சென்றது இனி மீளாது
(சிந்துக் கவிதை)
நடந்து முடிந்த தனைத்தும் நினைந்து
நலிவுற் றயராமல் - மனமே
சுடர்ந்து விரிந்த கதிர்போல் எழுந்து
துயரற் றுயர்வாயே. (1)
நிகழ்கா லந்தான் நிசமென் றுணர்ந்துன்
நினைவில் சிறப்பாயேல் - மனமே
திகட்டா இனிப்பாய்த் திகழும் வாழ்வில்
திளைத்துக் களிப்பாயே. (2)
ஒவ்வோர் கணமும் இறந்து மீண்டும்
உயிர்ப்புற் றெழுவாயேல் - மனமே
செவ்வே உன(து)ஆ ரிடர்தீர்ந் துணர்வில்
தீப்போல் ஒளிர்வாயே. (3)
இன்(று)இப் பொழுதிவ் விடமே இனிதென்
றிருந்(து)இன் புறுவாயேல் - மனமே
சென்ற பொழுதாம் சிறைப்பட் டுழலும்
சிறுமை விடுவாயே. (4)
கடந்த பொழுதைக் கடந்து வென்று
கவலை துறப்பாயேல் - மனமே
தொடர்ந்து வந்து வாட்டும் நினைவைத்
துணிந்து மறுப்பாயே. (5)
முன்னம் முயன்ற செயல்கள் பழுதாய்
முடிவுற் றிழிந்தாலும் - மனமே
உன்னி உன்னித் தளரா துனக்குள்
உரங்கொண் டெழுவாயே. (6)
இழந்த தெண்ணி இளைத்து வாடி
ஏங்கி அழியாமல் - மனமே
கழிந்த நினைவாம் கறையற் றிந்தக்
கணத்தில் பொலிவாயே. (7)
என்றோ நிகழ்ந்த தெல்லாம் ஆய்ந்தாய்ந்(து)
இனிநீ மெலியாமல் - மனமே
இன்றைப் பொழுதில் நிலைபெற் றுன்னுள்
இருளைக் களைவாயே. (8)
முன்னாள் அதனை நினைத்து வெதும்பும்
முரணற் றிடுவாயேல் - மனமே
நன்னாள் அதுஇந் நாளென் றுணர்ந்து
நவமாய்ச் சுடர்வாயே. (9)
முந்தை நினைவை இந்தக் கணத்தில்
முற்றும் மறப்பாயேல் - மனமே
முந்தும் வினைமோ திடினும் அசைவில்
மோனத் திருப்பாயே. (10)
போனதை எண்ணிப் புலம்பித் தவிக்கும்
புன்மை விடுவாயேல் - மனமே
நானெனும் பொய்யை நவையறப் போக்கும்
ஞானம் பெறுவாயே.(11)
கண்போல் இந்தக் கணத்தைக் கருதும்
கண்ணோட் டத்தாலே - மனமே
கண்ணார் அமுதாம் கடவுள் தன்னைக்
காண்பாய் இப்போதே. (12)
- இமயவரம்பன்
தொடர்ந்து வந்து வாட்டும் நினைவைத்
துணிந்து மறுப்பாயே.- மறப்பாயே என்றிருக்கலாம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/FFF6555A-B195-49DD-9B95-4A20339086FE%40gmail.com.
On Dec 6, 2024, at 9:42 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOSpt%3DSOeP%2B_tOSThsE2JES3gm6yxc%3DK25LPV67yJAcVA%40mail.gmail.com.
On Dec 7, 2024, at 8:48 AM, RNachi <rna...@gmail.com> wrote:
மிக அருமை ஐயா
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/64beaea2-ff99-4968-a3f6-509a4485f904n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/FFF6555A-B195-49DD-9B95-4A20339086FE%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/64beaea2-ff99-4968-a3f6-509a4485f904n%40googlegroups.com.
On Dec 7, 2024, at 10:13 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXYzQNFMMxKZ%2BDmc1d8bwXVB3thufScD3Jvf-To3482LcQ%40mail.gmail.com.
On Dec 7, 2024, at 1:52 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtgK6cA%3DRM6EwBYuup2eyC6Cdr7xc7ysTrcxzp9DC%3DGjiQ%40mail.gmail.com.
On Dec 7, 2024, at 3:08 PM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
சிறப்பான சிந்துக் கவிதை— தில்லைவேந்தன்...
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hjEXp2vTyWtnck8y0BYCTUBrdGszLr6gd0Uj2HiY7k6SA%40mail.gmail.com.
அருமை
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/DDA38E54-A256-4DCE-9833-F20007110BA7%40gmail.com.
On Dec 7, 2024, at 5:14 PM, Kavingar Jawaharlal <kavingar....@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOin%2BB84atQRxyaUhW3vg60hPpC4p1E4PdtDUDrQnQo_q28ihQ%40mail.gmail.com.
பாரதி பாட்டை நினைவு படுத்தும் அருமையான பாடல். ஆனாலும் சென்றதையும், வருவதையும் மனத்தினின்றும் அகற்றி நிகழ்காலத்தில் மட்டும் நிற்க முடியுமா? ஆனால் ஓர் ஆசுவாசம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/64beaea2-ff99-4968-a3f6-509a4485f904n%40googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CADDmYbH%2BsurKDG_6bSQqAy7uyd9CZvAN2W%3DDmKzzLZtsuS4iXg%40mail.gmail.com.
(பல்லவி)
மனமே! மனமே!
மனமே! மனமே!
நடந்ததை நினையாதே! - உன்
… நடையினில் தளராதே!
(சரணம் 1)
கடந்திடும் பொழுதினில் நடந்தவை நினைத்துநீ
… கவலைகள் வளர்க்காதே! - மனமே!
தொடர்ந்திடும் இடரிலும் சுடும்துயர் நடுவிலும்
… துணிவினை இழக்காதே!
(சரணம் 2)
நிகழ்கணம் நிசமெனக் கழிந்தவை கனவென
… நிதம்நிதம் உணர்வாயே! - மனமே!
அகல்நிலம் அனைத்தையும் அமுதென அருந்திடும்
… அனுபவம் உறுவாயே!
(சரணம் 3)
பொழுதுகள் தொறும்தொறும் பழையவை கழிந்திட
… புதிதென எழுவாயே! - மனமே!
பழுதெலாம் மறைந்திடப் பளிச்சிடும் உணர்வுடன்
… பளிங்கென பொலிவாயே!
(சரணம் 4)
அறிவெனும் ஒளியுடன் பரிவெனும் விழியுடன்
… அறவினை புரிவாயே! – மனமே!
உறுதுயர் விலகிட வருகணம் எதனிலும்
… உயர்நலம் அடைவாயே!
On Jun 2, 2026, at 21:42, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
இந்தப் பாடலைப் புதுவிதமாக மீண்டும் எழுதிப் பார்த்தேன்:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8C9CB487-4ABC-41FF-958A-90B723ADAF1D%40gmail.com.