அப்பாவின் 101ஆவது பிறந்த தினம் - மீ.விசுவநாதன்

6 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Jul 17, 2026, 3:05:19 PM (yesterday) Jul 17
to Santhavasantham, M. Viswanathan, Seethalakshmi Viswanath
அன்புடையோர் அனைவருக்கும் வணக்கம்.

இன்று எங்கள் தந்தையார் ப்ரும்மஶ்ரீ வி. மீனாட்சி சுந்தரம் அவர்களது
 நூற்றி ஒன்றாவது (101) பிறந்த தினம்.

எளிமையாக அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்து எங்கள் மனத்தில் அறவழியை ஆழப்பதித்தவர். 

அவரது நினைவைப் போற்றும் வகையில் இந்த  எளிய கவிதையே சமர்ப்பணம் செய்து வணங்குகின்றேன்.

அன்பன்,
மீ. விசுவநாதன்
18.07.2026 12.19am

     "அப்பாவின் அன்பு மடி"
          (மீ. விசுவநாதன் )

(பாவகை: அறுசீர் விருத்தம்)

அன்புள்ள அப்பா வணக்கம்!
  ஆயுள்தான் நூறு முடிந்து 
இன்றுங்கள் பிறந்த தினமாம்!
   ஏழ்மையினைப் புறத்தே இருத்தி 
நன்றாக உழைத்த குடும்ப
   நல்லோர்கள் பெற்ற குழந்தை 
என்றுங்கள் குணத்தைக் கிராமம் 
  இன்றுகூடப் புகழ்வ தறிவோம்.

உடன்பிறந்த தம்பி, இருக்கும்  
   ஒன்றுவிட்ட பிறப்ப னைத்தும் 
உடன்வந்த உங்கள் இதய 
  உயிர்மேலாம் அன்பின் சுகத்தில் 
திடமாக வாழ்ந்த கணக்கில்  
  தெளிவாக நூறு மதிப்பெண் 
சுடராகப் பெற்ற எளியோய்!
   சொந்தங்கள் மதிக்கும் மனத்தோய்!

சுட்டிடும் வார்த்தை என்றும்  
  சொல்லாத பண்பும், அன்புச்   
சிட்டெனப் பறந்தே ஓடிச் 
  செய்கின்ற உதவும் கையும், 
கட்சிசார் பில்லா நெஞ்சும் 
   கடமையதில் உறுதி கொண்டு 
நட்பினை மதித்துப் போற்றும் 
   நாகரிகம் கற்ற மனிதர்!   

பெற்றவர் வாக்கை மீறார்!
   பேராசை இன்றி நாளும் 
கற்றவர் மெச்சிப் பேச
   கண்ணியமாய் உழைத்து வந்தார்  
மற்றவர் வணங்கும் வண்ணம் 
   மனந்தன்னில் நேர்மை கொண்டார்!
உற்றதன் மனைவி மக்கள் 
   உள்ளத்தில் தெய்வ மானார் !

தெய்வ பக்தி யோடு 
  தேச பக்தி மிக்கார்!
பெய்யும் மழையைப் போல 
  பெரிய மனத்தைக் கொண்டார் !
மெய்யைச் சொல்லும் போதும் 
   மிகையாய்ச் சொல்ல மாட்டார் 
ஐயா உங்கள் ஆசி 
    அடியோம் பெற்ற பேறு.
                      (18.07.2026)
[இன்று (18.07.2026 ) எங்கள் அப்பாவின் நூற்றி ஒன்றாவது  பிறந்ததினம்.]
1000278602.jpg
1000278566.jpg

Ram Ramakrishnan

unread,
Jul 17, 2026, 4:08:37 PM (24 hours ago) Jul 17
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. மீ. வி. தந்தையை நினைத்து அஞ்சலி செலுத்தியது உள்ளத்தில் பதிந்தது.

வாழ்க வளம் நிறைந்து.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 17, 2026, at 15:05, M. Viswanathan <meev...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-s8XdOvLXk-bwBzQKTcfwz7xKCvDpeOaaz2MP7a6%2BpYpA%40mail.gmail.com.
<1000278602.jpg>
<1000278566.jpg>

Kaviyogi Vedham

unread,
Jul 17, 2026, 4:48:11 PM (23 hours ago) Jul 17
to santhav...@googlegroups.com
arputham  mi vi. en  vanakkam,
  yogiyar

Sai Ganesan H

unread,
12:11 AM (16 hours ago) 12:11 AM
to santhav...@googlegroups.com, M. Viswanathan, Seethalakshmi Viswanath
தந்தைக்கு மிகவும் அருமையான சமர்ப்பணம்! 


— சத்யவேழன் H சாயி கணேசன்

--

M. Viswanathan

unread,
7:38 AM (8 hours ago) 7:38 AM
to Sai Ganesan H, Santhavasantham, Seethalakshmi Viswanath
அன்புக் கவிஞர் பெருமக்களின் கருத்துக்கு மகிழ்ச்சி. நன்றி.

அன்பன்,
மீ. விசுவநாதன்
18.07.2026 17.07 pm

இமயவரம்பன்

unread,
9:43 AM (6 hours ago) 9:43 AM
to santhav...@googlegroups.com, M. Viswanathan, Seethalakshmi Viswanath, Santhavasantham
மிகச் சிறப்பு, திரு. மீ வி
Reply all
Reply to author
Forward
0 new messages