அகமுறும் நலமே - ச​ந்தக் கலிவிருத்தம்

5 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Jun 2, 2026, 5:59:02 PM (3 days ago) Jun 2
to santhavasantham
அகமுறும் நலமே


ந்தக் கலிவிருத்தம்

தனதன தனதன தனதன தனதன

(ஈற்றடியின் ஈற்றுச்சீர் தனனா - திருவிராகம் அமைப்பு)

 

 

 

image.png

 

உலகினில் உயருவர் உறுதியில் வளருவர்

நிலையது இழிபெறு செயலையும் அணுகிலர்

அலையினில் வதையுறும் சருகெனு(ம்) நிலையிலும்

அலசடி யிலையெனின் அகமுறும் நலமே.

 

 

 

 

 

 

 

 

 

நெறியினில் நிலைபெறு மனமுளர் பெரியவர்

வறுமையும் துயரமும் மிகவென உழலினும்

அறிவொடு நெறிமுறை தனைவிட நினையலர்

உறுதியின் அணியென அகமுறும் நலமே.

 

 

 

 

 

 

 

 

 

 

]
 image.png

 

 

 

image.png

 

 

கரைதொடு அலைகளும் பலவென முடுகிடும்

புரளுறு நதிவெளம் அதனுடன் உறைபெறும்

உரமுடன் செயல்படும் வழிதனில் இறைவனும்

வரமது மருளுவன் அகமுறும் நலமே.

 

 

 

 

 

 

 

 

உலகெனும் சலதியில் அலையெனும் சனமதும்

பலவகை இடருற அடுதுயர் மிகுபடும்

மலமன மிலதெனும் நெறியது உளனுறில்

அலகில னவனருள் அகமுறும் நலமே.

 

 

image.png

 

அலசடி- துன்பம், வருத்தம்

மலமனம் மும்மலத்தைக் குறித்தது

அலகிலன் - அளவிட முடியாதவன்

 

அன்பன்

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

02/06/2026

 

 

 

 

 

 




Siva Siva

unread,
Jun 2, 2026, 6:26:14 PM (3 days ago) Jun 2
to santhav...@googlegroups.com
இவ்வகைச் சந்தப் பாடலில் வல்லொற்றோ, மெல்லொற்றை அடுத்து வல்லின உயிர்மெய்யோ வந்தால் சந்தம் கெடும்,

வி. சுப்பிரமணியன்


On Tue, Jun 2, 2026 at 5:59 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அகமுறும் நலமே


ந்தக் கலிவிருத்தம்

தனதன தனதன தனதன தனதன

(ஈற்றடியின் ஈற்றுச்சீர் தனனா - திருவிராகம் அமைப்பு)

 

 

 

 

உலகினில் உயருவர் உறுதியில் வளருவர்

நிலையது இழிபெறு செயலையும் அணுகிலர்

அலையினில் வதையுறும் சருகெனு(ம்) நிலையிலும்

அலசடி யிலையெனின் அகமுறும் நலமே.

 

 

 

 

 

 

 

 

 

நெறியினில் நிலைபெறு மனமுளர் பெரியவர்

வறுமையும் துயரமும் மிகவென உழலினும்

அறிவொடு நெறிமுறை தனைவிட நினையலர்

உறுதியின் அணியென அகமுறும் நலமே.

 

 

 

 

 

 

 

 

 

 

]
 

 

 

 

 

 

கரைதொடு அலைகளும் பலவென முடுகிடும்

புரளுறு நதிவெளம் அதனுடன் உறைபெறும்

உரமுடன் செயல்படும் வழிதனில் இறைவனும்

வரமது மருளுவன் அகமுறும் நலமே.

 

 

 

 

 

 

 

 

உலகெனும் சலதியில் அலையெனும் சனமதும்

பலவகை இடருற அடுதுயர் மிகுபடும்

மலமன மிலதெனும் நெறியது உளனுறில்

அலகில னவனருள் அகமுறும் நலமே.

 

 

 

அலசடி- துன்பம், வருத்தம்

Ram Ramakrishnan

unread,
Jun 2, 2026, 6:30:18 PM (3 days ago) Jun 2
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசிவா.

அடியேனது பாட்டில் அவ்விதம் உளவா?


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 2, 2026, at 18:26, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOj7sC1jEgDUOae4v9mFdEPWOQkekLRPcsiLqB6RjYAhg%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jun 2, 2026, 6:35:21 PM (3 days ago) Jun 2
to santhav...@googlegroups.com
I think so.

/ மெல்லொற்றை அடுத்து வல்லின உயிர்மெய் /

==> Even if across 2 seers.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Jun 2, 2026, 6:45:49 PM (3 days ago) Jun 2
to santhav...@googlegroups.com
கண்ணில் தென்பட்டவை:

அலைகளும் பலவென
அலையெனும் சனமதும்

இவ்விரு இடங்களத் திருத்துகிறேன்.

வேறெதும்்உண்டெனில்்குறித்தால் நன்றியுடையவன்
ஆ்வேன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 2, 2026, at 18:35, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jun 2, 2026, 6:47:16 PM (3 days ago) Jun 2
to santhav...@googlegroups.com, santhavasantham
அருமையான பொருள் பொதிந்த பாடல்!

திரு. சிவசிவா அவர்கள் சுட்டிக்காட்டியது போல், “மெல்லொற்றை அடுத்த வல்லின உயிர்மெய்” வருகின்ற இந்த இடங்களில் சந்தி சரிபார்க்கவும்:

வதையுறும் சருகெனும்

வறுமையும் துயரமும்

உலகெனும் சலதியில்

அலையெனும் சனமதும்

இங்கே,
கரைதொடு அலைகளும்
கரைதொடும் என்று வரலாம்.

Ram Ramakrishnan

unread,
Jun 2, 2026, 6:50:04 PM (3 days ago) Jun 2
to santhav...@googlegroups.com

மிக்க நன்றி,திரு.இமயவரம்பன் 


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jun 2, 2026, 10:57:59 PM (3 days ago) Jun 2
to santhav...@googlegroups.com

திருத்திய வடிவம் (படங்கள் இடாமல்)

உலகினில் உயருவர் உறுதியில் வளருவர்

நிலையது இழிவுற ஒருசெயல் அணுகிலர்

அலையினில் வதையுறும் இலையெனு(ம்) நிலையிலும்

அலசடி யிலையெனின் அகமுறும் நலமே.


நெறியினில் நிலைபெறு மனமுளர் பெரியவர்

வறுமையும் மலிதுயர் மிகவென உழலினும்

அறிவொடு நெறிமுறை தனைவிட நினையலர்

உறுதியின் அணியென அகமுறும் நலமே.


கரைதொடும் அலைகளும் மிகவென முடுகிடில்

புரளுறு நதிவெளம் அதனுடன் உறைபெறும்

உரமுடன் செயல்படும் வழிதனில் இறைவனும்

வரமது மருளுவன் அகமுறும் நலமே.


உலகெனும் உவரியில் மனிதரும் அலையனர்

பலவகை இடருற அடுதுயர் மிகுபடும்

மலமன மிலதெனும் நெறியது உளனுறில்

அலகில னவனருள் அகமுறும் நலமே.


அலசடி- துன்பம், வருத்தம்

மலிதுயர் - மிகுந்த துயரம்

மலமனம் - மும்மலத்தைக் குறித்தது

உவரி- கடல்

அலையனர்- அலையன்னர் என்பதன் குறுக்கல் விகாரம்.

அலகிலன் - அளவிட முடியாதவ


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 2 Jun 2026, at 6:49 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:



Siva Siva

unread,
Jun 2, 2026, 11:00:42 PM (3 days ago) Jun 2
to santhav...@googlegroups.com
முடுகிடில் புரளுறு /

/ உரமுடன் செயல்படும்   /

Please check.

==

Ram Ramakrishnan

unread,
Jun 3, 2026, 8:33:34 AM (3 days ago) Jun 3
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசிவா

உரமுடன் வினைபுரி என்று மாற்றுகிறேன்.
 முடுகிட உருளிடும் என்று மாற்றுகிறேன்.

சிறு ஐயம்.

நீங்கள் முதலில் சொன்னது மெல்லின ஒற்றுக்குப்பின் வல்லின உயிர்மெய் வரின் சந்தம் கெடும் என்று.

இடையின ஒற்றில் ல், ள் என்ற இடையின ஒற்றுகளுக்குப்  பின்வரும் வல்லின உயிர்மெய்களுக்கும் இது பொருந்துமா? ல, ற வாகவும், ள, ட ஆகவும் மாறுதலால் சந்தம் கெடும் என்பதினாலா?


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 2, 2026, at 23:00, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 3, 2026, 8:48:22 AM (3 days ago) Jun 3
to santhav...@googlegroups.com
One has to consider the sandhi rules and any impact on sandham due to them.
For example,
முடுகிடில் புரளுறு = முடுகிடிற் புரளுறு

So, there will be places where ல் / ள் followed by a வல்லின உயிர்மெய் may sometimes cause change in sandham (and are OK at some other places).

கழல்தாராய் - this comes in thiruppugazh thongal - and is OK. (Technically it will be கழறாராய் after sandhi).

கடல் + துயின்ற (கடலில் துயின்ற) = கடற்றுயின்ற.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Jun 3, 2026, 9:40:12 AM (3 days ago) Jun 3
to santhav...@googlegroups.com
முழுமையாகத் திருத்திய வடிவம்

அகமுறும் நலமே 



சந்தக் கலிவிருத்தம்


தனதன தனதன தனதன தனதன


(ஈற்றடியின் ஈற்றுச்சீர் தனனா - திருவிராகம் அமைப்பு)


 

image.png

 






உலகினில் உயருவர் உறுதியில் வளருவர்

நிலையது இழிவுற வொறுசெயல் அணுகிலர்

அலையினில் வதையுறும் இலையெனு(ம்) நிலையிலும்

அலசடி யிலையெனின் அகமுறும் நலமே.

 

 

 

 

 

 

 

 

 



நெறியினில் நிலைபெறு மனமுளர் பெரியவர்

வறுமையும் மலிதுயர் மிகவென உழலினும்

அறிவொடு நெறிமுறை தனைவிட நினையலர்

உறுதியின் அணியென அகமுறும் நலமே.

 

 

 

 

 

 

 

 

 

 

]
 image.png

 

 

 

image.png

 

 




கரைதொடு அலைகளும் மிகவென் முடுகிட

உருளுறும் நதிவெளம் அதனுடன் உறைபெறும்

உரமுடன் வினைபுரி வழிதனில் இறைவனும்

வரமது மருளுவன் அகமுறும் நலமே.

 

 

 

 

 

 

 

 




உலகெனும் உவரியில் மனிதரும் அலையனர்

பலவகை இடருற அடுதுயர் மிகுபடும்

மலமன மிலதெனும் நெறியது உளனுறில்

அலகில னவனருள் அகமுறும் நலமே.

 

 

image.png

 

அலசடி- துன்பம், வருத்தம்

நதிவெளம் -நதிவெள்ளம் என்பதன் இடைக்குறை

மலமனம்- மும்மலத்தைக் குறித்தது

அலையனர்– அலையன்னர் என்பதன் இடைக்குறை

அலகிலன் - அளவிட முடியாதவன்

 

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

02/06/2026

 

 

 

 

 

 


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages