிற காட்சியில்
       கச்சித பேதமுண்டாம்!
பெற்றவர் உற்றவர், மற்றவர் பொலென்றும்
        பேதங்கள் காண்பதில்லை!
நற்றவம் கொள்மனம் நாட்டினில் என்றுமே
      நாணிக் குனிவதில்லை!

உளறிக் கொட்டிய    
அரசி பழனியப்பன்   
        
        
          
             
      

--
Reply all
Reply to author
Forward
0 new messages