உணங்குணாக் கவரும் கோழி எறிந்த கொடுங்காற் கனங்குழை என்கிறது பட்டினப்பாலை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUcC%2BSrT0dBxNfydZJiAbbyDUV%2B_xTkvr%3DSv4duHLsvYHQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB%3D0VtWk6NUO%2BBsxEOWUeXNHipEdTs0xUppxtZOOE9zQMNH9gw%40mail.gmail.com.
ஐயா,'உணங்கல்' மற்றும் 'உப்புக் கண்டம்' வேறு வேறா அல்லது ஒன்றா என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.அன்புடன்சண்முகானந்தம்
கொக்கின் நகம் - அரிசிச் சோற்றுக்கு உவமை
---------------------------------
சிலவகை பழைய அரிசி சோறாகும்போது வளைந்து கொக்கின் நகம் (உகிர்) போல வளைந்திருக்கும் போலும். some subspecies of rice - curved/bent like the nails of cattle egret? உ-ம்: வாசமதி (Basmati) அரிசி நறுமணத்தால் பெயர்பெறுவது (வாசம் = மணம்). நீளமான அரிசி சமைத்தபின் வளைந்த தோற்றம் தருவது. https://www.thespicespoon.com/blog/basmati/
https://www.thespicespoon.com/blog/fresh-dill-spiced-rice-in-the-afghan-manner-chelo-shibit/
இவ்வாறு நீண்ட அரிசி வளைவதைச் சங்கப் புலவர் 3 முறை போற்றியுளர்:
(1) கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட - நற் 258/6
(2) பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் - புறம் 395/36
(3) கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர - புறம் 398/25

(இ
- ள்.) முரவை போகிய - வரி நீங்கிய, முரிவு இல் வால் மூரல் -
முரிதலில்லாத வெள்ளிய அரிசியாலாகிய அன்னத்தையும், பால் வறையல் -
பால் பெய்து அட்டதுவட்டலும், கருனை - பொரிக் கறியும், தீம்பயறு
அடுதுவை பலவகைக் கறிகள் - இனிய பயற்றொடு கலந்து சமைத்த
புளியங்கறியும் ஆகிய பலவகைக் கறிகளையும், விரவு தேம்படு பால் தயிர்
இழுது தேன் வெள்ளம் - பொருந்திய இனிமை பெற்ற பாலும் தயிரும்
நெய்யும் தேனுமாகிய இவற்றின் பெருக்கினையும், வரைவு இலாதன - (மற்றும்)
அளவில்லாத பண்டங்களையும், மிடாவொடு வாரி வாய் மடுத்தான் -
மிடாக்களோடு வாரி வாரி உண்டான் எ - று.
முரவை - தவிடு நீங்குமுன் அரிசியிலிருக்கும் சிவந்த வரி
| "முரவை போகிய முரியா வரிசி" |
என்னும் பொருநராற்றுப்படையடிக்கு
நச்சினார்க்கினியர் கூறிய பொருள்
காண்க; அதிலுள்ள"பால்வறைக்
கருனை" என்பதற்கு அவர் "பாலைப்
பொரித்ததனோடே கூட்டிய பொரிக்கறிகள்" என்பர். துவை - இக்காலத்துத்
துவையலென வழங்கும். (14)
A brief note from N. Ganesan:
திருவிளையாடற் புராணத்தில், பரஞ்சோதி முனிவர் பொருநர் ஆற்றுப்படையைப் பின்பற்றுகிறார். அதனாலும், பால், தயிர், நெய் எனப் பின்னர் வருவதனாலும், “பால் வறையல் கருனை” என்று அச்சிட்டுள்ளது “பரல் வறையல் கருனை” என்றிருந்தால் சிறக்கும். ஏடு வாசித்தலில் நேர்ந்த பேதம். புராண உரையாசிரியர் நச்சினார்க்கினியரைப் பார்க்கச் சொல்லியுள்ளார். நச்சரும், பரல் வறைக் கருனை என்பது பற்றியே பேசுகிறார். தமிழ்ச் சொல் பரல், இங்கே காய்கறித் துண்டங்கள். வறையல் இப்போது நாம் சொல்லும் வறுவல். கருனை = கருக்கும்(வறுக்கும்) பொரிக்கறி. பரல் ஆங்கிலத்தில் Pearl என்பதன் மூலம் என்பர் மொழியியலர்:
”115 - 6. பரல் வறை கருனை 3காடியின் மிதப்ப அயின்ற காலை - பரலைப் பொரித்து அதனோடே கூட்டிய பொரிக்கறிகளையும் கழுத்திடத்தே வந்து நிரம்பும்படி விழுங்கினகாலத்தே,;
இனி, காடியைப் புளிங்கறியாக்கிப் புளிங்கறியோடே நிரம்ப விழுங்கின காலையென்றுமுரைப்பர்.” (நச்.)
”3 காடி கழுத்தென்பதை, "காடியிழந்து கவந்தமதாய்" (கந்த. சூரபன்மன்வதை. 136) என்பதனானுமுணர்க.” உவேசா.
NG
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BJCRY%3DiFkTcY_USv_sG-rGFVR-BNAM0iJjxAB0hoEtp9fFVjA%40mail.gmail.com.