உகாதித் திருநாள்

10 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Mar 19, 2026, 6:08:00 AM (3 days ago) Mar 19
to santhavasantham
image

(Picture - GEMINI AI tool generated)

English poem by my friend

Ugadi: A Dawn of Sweetness

Mango leaves hang at the door, green and bright,
Welcoming the sun with new, golden light.

A brand new year, a fresh, hopeful start,
Bringing joy and peace to every heart.

The Ugadi Pachadi is ready to eat,
Bitter neem, sweet jaggery, a wonderful treat!

Reminding us that life is a mixed, colorful blend,
Of joys and challenges, from beginning to end.

New clothes, loud laughter, rangoli at the floor, 
Prayers for blessings, forever and more.

Oh, beautiful festival, spring in the air,
Happy Ugadi to all, a joyous affair!

தமிழாக்கம் (அடியேன்)

கலிவெண்பா

மாவிலை வாயிலில் மங்கலமாய் ஆடிடும் 

பூவுலகு போற்றப்  புதுக்கதிரோன் 

தோன்றிடும்

புத்தாண்டு பூத்துப் புதுப்பிக்கும் நம்பிக்கை 

எத்தகு நெஞ்சிலும் இன்பம் பொழிந்திடும்

வேம்புடன் வெல்லம் விதவிதமாய்ச் 

சேர்த்திடும்

மேம்படும் நற்சுவையில் மேனி சிலிர்த்திடும்

துன்பமும் இன்பமும் தோன்றும் 

கலவையாம்

பன்முக வாழ்வதன் பாங்கை உணர்த்திடும் 

சித்திரக் கோலங்கள் சீராகத் 

தோன்றுகையில்

முத்திரை ஆடைகளும் முன்வந்து மின்னும்

உகந்த உகாதி உவகை தரும்நாள் 

அகந்தையை நீக்கி அருளைப் பெருக்கும்

வசந்தம் தழுவ வளங்கள் பெருக 

இசைந்திட வானதே யின்று.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Siva Siva

unread,
Mar 19, 2026, 8:46:58 AM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
Text on picture seems to be garbled.

முத்திரை ஆடைகளும் முன்வந்து மின்னும் / = /

V. Subramanian

On Thu, Mar 19, 2026 at 6:08 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

Ram Ramakrishnan

unread,
Mar 19, 2026, 8:51:16 AM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
image


Redone picture 
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 19, 2026, at 18:16, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMtLOdVpamekxtySc3x1wwWN302eGWD_Gv12iHfu6tO9g%40mail.gmail.com.

Subbaier Ramasami

unread,
Mar 19, 2026, 9:03:39 AM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
உண்டெம் வீட்டில் இந்நாளில் 
   உகாதி நாளின் கொண்டாட்டம்
கொண்டு வந்தான் என்பேரன்
   குணமாய்த் தெலுங்கு மனையாட்டி
உண்டு மகிழப் பச்சடியாம்
     உலையாப் போளி, வடைவகையாம்
அண்டை வீட்டார் கொண்டாட்டம்
     அகத்துக் குள்ளும் வந்துளது

இலந்தை


N. Ganesan

unread,
Mar 19, 2026, 9:43:44 AM (3 days ago) Mar 19
to சந்தவசந்தம்
சிறப்பு

Kaviyogi Vedham

unread,
Mar 19, 2026, 10:44:27 AM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
  ஆஹா! எனக்குத்தெரியும்.. நீங்கள்  போளி  வடை  உண்ணுவதற்கே  பேரன்  ஒரு  தெலுங்குப்  பெண்ணைப்  பிடித்தான்... ஆயின்  எனக்கோ..?
  யோகியார்..

Kaviyogi Vedham

unread,
Mar 19, 2026, 2:34:39 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
மிக அருமை.இமயம்  வாழ்க
 யோகியார்

On Thu, Mar 19, 2026 at 6:08 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Mar 19, 2026, 10:01:08 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
அவனுடன் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் ஒரு தெலுங்கு அந்தணப் பெண்ணைக் காதலித்தான். ஏற்றுக்கொண்டோம். மணமுடித்தோம்.

இலந்தை

Kaviyogi Vedham

unread,
Mar 20, 2026, 11:14:29 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
thank  yu  thalaivare.. for  yur   imm   reply
yogiyar

Reply all
Reply to author
Forward
0 new messages