A DOUBT

63 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Dec 18, 2021, 4:12:38 PM12/18/21
to santhavasantham
வாழிய செந்தமிழ் பாடலில் ஒரு வரி குறைகிறதோ என்று ஒரு ஐயம்.

பாடல்

.வாழிய செந்தமிழ்
ஆசிரியப்பா
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!

இப்பாடல் ஆசிரியப்பா என எல்லாப்புத்தகங்களிலும் கொடுத்துள்ளார்கள். எனக்கென்னவோ இது எண்சீர்க் கண்ணிகளாகத் தோன்றுகிறது.

அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக   என்ற அடியைத்தொடர்ந்து அறம் என்பதற்கு எதுகையாகன சொல்லோடு தொடங்கும் இன்னொரு அடி இருக்க வேண்டும்.

நீங்கள் பார்த்த அளவில் எந்தப்புத்தகத்திலாவது அப்ப்படியோர் அடியிருக்கிறதா?

இலந்தை
18-12-2021

Pas Pasupathy

unread,
Dec 18, 2021, 6:36:28 PM12/18/21
to Santhavasantham
இல்லை.

On Sat, 18 Dec 2021 at 16:12, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

நீங்கள் பார்த்த அளவில் எந்தப்புத்தகத்திலாவது அப்ப்படியோர் அடியிருக்கிறதா?

இலந்தை
18-12-2021

Govindaraju Arunachalam

unread,
Dec 18, 2021, 7:23:19 PM12/18/21
to சந்தவசந்தம்

1987இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்பித்துள்ள பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பில் ‘புது வருஷம்’ என்னும் தலைப்பின் கீழ் இப் பாடல் அமைந்துள்ளது.(ப.50)

 1907இல் இப் பாடலை எழுதி இந்தியா 20.4.1907 நாளிட்ட இதழில் வெளிவந்த குறிப்பும் காணப்படுகிறது. இதிலும் விடுபட்ட அடி ஏதும் காணப்படவில்லை.

   -இனியன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAH9BvAKNv0PQ2hZZis9wdvXtdZbfw-%2Bgf%3DGu7JoNwVXV45ozrA%40mail.gmail.com.

--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

N. Ganesan

unread,
Dec 18, 2021, 9:12:32 PM12/18/21
to Santhavasantham
அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக   என்ற அடியைத்தொடர்ந்து அறம் என்பதற்கு எதுகையாகன சொல்லோடு தொடங்கும் இன்னொரு அடி இருக்க வேண்டும்.

சீனி விசுவநாதன் தொகுப்புகளிலும் இல்லையா?
ய. மணிகண்டன், கிருங்கை சேதுபதி இருவரையும் கேட்கிறேன்.

நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 18, 2021, 9:37:37 PM12/18/21
to Santhavasantham
On Sat, Dec 18, 2021 at 8:11 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக   என்ற அடியைத்தொடர்ந்து அறம் என்பதற்கு எதுகையாகன சொல்லோடு தொடங்கும் இன்னொரு அடி இருக்க வேண்டும்.

அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
[திறம்சிறந் திடுக! வறம்முடி வுறுக!]

பொருந்துமா?
வறம் - இந்தியாவின் வறுமை போகப் பாடுபட்டவர் பாரதி.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 18, 2021, 9:50:58 PM12/18/21
to santhav...@googlegroups.com
அடியெதுகை வந்திருப்பதால் இன்னும் ஓர் அடி தேவை இல்லையே.

சிவசூரி.

On Sun, Dec 19, 2021 at 2:42 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
வாழிய செந்தமிழ் பாடலில் ஒரு வரி குறைகிறதோ என்று ஒரு ஐயம்.

பாடல்

.

Virus-free. www.avast.com

Subbaier Ramasami

unread,
Dec 18, 2021, 10:39:31 PM12/18/21
to santhavasantham
அடியெதுகை வந்திருந்தாலும் இன்னோர் அடி நிச்சயம் தேவை. இவை எண்சீர்க் கண்ணிகள்.
இது ஆசிரியப்பாவாக இருந்தால்  இறுதிச்சீர் ஏகாரம், ஓகாராம், என்   என ஏதாவதொன்றில் முடிந்திருக்கவேண்டும். 
அப்படியிருந்தால் இதை ஆசிரியப்பாவாக ஏற்றுக்கொள்ள முடியும் .
அறம் மலிந்திடுக 

மறம் மடிவுறுக
என இரண்டடிகளாக்கி இணைக்குறளாகச் சொல்லமுடியும்.
ஆனால் இது ஆசிரியப்பாவே இல்லை. இதை எடுத்தெழுதியவர் ஒரு வரியை விட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது
திறம் நிறைந்திடுக செயல்  சிறந்திடுக    என்பது போல இருக்கலாம்.

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 18, 2021, 11:41:12 PM12/18/21
to santhav...@googlegroups.com
"கால வரிசையில் பாரதி பாடல்கள்" நூலில் பக்கம் 161-ல் 
" இப்பாடலை ஸ்வதேச கீதங்கள் ( 1908) தொகுதியுள் சேர்த்தபோது  பாடலை ' ஆசிரியப்பா' என யாப்பியல் வகையில் பாரதி குறித்தார்
என்று சீனி விசுவநாதன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்தியாவில் 1907 -ல் வெளியிட்டபோது இப்படி வெளியிட்டுள்ளதைப் பிரசுரித்துள்ளார்.

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
   வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
   நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
   ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
   நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!

வந்தே மாதரம்!வந்தே மாதரம்!

சிவசூரி

On Sun, Dec 19, 2021 at 9:09 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
அடியெதுகை வந்திருந்தாலும் இன்னோர் அடி நிச்சயம் தேவை. இவை எண்சீர்க் கண்ணிகள்.
இது ஆசிரியப்பாவாக இருந்தால்  இறுதிச்சீர் ஏகாரம், ஓகாராம், என்   என ஏதாவதொன்றில் முடிந்திருக்கவேண்டும். 
அப்படியிருந்தால் இதை ஆசிரியப்பாவாக ஏற்றுக்கொள்ள முடியும் .
அறம் மலிந்திடுக 
மறம் மடிவுறுக

Virus-free. www.avast.com

N. Ganesan

unread,
Dec 19, 2021, 8:43:25 AM12/19/21
to Santhavasantham
On Sat, Dec 18, 2021 at 10:41 PM Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
"கால வரிசையில் பாரதி பாடல்கள்" நூலில் பக்கம் 161-ல் 
" இப்பாடலை ஸ்வதேச கீதங்கள் ( 1908) தொகுதியுள் சேர்த்தபோது  பாடலை ' ஆசிரியப்பா' என யாப்பியல் வகையில் பாரதி குறித்தார்
என்று சீனி விசுவநாதன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்தியாவில் 1907 -ல் வெளியிட்டபோது இப்படி வெளியிட்டுள்ளதைப் பிரசுரித்துள்ளார்.

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
   வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
   நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
   ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
   நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!

வந்தே மாதரம்!வந்தே மாதரம்!

இலந்தை சொல்வதன்வழி பார்த்தால்:

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!

        வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
       நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
      [ ...    ....! ... ...! ]
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
    சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!

           நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
               வந்தே மாதரம்!வந்தே மாதரம்!
(இம்முறையில் எதுகை இன்னும் மிகுகிறது அல்லவா?)

சிவசூரி

On Sun, Dec 19, 2021 at 9:09 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
அடியெதுகை வந்திருந்தாலும் இன்னோர் அடி நிச்சயம் தேவை. இவை எண்சீர்க் கண்ணிகள்.
இது ஆசிரியப்பாவாக இருந்தால்  இறுதிச்சீர் ஏகாரம், ஓகாராம், என்   என ஏதாவதொன்றில் முடிந்திருக்கவேண்டும். 
அப்படியிருந்தால் இதை ஆசிரியப்பாவாக ஏற்றுக்கொள்ள முடியும் .
அறம் மலிந்திடுக 
மறம் மடிவுறுக

Virus-free. www.avast.com

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 19, 2021, 9:14:46 AM12/19/21
to santhav...@googlegroups.com
கணேசன் நீங்கள் இந்த இழையின் போக்கையும் நோக்கையுமே மாற்றிவிடுகிறீர்கள், 

இலந்தையார் ஏதேனும் அடி விடுபட்டுவிட்டதோ என்றும் அதன் யாப்பைப் பற்றியும் எழுதினார். 

சீனி விசுவநாதன் நூலில் இருந்து நான் கொடுத்த குறிப்பில் இருந்து பாரதியே இந்தப் பாடலை ஆசிரியப்பா என்று குறிப்பிட்டுள்ளார் என்பது தெரிகிறது. அது அவ்வளவே.

சிவசூரி.

N. Ganesan

unread,
Dec 19, 2021, 9:17:17 AM12/19/21
to Santhavasantham

On Sun, Dec 19, 2021 at 8:14 AM Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
>
> கணேசன் நீங்கள் இந்த இழையின் போக்கையும் நோக்கையுமே மாற்றிவிடுகிறீர்கள்,  

மன்னிக்கவும். நன்றி. நா. கணேசன்
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 19, 2021, 9:39:52 PM12/19/21
to Santhavasantham
On Sat, Dec 18, 2021 at 3:12 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
வாழிய செந்தமிழ் பாடலில் ஒரு வரி குறைகிறதோ என்று ஒரு ஐயம்.

பாடல்

.வாழிய செந்தமிழ்
ஆசிரியப்பா
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!

இப்பாடல் ஆசிரியப்பா என எல்லாப்புத்தகங்களிலும் கொடுத்துள்ளார்கள். எனக்கென்னவோ இது எண்சீர்க் கண்ணிகளாகத் தோன்றுகிறது.

அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக   என்ற அடியைத்தொடர்ந்து அறம் என்பதற்கு எதுகையான சொல்லோடு தொடங்கும் இன்னொரு அடி இருக்க வேண்டும்.

நீங்கள் பார்த்த அளவில் எந்தப்புத்தகத்திலாவது அப்படியோர் அடியிருக்கிறதா?

1907-ம் வருடம், தமிழ் புதுவருஷப் பிறப்புப் பாடலாக இயற்றியுள்ளார் பாரதி.
சித்திரைத் திங்களில் புதுவருஷ பிறப்புக் கொண்டாடும் இதழாக ‘இந்தியா’ மலர்ந்துள்ளது.
அவர் போட்டுள்ள கார்ட்டூனும் அருமை. ராஜா ரவிவர்மாவின் சரசுவதியை
பாரத மாதா ஆக்கியுள்ளார். பீடத்தில் இந்தியாவின் வரைபடம். முஸ்லீம் குனிந்து
பாரத்மாதா அடியிணைத் தாள்களை வணங்க, பார்ஸி ஒருவர் அருகில் நிற்கிறார்.
பின்னால் ஹிந்துக்கள். பாரதியார் தமிழர்க்குச் சொன்ன அறிவுரை பொருள் பொதிந்தது.
The New Year
புது வருஷம்

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்

     வாழிய பாரத மணித்திருநாடு

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க

     நன்மை வந்தெய்துக, தீதெலாம் நலிக.

அறம் வளர்ந்திடுக, மறமடிவுறுக

     ஆரிய நாட்டினர் ஆண்மையொ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக

     நந்தேயத்தினர் நாடோறும் உயர்க.
 வந்தே மாதரம் வந்தே மாதரம்.

சென்ற வாரம் சனிக்கிழமை யன்று தமிழரகளின் புது வருஷப் பிறப்பு நாள். ஆதலால் அன்ற நாம் விடுமுறை பெற்றுக் கொண்டோம்.

புது வருஷம் நமக்கு ஸர்வ மங்களமாகவே பிறந்திருக்கின்றது. இது முதலேனம் நாம் இடையாறாது விடாமுயற்சியுடன் ஸ்வராஜ்யம் கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் முயற்சி புரிய வேண்டுமென்பதாக நம்மவர்களிலே பலர் புதுவருஷப் பிறப்பன்று பிரதிக்கினை செய்து கொண்டார்கள்.

ஸ்வராஜ்யம் பெறும் வழிகளாகிய ஸ்வதேசியக் கல்வி, அன்னிய வஸ்து பஹிஷ்காரம், ஸர்க்கார் உத்தியோக வெறுப்பு, பஞ்சாயத்து தீர்ப்புகள் முதலிய ஏற்பாடுகள் நமது நாட்டிலே பரவுவதற்குரிய பிரயத்தனங்கள் எவ்விதத்திலேனும் செய்ய வேண்டுமென நம்மவர்கள் நிச்சயம் செயது கொண்டிருக்கிறார்கள்.

மேலும் நமக்கு அனேக நற்சகுனங்களும் தோன்றியிருக்கின்றன. தூத்துக்குடிக்குச் சுதேசீயக் கப்பல்கள் வந்துவிட்டன. 'பஞ்சாபி' பத்திரிகைக்காரரின் தண்டனை உறுதியாய் விட்டது. அதாவது தேசாபிமானம் என்று வாயால் பேசிக் கொண்டிருந்த நாட்கள் போய், கஷ்டத்தைப் பாராட்டாமல் தேசத்திற்குழைக்கும் நாட்கள் வந்து விட்டன.

தூக்கத்திலே விருப்பம் கொண்ட சென்னை மாகாணத்தின் முகத்திலே தேசாபிமான ஜலத்தை வாரிக்கொட்டி எழுப்பி விடும் பொருட்டாகப் பாபு விபன சந்திரபாலர் வந்துவிட்டார். இன்னும் பல நற்குறிகளும் காணப்படுகின்றன. இவை யனைத்தையும் பாழாக்கி விடாமல் காலத்தின் சின்னங்களை நமக்கனுகூலமான வழியிலே பயன்படுத்திக் கொள்வது நம்மவர்களின் கடமையாகும்.

தமிழர்க்குப் பாரதமாதா உருவாக்கம்: http://nganesan.blogspot.com/2009/10/popular-prints-bhaaratamata.html

MS sings, "Vaazhiya Centhamizh, Vaazhiya Narramizhar!"  https://youtu.be/rrciRLT_2Bs
---------

இப்பொழுதும், தமிழர்கள் இடையே புதுவருஷப் பிறப்பு பற்றிப் பேச்சு நடக்கிறது.
எதிர்க்கட்சிகள், பாரதியார் அறிவித்த புதுவருஷ நாள் தொடரவேண்டும் என்கின்றன.

தமிழர்கள் சென்ற நாடுகளில் எல்லாம் - ஈழம், மலாயா, இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து ...- 
புதுவருஷம் சித்திரை 1 தான். சங்க காலத்து இலக்கியங்களிலே வந்துவிடுகிறது.

சித்திரைக் கனி என கனி நோட்டம் காணல் என கேரளத்தில் இதே புதுவருஷம் சுழற்சிமுறையில்.
ஆனால், ஆவணி 1 கொல்லம் ஆண்டு லீனியர் வருஷம். அதே போல, தமிழ் நாட்டிலும்
நடைமுறையில் உள்ளது. திருவள்ளுவர் ஆண்டு தைப் பொங்கலில். இது லீனியர் வருஷம்.
சித்திரை 1 - பாரதி கொண்டாடிய புது வருஷம் - தமிழர் வீடுகள், கோவில்களில் ....

இந்த ஆண்டு ஏதாவது மாற்றம் வருமா எனத் தமிழர்கள் அவதானிக்கிறார்கள்.
எதிர்ப்பு இருப்பதால், அரசாங்கம் சித்திரை 1 புதுவருஷத்தைத் தொடாது என்றும் கேள்வி.
பொங்கல் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

நா. கணேசன்

இலந்தை
18-12-2021

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 1, 2022, 7:26:21 PM1/1/22
to vallamai, housto...@googlegroups.com
DMK has settled on Tamil New year day as Chithirai 1. That is great news, giving honor to old tradition. Same thing should happen for Tamil Nadu Day as November 1, initiated by stalwarts like Chilambu Chelvar MaPoSi, ...

தை முதல் தேதி தமிழர் திருநாள்: பொங்கல் பரிசு பைகளில் திடீர் மாற்றம்
https://www.updatenews360.com/tamilnadu/sudden-change-of-pongal-gift-bag28122021/
https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-changed-pongal-gift-bags-for-tamil-new-year-controversy-389559/
https://www.dinamalar.com/news_detail.asp?id=2924144

On Sun, Dec 19, 2021 at 8:42 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! - 1907 சித்திரை முதல்நாள் - புதுவருஷ வாழ்த்துச் செய்தி (பாரதியார்)

N. Ganesan

unread,
Jan 2, 2022, 6:07:16 PM1/2/22

கவியரசர் கண்ணதாசனின் புத்தாண்டு கவிதை....
புதியன பிறக்கட்டும்:
புண்ணியம் செழிப்ப தாக
பொய்மைகள் தொலைவ தாக
கண்ணியம் தழைப்ப தாக
கடமைகள் உயர்வ தாக
எண்ணிய நடப்ப தாக
இனியபா ரதத்தில் மீண்டும்
கண்ணியன் கீதைச் செல்வன்
கண்ணனே பிறப்பா னாக!
கற்பெனும் பெருமை ஓங்க
கவினுறும் தாய்மை வாழ
அற்புதக் கவிதை தோன்ற
ஆனந்த இல்லம் காண
நற்பெரும் தவத்த ராய
நங்கைமார் உயர்ந்து வாழ
கற்புயர் நாட்டில் மீண்டும்
கண்ணகி பிறப்பா ளாக!
தந்தையைப் பணிந்து போற்றி
தாய்மையை வணங்கி யேற்றி
சிந்தையைச் செம்மை யாக்கி
செயல்களை நேர்மை யாக்கி
செந்தமிழ் நாட்டோர் வாழ்வில்
செல்வங்கள் குவிந்து காண
சிந்தையால் உயர்ந்து நின்ற
ஸ்ரீராமன் பிறப்பா னாக!
கணவனே தெய்வ மென்றும்
காடெலாம் சோலை யென்றும்
அணிமணி வேண்டே னென்றும்
அவனையே தொடர்வே னென்றும்
பணிவொடு பண்பும் கொண்டு
பாவலர் ஏற்ற வாழும்
தணலெனும் கற்பின் செல்வி
ஜானகி பிறப்பா ளாக!
ஒவ்வொரு பிறப்பும் இங்கே
உயர்ந்ததாய்ப் பிறப்ப தற்கு
செவ்விதழ் நீலக் கண்ணாள்
திருமகள் தமிழ்மீ னாட்சி
செவ்விதின் அருள்வா ளாக!
தேசத்தை உயர்த்து கின்ற
நல்வழி யாவும் கண்டு
நடக்கட்டும் தமிழ்ப் புத்தாண்டு!

(எந்த ஆண்டு தமிழ்ப் புது வருஷ வாழ்த்தைக் கவிஞர் இயற்றினார்?)

Virus-free. www.avast.com
Reply all
Reply to author
Forward
0 new messages