ஈறிலாப் புகழ் எவ்வுளூர்

5 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jan 26, 2026, 7:58:25 PM (3 days ago) Jan 26
to santhavasantham
ஈறிலாப் புகழ் எவ்வுளூர்
(சந்தச் சிந்து)
(தான தானன தானனா - தன
தான தானன தானனா)

(பல்லவி)
ஈறி லாப்புகழ் எவ்வுளூர் - எங்கும்
… ஈடி லாவெழில் சூழுமூர்
வீறெ லா(ம்)மிகு மாலவன் - எங்கள்
… வீர ராகவன் வாழுமூர்.

(சரணம்)
பூத்த தாமரை மேலயன் - அடி
… போற்றி நான்முடி தாழ்த்துமூர்
ஆர்த்த தீவினை ஓட்டுமூர் - பிணி
… ஆற்றி ஆழ்துயர் மாற்றுமூர்.  (ஈறிலாப்)

கோல வாயொரு பைங்கிளி - அது
… கோதை காதலைப் பேசுமூர்
சோலை வாழிளந் தென்றலில் - மது
… சூதன் வாசனை வீசுமூர். (ஈறிலாப்)

காவு லாவிடு வண்டுகள் - ‘கண்ண
… கண்ண’ என்றுபண் பாடுமூர்
நாவெ லாஞ்சுவை கூடியே -  குயில்
… நாமம் ஆயிரம் ஓதுமூர். (ஈறிலாப்)

மாறன் வாய்மொழி கேட்குமூர் - திரு
… மழிசை கோன்றமிழ் சாற்றுமூர்
மாறி லாத்தனி வேலினான் - திரு
… மங்கை மன்னவன் வாழ்த்துமூர். (ஈறிலாப்)

- இமயவரம்பன் 

Ram Ramakrishnan

unread,
Jan 26, 2026, 8:21:53 PM (3 days ago) Jan 26
to santhav...@googlegroups.com
அற்புதம், திரு. இமயவரம்பன் 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 26, 2026, at 19:58, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/BF3FEA70-747E-4E11-9E10-C1F36A3D73C3%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Jan 26, 2026, 8:28:14 PM (3 days ago) Jan 26
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு ராம்கிராம்

Arasi Palaniappan

unread,
Jan 26, 2026, 8:53:35 PM (3 days ago) Jan 26
to சந்தவசந்தம்
அருமை அருமை 

--

இமயவரம்பன்

unread,
Jan 26, 2026, 9:04:38 PM (3 days ago) Jan 26
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்

> On Jan 26, 2026, at 8:53 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
>
> அருமை அருமை

Parthasarathy S

unread,
Jan 26, 2026, 9:18:00 PM (3 days ago) Jan 26
to santhav...@googlegroups.com
மாறன் வாய்மொழி கேட்குமூர் - திரு
… மழிசை கோன்றமிழ் சாற்றுமூர்
மாறி லாத்தனி வேலினான் - திரு
… மங்கை மன்னவன் வாழ்த்துமூர்
அருமையான வரிகள்!!!!!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

இமயவரம்பன்

unread,
Jan 26, 2026, 9:23:21 PM (3 days ago) Jan 26
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி 🙏 

இமயவரம்பன்

unread,
Jan 27, 2026, 8:15:05 PM (2 days ago) Jan 27
to santhavasantham
சில மாற்றங்களுடன்:

ஈறிலாப் புகழ் எவ்வுள்ளூர் - திரு எவ்வுள் துதி

(தான தானன தானனா - தன
தான தானன தானனா)

(பல்லவி)
ஈறி லாப்புகழ் எவ்வுளூர் - எங்கும்
ஈடி லாவெழில் சூழுமூர்
வீறெ லாம்மிகு மாயவன் - எங்கள்
வீர ராகவன் வாழுமூர்.

(சரணம்)
பூத்த தாமரை மேல்அயன் - நிதம்
போற்றி நான்முடி தாழ்த்துமூர்
ஆர்த்த தீவினை ஓட்டுமூர் - பிணி
ஆற்றி ஆழ்துயர் மாற்றுமூர்.  (ஈறிலாப்)

கோல வாய்இளங் கிள்ளைகள் - மலர்க்
கோதை பாநலம் பேசுமூர்
சோலை வாழ்பசுந் தென்றலில் - மது
சூதன் வாசனை வீசுமூர். (ஈறிலாப்)

காவு லாவிடு வண்டுகள் - ‘கண்ண
கண்ண’ என்றிசைத் தாடுமூர்
நாவெ லாம்மகிழ் கூடியே -  குயில்
நாமம் ஆயிரம் பாடுமூர். (ஈறிலாப்)

மாறன் வாய்மொழி கேட்குமூர் - திரு
மழிசை கோன்தமிழ் ஆர்க்குமூர்
மாறி லாத்தனி வேலினான் - திரு
மங்கை மன்னவன் வாழ்த்துமூர். (ஈறிலாப்)

சொற் பொருள்:
ஈறிலா = முடிவில்லாத
வீறெலாம் = பெருமைகள் எல்லாம்
அயன் = பிரம்மா
ஆர்த்த = நம்மைக் கட்டிப்போடும்
கிள்ளை = கிளி
மதுசூதன் = மதுசூதனன்
கா = பூங்கா
மாறன் = நம்மாழ்வார்
வாய்மொழி = திருவாய்மொழி
கோன் = தலைவர்
திருமழிசைகோன் = திருமழிசை ஆழ்வார்
ஆர்க்கும் = ஒலிக்கும்
மாறிலா = ஒப்பற்ற
தனி = தனிப்பெருமை வாய்ந்த
திருமங்கை மன்னவன் = திருமங்கை ஆழ்வார்

- இமயவரம்பன்

Ram Ramakrishnan

unread,
Jan 28, 2026, 7:42:55 AM (yesterday) Jan 28
to santhav...@googlegroups.com
மிக அருமை - திருத்தங்கள் செய்தமைத்த பாடல்.

புன்னாகவராளி ராகத்தில் பாடலாம் எனத் தோன்றுகிறது (பாரதியாரின் “வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா வடிவேலா பாட்டைப் போல). 


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 27, 2026, at 20:15, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jan 28, 2026, 8:15:45 AM (yesterday) Jan 28
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்!

“வில்லினை ஒத்த புருவம்” அழகான உவமைத் தொடர். “வில்லைத் தொலைத்த புருவத்தாள்” ஆன ஶ்ரீ ஆண்டாளின் பாசுர வரியை நினைவுறுத்துகிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages