ஏகாதசிப் பாடல் [கோபால்]

123 views
Skip to first unread message

GOPAL Vis

unread,
Jul 16, 2024, 10:02:09 PM7/16/24
to santhav...@googlegroups.com
 ஏகாதசிப் பாடல் [17 ஜூலை 2024]

உன்னடிக்கென்றே!

இச்செவியும் இந்நாவும் இக்கண்ணும் இக்கரமும்
அச்சுதனே நீயெனக்கிங்(கு) அன்பாலே அளித்திட்ட
பிச்சையென வேயுணர்ந்துன் பேரருளைப் பரவாமல்
இச்சைவழி பின்சென்றே ஏமாந்து போகாமல்
விச்சையினை நீபுகட்டி விடிவுக்கு வழிகாட்டு!
மிச்சமிகும் புண்ணியத்தால் மீண்டுமிவண் பிறப்பெய்தி
எச்செயலும் உன்னடிக்கென்(று) இயங்குகிற வாழ்வுகொடு!
பச்சையிளங் குழவியெனப் பரிந்த(ன்)னைபோல் இரங்குகையே!

நல்வாழ்த்துகள்
கோபால்.
[17/07/2024]VGK

सर्वे जना: सुखिनो भवन्तु ।

Swaminathan Sankaran

unread,
Jul 16, 2024, 11:26:30 PM7/16/24
to santhav...@googlegroups.com
மிக அருமையான கவிதை, திரு. கோபால்.
படிக்கப் படிக்க இனிமை கூடுகிறது.

சங்கரன்  

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtukRPWQw4BLWwxdkzOzSjCLMeW0Pcxu2BOqGtuq5TzjEA%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

NATARAJAN RAMASESHAN

unread,
Jul 16, 2024, 11:38:15 PM7/16/24
to santhav...@googlegroups.com
அருமை திரு கோபால்
very nice flow laden with deep meaning 

              —தில்லைவேந்தன்
..,


குருநாதன் ரமணி

unread,
Jul 17, 2024, 12:11:17 AM7/17/24
to சந்தவசந்தம்
/* பிச்சையென வேயுணர்ந்துன் பேரருளைப் பரவாமல்

இச்சைவழி பின்சென்றே ஏமாந்து போகாமல்
விச்சையினை நீபுகட்டி விடிவுக்கு வழிகாட்டு! */

பரவாமல் (இருக்கும்) விச்சையினை என்று பொருள்படுகிறதே!

பிச்சையென வேயுணர்ந்துன் பேரருளைப் பரவேனே
இச்சைவழி பின்சென்றே ஏமாந்து போகாத

விச்சையினை நீபுகட்டி விடிவுக்கு வழிகாட்டு!
எனலாமோ?

அன்புடன்,
ரமணி

Imayavaramban

unread,
Jul 17, 2024, 12:17:42 AM7/17/24
to santhav...@googlegroups.com
 எச்செயலும் உன்னடிக்கென்(று) இயங்குகிற வாழ்வுகொடு!”

மிக அருமை, திரு. கோபால்!

On Jul 17, 2024, at 8:56 AM, Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:



Arasi Palaniappan

unread,
Jul 17, 2024, 12:23:52 AM7/17/24
to சந்தவசந்தம்
அருமை 

--

Rajja Gopalan

unread,
Jul 17, 2024, 1:03:47 AM7/17/24
to santhav...@googlegroups.com
அருமை

பிச்சையென வேயுணர்ந்துன் பேரருளைப் பரவாத
இச்சைவழி பின்சென்றே ஏமாந்து போகாத

என்றிருந்தால், பரவாமல், போகாமல் எனும் இரு வினைஎச்சங்களும் ஒருநிலையைக் குறிப்பது என்பது தெளிவாகுமோ! 

விச்சையினை நீபுகட்டி விடிவுக்கு வழிகாட்டு

நல்வாழ்த்துகள்

மீ. ரா

Sent from my iPhone

GOPAL Vis

unread,
Jul 17, 2024, 7:42:46 AM7/17/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு சங்கரன்.
கோபால்.

GOPAL Vis

unread,
Jul 17, 2024, 7:43:53 AM7/17/24
to santhav...@googlegroups.com
Thanks, Sri Thillaivendhan
gopal

GOPAL Vis

unread,
Jul 17, 2024, 7:49:52 AM7/17/24
to santhav...@googlegroups.com
Please interpret it this way:
பிச்சையென வேயுணர்ந்துன் பேரருளைப் பரவாமல்

இச்சைவழி பின்சென்றே, ஏமாந்து போகாமல் (இருக்க)
விச்சையினை நீபுகட்டி விடிவுக்கு வழிகாட்டு

நன்றி.
கோபால்.

GOPAL Vis

unread,
Jul 17, 2024, 7:54:58 AM7/17/24
to santhav...@googlegroups.com
நன்றி, திரு ராஜா.
செய்ய வேண்டியதைச் செய்யாமல் (இருந்து) அதனால் ஏமாந்து போய்விடாமல் . . . .
கோபால்.

GOPAL Vis

unread,
Jul 17, 2024, 7:56:26 AM7/17/24
to santhav...@googlegroups.com
நன்றி, திரு இமயவரம்பன்.
கோபால்

On Wed, Jul 17, 2024 at 9:47 AM 'Imayavaramban' via சந்தவசந்தம் <santhav...@googlegroups.com> wrote:
 எச்செயலும் உன்னடிக்கென்(று) இயங்குகிற வாழ்வுகொடு!”

மிக அருமை, திரு. கோபால்!

. . . . 

GOPAL Vis

unread,
Jul 17, 2024, 7:57:28 AM7/17/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு பழனியப்பன்.
கோபால்.

Ram Ramakrishnan

unread,
Jul 17, 2024, 8:24:21 AM7/17/24
to santhav...@googlegroups.com
அருமை, திரு. கோபால்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 16, 2024, at 22:02, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--

GOPAL Vis

unread,
Jul 17, 2024, 8:40:57 AM7/17/24
to santhav...@googlegroups.com
நன்றி, திரு ராம்.
கோபால்

On Wed, Jul 17, 2024 at 5:54 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அருமை, திரு. கோபால்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 16, 2024, at 22:02, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


 ஏகாதசிப் பாடல் [17 ஜூலை 2024]

உன்னடிக்கென்றே!

இச்செவியும் இந்நாவும் இக்கண்ணும் இக்கரமும்
அச்சுதனே நீயெனக்கிங்(கு) அன்பாலே அளித்திட்ட
 . . . . 

GOPAL Vis

unread,
Jul 30, 2024, 10:07:24 PM7/30/24
to santhav...@googlegroups.com
ஏகாதசிப் பாடல் [31 ஜூலை 2024]

சித்தத்தினில் சோதியாய்!

கஞ்சாரீ! கருணைக் கணாள! நினையே
……காணத் தவம் செய்குவார்!
நெஞ்சாலே நிதமும் நினைந்(து) உருகுவார்
……நித்தம் செவித்(து) ஓதுவார்!
துஞ்சாமல் விரதம் துணிந்து, பசியைத்
……துச்சாய்த் துறந்(து) ஆழுவார்!
கெஞ்சாதார் எவரே? கிருட்டிண! எலாம்
……கேளாதவன் போலு(ம்) நீ! ..(1)

[கஞ்சாரி = கண்ணன் (கம்ஸனின் எதிரி); செவித்து = ஜபம் செய்து; 
துஞ்சாமல் =தூங்காமல்; துச்சு = அற்பமானது.]

பூக்கொண்டே, நின பேர் புகன்று, சரணைப்
……பூசித்(து), அருச்சித்திலேன்!
நாக்கொண்(டு), உன் புகழை நவின்றும் இலனே;
……நானோர் அறஞ் செய்திலேன்!
நீக்கின், யான் அழிவேன்; நினக்(கு) அது குறை;
……நீ அன்பின் ஊற்றல்லனோ!
கோக்கென்றே, இடையர் குலத்தில் உழலும்
……கோவிந்தனே! கை விடேல்! ..(2)

[கோக்கென்றே = கோவுக்கு (பசுவிற்கு) என்றே]

கொண்டாடும் பொழுதில், குரங்கு மனமோ
……கூத்தாடும்; ஆடிப் பினே
திண்டாடும் தருணம் திருந்தி, நினையே
……தேடிக் கரைந்(து) ஓல்இடும்!
கண்டாலும் பிளைமேல் கடிந்து விடினும்
……கன்றுக்(கு) இனோர் அன்னையா?
வண்டாரும் கடி மாண் மலர்த் திருமகள்
……வாழ் மார்ப நீயே சரண்! ..(3)

[ஓல் = ஓலம், பிளை = பிள்ளை; இனோர் = இன்னொரு; கடி = நறுமணம்]

காசாலே மருளும், கணக்கில் அருநூல்
……கற்றுத் தெளிந்தோர்க்குமே!
மாசாகும் மனமும், மயங்கி நெறியின்
……மாண்பை மறந்தே கெடும்!
ஆசானே எனை நீ அணைந்(து), அருள்க என்
……ஆன்மா உனைச் சேரவே!
தேசால் என் அறிவின் திரை களைய வா
……தேவா நினைக் காணவே! ..(4)

[மருளும் = மனம் குழம்பும்; கணக்கில் = கணக்கில்லாத; 
அருநூல் = தரும சாத்திர நூல்கள்; அணைந்து = நெருங்கி இருந்து; தேசு = தேஜஸ்]

காலாலே உலகைக் கணக்கிடுபவா
……கண்ணால் அதைக் காப்பவா!
பாலாரும் பணி மேல் படுத்த எழிலே
……பச்சைக் கருங் காயனே!
சேலாய் வந்(து) அரியைச் செயித்து, மறையைச்
……சேமித்த செங்கோலனே!
ஏலாதார் எளியோற்(கு) இரங்கி, அவருக்(கு)
……ஏவல் செயும் தெய்வமே! ..(5)

[பால் = பாற்கடல்; பணி = பாம்பு; காயன் = உடலை உடையவன்; 
சேல் = மீன்; அரி = எதிரி; ஏலாதார் = இயலாதார்]

வாய் ஒன்றைச் சொலுமேல், வணங்கி நினபேர்
……வாராத சொல் வேண்டிடேன்!
நீ ஒன்றே கதியாய், நிலைத்த நினைவாய்,
……நிற்பாய் உளம் தன்னிலே!
வேய் ஒன்றைக் கொடு நீ விளைக்கும் இசை என்
……வேருக்கு நீராக்குவாய்!
தீ ஒன்(று) இத்தனுவைச் சிதைக்கு(ம்) முன், எழாய்
……சித்தத்தினில் சோதியாய்! ..(6)

[வேய் = மூங்கில் (குழல்); கொடு = கொண்டு; விளைக்கும் = விளைவிக்கும்; 
தனு = உடல்; எழாய் = எழுந்தருள்வாய்]

[அடிக்கு 19 உயிர்மெய் எழுத்துகள் கொண்ட சார்தூல விக்ரீடிதம் என்னும் 
ஸம்ஸ்க்ருத விருத்த அமைப்பு.
தானானா தனனா தனானதனனா தானாதனா தானனா
என்னும் சந்தம் பொருந்தும்.]


நல்வாழ்த்துகள்
கோபால்
[31/07/2024]VGK

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 30, 2024, 10:54:45 PM7/30/24
to santhav...@googlegroups.com
பாடல் அமைப்புப் புதுமையாகத் தெரிகிறது. வாழ்த்து. 
> கன்றுக்(கு) இனோர் அன்னையா? - நல்ல வினா!

அனந்த்

GOPAL Vis

unread,
Jul 30, 2024, 11:38:32 PM7/30/24
to santhav...@googlegroups.com
🙏
மிக்க நன்றி. திரு சிவசிவா அவர்கள் இந்தச் சந்தத்தில் அற்புதமான பதிகம் பாடியிருக்கிறார். திரு ரமணி அவர்களின் வடமொழி யாப்பு இழையில் விரைவில் விளக்கத்துடன் காணவிருக்கிறோம்!
[அடியேன் இந்த விருத்த அமைப்பில் ஸம்ஸ்க்ருத சுலோகங்கள் (பஞ்சகம்) எழுதி இருக்கிறேன். இங்கே இடவில்லை.]
கோபால்.

On Wed, Jul 31, 2024 at 8:24 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
பாடல் அமைப்புப் புதுமையாகத் தெரிகிறது. வாழ்த்து. 
> கன்றுக்(கு) இனோர் அன்னையா? - நல்ல வினா!

அனந்த்

On Tue, Jul 30, 2024 at 10:07 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [31 ஜூலை 2024]

சித்தத்தினில் சோதியாய்!

கஞ்சாரீ! கருணைக் கணாள! நினையே
……காணத் தவம் செய்குவார்!
நெஞ்சாலே நிதமும் நினைந்(து) உருகுவார்
……நித்தம் செவித்(து) ஓதுவார்!
துஞ்சாமல் விரதம் துணிந்து, பசியைத்
……துச்சாய்த் துறந்(து) ஆழுவார்!
கெஞ்சாதார் எவரே? கிருட்டிண! எலாம்
……கேளாதவன் போலு(ம்) நீ! ..(1)

. . . . .

Siva Siva

unread,
Jul 31, 2024, 8:26:56 AM7/31/24
to santhav...@googlegroups.com
Are the songs seer-separated in the desired manner?
If so, what meter & vaypAdu?

V. Subramanian 

GOPAL Vis

unread,
Jul 31, 2024, 8:49:43 AM7/31/24
to santhav...@googlegroups.com
Thanks.
As I had given in the footnote, I followed the following pattern, which fits to Saarduula vikreeditam.
தானானா தனனா தனானதனனா தானாதனா தானனா.

But I did not present it in the seer-separated pattern. I have given it in word-separated form for easy reading. 
I felt it reads in the pattern with little difficulty due to puNarchi related changes. I have the seer-separated version, which I can post if needed.

gopal.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jul 31, 2024, 11:48:34 AM7/31/24
to santhav...@googlegroups.com
Thanks. 
Good to mention the meter near the top instead of at the tailend.

V. Subramanian

GOPAL Vis

unread,
Jul 31, 2024, 1:01:53 PM7/31/24
to santhav...@googlegroups.com
Good to mention the meter near the top instead of at the tailend.
That is the custom we generally follow. This time it is an exception. I have some friends, interested in the ekaadasi poems. For them, the structure is not so important and the meaning must be clear. That is the reason I broke the sandhis and gave the structure information at the end, for completeness. I felt this poem was so simple that the sandhis were obvious; hence avoided giving two versions.
gopal.


. . . . . . . . . . . . . . . . .

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 31, 2024, 1:03:36 PM7/31/24
to santhav...@googlegroups.com
If it is not much trouble, both the  seer-separated word-separated forms may be given.

On Wed, Jul 31, 2024 at 8:49 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
Thanks.
As I had given in the footnote, I followed the following pattern, which fits to Saarduula vikreeditam.
தானானா தனனா தனானதனனா தானாதனா தானனா.

But I did not present it in the seer-separated pattern. I have given it in word-separated form for easy reading. 
I felt it reads in the pattern with little difficulty due to puNarchi related changes. I have the seer-separated version, which I can post if needed.

gopal.

On Wed, Jul 31, 2024 at 5:56 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Are the songs seer-separated in the desired manner?
If so, what meter & vaypAdu?

V. Subramanian 


On Tue, Jul 30, 2024 at 10:07 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [31 ஜூலை 2024]

சித்தத்தினில் சோதியாய்!

கஞ்சாரீ! கருணைக் கணாள! நினையே
……காணத் தவம் செய்குவார்!
நெஞ்சாலே நிதமும் நினைந்(து) உருகுவார்
……நித்தம் செவித்(து) ஓதுவார்!
துஞ்சாமல் விரதம் துணிந்து, பசியைத்
……துச்சாய்த் துறந்(து) ஆழுவார்!
கெஞ்சாதார் எவரே? கிருட்டிண! எலாம்
……கேளாதவன் போலு(ம்) நீ! ..(1)

[கஞ்சாரி = கண்ணன் (கம்ஸனின் எதிரி); செவித்து = ஜபம் செய்து; 
துஞ்சாமல் =தூங்காமல்; துச்சு = அற்பமானது.]

N. Ganesan

unread,
Jul 31, 2024, 2:12:11 PM7/31/24
to சந்தவசந்தம்
அருமை.

GOPAL Vis

unread,
Jul 31, 2024, 10:13:48 PM7/31/24
to santhav...@googlegroups.com
OK. The seer-separated form of the poem is given below:

ஏகாதசிப் பாடல் [31 ஜூலை 2024]

[அடிக்கு 19 உயிர்/உயிர்மெய் எழுத்துகள் கொண்ட சார்தூல விக்ரீடிதம் என்னும் ஸம்ஸ்க்ருத விருத்த அமைப்பு.
தானானா தனனா தனானதனனா தானாதனா தானனா   என்னும் வாய்பாட்டில் அமைந்தது.]

சித்தத்தினிற் சோதியாய்!

கஞ்சாரீ கருணைக் கணாளநினையே

……காணத்தவம் செய்குவார்!
நெஞ்சாலே நிதமும் நினைந்துருகுவார்
……நித்தம்செவித் தோதுவார்!
துஞ்சாமல் விரதம் துணிந்துபசியைத்
……துச்சாய்த்துறந் தாழுவார்!
கெஞ்சாதார் எவரே கிருட்டிணவெலாம்
……கேளாதவன் போலுநீ! ..(1)

பூக்கொண்டே நினபேர் புகன்றுசரணைப்
……பூசித்தருச் சித்திலேன்!
நாக்கொண்டுன் புகழை நவின்றுமிலனே

……நானோர்அறஞ் செய்திலேன்!
நீக்கின்யான் அழிவேன் நினக்கதுகுறை
……நீயன்பின்ஊற் றல்லனோ!
கோக்கென்றே இடையர் குலத்திலுழலும்
……கோவிந்தனே கைவிடேல்! ..(2)

கொண்டாடும் பொழுதிற் குரங்குமனமோ
……கூத்தாடும்ஆ டிப்பினே
திண்டாடும் தருணம் திருந்தி நினையே
……தேடிக்கரைந் தோலிடும்!
கண்டாலும் பிளைமேற் கடிந்துவிடினும்
……கன்றுக்கினோர் அன்னையா?

வண்டாரும் கடிமாண் மலர்த்திருமகள்
……வாழ்மார்பநீ யேசரண்! ..(3)

காசாலே மருளும் கணக்கிலருநூல்

……கற்றுத்தெளிந் தோர்க்குமே!
மாசாகும் மனமும் மயங்கிநெறியின்

……மாண்பைமறந் தேகெடும்!
ஆசானே எனைநீ அணைந்தருள்கவென்

……ஆன்மாஉனைச் சேரவே!
தேசாலென் னறிவின் திரைகளையவா

……தேவாநினைக் காணவே! ..(4)

காலாலே உலகைக் கணக்கிடுபவா
……கண்ணாலதைக் காப்பவா!
பாலாரும் பணிமேல் படுத்தவெழிலே

……பச்சைக்கருங் காயனே!
சேலாய்வந் தரியைச் செயித்துமறையைச்
……சேமித்தசெங் கோலனே!
ஏலாதார் எளியோற்(கு) இரங்கிஅவருக்(கு)

……ஏவல்செயும் தெய்வமே! ..(5)

வாயொன்றைச் சொலுமேல் வணங்கிநினபேர்
……வாராதசொல் வேண்டிடேன்!
நீயொன்றே கதியாய் நிலைத்தநினைவாய்
……நிற்பாய்உளந் தன்னிலே!
வேயொன்றைக் கொடுநீ விளைக்குமிசையென்

……வேருக்குநீ ராக்குவாய்!
தீயொன்(று)இத் தனுவைச் சிதைக்கு முனெழாய்
……சித்தத்தினிற் சோதியாய்! ..(6)

நல்வாழ்த்துகள்
கோபால்.

Siva Siva

unread,
Jul 31, 2024, 10:33:42 PM7/31/24
to santhav...@googlegroups.com
Thanks.

GOPAL Vis

unread,
Aug 15, 2024, 10:43:39 PM8/15/24
to santhav...@googlegroups.com
ஏகாதசிப் பாடல் [16 ஆகஸ்ட் 2024]

சிங்கமுகத் தெய்வம்
[பதின்சீர் விருத்தம்]   [காய், காய், காய், மா, தேமா x 2]

அறமென்சொல், பொருளெனதே, அகிலமென்றன் அடிமை, என்றான்!
……அமரரென்றன் கிங்கரர்கள், ஆண்டவன்யான், அறிக வென்றான்!
துறவியர்காள் முனிவரர்காள் தோத்திரங்கள் எனையே செய்வீர்!
……தொண்டுசெய மறுப்புமக்குத் தோன்றிலுந்தம் கூற்று நானே!
பிறரார்க்கும் அவியில்லை, பிண்டமில்லை, பூசை குற்றம்!
……பிரமம்பொய், வேதம்பொய், பெருமான்பொய்! யானே வல்லேன்!
இறவியில்லேன் அதனாலும் இதனாலும் என்றே ஆர்த்த 
……இரணியனுக்(கு) இறுதிதர இதுவதுவற்(று) எழுந்த கோனே! ..(1)
     [கிங்கரர் = வேலையாட்கள்]

கொடுங்கூற்றின் கைக்குவந்த குங்குமம்போல், கோபங் கொண்ட
……கொலையாளி ஏந்திவிட்ட கோலமிகு பீலி யைப்போல்,
நடுங்கவிடும் புயலிடையே நலியாத சோதி யைப்போல்,
……நச்சரவின் மத்தகத்தில் நகையாகும் மாணிக் கம்போல்,
சுடுந்தீயில் சிக்கிமின்னும் சொன்னம்போல், அசுரன் மைந்தாய்ச்
……சொல்லெண்ணஞ் செயலெல்லாந் தும்பொட்டாத் தூய்மை யாக, 
இடும்பைகட்(கு) அஞ்சாத, இலக்கணத்தின் சான்று மாக,
……இரணியனின் குலக்கொழுந்தை இட்டநின சால்பு மென்னே! ..(2)
    [மைந்து = பிள்ளை; தும்பு = குற்றம்]

அரண்மனைக்கற் றூணுடைத்(து)ஓர் அடங்காத வெஞ்சி னத்தின்
……அக்கினிபாய் வெள்ளம்போல், அரவமிட்டுப் பெயர்வி ளங்கா
நரம்பகிரும் அரிமாவாய், நாத்தொங்கப் பற்கள் மின்ன,
……நகங்கொண்(டு)அந் நாத்திகனை மடிகிடத்திச் சந்திக் காலம்
உரங்கிழித்துப் பெருக்கெடுத்த உதிரத்தைச் சுவைத்த ருந்தி,
……உம்பர்க்கும் உலகோர்க்கும் உவப்பளித்து,ப் பிரக லாதன்
சிரந்தணிந்து பதம்பணியச் சினமடங்கித் தேவி யோடு
……சிரிப்பருளும் சிங்கமுகத் தெய்வமெனப் புரப்போய் போற்றி! ..(3)
      [அரவம் = ஒலி; நரம் = மானிடம்; உரம் = மார்பு] 

சங்குகதை இருகரத்தில், சக்கரங்காண் மூன்றாம் அங்கை,
……சகங்காக்க அபயவரம் தந்திடுமோர் கங்க ணக்கை!
செங்கமலப் பெருமாட்டி திருமகளைத் தொடையின் மீது
……சிங்கார மாயணைத்துச் சிங்கத்தின் முறுவல் பூத்துப்
பொங்கியெழும் கருணையாலே பூவுலகைக் காக்கும் பார்வை! 
……பூத்தொடைகள் துளவமொடு பூண்டபல மணியின் மின்னல்!
அங்கவெழில் மனங்கொள்ளும் ஆனாலும் அடியார் யாங்கள்
……அனவரதம் பறையிறைஞ்சும் அடைக்கலமுன் சரணந் தானே! ..(4)
    [பறை = திருவருள்]

நல்வாழ்த்துகள்
கோபால்
[16/08/2024]VGK

सर्वे जना: सुखिनो भवन्तु ।
On Wed, Jul 31, 2024 at 7:37 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [31 ஜூலை 2024]

சித்தத்தினில் சோதியாய்!

கஞ்சாரீ! கருணைக் கணாள! நினையே
……காணத் தவம் செய்குவார்!
நெஞ்சாலே நிதமும் நினைந்(து) உருகுவார்
……நித்தம் செவித்(து) ஓதுவார்!
துஞ்சாமல் விரதம் துணிந்து, பசியைத்
……துச்சாய்த் துறந்(து) ஆழுவார்!
கெஞ்சாதார் எவரே? கிருட்டிண! எலாம்
……கேளாதவன் போலு(ம்) நீ! ..(1)

.. . . . . . . .

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 15, 2024, 11:06:18 PM8/15/24
to santhav...@googlegroups.com
யாப்பும் அமைப்பும் கருத்தும் அழகு. 
அனந்த்
>> இரணியனுக்(கு) இறுதிதர இதுவதுவற்(று) எழுந்த கோனே -.> இது ஒருவகையான ’நேதி நேதி’! (நேதி - ந இதி, இதுவன்று)

குருநாதன் ரமணி

unread,
Aug 15, 2024, 11:44:05 PM8/15/24
to சந்தவசந்தம்
அருமை, திரு. கோபால்.
ரமணி

GOPAL Vis

unread,
Aug 16, 2024, 5:31:36 AM8/16/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு அனந்த்.
>> இரணியனுக்(கு) இறுதிதர இதுவதுவற்(று) எழுந்த கோனே -.> இது ஒருவகையான ’நேதி நேதி’! (நேதி - ந இதி, இதுவன்று)
interesting!
கோபால்.

--  

GOPAL Vis

unread,
Aug 16, 2024, 5:32:46 AM8/16/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ரமணி.
கோபால்.

On Fri, Aug 16, 2024 at 9:14 AM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:
அருமை, திரு. கோபால்.
ரமணி

On Friday, August 16, 2024 at 8:36:18 AM UTC+5:30 VETTAI ANANTHANARAYANAN wrote:
யாப்பும் அமைப்பும் கருத்தும் அழகு. 
அனந்த்
>> இரணியனுக்(கு) இறுதிதர இதுவதுவற்(று) எழுந்த கோனே -.> இது ஒருவகையான ’நேதி நேதி’! (நேதி - ந இதி, இதுவன்று)
On Thu, Aug 15, 2024 at 10:43 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [16 ஆகஸ்ட் 2024]

சிங்கமுகத் தெய்வம்
[பதின்சீர் விருத்தம்]   [காய், காய், காய், மா, தேமா x 2]

அறமென்சொல், பொருளெனதே, அகிலமென்றன் அடிமை, என்றான்!
……அமரரென்றன் கிங்கரர்கள், ஆண்டவன்யான், அறிக வென்றான்!

Ram Ramakrishnan

unread,
Aug 16, 2024, 8:09:50 AM8/16/24
to santhav...@googlegroups.com
அருமை, திரு. கோபால்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 15, 2024, at 22:43, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Aug 16, 2024, 8:21:14 AM8/16/24
to santhav...@googlegroups.com
நன்றி, திரு ராம்.
கோபால்.

On Fri, Aug 16, 2024 at 5:39 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அருமை, திரு. கோபால்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 15, 2024, at 22:43, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


ஏகாதசிப் பாடல் [16 ஆகஸ்ட் 2024]

சிங்கமுகத் தெய்வம்
[பதின்சீர் விருத்தம்]   [காய், காய், காய், மா, தேமா x 2]

அறமென்சொல், பொருளெனதே, அகிலமென்றன் அடிமை, என்றான்!
……அமரரென்றன் கிங்கரர்கள், ஆண்டவன்யான், அறிக வென்றான்!
. . . . . . . . . .

GOPAL Vis

unread,
Aug 28, 2024, 9:35:25 PM8/28/24
to santhav...@googlegroups.com
ஏகாதசிப் பாடல் [29 ஆகஸ்ட் 2024]

வண்ணச் சந்தம் (103)
[தனதன தனனந் தனதன தனனந்
தனதன தனனந் தனதான]

பரமபதம் அருளும் பெருமான்!

திருவினை அகலந் தனிலணி யெழிலுந்
……திருவடி யழகுந் துளவோடு
……தினமென திதயந் தனிலுன துருவந்
……தெரியும னுபவம் பெறுவேனோ!

கருவினி லுதயம் பெறுமது சமயங்
……கலியுற வடையுங் கசடேறக்
……கயமையு நிறையுங் கனவிலு மவலங்
……கணமுன நினைவின் பிறகேது?

சருவவு லகமுன் கழலடி யுழலுந்
……தருமவி தியுமுன் தயையாகும்!
……சமரிலு மினியன் களவிலு மளியன்
……சரணடை யரியுஞ் சயமாள்வார்!

பருவலு கருடன் களமம ரரசென்
……பயமற அபயம் தருவோனே!
……பருவத சிகரந் தனிலெழு வடிவம்
……பரபத மருளும் பெருமானே!
•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
சொற்பிரிவு; பொருள்:

திருவினை அகலம் தனில் அணி எழிலும்,
……திருவடி அழகும், துளவோடு,
……தினம் எனது இதயந்தனில் உனது உருவம்
……தெரியும் அனுபவம் பெறுவேனோ!

[திருமகளை மார்பினில் அணியும் உன் எழிலும், உன் திருவடிகளின் அழகும், துளசியும், கூடிய உன் உருவம் தினமும் எனது இதயத்தில் காணும் அனுபவம் எனக்குக் கிட்டுமோ!
அகலம் = மார்பு; துளவு = துளசி]

கருவினில் உதயம் பெறும் அது சமயம்,
……கலி உறவு அடையும்; கசடு ஏறக்
……கயமையும் நிறையும்; கனவிலும் அவலம்;
……கணம் உன நினைவின் பிறகு ஏது?

[கருவில் உருவாகும் பொழுதே கலியின் உறவைப் பெற்று, மாசு பெருகுவதால், கயமையும் (மனிதருக்குப்) பெருகும்; கனவில் கூட அவல உணர்வே மிகும். ஒரு கணம் உன்னை நினைத்த பிறகு அவை இருக்காது!
உன = உன்னுடைய]

சருவ உலகம் உன் கழலடி உழலும்!
……தரும விதியும் உன் தயை ஆகும்!
……சமரிலும் இனியன் களவிலும் அளியன்
……சரண் அடை அரியும் சயம் ஆள்வார்!

[எல்லா உலகங்களும் உன் திருவடிகளைச் சுற்றுவன! தருமமும், விதிகளும் உன் தயவால் ஆவன! நீ போரிலும் இனியவனாய், களவிலும் கொடையாளியாய் இருப்பவன்! உன்னைச் சரணம் அடைந்தால் உன் எதிரிகளுயும் வெற்றி பெறுவர்!
சருவம் = எல்லாம்; உழலும் = சுழலும்; சமர் = போர்; அளியன் = வள்ளல்; அரி = எதிரி; சயம் = ஜயம்]

பரு வலு கருடன் களம் அமர் அரச! என்
……பயம் அற அபயம் தருவோனே!
……பருவத சிகரம் தனில் எழு வடிவம்!
……பரபதம் அருளும் பெருமானே!

[பருத்த வலுவான கருடனின் கழுத்தில் அமரும் அரசனே! என் பயம் நீங்க அபயம் தருபவனே! மலையின் உச்சியில் எழுந்த (நின்ற) வடிவம் உடையவனே! பரம பதம் அருள்கின்ற பெருமானே!
களம் = கழுத்து; பரபதம் = பரமபதம்;      அரச என் = அரசென் (தொகுத்தல் விகாரம்)]


நல்வாழ்த்துகள்
கோபால்
[29/08/2024]

सर्वे जना: सुखिनो भवन्तु ।
ReplyForward

On Fri, Aug 16, 2024 at 8:13 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [16 ஆகஸ்ட் 2024]

சிங்கமுகத் தெய்வம்
[பதின்சீர் விருத்தம்]   [காய், காய், காய், மா, தேமா x 2]

அறமென்சொல், பொருளெனதே, அகிலமென்றன் அடிமை, என்றான்!
……அமரரென்றன் கிங்கரர்கள், ஆண்டவன்யான், அறிக வென்றான்!
துறவியர்காள் முனிவரர்காள் தோத்திரங்கள் எனையே செய்வீர்!
……தொண்டுசெய மறுப்புமக்குத் தோன்றிலுந்தம் கூற்று நானே!
பிறரார்க்கும் அவியில்லை, பிண்டமில்லை, பூசை குற்றம்!
……பிரமம்பொய், வேதம்பொய், பெருமான்பொய்! யானே வல்லேன்!
இறவியில்லேன் அதனாலும் இதனாலும் என்றே ஆர்த்த 
……இரணியனுக்(கு) இறுதிதர இதுவதுவற்(று) எழுந்த கோனே! ..(1)
     [கிங்கரர் = வேலையாட்கள்]

. . . . . . . . . .

M. Viswanathan

unread,
Aug 28, 2024, 9:58:22 PM8/28/24
to santhav...@googlegroups.com

ஆஹா..அருமை..அருமை.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Aug 29, 2024, 8:27:39 AM8/29/24
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. கோபால்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 28, 2024, at 21:35, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 29, 2024, 10:44:09 PM8/29/24
to santhav...@googlegroups.com
>> களவிலு மளியன்
அருமை!

அனந்த்

On Wed, Aug 28, 2024 at 9:35 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [29 ஆகஸ்ட் 2024]


பரமபதம் அருளும் பெருமான்!

GOPAL Vis

unread,
Aug 29, 2024, 11:09:40 PM8/29/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ராம்.
கோபால்.

On Thu, Aug 29, 2024 at 5:57 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மிக அருமை, திரு. கோபால்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 28, 2024, at 21:35, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


ஏகாதசிப் பாடல் [29 ஆகஸ்ட் 2024]

வண்ணச் சந்தம் (103)
[தனதன தனனந் தனதன தனனந்
தனதன தனனந் தனதான]

பரமபதம் அருளும் பெருமான்!

திருவினை அகலந் தனிலணி யெழிலுந்
……திருவடி யழகுந் துளவோடு
……தினமென திதயந் தனிலுன துருவந்
……தெரியும னுபவம் பெறுவேனோ!

GOPAL Vis

unread,
Aug 29, 2024, 11:10:52 PM8/29/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு அனந்த்.
கோபால்.

. . . .

குருநாதன் ரமணி

unread,
Aug 30, 2024, 9:36:57 AM8/30/24
to சந்தவசந்தம்
கோபால் அவர்கள் 29 ஆகஸ்ட் 2024 அன்று புனைந்த ஏகாதசிப் பாடலில் பயன்படுத்திய திருப்புகழ் சந்தக் குழிப்பில் அடியேன் எழுதிய பாடல் கீழே.

#ரமணி_திருப்புகழ்
சிவனாரின் குடும்பம்!
(வண்ணப் பாடல்: குருநாதன் ரமணி)

திருப்164. 0389. தனதன தனனம் | தனதன தனனம் | தனதன தனனம் —— தனதான

பிள்ளையார்
கடவயி றகலம் கணிலுறு கவனம்
. . கரமுறு கவளம் —— களியாமே
. கருணையி னுருவம் சிவனது தநையன்
. . கழலுறு விழியும் —— குளமாமே.
  [கடம்: குடம் போன்ற தாளக் கருவி; கணில்: கண்ணில் என்பதன் இடைக்குறை; கவளம்: மோதகம்; கழல்: பாதம்]

முருகர்
கடலலை புரளும் பழமையி னுருவம்
. . கழல்களில் விழுமுன் —— குமரேசா
. கனிவுறு மலையும் கருணயி லுறையும்
. . கடலுறு தளியும் —— உனதாமே.
  [கழல்களின் விழுமுன்; உன் கழல்களில் விழும் என்று அன்வயம்; தளி: கோவில்; திருச்செந்தூர் தவிர்த்து முருகனின் மற்ற கோவில்கள் மலைமீது இருப்பது காண்க.]

ஈசர்
கடலலை யுருளும் கனலொடு புரளும்
. . கருவிட மிடறின் —— கறையாகும்
. களிறத னுரியும் புலியத ளரையும்
. . கருவிட மரியும் —— சிவனாமே.
  [மிடறின்: மிடற்றின் என்பதன் இடைக்குறை; மிடறு: கழுத்து; அரை: இடுப்பு; களிற்றுரி: மேலே அணிவது; புலியதள்: இடுப்பில் அணிவது என்று பொருள்; அரி: பாம்பு]

சக்தி
திடமொடு பொழியும் சுரநதி யொழுகும்
. . திருவுட லிணையும் —— பரையாமே
. திமிருட னலையும் சுடுவன நடனம்
. . தினவுக ளகலும் —— கதியாமே.
  [சுரநதி: கங்கை; பரை: தற்பரை, பார்வதி; ]

30 ஆக. 2024

★★★
திருப்புகழ் 389 விரகொடு வளை  (திருவருணை)
தனதன தனனம் தனதன தனனம்
     தனதன தனனம் ...... தனதான

விரகொடு வளைசங் கடமது தருவெம்
   பிணிகொடு விழிவெங் ...... கனல்போல
 வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்
   றெனவிதி வழிவந் ...... திடுபோதிற்

கரவட மதுபொங் கிடுமன மொடுமங்
   கையருற வினர்கண் ...... புனல்பாயுங்
 கலகமும் வருமுன் குலவினை களையுங்
   கழல்தொழு மியல்தந் ...... தருள்வாயே

பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்
   படவர வணைகண் ...... டுயில்மாலம்
 பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்
   பயமற விடமுண் ...... டெருதேறி

அரவொடு மதியம் பொதிசடை மிசைகங்
   கையுமுற அனலங் ...... கையில்மேவ
 அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
   கருணையில் மருவும் ...... பெருமாளே.

★★★★★

GOPAL Vis

unread,
Sep 15, 2024, 3:07:58 AM9/15/24
to santhav...@googlegroups.com
ஏகாதசிப் பாடல் [14 செப்டம்பர் 2024]

[பதின்சீர் விருத்தம்: (காய், மா, மா, மா, தேமா)  x 2]

நீயே நல்கு!

நானுன்னை நினைக்க நேரம் நீயே நல்கி
……நாயேனிப் பவங்க டக்க நாவா யாகித்
தானிந்தப் பிறப்பி றப்பைத் தணிக்க வேண்டும்!
……தன்னாலே முடிந்து போமோ சன்மச் சுற்று?
தேனுன்றன் நாம மென்று தெரிந்த போதும்
……தேடியலைந் தல்ல வற்றைத் தேரும் உள்ளம்!
கானுக்குள் கட்டை போன்று கருகும் முன்னர்
……கண்ண!அருள் தீயோ டென்னைக் கரைத்துக் காவே!


நல்வாழ்த்துகள்
கோபால்
[14:09/2024]VGK

GOPAL Vis

unread,
Oct 12, 2024, 10:06:29 PM10/12/24
to santhav...@googlegroups.com
ஏகாதசிப் பாடல் [13 அக்டோபர் 2024]

சீரங்கன் பேர்!
(நேரிசை வெண்பா)

உந்தி மலரில் உலகம் படைத்தவன்!
இந்திரை தாங்கும் இணையடிகள்! - சந்திர
சூரியர் கண்கள்! துவளம் அணிமார்பு!
காரிணை மேனிக் கவின்! ..(1)

[இந்திரை = திருமகள்; கார் = மேகம்; கவின் = அழகு]

பாலின் அலையூஞ்சல், பாம்பே கலைமஞ்சம்!
மாலின் துயிலவன் மாமாலம்! - காலே
அரணெனத் தாழ்ந்திடும் அம்பர் சிரங்கள்
கரவுசெய் மென்மைக் கழல்! ..(2)

[மாமாலம் = உண்மையற்றது; அம்பர் = தேவர்கள்; கரவுசெய் = மறைக்கிற.]

சக்கரம் கொண்டொருகை, சங்கு பிடித்தொன்று!
தெக்கணம் நோக்கித் திருவடிகள்! - அக்கரம்
எட்டுள் அடங்கி இரங்கி இருந்தருள்
மட்டற ஈயும் மலர்வு! ..(3)

[அக்கரம் = எழுத்து]

இருமொழி வேதம் இசைக்க மகிழ்ந்து
திருதரும் தென்னகத் தெய்வம்! - நிருமலப்
புன்னகை ஆரப் பொலிமுகம்! மார்பினில்
அன்னை அமர்ந்த அழகு! ..(4)

[இருமொழி = தமிழ், ஸம்ஸ்க்ருதம்; திரு = செல்வம்]

கோசல மன்னர் குலங்காத்துச் சிங்களர்
தேசம் பெறவொணாச் சீரங்க வாசனாய்க்
காவிரி ஆற்றின் கரையை உகந்(து)அவண்
கோவிலுங் கொண்டநம் கோ! ..(5)

ஆரா வமுதென ஆழ்வார் சுவைத்தது
நாரா யணவென்னும் நாமந்தான்! - ஓரா(து)
உதட்டால் உறைக்கினும் ஊழ்போய்ப் பரமன்
பதத்தைப் பெறுதல் பயன்! ..(6)

[ஓராது = பொருளை அறிந்து கொள்ளாமல்]

நாரதன் நாவில் நலியா தினித்திடும்
பேரது சொல்வதே பே(று)!அது தாரகம்!
மண்ணின் பிடிவிட்டு மண்ணாள் மணாளன்கார்
வண்ணனை எட்டும் வழி! ..(7)

[மண்ணாள் = பூமி தேவி]

கோடிப் பிறப்புகளில் கூட்டிய பாவமும்
தேடிப் பெருக்கிய தீநட்பும் - பீடித்த
நோயின் வலியும் நொடியில் மறைந்தொழியும்
வாயில் அவன்பேர் வர! ..(8)

கலியென்று சொல்லிக் கவலுறார்; வீணே
கிலிகொள்ளார்; ஞானவொளி கிட்டப் பொலிவார்,
செவியால் நுகர்வதும் செய்வதும் நாவால்
நவில்வதும் நாரணனா னால்! ..(9)

[கவல் = கவலை; கிலி = பயம்]

செல்வமும் நட்பும் சிதறும், சிதைவுறும்;
கல்வி மறக்கும் கடைநாளில்! - சொல்லுவம்!
சீரங்கன் பேரன்றிச் சீர்மங்காப் பேறில்லை!
நேரங்(கு) இலாத நெறி! ..(10)

[நேர் = இணை, சமம்]
[ஶ்ரீரங்கநாதனின் பேரைச் சொல்வதற்கு இணையான இன்னொரு தருமநெறி இல்லை!]


நல்வாழ்த்துகள்
கோபால்.
[13/10/2024]VGK

सर्वे जना: सुखिनो भवन्तु ।

குருநாதன் ரமணி

unread,
Oct 12, 2024, 10:43:54 PM10/12/24
to சந்தவசந்தம்
சீரங்கன் வெண்பாக்கள் யாவும் சிறப்பு.
துவளம் என்றால் துளசி என்ற பொருள் இல்லையே? துளசி என்றே சொல்லலாமோ?

அன்புடன்,
ரமணி

இமயவரம்பன்

unread,
Oct 13, 2024, 12:13:15 AM10/13/24
to santhav...@googlegroups.com
"ஆரா வமுதென ஆழ்வார் சுவைத்தது
நாரா யணவென்னும் நாமந்தான்!

அருமையான அடிகள்! திருமங்கை ஆழ்வாரின் இந்தப் பாசுர வரிகளை நினைவுறுத்துகிறது:

“எனக்கென்றும் -  
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திருநாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் - நமோ நாராயணமே!'

இமயவரம்பன்

unread,
Oct 13, 2024, 12:15:08 AM10/13/24
to சந்தவசந்தம்
‘துளவம்' என்று இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
துளசியை ஆழ்வார்கள் துளவம் என்றும் துழாய் என்று குறிப்பிடுவார்கள்.

-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Oct 13, 2024, 1:43:52 AM10/13/24
to santhav...@googlegroups.com
நன்றி. 
துளவம் என்பது கைத்தவறுதலால் துவளம் என்று அச்சாகியது. சுட்டியதற்கு நன்றி.
துளசி என்றே கூட இருந்திருக்கலாம்.
ஆனால் துளவமணிமார்பு என்றாகும் போது, துளவமும் மணிகளும் அணிந்த மார்பு என்ற பொருளும் தொனிக்கும்.
துளவ மணிமார்பு! என்று மாற்றிக் கொண்டேன்.
கோபால்.

GOPAL Vis

unread,
Oct 13, 2024, 1:46:17 AM10/13/24
to santhav...@googlegroups.com
நன்றி.
ஆழ்வார்கள் அனுபவித்தார்கள். அடியேன் சொற்களை அடுக்கி வெண்பா எழுதுகிறேன்.
கோபால்.

GOPAL Vis

unread,
Oct 13, 2024, 1:50:21 AM10/13/24
to santhav...@googlegroups.com
ஆம். நீங்கள் சொல்வது சரியே. 
சொற்களைச் சேர்த்துக் கட்டுகையில் துளவமாலை துவளலானது.
நன்றி.
கோபால்

Kaviyogi Vedham

unread,
Oct 13, 2024, 11:46:45 AM10/13/24
to santhav...@googlegroups.com
கோபால் மிக அற்புதமான  பாட்டு. வாழ்க,
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 13, 2024, 2:48:55 PM10/13/24
to santhav...@googlegroups.com

அருமையான வெண்பாத் துதி.

அனந்த்

திருதரும் – திருத்தரும்

தேசம் பெறவொணா தேசம் பெயரவொணா?

GOPAL Vis

unread,
Oct 14, 2024, 6:17:16 AM10/14/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு யோகியார்.
கோபால்

On Sun, Oct 13, 2024 at 9:16 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
கோபால் மிக அற்புதமான  பாட்டு. வாழ்க,
 யோகியார்

On Sat, Oct 12, 2024 at 10:06 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [13 அக்டோபர் 2024]

சீரங்கன் பேர்!
(நேரிசை வெண்பா)

உந்தி மலரில் உலகம் படைத்தவன்!
இந்திரை தாங்கும் இணையடிகள்! - சந்திர
சூரியர் கண்கள்! துவளம் அணிமார்பு!
காரிணை மேனிக் கவின்! ..(1)

[இந்திரை = திருமகள்; கார் = மேகம்; கவின் = அழகு]
. . . . 

GOPAL Vis

unread,
Oct 14, 2024, 6:49:57 AM10/14/24
to santhav...@googlegroups.com

அருமையான வெண்பாத் துதி.     நன்றி.

திருதரும் – திருத்தரும்         திருத்திக் கொள்கிறேன்.

தேசம் பெறவொணா – தேசம் பெயரவொணா?   

பெயரவொண்ணாச் சீரங்கன் அல்லன். அவனால் ஒண்ணாததில்லை.

சிங்களத் தேசத்தால் பெறவொண்ணாதவன் என்கிற பொருள் என் மனத்தில் இருந்தது.

மேலும் பிழைகள் —> திருத்தங்கள:
துவளம் —> துளவம்
உதட்டால் உறைக்கினும் —> உதட்டால் உரைக்கினும்.

கோபால்.

GOPAL Vis

unread,
Oct 27, 2024, 9:02:33 PM10/27/24
to santhav...@googlegroups.com
ஏகாதசிப்பாடல் [28 அக்டோபர் 2024]
வண்ணச் சந்தம் (108)
[தனதான தந்த தனதான]

அயமாய் அமர்ந்த அறிவே!
[ஹயமுகனாய் வீற்றிருக்கும் ஞானஸ்வரூபனே!]

புயலாநு ழைந்து நெறிசாடும்
……புலர்வேர்க ளைந்து நலமீயக்
கயலாமை பன்றி அரியாகிக்
……கசடோட வென்ற திறனேவன்
துயரேமி குந்து வருகாலைத்
……துளவால்ம கிழ்ந்த ருளுவோனே
அயமாய மர்ந்த அறிவேமா
……அருகேஅ ணைந்த பெருமானே!
•~•~•~•~•~•~•~•~
சொற்பிரிவு; பொருள்:

புயலா நுழைந்து நெறி சாடும்
……புலர் வேர் களைந்து நலம் ஈயக்
கயல், ஆமை, பன்றி, அரி ஆகிக்
……கசடு ஓட வென்ற திறனே! வன்
துயரே மிகுந்து வரு காலைத்
……துளவால் மகிழ்ந்து அருளுவோனே!
அயமாய் அமர்ந்த அறிவே! மா
……அருகே அணைந்த பெருமானே!

[நெறி = தருமம்; சாடும் = நிந்திக்கும், அழிக்கும்; புலர் = புல்லர், தீயவர்; துளவு = துளசி; மா = திருமகள்]
[புயலாக உலகில் நுழைந்து தரும நெறிகளை வதைக்கும் தீயவர்களை வேரோடு அழித்து, நலத்தை நிறுவ, மீன், ஆமை, பன்றி, சிங்கம் போன்ற வடிவங்களில் தோன்றித் தீமைகளை ஓட விரட்டுகிற திறனானவனே! வன்மையான துயர் மிகுந்து வரும் சமயம் உனக்குச் சமர்ப்பிக்கும் துளசியால் மகிழ்ச்சி கொண்டு அருள்பவனே! குதிரை முகத்தோடு அமர்ந்திருக்கும் ஞான ஸ்வரூபனே! திருமகளின் அருகில் நெருங்கி வீற்றிருக்கும் பெருமானே!]

நல்வாழ்த்துகள்
கோபால் 
[28/10/2024]VGK

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 27, 2024, 10:03:10 PM10/27/24
to santhav...@googlegroups.com
விலங்குமுகங் கொண்ட பெருமானின் மேலாம்

நலங்கள் விதந்தவிதம் நன்று.

...  அனந்த்


On Sun, Oct 27, 2024 at 9:02 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப்பாடல் [28 அக்டோபர் 2024]
வண்ணச் சந்தம் (108)
[தனதான தந்த தனதான]

அயமாய் அமர்ந்த அறிவே!
[ஹயமுகனாய் வீற்றிருக்கும் ஞானஸ்வரூபனே!]

புயலாநு ழைந்து நெறிசாடும்
……புலர்வேர்க ளைந்து நலமீயக்
கயலாமை பன்றி அரியாகிக்
……கசடோட வென்ற திறனேவன்
துயரேமி குந்து வருகாலைத்
……துளவால்ம கிழ்ந்த ருளுவோனே
அயமாய மர்ந்த அறிவேமா
……அருகேஅ ணைந்த பெருமானே!
•~•~•~•~•~•~•~•~
சொற்பிரிவு; பொருள்:

புயலா நுழைந்து நெறி சாடும்
……புலர் வேர் களைந்து நலம் ஈயக்
கயல், ஆமை, பன்றி, அரி ஆகிக்
……கசடு ஓட வென்ற திறனே! வன்
துயரே மிகுந்து வரு காலைத்
……துளவால் மகிழ்ந்து அருளுவோனே!
அயமாய் அமர்ந்த அறிவே! மா
……அருகே அணைந்த பெருமானே!

GOPAL Vis

unread,
Oct 27, 2024, 10:47:50 PM10/27/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
கோபால்.

Ram Ramakrishnan

unread,
Oct 28, 2024, 8:33:37 AM10/28/24
to santhav...@googlegroups.com
அரியின் மேற் பாடிய பாடல் அருமை, திரு. கோபால்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 27, 2024, at 21:02, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Oct 29, 2024, 9:57:37 AM10/29/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
கோபால்

GOPAL Vis

unread,
Nov 11, 2024, 11:04:38 PM11/11/24
to santhav...@googlegroups.com
ஏகாதசிப் பாடல் [12 நவம்பர் 2024]
(நேரிசை வெண்பா)

வாவென் மடிக்கு!

குருவென்(று) அழைப்பர் குழந்தை நினையே
திருவைப் பெறநின் திருமுன் வருவோர்!
ஒருமுறை உன்றன் உருவெழில் கண்டார்
நிருமலர் ஆவர் நிசம்! ..(1)

வாயு புரத்தினில் வாழ்கிற குட்டிச்
சேயுனைச் சிந்தனை செய்தவர் - நோயுறும்
மண்ணிற்கு மீள்வரோ மற்றோரை நாடுவரோ
எண்ணத்தில் நீயே இனிப்பு! ..(2)

அப்பனென்(று) ஊரார் அழைக்கக் களித்தவா(று)
எப்பொழுதும் துள்ளும் இளங்கன்றே! - ஒப்பிலாத்
தெய்வமே உன்னடியிற் சேவித்(து) இருப்பதினும்
செய்வதற்(கு) ஏதினிது செப்பு! ..(3)

வாதா லயநின்பேர் வாய்க்குத் திருவமுதம்
காதாலும் கேட்கக் கருப்பங்கள்! - ஓதாக்
கணங்கள் உறங்கிக் களவில் இழந்த
பணம்போல் படுநட்டம், பாழ்! ..(4)

பட்டத் திரியின் பனுவல் மகிழ்ந்தேற்றுக்
கட்டம் களைந்தவனே கண்ணப்ப! - கிட்டப்
பெறுவது நன்னலப் பேறோ இடரோ
வறுமையோ நீதந்த வாறு! ..(6)

மழலை ஒலிகள் மறையாகும்! மண்ணிற்
பழகிப் பிடிப்பவை பார்கள்! - குழவிநின்
சித்தப் படியே செகத்தின் விதிகள்!இங்(கு)
அத்தனையும் நீயன்றி ஆர்? ..(7)

பகவதியின் சோதர! பாலை அருந்த
மகவென வாவென் மடிக்கு! - சுகமெனில்
நின்னடி மலர்களென் நெஞ்சிற் பதிவதே!
இன்னே தவழ்ந்துவா இங்கு! ..(8)


நல்வாழ்த்துகள்
கோபால்
[12/11/2024]

GOPAL Vis

unread,
Nov 12, 2024, 6:09:53 AM11/12/24
to santhav...@googlegroups.com
முன்னிடுகையில் விடுபட்டுப் போன வெண்பா:

பஞ்சத்தை நீக்கிப் பசிச்சொல் இலதாக்கி
மிஞ்சக் கொடுக்கு(ம்)உன் மேன்மையால் - தஞ்சமென்(று)
உன்னூரில் சேர்வார் உயர்ந்து பெருகிட
என்னோநின் வள்ளன்மைக்(கு) ஈடு! ..(5)

நல்வாழ்த்துகள்
கோபால்.

On Tue, Nov 12, 2024 at 9:34 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [12 நவம்பர் 2024]
(நேரிசை வெண்பா)

வாவென் மடிக்கு!

குருவென்(று) அழைப்பர் குழந்தை நினையே
திருவைப் பெறநின் திருமுன் வருவோர்!
ஒருமுறை உன்றன் உருவெழில் கண்டார்
நிருமலர் ஆவர் நிசம்! ..(1)

வாயு புரத்தினில் வாழ்கிற குட்டிச்
சேயுனைச் சிந்தனை செய்தவர் - நோயுறும்
மண்ணிற்கு மீள்வரோ மற்றோரை நாடுவரோ
எண்ணத்தில் நீயே இனிப்பு! ..(2)

அப்பனென்(று) ஊரார் அழைக்கக் களித்தவா(று)
எப்பொழுதும் துள்ளும் இளங்கன்றே! - ஒப்பிலாத்
தெய்வமே உன்னடியிற் சேவித்(து) இருப்பதினும்
செய்வதற்(கு) ஏதினிது செப்பு! ..(3)

வாதா லயநின்பேர் வாய்க்குத் திருவமுதம்
காதாலும் கேட்கக் கருப்பங்கள்! - ஓதாக்
கணங்கள் உறங்கிக் களவில் இழந்த
பணம்போல் படுநட்டம், பாழ்! ..(4)
 
பஞ்சத்தை நீக்கிப் பசிச்சொல் இலதாக்கி
மிஞ்சக் கொடுக்கு(ம்)உன் மேன்மையால் - தஞ்சமென்(று)
உன்னூரில் சேர்வார் உயர்ந்து பெருகிட
என்னோநின் வள்ளன்மைக்(கு) ஈடு! ..(5)                                          [ முன்னிடுகையில் விடுபட்ட வெண்பா]

GOPAL Vis

unread,
Nov 25, 2024, 8:02:31 PM11/25/24
to santhav...@googlegroups.com
ஏகாதசிப் பாடல் [26 நவம்பர் 2024]

அரங்கபுரத்து அழக!
[எண்சீர்: காய் x 6, மா, தேமா]

கலங்குகிற நெஞ்சத்தில் கருணைமழை பொழிகின்ற 
……கார்வடிவே கண்ணப்ப! கவுத்து வத்தை
அலங்கலென அணிகின்ற அழகோடு மின்னுகிற
……அகலத்தில் திருமகளை அமரக் கொண்டு
நிலங்களியில் நின்னருளின் நிழலினிலே இயக்குகிற
……நெடுமாலே! நிருமலனே! நிதமும் என்றன்
புலங்களுன பொற்புணர்ந்து போற்றுகிற பேற்றைத்தா!
……பூங்கழலைச் சார்ந்திருக்கும் புண்ணி யந்தா!! ..(1)

படங்குவியப் பலதலையால் பணிகின்ற பணியணைப்பில்
……படுத்தபடி பாராளும் பரம! நின்றன்
இடங்குவியும் எண்ணிறந்த எளியோரின் இறைஞ்சலுக்குன்
……இரக்கத்தால் இதமளித்த(வ்) இச்சை யெல்லாம்
அடங்குவித்(து)உன் அன்புகொண்டே அரியபதம் அழைத்தளிக்கும்
……அரங்கபுரத் தழக!எம(து) அரசே! அத்தா!
மடங்கவின்மின் மலர்மகளின் மடிதன்னில் மருமலியும்
……மாணடிகள் வைத்தபடி மகிழும் மாலே!! ..(2)

கயம்பலவும் அயம்பலவும் கணைசொரியும் புயம்பலவும்
……கரைபுகுந்த கடலெனச்சேர் களத்தி னூடே,
தயங்கியவி சயன்றனது சயங்கருதிப் பயங்கலையச்
……சடந்தெளியக் கீதையருள் தந்த தோடு,
உயர்ந்தநின சுயந்தெரிய உகந்தவிழி பயந்தருளி,
……உலர்ந்தமனம் தளிர்த்தெழவும் உந்தி னாயே!
மயங்கியஎன் மயலகன்று மதிவிடிந்து மெய்யொளிர 
……வயங்குனபங் கயம்பதிய வந்தி டாயோ! ..(3)

விலங்கினத்தின் வீரியத்தை விசையுறுத்தி வங்கமிசை
……விந்தைமிகு கற்பாலம் மிதக்க விட்டாய்!
இலங்கையர(சு) இருபதுகை இழிசெயலன் இனஅவுணர்
……இரதகய துரகமுடன் இடிய வீழ்த்தி,
நிலங்கொடுத்த நிமலைதன்னை நெடுதுயரின் பிடியினின்று
……நேர்மைநெறி பிறழாது நீயே மீட்டாய்!
பலங்குவியும் கலிமிரட்டப் பவமழுத்த எழஅறியாப்
……பதிதனெனை மீட்கஇன்றே பரிந்து வாராய்? ..(4)

இருளெழிலி இணைமேனி இனர்கோடி இணைந்(து)எட்டா 
……இறையொளிநீ! இவணவணென்(று) எங்கும் நீயே!
உருளுகிற உலகுகளுன் உந்தியிலே உதித்தமகன்
……உருட்டியமண் உருண்டைகளின் உருவம் தாமே!
பொருளுனது புலனுனது புகலுவதும் எண்ணுவதும்
……புண்ணியமும் அல்லதும்நீ, புகலும் நீயே!
தெருளளியென் சித்தத்தில்! தினமுனது திருவடியில்
……சிரமமரக் கருணைபுரி தேவ தேவே! ..(5)

[கார் = கருமை/மேகம்; கவுத்துவம் = கௌஸ்துப மணி; அலங்கல் = மாலை; அகலம் = மார்பு; களியில் = மகிழ்ச்சியில்; பொற்பு = பெருமை] ..(1)

[படம் = பாம்பின் படம்/தலை; பணி = பாம்பு/ஆதிசேடன்; நின்றன் இடம் குவியும் = உன்னிடம் வந்து கூடும்; அடங்குவித்து = அடக்கி; அரிய பதம் = பரமபதம்; மடங்கவின்மின் = மடம் கவின் மின் = இளமையும் அழகும் மின்னுகிற; மரு மலியும் = நறுமணம் மிக்க] ..(2)

[கயம் = யானை; அயம் = குதிரை; கணை = அம்பு; தயங்கிய விசயன் = தளர்ந்து போன அருச்சுனன்; சயம் = வெற்றி; நின சுயம் தெரிய = உன்னுடைய விசுவரூபம் காண; பயந்து = தந்து; உந்தினாய் = ஊக்குவித்தாய்; மயல் = மனக்கலக்கம்/மயக்கம்; மதி = புத்தி; விடிந்து = புத்துணர்வு பெற்று; வயங்குன = வயங்கு உன = ஒளி பொருந்திய உன்னுடைய; பங்கயம் = தாமரை(ப் பாதம்)] ..(3)

[விலங்கினம் = குரங்குக் கூட்டம்; வங்கம் = கடல்; அவுணர் = இராக்ஷசர்கள்; இடிய = அழிய; நிலம் கொடுத்த நிமலை = சீதா தேவி; பவம் = வாழ்க்கைப் பிணைப்பு; பதிதன் = வழியற்றவன். ] ..(4)

[இருள் எழிலி = இருட்டில் வரும் கார்மேகம்; இணை மேனி = சமமான உடல்; இனர் கோடி = கோடி சூரியர்கள்; இவண் அவண் = இங்கும் அங்கும்; தெருள் அளி = தெளிவு கொடு; சிரம் அமர = தலை பதிய.] ..(5)

நல்வாழ்த்துகள்
கோபால்
[26/11/2024]VGK

सर्वे जना: सुखिनो भवन्तु ।
On Tue, Nov 12, 2024 at 9:34 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [12 நவம்பர் 2024]
(நேரிசை வெண்பா)

வாவென் மடிக்கு!

குருவென்(று) அழைப்பர் குழந்தை நினையே
திருவைப் பெறநின் திருமுன் வருவோர்!
ஒருமுறை உன்றன் உருவெழில் கண்டார்
நிருமலர் ஆவர் நிசம்! ..(1)

வாயு புரத்தினில் வாழ்கிற குட்டிச்
சேயுனைச் சிந்தனை செய்தவர் - நோயுறும்
மண்ணிற்கு மீள்வரோ மற்றோரை நாடுவரோ
எண்ணத்தில் நீயே இனிப்பு! ..(2)

அப்பனென்(று) ஊரார் அழைக்கக் களித்தவா(று)
எப்பொழுதும் துள்ளும் இளங்கன்றே! - ஒப்பிலாத்
தெய்வமே உன்னடியிற் சேவித்(து) இருப்பதினும்
செய்வதற்(கு) ஏதினிது செப்பு! ..(3)
. . . . . . . . . . . .

GOPAL Vis

unread,
Jan 24, 2025, 9:49:19 PMJan 24
to santhav...@googlegroups.com
ஏகாதசிப் பாடல் [25 ஜனவரி 2025]
[அறுசீர் விருத்தம்: (விளம், மா, தேமா) x 2]

யாதிலும் நீ!

[கருணையே பொழியும் உன் கண்களே எதிரிகளை இரக்கமின்றி வீழ்த்திக் காணும் கண்கள்! தான், தனதென்றில்லா யோகிகளை ஆட்கொள்ளும் உன் கரங்களே இளம் பெண்களின் ஆடைகளைக் களவாடிய கரங்கள்! பொம்மைகளாக நீ முரண்களையும் இயற்றி விளையாடுகிறாய்! உன் அழகில் மயங்காதிருப்பதோ ஆவதில்லை! நீயே சரணம்! என்னை ஏற்றுக் கொள்!]

வெங்களம் சென்று போரில்
……வில்லிலே ஆற்றல் ஏற்றி
……வெறியரின் கூட்டம் மாண்டு
……வீழ்வதைக் கண்ட கண்கள்,
செங்கடல் தன்னில் ஆங்கே
……சிரம்பல மூழ்க, நீண்ட
……சிறைவலிக் கழுகு சுற்றச்
……சிரிப்பொடு கண்ட கண்கள்,
கங்கிலா அருள்சொ ரிந்து
……கணக்கிலா(து) இன்பம் ஈந்து
……கவலெலாம் போக்கும் இந்தக்
……கண்களே அன்றோ கண்ணா?!
பங்கயம் ஒத்த லர்ந்து
……பரிவிலே தோய்ந்த கண்ணின்
……பார்வையில் சினமா? அந்தப்
……பழங்கதை பொய்யோ கண்ணா! ..(1)
[சிறை வலிக் கழுகு = வலிமையான இறக்கைகள் கொண்ட கழுகு; கங்கு = எல்லை; கவல் = துன்பம்; பழங்கதை = புராணம்]

தனதெனும் மூட்டம் நீக்கித்
……தானெனும் பேரஞ் ஞானம்
……தருகிற நாணம் போக்கித்
……சரணுறும் யோகி தம்மை
நினதெனக் கொண்டு காணும்
……நிருமலக் கண்கள் தாமோ
……நீர்நிலைப் பெண்கள் ஆடை
……நீத்திடக் கண்ட கண்கள்!
மனத்தினில் உன்னை வைத்து
……மாதவா என்ற ழைத்த
……மாதுதன் மானம் காத்த
……மாண்புநின் கரங்க ளுக்கே!
கனவினில் கண்ட போதும்
……கசடுகள் போக்கும் உன்றன்
……கரங்களே மாதர் சேலைக்
……களவினைச் செய்யப் போமோ! ..(2)

ஆக்கியோன் நீயே ஆக
……ஆத்துமம் நின்ன(து) ஆக
……அரியெவர் நண்ப ராரே?
……ஆடவர் பெண்டிர் ஆரே?
காக்கவே நினக ரங்கள்!
……கருணையே நினது கண்கள்!
……கள்வனாய்க் கண்ட தும்நீ
……காட்டிய நாட கந்தான்!
நீக்கவென் றசுரர் கூட்டம்
……நிற்கவென் றமரர் கூட்டம்
……நின்விளை யாட்டில் வேறாய்
……நிறம்பெறும் பொம்மை ஆட்டம்!
நோக்கிடும் புலன்க ளாக
……நுகர்ந்திடும் புத்தி யாக
……நோவுமாய் இன்பு மாக
……நுண்மையாய் யாதி லும்நீ! ..(3)
[அரி = விரோதி]

கண்ணநீ கருமை ஆவாய்!
……காந்தியின் ஊற்று மாவாய்!
……கண்ணநீ கள்வ னாவாய்!
……காவலும் நீயே ஆவாய்!
விண்ணென விரிந்தி ருப்பாய்!
……வெற்றிட மாயு மாவாய்!
……வேற்றுமை நூறு கோடி
……விளைப்பவன் ஒன்று கொண்டே!
வண்ணமாய் விசித்தி ரங்கள்
……வரைந்தஓ வியனும் நீயே!
……வளர்ந்திடும் கூரை ஒன்றை
……வனைந்தவன் நீயே தானே!
அண்ணலே அணுவு மானாய்!
……அகிலமாய் அனந்த மானாய்!
……அரசுநீ ஆணை நீயே
……அதன்வழி இயக்கம் நீயே! ..(4)
[காந்தி = பிரகாசம்]

மாஇருந்(து) அலங்க ரிக்கும்
……மார்ப!நின் மணிக்க ழுத்தில்
……மையெனக் கருத்த கேசம்
……மழலைபோல் கொஞ்ச, மாய
ஓவியம் போல்ம யக்கும்
……ஒருமயில் இறகோ இந்த
……உலகினைக் காதல் நோக்கால்
……உருக்கிட,க் கரைந்த மாந்தர்
ஆவியோ(டு) அனைத்தும் உன்னில்
……அருப்பணம் செய்வ தன்றி
……அன்னியக் கருமம் ஆமோ?
……அச்சுதா ஆயர் கோவே!
நாவிலே நீயி ருக்க
……நற்கரும்(பு) இனிக்கு மோகொல்!
……நாரணா நீயே என்னை
……நானழித்(து) ஆட்கொள் வாயே! ..(5)
[மா = திருமகள்; நான் அழித்து = அகங்காரம் நீக்கி]


நல்வாழ்த்துகள்
கோபால்.
[25/01/2025]VGK

सर्वे जना: सुखिनो भवन्तु ।
On Tue, Nov 26, 2024 at 6:32 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [26 நவம்பர் 2024]

அரங்கபுரத்து அழக!
[எண்சீர்: காய் x 6, மா, தேமா]

கலங்குகிற நெஞ்சத்தில் கருணைமழை பொழிகின்ற 
……கார்வடிவே கண்ணப்ப! கவுத்து வத்தை
அலங்கலென அணிகின்ற அழகோடு மின்னுகிற
……அகலத்தில் திருமகளை அமரக் கொண்டு
நிலங்களியில் நின்னருளின் நிழலினிலே இயக்குகிற
……நெடுமாலே! நிருமலனே! நிதமும் என்றன்
புலங்களுன பொற்புணர்ந்து போற்றுகிற பேற்றைத்தா!
……பூங்கழலைச் சார்ந்திருக்கும் புண்ணி யந்தா!! ..(1)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 24, 2025, 9:58:44 PMJan 24
to santhav...@googlegroups.com
ஆற்றொழுக்கான நடையுடன் அழகிய பாடல்

அனந்த்.
>  யாதி லும்நீ! .-  யாவு ளும்நீ! .. என்னலாம்.

Siva Siva

unread,
Jan 24, 2025, 10:23:58 PMJan 24
to santhav...@googlegroups.com
அழகிய பாடல்கள்.

/வெற்றிட மாயு மாவாய்!/
ஆயும் ஆவாய் -- Wording sound a bit odd.

V. Subramanian

குருநாதன் ரமணி

unread,
Jan 24, 2025, 10:53:12 PMJan 24
to சந்தவசந்தம்
மிகவும் அருமை.
ரமணி

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 24, 2025, 11:00:53 PMJan 24
to santhav...@googlegroups.com
சிறப்பான பாடல்கள்

      -தில்லைவேந்தன்.

Ram Ramakrishnan

unread,
Jan 25, 2025, 12:28:47 AMJan 25
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு, திரு கோபால்.

இது 12 சீர் விருத்தமன்றோ?



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 25, 2025, at 08:19, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Jan 25, 2025, 3:50:01 AMJan 25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு அனந்த்.

யாதி லும்நீ! .-  யாவு ளும்நீ! .. என்னலாம்.
 
ஓ, நன்றி. திருத்திக் கொள்கிறேன். 
யாதிலும் = எந்த ஒரு பொருளிலும்
யாவுளும் = எல்லாப் பொருட்களுக்குள்ளும்
இந்தப் புரிதல் சரியா? 
கோபால்.

On Sat, Jan 25, 2025 at 8:28 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
ஆற்றொழுக்கான நடையுடன் அழகிய பாடல்

அனந்த்.
>  

GOPAL Vis

unread,
Jan 25, 2025, 3:51:06 AMJan 25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ரமணி.
கோபால்.

GOPAL Vis

unread,
Jan 25, 2025, 3:51:59 AMJan 25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு தில்லைவேந்தன்.
கோபால்.

GOPAL Vis

unread,
Jan 25, 2025, 3:54:18 AMJan 25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ராம்.
இது 12 சீர் விருத்தமன்றோ?
ஓ, ஆம். அப்படித்தான் கொள்ள வேண்டும்.  சுட்டியதற்கு நன்றி.
கோபால்.

GOPAL Vis

unread,
Jan 25, 2025, 4:15:24 AMJan 25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு சிவசிவா.
விண்ணென விரிந்தி ருப்பாய்!
……வெற்றிட மாயு மாவாய்!
ஆயும் ஆவாய் -- Wording sound a bit odd.
I agree!. It occurred also to me so even while writing, but I think as follows:
வெற்றிடமும் ஆவாய் = வெற்றிடமாக இருப்பவனாவாய்! 
வெற்றிடமாக ஆவாய் = வெற்றிடமாகப் பரிணமிப்பாய்!
வெற்றிடமாய் = வெற்றிடமாக; ஆகவும் என்பது நீண்டிருப்பதால் ஆயும்.
விண்ணென = விண்ணாக; விரிந்து இருத்தல் ஒரு பரிணாமத்தைக் குறிக்கிறது.
எங்கும் இருப்பவனாக விரிந்தும், ஒன்றுமாகவும் இல்லாது உருவைத் துறந்தும் மாயை செய்பவன் என்கிற பொருளில்.

However, it does not sound nice. I will change it, since it is pointed out.
gopal.

On Sat, Jan 25, 2025 at 8:54 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
அழகிய பாடல்கள்.

/வெற்றிட மாயு மாவாய்!/
ஆயும் ஆவாய் -- Wording sound a bit odd.

V. Subramanian

On Fri, Jan 24, 2025 at 9:49 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [25 ஜனவரி 2025]
[அறுசீர் விருத்தம்: (விளம், மா, தேமா) x 2]

யாதிலும் நீ!

[கருணையே பொழியும் உன் கண்களே எதிரிகளை இரக்கமின்றி வீழ்த்திக் காணும் கண்கள்! தான், தனதென்றில்லா யோகிகளை ஆட்கொள்ளும் உன் கரங்களே இளம் பெண்களின் ஆடைகளைக் களவாடிய கரங்கள்! பொம்மைகளாக நீ முரண்களையும் இயற்றி விளையாடுகிறாய்! உன் அழகில் மயங்காதிருப்பதோ ஆவதில்லை! நீயே சரணம்! என்னை ஏற்றுக் கொள்!]

வெங்களம் சென்று போரில்
……வில்லிலே ஆற்றல் ஏற்றி
……வெறியரின் கூட்டம் மாண்டு
……வீழ்வதைக் கண்ட கண்கள்,
. . . . . 

கண்ணநீ கருமை ஆவாய்!
……காந்தியின் ஊற்று மாவாய்!
……கண்ணநீ கள்வ னாவாய்!
……காவலும் நீயே ஆவாய்!
விண்ணென விரிந்தி ருப்பாய்!
……வெற்றிட மாயு மாவாய்!
……வேற்றுமை நூறு கோடி
……விளைப்பவன் ஒன்று கொண்டே!
வண்ணமாய் விசித்தி ரங்கள்
……வரைந்தஓ வியனும் நீயே!
……வளர்ந்திடும் கூரை ஒன்றை
……வனைந்தவன் நீயே தானே!
அண்ணலே அணுவு மானாய்!
……அகிலமாய் அனந்த மானாய்!
……அரசுநீ ஆணை நீயே
……அதன்வழி இயக்கம் நீயே! ..(4)
[காந்தி = பிரகாசம்]

. . . . 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 25, 2025, 3:21:11 PMJan 25
to santhav...@googlegroups.com
ஆம்
அனந்த்

GOPAL Vis

unread,
Feb 7, 2025, 8:40:13 PMFeb 7
to santhav...@googlegroups.com
ஏகாதசிப் பாடல் [08 பிப்ரவரி 2025]

பரவசம் ஆகத் தவறாதே!

மங்கிய விழியும் மட்கிய நினைவும்
……மனமே துள்ளிட உதவாது!
சங்கையும் இன்பச் சபலமும் மிஞ்சச்
……சகதியின் கரையும் தெரியாது!
திங்களும் தேயத் தொடங்கிய பின்னர்
……தேருவ(து) அமையின் நாளைத்தான்!
அங்கம் இழந்தே ஆத்துமம் மெல்ல
……ஆதவனோடு கரையத்தான்! ..(1)
[அமை = அமாவாசை]

தங்கிய கேணித் தண்ணீருள்ளே
……தவளையென்(று) ஆகி மயங்காதே!
செங்கமலத்தாள் தங்கம் எனத்தான்
……திரமாய் அமரும் மார்புடையான்
பங்கய மலராம் பாதம் தனிலே
……பரவசம் ஆகத் தவறாதே!
கங்கையை ஈந்த காலடி ஈரம்
……காத்திருப்பது உன் வரவுக்கே! ..(2)

பொங்கியதெல்லாம் போதும் உன் உயிரைப்
……புனிதம் ஆக்கிட ஓய்வுகொடு!
சங்குசக்கரனைச் சரணம் அடைந்தோர்
……சங்கம் அறிந்து சேர்ந்துவிடு!
இங்கினி உலகம் இழிவு தவிர்த்தே
……இறைமணம் வீசிட வாழ்த்திடவே
மங்கலம் மட்டும் மண்டிய சேவை
……மாண்பொடு தகவும் எய்திவிடு! ..(3)
[சற்சங்கத்தில் சேர்ந்து சேவையின் மாண்பை எய்துகையில், இந்த உலகம் நலம்பெற வாழ்த்தும் தகுதியும் பெறுவாய்!]

கங்கில(து) அன்புக் கடலது நீலக்
……கனலது தூய்மைப் புனலதுவே!
இங்(கு) அறியாமை எனமனம் சூழும்
……இருள் அவன் கருமையுடன் உருக
அங்கொளி பெருகும் அவனடி தெரியும்
……அமைதியின் இன்பம் அவண் காண்பாய்!
பங்(கு) இரண்டாகிப் பாய்கிற பொன்னிப்
……பதி அரசன்றிக் கதி யாரே! ..(4)


நல்வாழ்த்துகள்
கோபால்
[08/02/2025]VGK

On Sat, Jan 25, 2025 at 8:19 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [25 ஜனவரி 2025]
[அறுசீர் விருத்தம்: (விளம், மா, தேமா) x 2]

யாதிலும் நீ!

[கருணையே பொழியும் உன் கண்களே எதிரிகளை இரக்கமின்றி வீழ்த்திக் காணும் கண்கள்! தான், தனதென்றில்லா யோகிகளை ஆட்கொள்ளும் உன் கரங்களே இளம் பெண்களின் ஆடைகளைக் களவாடிய கரங்கள்! பொம்மைகளாக நீ முரண்களையும் இயற்றி விளையாடுகிறாய்! உன் அழகில் மயங்காதிருப்பதோ ஆவதில்லை! நீயே சரணம்! என்னை ஏற்றுக் கொள்!]

வெங்களம் சென்று போரில்
……வில்லிலே ஆற்றல் ஏற்றி
……வெறியரின் கூட்டம் மாண்டு
……வீழ்வதைக் கண்ட கண்கள்,
செங்கடல் தன்னில் ஆங்கே
……சிரம்பல மூழ்க, நீண்ட
……சிறைவலிக் கழுகு சுற்றச்
……சிரிப்பொடு கண்ட கண்கள்,
கங்கிலா அருள்சொ ரிந்து
……கணக்கிலா(து) இன்பம் ஈந்து
……கவலெலாம் போக்கும் இந்தக்
……கண்களே அன்றோ கண்ணா?!
பங்கயம் ஒத்த லர்ந்து
……பரிவிலே தோய்ந்த கண்ணின்
……பார்வையில் சினமா? அந்தப்
……பழங்கதை பொய்யோ கண்ணா! ..(1)
[சிறை வலிக் கழுகு = வலிமையான இறக்கைகள் கொண்ட கழுகு; கங்கு = எல்லை; கவல் = துன்பம்; பழங்கதை = புராணம்]

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 7, 2025, 11:00:14 PMFeb 7
to santhav...@googlegroups.com
அருமை கோபால்.
அனந்த்
>> கங்கையை ஈந்த காலடி ஈரம்
……காத்திருப்பது உன் வரவுக்கே!  -- அழகு!
> அமையி*ந்* நாளைத்தான்

On Fri, Feb 7, 2025 at 8:40 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [08 பிப்ரவரி 2025]

பரவசம் ஆகத் தவறாதே!

மங்கிய விழியும் மட்கிய நினைவும்
……மனமே துள்ளிட உதவாது!
சங்கையும் இன்பச் சபலமும் மிஞ்சச்
……சகதியின் கரையும் தெரியாது!
திங்களும் தேயத் தொடங்கிய பின்னர்
……தேருவ(து) அமையின் நாளைத்தான்!
அங்கம் இழந்தே ஆத்துமம் மெல்ல
……ஆதவனோடு கரையத்தான்! ..(1)
நல்வாழ்த்துகள்
கோபால்
[08/02/2025]VGK
On Sat, Jan 25, 2025 at 8:19 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [25 ஜனவரி 2025]
[அறுசீர் விருத்தம்: (விளம், மா, தேமா) x 2]

யாதிலும் நீ!


வெங்களம் சென்று போரில்
……வில்லிலே ஆற்றல் ஏற்றி
……வெறியரின் கூட்டம் மாண்டு
……வீழ்வதைக் கண்ட கண்கள்,

GOPAL Vis

unread,
Feb 8, 2025, 4:32:05 AMFeb 8
to santhav...@googlegroups.com
அருமை கோபால். நன்றி.

> அமையி*ந்* நாளைத்தான்
அமை(அமாவாசை)யினுடைய நாள் அமையின் நாள் தானே?

Imayavaramban

unread,
Feb 8, 2025, 8:07:59 AMFeb 8
to சந்தவசந்தம்

கங்கில(து) அன்புக் கடலது - அருமை!

“கங்குகரை காணாத கடலே” என்னும் வள்ளலார் வாய்மொழியை நினைவுறுத்துகிறது!


“இங்(கு) அறியாமை எனமனம் சூழும்

……இருள் அவன் கருமையுடன் உருக”

  • மிக அருமை!


இமயவரம்பன் 

GOPAL Vis

unread,
Feb 8, 2025, 10:38:24 AMFeb 8
to santhav...@googlegroups.com

கங்கில(து) அன்புக் கடலது - அருமை!

“கங்குகரை காணாத கடலே” என்னும் வள்ளலார் வாய்மொழியை நினைவுறுத்துகிறது!


 அத்தகையவர்கள் முன்னமே எழுதியிராத கற்பனைகளோ சொற்களோ சந்தங்களோ அடியேனுக்கு வரக் கூடுமா?

முன்னவர்களின் கருணையே கை கொடுக்கிறது!


“இங்(கு) அறியாமை எனமனம் சூழும்

……இருள் அவன் கருமையுடன் உருக”

  • மிக அருமை!          மிக்க நன்றி.

On Sat, Feb 8, 2025 at 6:38 PM Imayavaramban <anandbl...@gmail.com> wrote:

கங்கில(து) அன்புக் கடலது - அருமை!

“கங்குகரை காணாத கடலே” என்னும் வள்ளலார் வாய்மொழியை நினைவுறுத்துகிறது!


“இங்(கு) அறியாமை எனமனம் சூழும்

……இருள் அவன் கருமையுடன் உருக”

  • மிக அருமை!


இமயவரம்பன் 


On Friday, February 7, 2025 at 8:40:13 PM UTC-5 vis.gop.soc21 wrote:
ஏகாதசிப் பாடல் [08 பிப்ரவரி 2025]

பரவசம் ஆகத் தவறாதே!

மங்கிய விழியும் மட்கிய நினைவும்
……மனமே துள்ளிட உதவாது!
சங்கையும் இன்பச் சபலமும் மிஞ்சச்
……சகதியின் கரையும் தெரியாது!
திங்களும் தேயத் தொடங்கிய பின்னர்
……தேருவ(து) அமையின் நாளைத்தான்!
அங்கம் இழந்தே ஆத்துமம் மெல்ல
……ஆதவனோடு கரையத்தான்! ..(1)
[அமை = அமாவாசை]

 . . . . 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 10, 2025, 2:00:14 PMFeb 10
to santhav...@googlegroups.com
ஆம், அதைக் கவனிக்கத் தவறினேன்.

அனந்த் 

GOPAL Vis

unread,
Feb 23, 2025, 7:49:55 PMFeb 23
to santhav...@googlegroups.com
ஏகாதசிப் பாடல் [24 பிப்ரவரி 2025]
[தரவு கொச்சகக் கலிப்பா]
[அனைத்தும் காய்ச்சீர்கள்]

பேரின்ப வாவி!

கோவிந்தா உன்னாமம் கொடுக்காத தீஞ்சுவையா?
ஆவிக்கும் இன்பருளும் அற்புதமஃ(து) இருக்கையிலே
நாவிற்குச் சுவையென்று நாலுவகைக் கனிதந்து
சேவிக்கும் நெஞ்சத்தைச் சிதறவிடும் குறும்பேனோ! ..(1)

பூவிற்கும் பூத்தபயன் பொற்பதத்தில் வீழுவதே!
காவிக்குட் புக்கார்க்கும் கான்நோக்கிப் போனார்க்கும்
நோ(வு)இற்றுப் பேறடையும் நுட்பவழி நினநாமம்!
பாவிக்கும் வினைநீக்கிப் பரமபதம் தருமன்றே! ..(2)

கூவித்தான் ஆர்த்தாலும் கும்பிட்டுச் செவித்தாலும்
ஏவித்தான் வேலைகொள எடுபிடியை அழைத்தாலும்
போவிட்டுத் தொலையென்று பொருமிடினும் சீறிடினும்
கோவிந்தா என்றானைக் கூற்றுவனும் பணிவானே! ..(3)

மாவிற்குத் தலைவன்நீ! மன்பதையின் தாய்!பூமா
தேவிக்கு நீயரசு! தேவ!நின கொடைவாழ்வில்
ஓவிப்பா ழாகாமல் உன்பேராம் பேரின்ப
வாவிக்குள் மூழ்குவதின் மற்றொண்மைப் பேறுண்டோ! ..(4)

நீவிட்டுச் சேயேனை நீங்காதே! மென்துளவம்
தூவித்தாள் அருச்சிக்கச் சோர்வென்னுள் திணிக்காதே!
கோவித்துச் செல்லாதே! கோவிந்தா எனும்வீட்டுச்
சாவிக்கென் பிறப்புரிமைச் சட்டத்தைப் பிறழாதே! ..(5)

தாவித்துள் இவ்வுடலம் தழலுக்குத் தான்சொந்தம்!
மாவித்தம் சேர்த்ததெலாம் மவுனத்தில் கைம்மாறும்!
சீவித்துப் பயனில்லை சித்தத்தில் நீயின்றேல்!
கோவிந்த நாமத்தில் கூட்டியெனைக் கரைத்திடையே! ..(6)
•~•~•~•~•~•~•~•~•~•~•
பொருள்:
1)
[ஆவி = உயிர்/ஆன்மா; நாலு வகை = பல வகையான.]
[கோவிந்தா என்னும் உன் திருநாமத்தை மட்டுமே சுவைத்திருக்கத் தடையாக மற்ற இந்திரிய சுகங்களைக் காட்டிக் குழப்புவது ஏனோ?]
2)
[கான் = காடு; நோவு = கஷ்டங்கள்; இற்று = தீர்ந்து.]
[பிறப்பின் பயன் உன் திருவடியைச் சேர்வதே! சன்யாசிகளும் தவசிகளும் அதற்கு உற்ற வழியாக உன் பெயரையே நாடுவர்.]
3)
[ஆர்த்தல் = குரல் கொடுத்தல்/கொண்டாடுதல்; செவித்தல் = ஜபம் செ்தல்; எடுபிடி = வேலையாள் என்பதன் வழக்குச் சொல்; பொருமுதல் = வருந்தி விம்முதல்; சீறுதல் = சினத்தை வெளிக்காட்டுதல்; கூற்றுவன் = இயமன்.]
[பக்தியிலோ, ஏவலிலோ, வெறுப்பிலோ, சினத்திலோ, கோவிந்தா என்று சொன்னவனைக் கூற்றுவன் பணிவான்.]
4)
[மா = திருமகள்; மன்பதை = சமுதாயம்; ஓவுதல் = நிறுத்துதல்; வாவி = தடாகம்/குளம்; ஒண்மை = சிறந்தது.]
[உலக நாயகனான நீ கொடுத்த இந்த வாழ்வில் இடையே நிறுத்தி நேரத்தைப் பாழாக்காமல் உன் பெயரைச் சொல்லும் பேரின்பத்தில் ஆழ்ந்திருப்பதை விடச் சிறந்தது இல்லை!]
5)
[சேயேன் = மகனாகிய நான்; துளவம் = துளசி; வீடு = மோக்ஷம்.]
[கோவிந்தா என்று உச்சரிப்பது மோட்ச வீட்டின் திறவுகோல்! பிறந்த அனைவருக்கும் அதை அடையும் உரிமை உண்டு. அதில் ஈடுபட விடாது நீ என்னிலிருந்து விலகிச் செல்வது நீதி இல்லை.]
6)
[துள் = துள்ளுகிற; தழல் = நெருப்பு; மா வித்தம் = பெரும் செல்வம்.]
[உடலும், சேர்த்த செல்வமும் என்னைப் பிரிந்து விடும்! உன்னை எண்ணாது வாழ்வதோ பயனற்றது! என்னைக் கோவிந்த நாமத்தோடு கரைந்துவிட அருள் செய் ஐயனே!]

[பாடல் கருத்து: உடலும் உடைமையும் சொந்தமில்லை. வாழ்வின் பயன் இறைமை நினைவில் ஊறி இருப்பதே. அதற்கு இந்திரிய சுகங்கள் தடைகளாகும். இறைவன் அருள் அத்தடைகளை நீக்கி அவன் நாமத்தில் ஒன்றச் செய்யட்டும்!]


நல்வாழ்த்துகள்
கோபால்.
[24/02/2025]VGK

सर्वे जना: सुखिनो भवन्तु ।
On Sat, Feb 8, 2025 at 7:10 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [08 பிப்ரவரி 2025]

பரவசம் ஆகத் தவறாதே!

மங்கிய விழியும் மட்கிய நினைவும்
……மனமே துள்ளிட உதவாது!
சங்கையும் இன்பச் சபலமும் மிஞ்சச்
……சகதியின் கரையும் தெரியாது!
திங்களும் தேயத் தொடங்கிய பின்னர்
……தேருவ(து) அமையின் நாளைத்தான்!
அங்கம் இழந்தே ஆத்துமம் மெல்ல
……ஆதவனோடு கரையத்தான்! ..(1)
[அமை = அமாவாசை]

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 23, 2025, 9:21:19 PMFeb 23
to santhav...@googlegroups.com
> கோவிந்தா எனும்வீட்டுச் சாவிக்கென் பிறப்புரிமைச் சட்டத்தைப் பிறழாதே! ..(5)

வழக்கம் போல் திருமாலின் அருளை நீங்கள் கேட்டு வாங்கும் விதம் அருமை.

அனந்த்

Siva Siva

unread,
Feb 23, 2025, 9:24:43 PMFeb 23
to santhav...@googlegroups.com
ஒரே எதுகை!

V. Subramanian

On Sun, Feb 23, 2025 at 7:49 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [24 பிப்ரவரி 2025]
[தரவு கொச்சகக் கலிப்பா]
[அனைத்தும் காய்ச்சீர்கள்]

பேரின்ப வாவி!

கோவிந்தா உன்னாமம் கொடுக்காத தீஞ்சுவையா?
ஆவிக்கும் இன்பருளும் அற்புதமஃ(து) இருக்கையிலே
நாவிற்குச் சுவையென்று நாலுவகைக் கனிதந்து
சேவிக்கும் நெஞ்சத்தைச் சிதறவிடும் குறும்பேனோ! ..(1)

....

GOPAL Vis

unread,
Feb 24, 2025, 12:38:11 AMFeb 24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
கோபால்.

. . . . . . . . . . .

GOPAL Vis

unread,
Feb 24, 2025, 12:40:11 AMFeb 24
to santhav...@googlegroups.com
ஒரே எதுகையில் அமைந்தது மகிழ்ச்சியே!
நன்றி.
கோபால்.

. . . . . . . 

Ram Ramakrishnan

unread,
Feb 24, 2025, 11:25:10 AMFeb 24
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. கோபால்


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 24, 2025, at 06:19, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

M. Viswanathan

unread,
Feb 24, 2025, 4:51:34 PMFeb 24
to santhav...@googlegroups.com

ஆஹா..அருமை கவிஞரே...


GOPAL Vis

unread,
Feb 25, 2025, 1:33:08 AMFeb 25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ராம்.
கோபால்.

On Mon, Feb 24, 2025 at 9:55 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மிக அருமை, திரு. கோபால்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 24, 2025, at 06:19, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


ஏகாதசிப் பாடல் [24 பிப்ரவரி 2025]
[தரவு கொச்சகக் கலிப்பா]
[அனைத்தும் காய்ச்சீர்கள்]

பேரின்ப வாவி!

கோவிந்தா உன்னாமம் கொடுக்காத தீஞ்சுவையா?
ஆவிக்கும் இன்பருளும் அற்புதமஃ(து) இருக்கையிலே
நாவிற்குச் சுவையென்று நாலுவகைக் கனிதந்து
சேவிக்கும் நெஞ்சத்தைச் சிதறவிடும் குறும்பேனோ! ..(1)

. . . . . . . . .

GOPAL Vis

unread,
Feb 25, 2025, 1:34:20 AMFeb 25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு மீவி.
கோபால்.

On Tue, Feb 25, 2025 at 3:21 AM M. Viswanathan <meev...@gmail.com> wrote:

ஆஹா..அருமை கவிஞரே...


On Mon, Feb 24, 2025, 9:55 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மிக அருமை, திரு. கோபால்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 24, 2025, at 06:19, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


ஏகாதசிப் பாடல் [24 பிப்ரவரி 2025]
[தரவு கொச்சகக் கலிப்பா]
[அனைத்தும் காய்ச்சீர்கள்]

பேரின்ப வாவி!

கோவிந்தா உன்னாமம் கொடுக்காத தீஞ்சுவையா?
ஆவிக்கும் இன்பருளும் அற்புதமஃ(து) இருக்கையிலே
நாவிற்குச் சுவையென்று நாலுவகைக் கனிதந்து
சேவிக்கும் நெஞ்சத்தைச் சிதறவிடும் குறும்பேனோ! ..(1)
. . . . . . . .

GOPAL Vis

unread,
Mar 24, 2025, 10:02:14 PMMar 24
to santhav...@googlegroups.com
ஏகாதசிப் பாடல் [25 மார்ச்சு 2025]
வண்ணச் சந்தம் (118-127) பதிகம்
[தனன தனதன தனதான]

பெயரில் அழகிய பெருமான்.
[அந்தாதி - இறுதித் தொங்குசீரின் முந்திய சீரிலிருந்து அடுத்த பாடலின் தொடக்கம் பெறப்படும். மண்டலித்து வரும்.]

…………………. …………………. ………………….
இறகு செருகிய குழலோனே!
……இதயம் உருகிட இசைவேய!
கறவு பெருகிய குழுவூடே
……களபம் எனவரும் எழிலோனே!
பிறவி பலகொடு; நினதேனாம்
……பெயரின் இனிமையில் நிதம்ஊற!
திறவில் அகிலமும் உனவாயில்
……தெரிய அருளிய பெருமானே! ..(1)

[குழல் = தலைமுடி; வேய = புல்லாங்குழலை உடையவனே; கறவு = பசு; களபம் = யானைக்குட்டி; நின = உன்னுடைய; திறவில் = திறக்கையில்]
…………………. …………………. ………………….

அருமை அமுதினை அனைஈய
……அயலர் மனைபுகு களவேனோ?
கருமை முகில்அன நினமேனி
……கனிய உரலொடு பிணையாகி
இருமை நெடுமரம் அவைசாய
……இடையில் நுழைதரு வலவா!நின்
பெருமை பரவிட மொழிதாராய்!
……பெயரில் அழகிய பெருமானே! ..(2)

[அனை = அன்னை; இருமை = இரட்டை; வலவா = வல்லவனே; பரவிட = புகழ]
…………………. …………………. ………………….

அழகு மகளிரின் இடைகூடி
……அமைதி கலையவும் விளையாடிப்
பழகி இறையமு(து) அனுபூதி
……பருகி இணையவும் அருள்வோனே!
குழலின் இசைகொடு புனல்ஆரும்
……குவல யம்அடிமை கொளுவோனே!
கழலை நினைவதின் எதுபேறு?
……கனல்உ னதுபெயர் பெருமானே! ..(3)

[இடை = இடையே; அனுபூதி = ஆழ்ந்த அனுபவம்; புனல் ஆரும் = நீர்/கடல் நிறைந்த; குவலயம் = உலகம்; நினைவதின் = நினைப்பதை ஙிட; கனல்/கன்னல் = கரும்புச் சாறு]
…………………. …………………. ………………….

பெயரின் அருமையை மறைகூறும்!
……பெரிய முனிகளும் அதிலாழ்வர்!
துயரம் அதுசொல இலதாகும்!
……துணையும் உலகினில் அதுதானே!
கயமை அதுசெவி புகஓடும்!
……கருமம் அதுசொல நிறைவாகும்!
பயனும் அது!நெறி பிறிதேது?
……பரம பதம்அது! பெருமானே! ..(4)

[அது = உனது பெயர்; (அது சொல = பெயரைச் சொல்ல; அது செவி புக = பெயர் காதில் நுழைய)]
…………………. …………………. ………………….

பதவி மிகுபுகழ் சுகபோகம்
……பணமும் உளவரை உற(வு)ஏறும்!
அதனுள் உனபெயர் கலவாமல்
……அகலும் எனில்,அது விபரீதம்!
மதமும் எழும்!அவண் அறம்ஈனம்!
……மதியும் இழிவுற இருளாகும்!
சதம்ஒர் திரு!அது நினநாமம்!
……தருக அமு(து)அது பெருமானே! ..(5)

[ஏறும் = பெருகும்; மதம் = செருக்கு கூடிய பிடிவாதம்; ஈனம் = பலமற்றது; மதி = புத்தி; சதம் = நிரந்தரம்]
…………………. …………………. ………………….

அமுதம் அரியெனும் ஒருபேரே!
……அரியும் அதுசொலி மகிழ்வாரே!
தமுளில் அரியுனை நினைவாரைத்
……தவறு புரிபவர் அணுகாரே!
குமுத இதழ்அன விழியோனே!
……குழவி அனஉளம் உடையோனே!
துமுலம் அறுமனம் அருள்வாயே!
……துளசி அணிஅரி பெருமானே! ..(6)

[அரி = திருமால்; அரி = எதிரிகள்; தமுளில் = தமக்குள்; அன/அன்ன = போன்ற; துமுலம் = குழப்பம்]
…………………. …………………. ………………….

அணியு(ம்) மணிமினும் எழில்ஆர,
……அதரம் அனைமுதம் அதில்ஊற,
துணிவு துடிமிக இளமேனி
……துளிட அனைவரும் அதிர்வாகப்
பணியின் அகம்அற நடமாடீ!
……பசுவின் இடம்வெகு கனிவானாய்!
தணிக என(து)உன(து) அருளாலே!
……தரணி உயவரு பெருமானே! ..(7)

[ஆர = விளங்க; அதரம் = கன்னம்; முதம் = முத்தம்; துளிட = துள்ளிட; பணி = பாம்பு/காளிங்கன்; அகம் = அகம்பாவம்; நடமாடீ = ஆடியவனே/ஆடுபவனே; தணிக எனது = என்னுடையது என்னும் மமதை அடங்குக; தரணி = உலகம்]
…………………. …………………. ………………….

வருக கண!கணின் மணியே!நின்
……வடிவம் எணஎண இனிதே!யான்
பருக நினபெயர் பிழிதேனே!
……பசியில் அமுதினும் இனிசாரம்!
உருகி அரியெனும் ஒலியோடே
……உறைய இறைநிலை தெளிவாமே!
கருகி மறையுமுன் உனைஓதிக்
……கரைய வரம்அருள் பெருமானே! (8)

[கண = கண்ணா; கணின் மணி = கண்மணி; எண = எண்ண; பிழி தேன் = பிழிந்த தேன்; கரைய = ஒன்ற]
…………………. …………………. ………………….

வரத! திருமகள் அணிமார்ப!
……மரக தம்அனைய உடலோனே!
கரமும் உதடும்ஒர் முழவேய்மேல்
……கலையை வனைகிற திறமே!நின்
விரலின் நுனிதனில் மலைபூவோ?
……விழியின் ஒளிநிகர் கதிராமோ!
பரம நினபுகழ் சொலிஆமோ?
……பரவும் எனைஅருள் பெருமானே! ..(9)

[வேய் = புல்லாங்குழல்; மலை பூவோ? = (கோவர்த்தன) மலை பூவுக்குச சமமாக இலேசானதோ?; கதிர் = சூரியன்; சொலிஆமோ = சொல்லித் தீருமோ? பரவும் = புகழ் பரப்பும்]
…………………. …………………. ………………….

எனையும் உன(து)அரும் அடியார்கள்
……இடையில் இடு,எடு பிடியாக!
தினையும் அறவினை அறியேனைத்
……திவலை அருளுக பரிவாலே!
புனைவு புர(வு)அழி(வு) எனயாவும்
……புரியும் இறையவ! பரமான்மா!
பினைய(து) உலகிது முதல்நீயே!
……பிறவி இற(வு)அறு பெருமானே! (10)

[தினையும் = சிறிதும்; அறவினை = தருமச் செயல்; திவலை = சிறிது; புனைவு = ஆக்குவது; புரவு = காப்பது; புரியும் = செய்யும்; பினையது = பின்னர் உருவானது; இறவு = இறப்பு]
…………………. …………………. ………………….

நல்வாழ்த்துகள் த
கோபால்.
[25/03/2025]

सर्वे जना: सुखिनो भवन्तु ।

...

Imayavaramban

unread,
Mar 25, 2025, 8:49:42 AMMar 25
to சந்தவசந்தம்
"குமுத இதழ்அன விழியோனே!
……குழவி அனஉளம் உடையோனே!"

மிக மிகச் சிறப்பு! அந்தாதிப் பாடல் அனைத்தும் அருமை!

- இமயவரம்பன்

On Monday, March 24, 2025 at 10:02:14 PM UTC-4 vis.gop.soc21 wrote:
ஏகாதசிப் பாடல் [25 மார்ச்சு 2025]
வண்ணச் சந்தம் (118-127) பதிகம்
[தனன தனதன தனதான]

பெயரில் அழகிய பெருமான்.
[அந்தாதி - இறுதித் தொங்குசீரின் முந்திய சீரிலிருந்து அடுத்த பாடலின் தொடக்கம் பெறப்படும். மண்டலித்து வரும்.]
குமுத இதழ்அன விழியோனே!

……குழவி அனஉளம் உடையோனே!

Ram Ramakrishnan

unread,
Mar 25, 2025, 9:52:47 AMMar 25
to santhav...@googlegroups.com
மிக அருமை திரு. கோபால்.

சிறு ஐயம். இப்பாவின் இனம் என்ன?

எட்டடித் த. கொ. கலிப்பா வென்னில், கலித்தளை குறைந்தும் (29%) வெண்டளை மிகுந்தும் (71%) காணப்படுகின்றதே.

அல்லது வேறு பாவினமா?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



On Wed, Jul 17, 2024 at 7:32 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
 ஏகாதசிப் பாடல் [17 ஜூலை 2024]

உன்னடிக்கென்றே!

இச்செவியும் இந்நாவும் இக்கண்ணும் இக்கரமும்
அச்சுதனே நீயெனக்கிங்(கு) அன்பாலே அளித்திட்ட
பிச்சையென வேயுணர்ந்துன் பேரருளைப் பரவாமல்
இச்சைவழி பின்சென்றே ஏமாந்து போகாமல்
விச்சையினை நீபுகட்டி விடிவுக்கு வழிகாட்டு!
மிச்சமிகும் புண்ணியத்தால் மீண்டுமிவண் பிறப்பெய்தி
எச்செயலும் உன்னடிக்கென்(று) இயங்குகிற வாழ்வுகொடு!
பச்சையிளங் குழவியெனப் பரிந்த(ன்)னைபோல் இரங்குகையே!


நல்வாழ்த்துகள்
கோபால்.
[17/07/2024]VGK

सर्वे जना: सुखिनो भवन्तु ।

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 25, 2025, 10:19:37 AMMar 25
to santhav...@googlegroups.com
Impressive andhadhi.

/ குமுத இதழ்அன விழியோனே! /
Does குமுதம் mean lotus as well?

V. Subramanian



On Mon, Mar 24, 2025 at 10:02 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [25 மார்ச்சு 2025]
வண்ணச் சந்தம் (118-127) பதிகம்
[தனன தனதன தனதான]

பெயரில் அழகிய பெருமான்.
[அந்தாதி - இறுதித் தொங்குசீரின் முந்திய சீரிலிருந்து அடுத்த பாடலின் தொடக்கம் பெறப்படும். மண்டலித்து வரும்.]
....

GOPAL Vis

unread,
Mar 25, 2025, 12:37:02 PMMar 25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, இமயவரம்பன்.
கோபால்.

GOPAL Vis

unread,
Mar 25, 2025, 12:41:12 PMMar 25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ராம்.
நான் இதை இரண்டு தரவு கொச்சகக் கலிப்பா குளக இணைப்புடன் அமைந்ததாக எண்ணினேன்.
கோபால்.

GOPAL Vis

unread,
Mar 25, 2025, 12:49:13 PMMar 25
to santhav...@googlegroups.com
Thank you.

/ குமுத இதழ்அன விழியோனே! /
Does குமுதம் mean lotus as well?
Yes.  I preferred ஆம்பல் because I refer to an இதழ் to represent the blue eye. If a lotus flower is chosen as the meaning, it could still be good enough to describe the beautifully bloomed eye.
gopal.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 25, 2025, 4:46:55 PMMar 25
to santhav...@googlegroups.com
மிக அருமை. இந்த இடம் சிறப்பு என்று குறிப்பிட்டுக் காட்ட இயலாத வண்ணம் எல்லா அடிகளும் சிறப்புற அமைந்துள்ள அந்தாதி.

அனந்த்


On Mon, Mar 24, 2025 at 10:02 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [25 மார்ச்சு 2025]
வண்ணச் சந்தம் (118-127) பதிகம்
[தனன தனதன தனதான]

பெயரில் அழகிய பெருமான்.
[அந்தாதி - இறுதித் தொங்குசீரின் முந்திய சீரிலிருந்து அடுத்த பாடலின் தொடக்கம் பெறப்படும். மண்டலித்து வரும்.]

…………………. …………………. ………………….
இறகு செருகிய குழலோனே!
……இதயம் உருகிட இசைவேய!
கறவு பெருகிய குழுவூடே
……களபம் எனவரும் எழிலோனே!
பிறவி பலகொடு; நினதேனாம்
……பெயரின் இனிமையில் நிதம்ஊற!
திறவில் அகிலமும் உனவாயில்
……தெரிய அருளிய பெருமானே! ..(1)
................................

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Mar 25, 2025, 10:11:51 PMMar 25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
கோபால்.

On Wed, Mar 26, 2025 at 2:16 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
மிக அருமை. இந்த இடம் சிறப்பு என்று குறிப்பிட்டுக் காட்ட இயலாத வண்ணம் எல்லா அடிகளும் சிறப்புற அமைந்துள்ள அந்தாதி.

அனந்த்


On Mon, Mar 24, 2025 at 10:02 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [25 மார்ச்சு 2025]
வண்ணச் சந்தம் (118-127) பதிகம்
[தனன தனதன தனதான]

பெயரில் அழகிய பெருமான்.
[அந்தாதி - இறுதித் தொங்குசீரின் முந்திய சீரிலிருந்து அடுத்த பாடலின் தொடக்கம் பெறப்படும். மண்டலித்து வரும்.]

…………………. …………………. ………………….
இறகு செருகிய குழலோனே!
……இதயம் உருகிட இசைவேய!
கறவு பெருகிய குழுவூடே
……களபம் எனவரும் எழிலோனே!
பிறவி பலகொடு; நினதேனாம்
……பெயரின் இனிமையில் நிதம்ஊற!
திறவில் அகிலமும் உனவாயில்
……தெரிய அருளிய பெருமானே! ..(1)
................................
. . . . . . . . .

GOPAL Vis

unread,
Apr 7, 2025, 8:43:34 PMApr 7
to santhav...@googlegroups.com
ஏகாதசிப் பாடல் [08 ஏப்ரல் 2025]

உய்வும் வேண்டேன்!

வானெல்லை உனக்கில்லை
……வரையெல்லாம் கடந்தவன்நீ!
மீனெல்லாம் உன்னொளியால்
……மின்மினியாய் மிதந்திருக்க
ஏனென்ன காரணத்தால்
……எழுதாநூல் தனைக்காக்க
மீனென்ற திருவடிவே
……மேலென்று நீதேர்ந்தாய்?! ..(1)

[வரை = எல்லை; மீன் = விண்மீன்/நட்சத்திரம்; மீன் = மச்சாவதாரம்]

ஆமையெனத் தோன்றிலையேல்
……அமரர்க்கன்(று) அமுதேது?
பூமிதனைப் பன்றியெனப்
……புரந்திலையேல் உலகேது?
நீமையெனக் கரந்திருந்து
……நிருமலத்தில் நிலைத்திருந்து
தீமையெவண் கண்டாலும்
……தீர்க்கவொரு வடிவாவாய்! ..(2)

[நீ மையென = நீ கருமை நிறம் ஏற்றவனாய்; கரந்து = மறைந்து]

அரியென்று சொன்னாலே
……அரிக்(கு)அரிமாச் சொப்பனந்தான்!
சரிக்கொருவர் காணாத
……சாதனைநீ சாகசம்நீ!
கரிக்(கு)அருளக் கடுகியமா
……கருணையன்றே உன்னுருவம்!
பரித்தலையோய் ஞானமுன்றன்
……படிகக்கண் நோக்கன்றே! ..(3)

[அரி = திருமால்; அரி = விரோதி; அரிமா = சிங்கம்; கரி = யானை; கடுகிய = விரைந்து சென்ற; பரித்தலை = குதிரைத் தலை]

அயனென்னும் ஓவியனை
……அலர்விரியச் சிருட்டித்தாய்!
அயமாகிக் கலையொன்றை
……அவனிடமே வருடித்தாய்!
மயல்நீக்கும் சத்தியத்தை
……மறைக்குள்ளே நீவைத்தாய்!
இயல்பென்னும் சக்கரமுன்
……இச்சையினால் சுழலுவதே! ..(4)

[அயன் = பிரமன்; அலர் = மலர்; அயம் = குதிரை; வருடித்தாய் = பொழிந்தாய்; மயல் = அறியாமை]

குருவென்று யோகியர்கள்
……குவிவதுநின் பதம்நோக்கி!
இருள்நீங்க ஒளிவேண்டி
……இறைஞ்சுவதும் உன்னிடமே!
திருவரசே உன்னடியைத்
……திடமாகப் பற்றுகிற
ஒருபேற்றை அன்றிஇனி
……உய்வென்றும் வேண்டேனே! ..(5)

[திருஅரசு = திருமகளின் தலைவன்; உய்வு = மோக்ஷம்/வீடு பேறு]


நல்வாழ்த்துகள்
கோபால்.
[08/04/2025]VGK
………..
सर्वे जना: सुखिनो भवन्तु ।
On Tue, Mar 25, 2025 at 7:32 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [25 மார்ச்சு 2025]
வண்ணச் சந்தம் (118-127) பதிகம்
[தனன தனதன தனதான]

பெயரில் அழகிய பெருமான்.
[அந்தாதி - இறுதித் தொங்குசீரின் முந்திய சீரிலிருந்து அடுத்த பாடலின் தொடக்கம் பெறப்படும். மண்டலித்து வரும்.]

…………………. …………………. ………………….
இறகு செருகிய குழலோனே!
……இதயம் உருகிட இசைவேய!
கறவு பெருகிய குழுவூடே
……களபம் எனவரும் எழிலோனே!
பிறவி பலகொடு; நினதேனாம்
……பெயரின் இனிமையில் நிதம்ஊற!
திறவில் அகிலமும் உனவாயில்
……தெரிய அருளிய பெருமானே! ..(1)

[குழல் = தலைமுடி; வேய = புல்லாங்குழலை உடையவனே; கறவு = பசு; களபம் = யானைக்குட்டி; நின = உன்னுடைய; திறவில் = திறக்கையில்]

. . . . . . . . . . . . . . 

Imayavaramban

unread,
Apr 7, 2025, 9:31:45 PMApr 7
to சந்தவசந்தம்
அயனென்னும் ஓவியனை
……அலர்விரியச் சிருட்டித்தாய்!

- மிக அருமை! 

Ram Ramakrishnan

unread,
Apr 8, 2025, 1:12:43 AMApr 8
to santhav...@googlegroups.com
மிக அருமையான பாடல்கள், திரு. கோபால்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 8, 2025, at 05:31, Imayavaramban <anandbl...@gmail.com> wrote:

அயனென்னும் ஓவியனை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Apr 8, 2025, 3:12:35 AMApr 8
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு இமயவரம்பன்.
கோபால்.

On Tue, Apr 8, 2025 at 7:01 AM Imayavaramban <anandbl...@gmail.com> wrote:
அயனென்னும் ஓவியனை
……அலர்விரியச் சிருட்டித்தாய்!

- மிக அருமை! 

On Monday, April 7, 2025 at 8:43:34 PM UTC-4 vis.gop.soc21 wrote:
ஏகாதசிப் பாடல் [08 ஏப்ரல் 2025]

உய்வும் வேண்டேன்!

வானெல்லை உனக்கில்லை
……வரையெல்லாம் கடந்தவன்நீ!
மீனெல்லாம் உன்னொளியால்
……மின்மினியாய் மிதந்திருக்க
ஏனென்ன காரணத்தால்
……எழுதாநூல் தனைக்காக்க
மீனென்ற திருவடிவே
……மேலென்று நீதேர்ந்தாய்?! ..(1)

[வரை = எல்லை; மீன் = விண்மீன்/நட்சத்திரம்; மீன் = மச்சாவதாரம்]

It is loading more messages.
0 new messages