கவியரங்கம் 60

29 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Oct 1, 2025, 9:55:10 AM (3 days ago) Oct 1
to santhavasantham

வற்றாத பேரார்வம் வாகான நன்முயற்சி
பற்ருக்கொண் டேற்ரும் படைப்புகள்- நற்ரொண்டாய்ப்ப்
பங்கேற்கும் காஞ்சியின் பாவலர் நற்கவி
தங்கவேல் பாடல் தனி

கவிஞர் தங்கவேல் எனக்கு அனுப்பியுள்ள கவிதையை இடுகிறேன்

தலைப்பு: போராடவா இந்தப் போது! 

பாவகை கலிவெண்பா 

போராட வாஇந்தப் போதெனப் பற்பலர்
வாராய்  எனவழைத்தால் வாரா திருப்பேனோ
வந்தேன் அவைமுன்னே வாடா மலர்தூவி 
தந்தேன் வணக்கத்தைச் சந்த வசந்தத்தில் 
அன்னை வயிற்றுள்ளே அல்லல் அடந்தோமே
பின்னர் பிறந்து பிதற்றித் திரிந்தோமே
எல்லை  இலாத இறைவனே எங்குள்ளாய்
கல்லில் இருப்பாயோ காற்றில் இருப்பாயோ 
கண்ணில் படுவாயா காண விழைகின்றேன்
மண்ணில் வரும்போரால் மந்தர் பெருதுன்பம்
பட்டே இறப்பாரே பச்சை மரமெல்லாம்
பட்டே விழுந்திடுமே பாவம் உயிரெல்லாம் 
மாயும் அதனாலே வள்ளல் பெருமான்போல்
காயம் இறக்காத காலம் வரவேண்டும்
சாதி மதத்தாலே சண்ட இனிவேண்டாம் 
சோதி வடிவாகத் தோன்றி யருள்வாயே
அன்பே வடிவான ஐயா அருள்வாயே
துன்பம் இனிவேண்டாம் தூயா அருள்வாயே
என்றும் இறப்பில்லா இன்பம் அருள்வாயே
உன்னை மறக்காத உள்ளம் அருள்வாயே
ஊனே உணவென்றே உண்டுத் திரிவோரும்
தானே மனம்மாறத் தாயே அருள்வாயே
கள்ளுக் கடையில்லா காலம் வரவேண்டும் 
வள்ளல் பெருமானே மண்ணில் இனிமேலோர்
போரும் நடந்தால் புவியில் உயிரெல்லாம்
சோரும் அதனாலே சோதி வடிவாய்
இறைவா அருளாய் இசைந்து.




தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Oct 1, 2025, 10:04:46 AM (3 days ago) Oct 1
to சந்தவசந்தம்
மிக்க மகிழ்ச்சி தலைவரே !
தங்களுக்கு அனுப்பிய பின்னர் இப்பாடலில் 
சில மாற்றங்கள் செய்துள்ளேன் 


சந்தவசந்தக் கவியரங்கம் - 60
தலைப்பு :  போராடவா இந்தப் போது
தலைவர்: இலந்தை சு இராமசாமி 

திருவருட்பா  - ஆறாம் திருமுறை
            (திருவடி முறையீடு)

சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே
     திகழ்தனித் தந்தையே நின்பால்
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணை
    செய்தருள் செய்திடத் தாழ்க்கில்
யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன்
     யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
போரிட முடியா தினித்துய ரொடுநான்
     பொறுக்கலேன் அருள்கஇப் போதே
        - சிதம்பரம் இராமலிங்கம் 

போராடவா இந்தப் போது
         (கலிவெண்பா)

போராட வாவிந்தப் போதென்னைப் பற்பலர்
வாராய்  எனவழைத்தால் வாரா திருப்பேனோ
வந்தேன் அவைமுன்னே வாடா மலர்தூவித்
தந்தேன் வணக்கத்தைச் சந்த வசந்தத்தில் 
அன்னை வயிற்றுள்ளே அல்லல் அடைந்தோமே
பின்னர் பிறந்து பிதற்றித் திரிந்தோமே
எல்லை  இலாத இறைவனே எங்குள்ளாய்
கல்லில் இருப்பாயோ காற்றில் இருப்பாயோ 
கண்ணில் படுவாயா காண விழைகின்றேன்
கண்டால் களிப்பேனே காணத் துடிக்கின்றேன்
கண்ணீர் விடுகின்றேன் கண்ணீர் விடுகின்றேன் 
மண்ணில் வரும்போரால் மாந்தர் பெருந்துன்பம்
பட்டே இறப்பாரே பச்சை மரமெல்லாம்
பட்டே விழுந்திடுமே பாவம் உயிரெல்லாம் 
மாயும் அதனாலே வள்ளல் பெருமான்போல் 
காயம் இறக்காத காலம் வரவேண்டும்
சாதி மதத்தாலே சண்டை இனிவேண்டாம் 
சோதி வடிவாகத் தோன்றி அருள்வாயே
அன்பே வடிவான ஐயா அருள்வாயே
துன்பம் இனிவேண்டாம் தூயா அருள்வாயே
என்றும் இறப்பில்லா இன்பம் அருள்வாயே
உன்னை மறக்காத உள்ளம் அருள்வாயே
உண்ண உணவின்றி உள்ள உலகோரும்
உண்டுப் பசியாறி உன்னைத் தொழவேண்டும்
ஊனே உணவென்றே உண்டுத் திரிவோரும் 
தானே மனம்மாறத் தாயே அருள்வாயே
தீய குணத்தார் திருந்தி விடவேண்டும் 
நேய மனத்தோடு நின்னைத் தொழவேண்டும்
*ஊரமு துண்டுண் டொழியா தினிமக்கள் 
ஆரமு துண்ண அறிவைத் தரவேண்டும்
கள்ளுக் கடையில்லா காலம் வரவேண்டும் 
வள்ளல் பெருமானே மண்ணில் இனிமேலோர் 
போரும் நடந்தால் புவியில் உயிரெல்லாம்
சோரும் அதனாலே சோதி வடிவாய் 
இறைவா அருளாய் இசைந்து . 
 
-  காஞ்சிபுரம் க. தங்கவேல் 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


[பிற்குறிப்பு :  *ஊரமுது

திருவருட்பா  - ஆறாம் திருமுறையில் 

ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
    என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
    கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
    ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
     அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து

என்று தெளிவாக விளக்கம் தந்துள்ளார்கள் .

நாம் உண்ணும் உணவு வகைகள் எல்லாமே, "ஊர் அமுது'' ,அதாவது புழுக்கின்ற உணவு அதாவது மலமாகவும்,சிறுநீராகவும்,வியர்வையாகவும் ,வந்து கொண்டே இருக்கும்  உணவாகும் ,
ஊர் அமுது உண்ணுகின்ற வரையில் மரணம் வந்தே தீரும் .இந்த உணவு வகைகள் யாவும் ''அருள்'' கிடைப்பதற்கு தடையாக இருக்கின்றது.
இந்த உணவு முறைகளை உண்ணாமல் இருந்தாலும்,உட்கொண்டு இருந்தாலும் மரணம் வந்து கொண்டே இருக்கும்.   ஆதலால் உணவு முறைகளை மாற்ற வேண்டும் என்கின்றார்.

புழுக்காத வஸ்துக்கள் யாதென வள்ளலார் உபதேசக் குறிப்பைப் படித்து அறிக.


Arasi Palaniappan

unread,
Oct 1, 2025, 11:41:08 AM (3 days ago) Oct 1
to சந்தவசந்தம்
சன்மார்க்கம் காட்டுகிற தம்பிநம் தங்கவேல் 
தன்கவிதை போற்றும் தரம் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/660a9a35-faf4-44ad-908d-6ce3962f14b4n%40googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Oct 1, 2025, 12:37:09 PM (3 days ago) Oct 1
to santhav...@googlegroups.com
திரு.தங்கவேல் அவர்களின் கவிதையும் கருத்தும் சிறப்பு!

கச்சி புலவர் கனிவார்ந்த வண்டமிழில்

கச்சிதமாய்ச் சொன்னார் கவி.

இமயவரம்பன்

unread,
Oct 1, 2025, 12:43:01 PM (3 days ago) Oct 1
to santhav...@googlegroups.com
இந்தக் கவியரங்கின் இடுகைகளைக்  "

கவியரங்கம்- 60

“ என்னும் பெயரில் உள்ள Original இழையில் தான் இதுவரை பதிவு செய்து வருகிறோம். எனவே “கவியரங்கம் 60” என்னும் இந்த Duplicate இழையில் இனித் தொடராமல் மூல இழையிலேயே தொடர்வது நல்லது.
Reply all
Reply to author
Forward
0 new messages