கையில் கண்ட கனவுமலர்!

15 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 21, 2023, 6:27:11 AM10/21/23
to santhav...@googlegroups.com

"What if you slept

And what if

In your sleep

You dreamed

And what if

In your dream

You went to heaven

And there plucked a strange and

beautiful flower

And what if

When you awoke

You had that flower in you hand

Ah, what then?" 


            ~ Samuel Taylor Coleridge



இந்த ஆங்கிலக் கவிதையைப் படித்தவுடன் எழுதிய நேரிசை வெண்பா:


     கையில் கண்ட கனவுமலர்


உறங்கிக் கனவுகண்  டுற்ற கனவில்

கிறங்கொளிர் சொர்க்கம் கிடைத்து- நிறங்கிளர்

மென்மலர் கிள்ளியங்கு மெள்ளவெழுந் துன்கையில்

நன்மலர்கண் டாலென்  நவில்!


                 - தில்லைவேந்தன்.


….

N. Ganesan

unread,
Oct 21, 2023, 8:07:43 AM10/21/23
to santhav...@googlegroups.com
கிள்ளி என்றதும் நினைவுக்கு வரும் வெண்பா ஒன்று:

முத்தொள்ளாயிர வெண்பா:
சோழனின் யானைமறம்

கொடிமதில் பாய்ந்துஇற்ற கோடும் அரசர்
முடிஇடறித் தேய்ந்த நகமும் – பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோள் கிள்ளி களிறு

விளக்கம்:
கல், மலை போன்ற தோள்வலிமை கொண்டவன் சோழன். அவனுடைய ஆண் யானை பகைவரின் கோட்டையைப் பாய்ந்து இடித்ததால் அதன் தந்தங்களின் நுனி முறிந்து போயிற்று. பகை மன்னர்களின் தலைமுடியை (கிரீடம்) இடறியதால் அதன் கால் நகங்கள் தேய்ந்து போயின. அழகிழந்த தன் தோற்றத்தைத் தன் பெண் யானைக்குக் காட்டுவதற்கு நாணம் கொண்டு யானைக் கொட்டிலுக்குப் போகவில்லை. சோழனின் அரண்மனைத் தலைவாசலிலே நின்று விட்டது. இப்படிப்பட்ட வீரம் பொருந்திய யானைகளைத் தன் படை பலமாகக் கொண்டவன் சோழன்.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hiDdNKKSAV0dteAaqzN0e2%3D7VSuLrfv0j9OyoYrxQoV%3DQ%40mail.gmail.com.

Anand Ramanujam

unread,
Oct 21, 2023, 4:40:16 PM10/21/23
to santhav...@googlegroups.com
அருமையான ஆங்கிலக் கவிதைக்கு இணையான செழுந்தமிழ் வெண்பா சிறப்பு!

கவிதை மிக அருமை, திரு. தில்லைவேந்தன்!

...

Anand Ramanujam

unread,
Oct 21, 2023, 4:56:29 PM10/21/23
to santhav...@googlegroups.com
அருமையான முத்தொள்ளாயிர வெண்பாவை இங்கே காட்டியமைக்கு நன்றி, திரு. கணேசன்!

கிள்ளி களிற்றைப் பற்றி இன்னொரு சுவையான வெண்பாவையும் அந்நூலில் கண்டேன்:

மண்படுதோள் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் - விண்படர்ந்து
பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்
தேயும் தெளிவிசும்பில் நின்று.

(கிள்ளி வளவனின் களிறானது மாற்றரசர்களின் வெண்குடைகளைப் பறித்து அழித்ததைக் கண்ட வெண்ணிலவு, அந்த யானை தன்னையும் பகையரசர்களின் குடை என்று எண்ணிப் பாய்ந்து அழித்துவிடுமோ என்று அஞ்சி வானத்தில் நடுங்கித் தேய்கின்றது)

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 21, 2023, 8:53:53 PM10/21/23
to santhav...@googlegroups.com
நன்றி திரு ஆனந்த்.

....

N. Ganesan

unread,
Oct 28, 2023, 1:02:58 PM10/28/23
to santhav...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages