வாடாது வாழ்த்தட்டும் வாய்

8 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Mar 18, 2026, 2:44:18 AM (5 days ago) Mar 18
to சந்தவசந்தம்
18-03-2025 - புதன்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷

நாடெலாம் சுற்றினும் நாரணன் நல்நினைவு
கூடவே கொள்ளக் குளிர்விக்கும் - ஊடேயிப்
பாடுடை வாழ்வின் படுதணல் வாட்டினும்
வாடாது வாழ்த்தட்டும் வாய்


  _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Subbaier Ramasami

unread,
Mar 18, 2026, 8:24:35 AM (4 days ago) Mar 18
to santhav...@googlegroups.com
இது என்ன வகையான வெண்பா?

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/d353bddf-abff-448f-879c-b4ba5ab46b3en%40googlegroups.com.

Parthasarathy S

unread,
Mar 19, 2026, 9:20:03 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
அடியேன் 



--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

Parthasarathy S

unread,
Mar 19, 2026, 9:21:32 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
அடியேன் ஒரு விகற்ப நேரிசை வெண்பா என்று எண்ணி இட்டுள்ளேன்.

On Wed, 18 Mar 2026 at 17:54, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Parthasarathy S

unread,
Mar 19, 2026, 9:24:17 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
19-03-2025 வியாழக்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
வினைதனை வெல்ல வியன்வீடு வேண்டும்
நினைவுகள் நீங்கிடும் முன்னே - முனைசெயல்
தொற்றியே முந்துமுன் தோமில் முகுந்தனை

வாடாது வாழ்த்தட்டும் வாய்

( தோமில் - குற்றமற்ற)


   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Mar 19, 2026, 9:27:06 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
20-03-2025 வெள்ளிக்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
எமன்தான் கயிற்றினில் எட்டிப் பிடிப்பான்
தமரென் றிடினும் விடானே - அமரரும்
நாடிடும் நாரணன் நாமமே காலமும்

வாடாது வாழ்த்தட்டும் வாய்

   புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

Parthasarathy S

unread,
Mar 20, 2026, 10:04:42 PM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
21-03-2025 சனிக்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
உயிரோ தனித்து நிலாது உடலைப்
பயிலத் தொடரும் படரும் - கயிறதில்
நீடிடும் ஆட்டம் நிலையிலை நாரணனை

வாடாது வாழ்த்தட்டும் வாய்


   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_
Reply all
Reply to author
Forward
0 new messages