ஔவையார் பாடலில் ஓர் ஐயம்

20 views
Skip to first unread message

Girija Varadharajan

unread,
May 13, 2026, 1:01:54 AM (3 days ago) May 13
to santhavasantham
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு
 
இப்பாடலில் மேனி நுடங்காது என்பதை எவ்வாறு பொருள் கொள்வது ?. சில உரை  பிள்ளையார் மேனி எனச் சுட்டுகிறது. சிலர் தும்பிக்கையான் பாதம் சார்வாரின் மேனி என்கிறார்கள். இரண்டிலுமே மேனி நுடங்குதல் என்பதை எப்படிப் பொருள் கொள்வது. குறிப்பாக நுடங்குதல் என்ற சொல்லை?   

சான்றோர்கள் விளக்க வேண்டுகிறேன் 

Parthasarathy S

unread,
May 13, 2026, 3:27:19 AM (2 days ago) May 13
to santhav...@googlegroups.com
அடியேன் சான்றோன் இல்லை! ஆயினும் பாடலைக் கீழ்க்கண்டவாறு அந்வயித்தால் பொருள் விளங்கும் என்று தோன்றுகிறது.
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
பூக்கொண்டு
தப்பாமற் சார்வார் தமக்கு
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது

தாஸன் - புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/MN0PR22MB3569A5C8FEC36C6EDF1BC39CDD062%40MN0PR22MB3569.namprd22.prod.outlook.com.


--
S. Parthasarathy
 98441 24542/9980794542

Siva Siva

unread,
May 13, 2026, 9:07:08 AM (2 days ago) May 13
to santhav...@googlegroups.com

 https://www.tamilvu.org/library/l6130/html/l6130ind.htm


ஒளவையார் அருளிய

மூதுரை

.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை


கடவுள் வாழ்த்து


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்

தப்பாமற் சார்வார் தமக்கு.


(பதவுரை)

துப்பு ஆர் - பவளம் போலும் (சிவப்பாகிய), திருமேனி - திருமேனியையும், தும்பிக்கையான் - துதிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின், பாதம் - திருவடிகளை, பூக்கொண்டு - (அருச்சிக்க) மலர் எடுத்துக்கொண்டு,தப்பாமல் - நாடோறும் தவறாமல், சார்வார் தமக்கு - அடைந்துபூசை செய்வோருக்கு, வாக்கு உண்டாம் - சொல்வளம் உண்டாகும்; நல்ல மனம் உண்டாம் - நல்ல சிந்தனை உண்டாகும்; மாமலராள் - பெருமை பொருந்திய செந்தாமரைப்பூவில் இருக்கும் இலக்குமியின், நோக்கு உண்டாம் - அருட்பார்வை உண்டாகும்; மேனி - அவர் உடம்பு, நுடங்காது -(பிணிகளால்) வாட்டமுறாது.

விநாயகக் கடவுளின் திருவடிகளைப் பூசிப்பவர்க்குக் கல்வியும், செல்வமும், நலமும் உண்டாகும்.

==
V. Subramanian

இமயவரம்பன்

unread,
May 13, 2026, 9:15:09 AM (2 days ago) May 13
to santhav...@googlegroups.com, santhavasantham
இந்தப் பாடலில் “மேனி நுடங்காது” என்றால் “உடல் சலிக்காமல்” அல்லது “சிரத்தையுடன்” என்று பொருள் கொள்வதே சரி என்று தோன்றுகிறது.

- இமயவரம்பன்

Girija Varadharajan

unread,
May 13, 2026, 11:05:22 AM (2 days ago) May 13
to santhav...@googlegroups.com, santhavasantham
B


From: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com> on behalf of இமயவரம்பன் <anandbl...@gmail.com>
Sent: Wednesday, May 13, 2026 6:44:55 PM
To: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com>
Cc: santhavasantham <santhav...@googlegroups.com>
Subject: Re: ஔவையார் பாடலில் ஓர் ஐயம்
 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Girija Varadharajan

unread,
May 13, 2026, 11:14:58 AM (2 days ago) May 13
to santhav...@googlegroups.com, santhavasantham
பூக்கொண்டு, மேனி நுடங்காது, துப்பார் திருமேனி, தும்பிக்கையான் பாதம், தப்பாமல் சார்வார் தமக்கு, வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம், மா மலராள் நோக்குகண்டாம்   - 
என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்ள வேண்டுமோ? 


From: Girija Varadharajan <girij...@hotmail.com>
Sent: Wednesday, May 13, 2026 8:35:19 pm

To: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com>
Cc: santhavasantham <santhav...@googlegroups.com>
Subject: Re: ஔவையார் பாடலில் ஓர் ஐயம்

இமயவரம்பன்

unread,
May 13, 2026, 11:21:31 AM (2 days ago) May 13
to santhav...@googlegroups.com, santhavasantham
ஆம் “மேனி நுடங்காது (சிரத்தையுடன்) பூக்கொண்டு” என்று கொண்டால் பொருள் மேலும் சிறக்கும். 

“பூவொடு நீர்சுமந்து ஏத்தி” என்னும் அப்பர் பெருமான் திருவாக்கும் இங்கே நினைவுகூர்ந்து களிக்கத் தக்கது.  

Siva Siva

unread,
May 13, 2026, 11:35:53 AM (2 days ago) May 13
to santhav...@googlegroups.com
பொருள்கொள்ளும்பொழுது, இது சரி அது தவறு என்று சொல்வதை விட, "எனக்கு இப்படிப் பொருள்கொள்வது பிடித்திருக்கிறது" என்று சொல்லலாம்.

உடம்பு வளையாமல் வழிபடவேண்டும் - என்று எங்காவது வழிபாட்டு முறைகளிலோ, துதிகளிலோ சொல்லப்பட்டுள்ளதா?


நுடங்கு¹-தல் nuṭaṅku- , 5 v. intr. 1. To shake, wave; to be tremulous; அசைதல். பல் கொடி நுடங்கும் . . . யானை (பதிற்றுப். 82, 3). 2. To be flexible, pliable; துவளுதல். மின்னேர் நுடங்கிடை (திருவாச. 11, 9). 3. To totter, tremble; தள்ளாடுதல். நக்கான்முக நோக்கி நடுங்கி நுடங்கி (பெரியபு. தடுத். 39). 4. To dance; ஆடுதல். மாறிரியச் சீறி நுடங்குவான் (பு. வெ. 2, 9). 5. To be bent; வளைதல். நுடங்குநுத லிளவே ரிடங்கெட வணிய (ஞானா. 36, 4). 6. To be fine, thin, attenuated; நுட்பமாதல். (W.) 7. To be contained; அடங்குதல். நூறுயோசனை யகலமு மாழமு நுடங்க (கம்பரா. அகலிகை. 38). 8. To be fascinated; ஈடுபடுதல். நுடங்கு கேள்வி யிசையென்கோ (திவ். திருவாய். 3, 4, 6).

வி. சுப்பிரமணியன்



இமயவரம்பன்

unread,
May 13, 2026, 4:49:43 PM (2 days ago) May 13
to AnandBl...@gmail.com, santhavasantham
“இவ்வாறு பொருள்கொள்வது சரி என்று என் மனத்துக்குத் தோன்றுகிறது” என்றே சொல்ல நினைத்து எழுதினேன். அது வேறு மாதிரி அர்த்தத்தை வெளிப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

Siva Siva

unread,
May 13, 2026, 5:15:06 PM (2 days ago) May 13
to santhav...@googlegroups.com
If something is obviously an incorrect interpretation - then we can say that is wrong and this is correct.

If two interpretations are valid (as per grammar and meaning), then we can say we personally like (/ prefer) interpretation-1 more than interpretation-2.

V. Subramanian
Reply all
Reply to author
Forward
0 new messages