Another vegetable veNbA!
9)
2026-03-10
பறங்கிக்காய்
----------------
(வெண்பா)
பறங்கிக்காய் வேண்டுமாம் பாரியாட்(கு) இன்னும்
உறங்கலா மாவென்றாள் ஒல்லை - இறங்கினேன்
காரியத்தில் காணேன் கடைகளில்கிட் டாக்காய்மேல்
நாரியர்க்கேன் இந்த நசை?
பதம் பிரித்து:
பறங்கிக்காய் வேண்டுமாம் பாரியாட்(கு); "இன்னும்
உறங்கலாமா" என்றாள்; ஒல்லை இறங்கினேன்
காரியத்தில்; காணேன் கடைகளில் கிட்டாக் காய்மேல்
நாரியர்க்கு ஏன் இந்த நசை?
இன்னும் உறங்கலாமாவென்றாள் - 1. "இன்னும் உறங்கலாமா?" என்றாள்; 2. இன்னும் உறங்கல் ஆமா? வென்றாள்;
ஆமா - ஆகுமா - இயலுமா;
கடைகளில் - இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைக்க - "காணேன் கடைகளில்" & "கடைகளில் கிட்டாக் காய்மேல்";
நசை - ஆசை;
V. Subramanian
On Mar 13, 2026, at 10:03, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMdbut%3DEuWBpN2_SkYMWr_OiOfFodzq81C5SzkubO8KDg%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/7E46E53C-C918-413B-91FD-85E64DF1A6CC%40gmail.com.
உறங்கிக் கிடப்பினுமு சுப்பி எழுப்பும்
பறங்கி மகிமை பகர்