சும்மா இரு சொல் அற

23 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Oct 25, 2024, 6:56:35 AM10/25/24
to சந்தவசந்தம்

சும்மா இரு சொல் அற

(நேரிசை வெண்பா)


தெளிந்திடாப் போதும் சினந்தெழும் போதும்

உளந்தான் உழல்வுற்ற போதும் - பிளப்பிலாச்

செம்மாய நட்பும் சிதைகின்ற அப்போதும்

சும்மா இரு,சொல் அற.


(செம் ஆய = செம்மை ஆகிய = சீரான)


- இமயவரம்பன்

Kavingar Jawaharlal

unread,
Oct 25, 2024, 8:08:59 AM10/25/24
to santhav...@googlegroups.com

அருமை


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/640CB261-D2D8-4B54-B522-33C61232B0DC%40gmail.com.

GOPAL Vis

unread,
Oct 25, 2024, 8:32:30 AM10/25/24
to santhav...@googlegroups.com
அருமை.
சினந்தெழும் போதும் --> சினந்து எழுந்த பின் சும்மா இருப்பதாக ஆகுமோ? சினமெழும் போதும் என்னலாமோ?
கோபால்.



--
 

இமயவரம்பன்

unread,
Oct 25, 2024, 9:05:57 AM10/25/24
to santhav...@googlegroups.com
ஆம்! நீங்கள் சொல்வது சரியே!

ஓசையின்பம் கருதி இவ்வாறு அமைத்தேன். இதனால் பொருள் மாறுபடும் என்று தெளியப்படுத்தியமைக்கு நன்றி!

மாற்றிக் கொள்கிறேன்.

On Oct 25, 2024, at 8:32 AM, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Oct 25, 2024, 3:30:07 PM10/25/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி கவிஞரே!

N. Ganesan

unread,
Oct 25, 2024, 6:06:14 PM10/25/24
to santhav...@googlegroups.com
அருமை. Dr. கோபால் திருத்தம் மெருகு ஏற்றுகிறது.

இமயவரம்பன்

unread,
Oct 25, 2024, 6:35:48 PM10/25/24
to santhav...@googlegroups.com
நன்றி, திரு. கணேசன்! 

On Oct 25, 2024, at 6:06 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:



Rajja Gopalan

unread,
Oct 26, 2024, 1:52:35 AM10/26/24
to santhav...@googlegroups.com
சிறப்பான பாடல் 
வாழ்க 
Sent from my iPhone

On 25 Oct 2024, at 23:35, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:



N. Ganesan

unread,
Oct 26, 2024, 8:23:25 AM10/26/24
to santhav...@googlegroups.com, Dr. Y. Manikandan, Subramanian T.S., George Hart
On Fri, Oct 25, 2024 at 5:56 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
> சும்மா இரு சொல் அற
> (நேரிசை வெண்பா)
>
> தெளிந்திடாப் போதும் சினமெழும் போதும்

> உளந்தான் உழல்வுற்ற போதும் - பிளப்பிலாச்
> செம்மாய நட்பும் சிதைகின்ற அப்போதும்
> சும்மா இரு,சொல் அற.
>
> (செம் ஆய = செம்மை ஆகிய = சீரான)
> - இமயவரம்பன்
>
> --

யோகத்தின் பயனை முருகன் தனக்கு அறிவித்ததாய் அருணகிரிநாதர் கூறும் மகாவாக்கியம். ஈற்றடியாய் அமைந்துள்ளது. வாழ்க.

எங்கள் குடும்பங்களில் பிறந்தவர் சுவாமி சித்பவானந்தர். ஈழத்து விபுலானந்தரும், பொள்ளாச்சி சித்பவானந்தரும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடர்களிடம் பயின்றோர். தமிழ்மக்களிடையே இராமைருஷ்ணர் இயக்கம் வளர்த்தவர்களில் நிலைத்த இடம் பெற்றோர். சித்பவனாந்தருக்குத் தாயுமானவரிடம் ஆழ்ந்த பக்தி. முகவை சேதுபதி மன்னரிடம் கேட்டுப் பெற்று கீலமாயிருந்த தாயுமானவர் சமாதியைப் புதுப்பித்தார். சித்பவானந்தர் பாடல் முழுத் தொகுப்பும் அச்சிட்டார். ராமகிருஷ்ண தபோவனம் (திருப்பராய்த்துறை) நிர்வாகம் இன்றும். பாரதப் பிரதமர் ராமேச்சுரம் வரும்போது அங்கே தான் தங்குகிறார்.

சைவ சித்தாந்த, அத்வைத சித்தாந்தங்களுக்குச் சமரசம் கண்டவர் ஞானி தாயுமானவர். உங்கள் வெண்பா, சும்மா இருப்பது மெத்தக் கடினம் என்னும் தாயுமான சாமி திருப்பாட்டை நினைவூட்டுகிறது:

கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்,
     கரடி வெம்புலி வாயையும்
   கட்டலாம், ஒருசிங்க முதுகின்மேல் கொள்ளலாம்,
         கட்செவி எடுத்து ஆட்டலாம்,
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்
         வேதித்து விற்று உண்ணலாம்,
   வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்,
          விண்ணவரை ஏவல்கொளலாம்,
சந்ததமும் இளமையோடு இருக்கலாம், மற்றொரு
          சரீரத்தினும் புகுதலாம்,
   சலமேல் நடக்கலாம், கனல்மேல் இருக்கலாம்,
           தன்னிகரில் சித்திபெறலாம்,
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
           திறம்அரிது, சத்தாகி என்
   சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
           தேசோ மயானந்தமே!.

நா. கணேசன்




Ram Ramakrishnan

unread,
Oct 26, 2024, 2:15:05 PM10/26/24
to santhav...@googlegroups.com
அருமான பின்னூட்டமும் தாயுமானவர் பாடலும்
தந்தமைக்கு மிக்க நன்றி, திரு. கணேசன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 26, 2024, at 08:23, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Oct 26, 2024, 2:41:09 PM10/26/24
to santhav...@googlegroups.com, Dr. Y. Manikandan, Subramanian T.S., George Hart
சும்மா இருக்கும் சுகத்தைக் குறித்த சுவையான தகவல்களுக்கு மிக்க நன்றி, திரு.கணேசன்!

இமயவரம்பன்

unread,
Oct 10, 2025, 10:34:01 PM (3 days ago) Oct 10
to AnandBl...@gmail.com, santhav...@googlegroups.com

X தளத்தில் இன்று இந்த வாசகத்தைக் கண்டேன்:


“Do you have the patience to wait till your mud settles and the water is clear? Can you remain unmoving till the right action arises by itself?”

  • Lao Tzu

இதன் கருத்தைத் தழுவி அடியேன் எழுதிய வெண்பா:


சும்மா இரு சொல் அற


தன்மருள் நீங்கித் தெளிவடைமுன், தன்புலனை

வென்றிடு மெய்ம்மை விறல்மிகுமுன் - அன்பினால்

இம்மா நிலத்துக்(கு) இதஞ்செய் மனம்பெறுமுன்

சும்மா இருசொல் அற.


 (மருள் = மயக்கம்; புலன் = ஐம்புலன்கள்; விறல் = திறமை அல்லது வலிமை; மாநிலம் = உலகம்; இதம் செய் = நன்மை புரியும்)


On Oct 25, 2024, at 6:56 AM, இமயவரம்பன் <AnandBl...@gmail.com> wrote:



Arasi Palaniappan

unread,
Oct 10, 2025, 11:37:10 PM (3 days ago) Oct 10
to சந்தவசந்தம்
சிறப்பு!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Oct 11, 2025, 9:05:31 PM (2 days ago) Oct 11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்!
Reply all
Reply to author
Forward
0 new messages