வேண்டும்

30 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
May 14, 2026, 10:03:34 AM (2 days ago) May 14
to santhavasantham

                                                  

வேண்டும்

 

என்னதான் வேண்டும் என்றே
       என்னிடம் கேட்கின் றார்கள்
முன்னைநாள் வேண்டும் என்றால்
       முடியுமா? தடையில் லாமல்
என்னைநான் இயக்கிக் கொள்ளும்
        எழுச்சியே நிறைய வேண்டும்
அன்னையின் பதம் பணிந்தே
       யானிதைக் கேட்கின்றேனே!

 

கண்களோ காண வேண்டும்
       காதுகள் கேட்க வேண்டும்
திண்ணமாய்க் கைகள் கால்கள்
      திடத்துடன் இயங்கவேண்டும்
உண்டவை செரிக்க வேண்டும்
      உடலிலே உறுதி வேண்டும்
எண்ணமோ இளமையாக
      என்றுமே இருக்க வேண்டும்

இற்றைநாள் நல்லநாளென்று
         எண்ணிடும் உள்ளம் வேண்டும்
கற்றவை சிறக்க வேண்டும்
          கருத்திலே தெளிவு வேண்டும்
பெற்றவை எல்லாம் நல்ல
          பேறென எண்ண வேண்டும்
சுற்றிலும் நலமே என்னும்
           சொல்லினைக் கேட்க வேண்டும்

அடுத்தவ ரிடம்கேட் காமல்
           அவசியச் செல்வம் வேண்டும்
கொடுக்கிறாள் ஒருத்தி என்னும்
            கொள்கையில் திளைக்க வேண்டும்
நடக்கிற வெல்லாம்  என்றும்
             நல்லவாய் நடக்க வேண்டும்
படுத்திடும் நோய்கள் தாக்காப்
             பரிசினைக் கொடுக்க வேண்டும்

ஏய்க்கிறார் என்றால் அஃதை
          எளிதிலே அறிய வேண்டும்
வாய்க்கிற யாவும் ஞான
            வழியினைக் காட்ட வேண்டும்
தீய்க்கிரை ஆகு முன்னே
           சித்திலே திளைக்க வேண்டும்
காய்க்கிற மரம்தான் பின்னர் க்
            கனியினைக் கொடுக்கக் கூடும்

வட்டமாய் அடிவானத்தின்
             வளைவினைப் பார்த்தே அஃதும்
கிட்டத்தான் என்றே   எண்ணிக்
             கிறங்கியே  பார்க்கின்றேன் நான்
தொட்டுத்தான் பாரேன் என்று
              சொல்லியே விலகிச்  செல்லும்
விட்டிடு வேனோ காணும்
               வெற்றியில் திளைக்கின்றேன்நான்

இலந்தை
14-5-2026

Ram Ramakrishnan

unread,
May 14, 2026, 10:53:06 AM (2 days ago) May 14
to santhav...@googlegroups.com
மிக அருமை தலைவரே

“இற்றைநாள் நன்நா ளென்று” - இவ்வாறு இருக்கலாமோ என்ற ஐயம் எழுந்தது.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 14 May 2026, at 7:33 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBA-ZTL6cQiY0AH%2BKGmbChv%2BdX8%3DrpmPLzXiZAD8gLu_DQ%40mail.gmail.com.

K.R. Kumar

unread,
May 14, 2026, 12:11:28 PM (2 days ago) May 14
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு, இலந்தையாரே!!!!

குமார்(சிங்கை)

--

Swaminathan Sankaran

unread,
May 14, 2026, 12:23:45 PM (2 days ago) May 14
to santhav...@googlegroups.com
இவையே வேண்டும் - போதும்
வேறென்ன வேண்டும்?

சங்கரன் 

Subbaier Ramasami

unread,
May 14, 2026, 3:22:41 PM (2 days ago) May 14
to santhav...@googlegroups.com
நன்றி. நீங்கள் கூறியுள்ள திருத்தம் சரி.

On Thu, May 14, 2026 at 10:53 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மிக அருமை தலைவரே

Govindaraju Arunachalam

unread,
May 14, 2026, 8:33:49 PM (2 days ago) May 14
to santhav...@googlegroups.com

கவிவேழம் பாடலைக் கண்ணுற்றதும் எனக்கும் ஒரு விருத்தம் எழுதும் எண்ணம் வந்தது.

 

உடலெல்லாம் வலிமை கூடி

   ஊக்கத்தைப் பெறுதல் வேண்டும்

அடலேறு போல என்றும்

   அருவினைகள் செய்ய வேண்டும்

இடர்ப்பாடு நண்ணும் போதும்

   இனிமையென கொள்ள வேண்டும்

படமாடும் பாம்பு கொண்டான்

   பதத்தையே நினைக்க வேண்டும்!

 

-கருவூர் இனியன்.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Kaviyogi Vedham

unread,
May 14, 2026, 8:44:19 PM (2 days ago) May 14
to santhav...@googlegroups.com

Subbaier Ramasami

unread,
May 14, 2026, 8:44:20 PM (2 days ago) May 14
to santhav...@googlegroups.com
அருமை

On Thu, May 14, 2026 at 8:33 PM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:

Kaviyogi Vedham

unread,
May 14, 2026, 8:49:56 PM (2 days ago) May 14
to santhav...@googlegroups.com

Ram Ramakrishnan

unread,
May 14, 2026, 10:37:23 PM (2 days ago) May 14
to santhav...@googlegroups.com
அருமை, திரு. இனியன்.

இனிமையென*க்* கொள்ள வேண்டும்?


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 15, 2026, at 06:03, Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:



veNbA virumbi

unread,
May 15, 2026, 8:19:18 AM (yesterday) May 15
to சந்தவசந்தம்
*******************
(நேரிசை வெண்பா)

நீண்டதொரு பாடலிங்கு நேர்ந்தகவி மாமணி
வேண்டுவன யாவும் விரைந்தருளத் - தாண்டவமா
டாண்டவனை இந்நா லடியா லடியனான்
தூண்டியிழைப் பன்சிறு தொண்டு.


பதம் பிரித்து:

நீண்டதொரு பாடல் இங்கு நேர்ந்த கவிமாமணி
வேண்டுவன யாவும் விரைந்து அருளத் - தாண்டவம் ஆடு
ஆண்டவனை இ(ந்) நால் அடியால் அடியன் நான்
தூண்டி இழைப்பன் சிறு தொண்டு.


நேர்ந்த = கொடுத்த
*******************

veNbA virumbi

unread,
May 15, 2026, 8:29:43 AM (yesterday) May 15
to சந்தவசந்தம்
அழகிய பாடல். 

குறிப்பு: "பதத்தையே" - காய்ச்சீர் வருமிடத்து விளம்.  மாற்று:  "பதவிணையே" அல்லது "பதத்தினையே" ?

Siva Siva

unread,
May 15, 2026, 8:58:38 AM (yesterday) May 15
to santhav...@googlegroups.com
அடியன் நான் ....  இழைப்பன்     /

அடியேன் நான் .... இழைப்பேன் ?

Ram Ramakrishnan

unread,
May 15, 2026, 9:07:07 AM (yesterday) May 15
to santhav...@googlegroups.com
ஒரோவழி விளச்சீருக்கு பதிலாகக் காய்ச்சீரும் வரலாம் தானே?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 15 May 2026, at 6:28 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

veNbA virumbi

unread,
May 15, 2026, 9:49:39 AM (yesterday) May 15
to சந்தவசந்தம்
Very well. Thanks.

Arasi Palaniappan

unread,
May 15, 2026, 5:51:13 PM (24 hours ago) May 15
to சந்தவசந்தம்
முன்னைநாள் கிட்டும், மீண்டும் 
     முனைந்துநீர் பார்ப்பீர் ஆயின்!
அன்னையின் மடிகி டந்த 
      அந்தநாள் வாய்க்கும் ; பின்னை 
அன்னைபோல் காத்து வந்த 
        அன்னவர் நினைவு காக்கும்!
தன்னுணர்(வு)  எலாம் நிறைந்த 
      தமிழனை யாப்பும் காக்கும்!
பின்னும்நீர் வேட்கும் எல்லாம் 
      பிஞ்ஞகன் அருளால்
 வாய்க்கும்!

மக்களாய்ப் பிறந்த நல்ல
      மணிகளால் இன்பம்
 வாய்க்கும்!
மக்களின் வழியே வந்த 
      மாண்புடைப் பேரர் பேர்த்தி 
ஒக்கலில் வாழ்வ தாலே 
        உன்னுவ(து) எல்லாம் 
வாய்க்கும்!
சிக்கலே இல்லை ; உங்கள் 
        சிந்தையில் அமைதி 
வாய்க்கும்!

வணங்கிப் போற்றும் 
அரசி. பழனியப்பன் 
        

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

veNbA virumbi

unread,
9:13 AM (8 hours ago) 9:13 AM
to சந்தவசந்தம்
An offering prompted by ilanthai's and iniyan's verses. Thank you for your indulgence.

The lines are meant as pointers - perhaps a bit loosely - to the following: (1) strict adherence to dharma, (2) karma yoga, (3) dhyana yoga, and (4) self realization.
********************
(அறுசீர் விருத்தம்)

அயம்பொரு வுறுதி பூண்டிங்
     கறநெறி பயில வேண்டும்
கயம்பழி சமமாய் ஏற்றுக்
     கடனியற் றியல்பு வேண்டும்
செயன்மொழி கடக்கும் பாதை
     தேசிகன் உணர்த்த வேண்டும்
செயம்பிற கடையும் பேற்றைத்
     தேவனே அருளல் வேண்டும்.


பதம் பிரித்து:

அயம் பொருவு உறுதி பூண்டு இங்கு அறநெறி பயில வேண்டும்
கயம் பழி சமமாய் ஏற்றுக் கடன் இயற்று இயல்பு வேண்டும்
செயல் மொழி கடக்கும் பாதை தேசிகன் உணர்த்த வேண்டும்
செயம் பிறகு அடையும் பேற்றைத் தேவனே அருளல் வேண்டும்.

அயம் = இரும்பு; பொருவுதல் = ஒப்பாதல்; கயம் = பெருமை
********************

On Thursday, May 14, 2026 at 7:33:34 PM UTC+5:30 Subbaier Ramasami wrote:

veNbA virumbi

unread,
9:19 AM (8 hours ago) 9:19 AM
to சந்தவசந்தம்
Lovely verses, sir, as usual.  My compliments.

I shall appreciate your clarifying the intended meaning (and import) of the following line.

தன்னுணர்(வு)  எலாம் நிறைந்த தமிழனை யாப்பும் காக்கும்!

Thank you.


On Saturday, May 16, 2026 at 3:21:13 AM UTC+5:30 Arasi Palaniappan wrote:

Arasi Palaniappan

unread,
10:41 AM (7 hours ago) 10:41 AM
to சந்தவசந்தம்
அன்னார் தம் உணர்வுகளில் எல்லாம் கலந்து நிற்கும் தமிழ(ன்)னையின் யாப்பும் அவரைக் காக்கும்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages