குருவருள் அரிதான விருந்து - மீ. விசுவநாதன்

0 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Feb 20, 2026, 10:51:12 AM (15 hours ago) Feb 20
to Santhavasantham, M. Viswanathan
"குருவருள் அரிதான விருந்து"
        (மீ. விசுவநாதன்)
           
                  (பல்லவி)
குருவருள் அரிதான விருந்து - நம்
இருவினை தீர்க்கின்ற மருந்து.

                   (சரணம்)
ஒருமுறை பார்த்தாலே போதும் - நம்
கருவறை பந்தங்கள் மூடும்
திருவடி நினைப்போர்க்கு நாளும் - சுகம்
மறுபடி மறுபடி கூடும்.

இருளெனும் மாயைக்கு தீபம் - அவர்
திருமுகம் ஞானத்தின் ரூபம்
கருணையால் பொங்கிடும்  வெள்ளம் - அதில்
கரையணும்  நம்பக்தி உள்ளம்.

       (20.02.2026 21.07 pm)

   🙏

Sai Ganesan H

unread,
Feb 20, 2026, 10:58:17 AM (15 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com, M. Viswanathan
அருமையான பாடல் ஐயா! 

பேஹாக் ராக ‘முருகனின் மறுபெயர் அழகு’ பாடலின் மெட்டு அழகாக இந்த வரிகளுக்குப் பொருந்துகிறது! 

— சத்ய வேழன் H சாயி கணேசன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-uB%3Dr67Gf%2B6dbphGDSoWD73%2BQOiPTJHJh-7WZXV4d5vNg%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Feb 20, 2026, 10:58:39 AM (15 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. மீ. வி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 20, 2026, at 10:51, M. Viswanathan <meev...@gmail.com> wrote:


--

M. Viswanathan

unread,
Feb 20, 2026, 11:08:23 AM (15 hours ago) Feb 20
to Santhavasantham
அன்புக் கவிஞர் பெருமக்களின் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி.

அன்பன்,
மீ.விசுவநாதன்
20.02.2026 21.37 pm

Ram Ramakrishnan

unread,
Feb 20, 2026, 12:00:23 PM (14 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com
பேஹாக் ராகத்தில் பாடினால் பகிருங்களேன். கேட்டு இன்புறுவோம்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 20, 2026, at 10:58, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:


Reply all
Reply to author
Forward
0 new messages