கலிவிருத்தம்

83 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
May 27, 2026, 9:19:28 PMMay 27
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய( 27.05.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

ஒருநாள் உதவும் தெய்வ மோநீ
கருநாள் தொடங்கி வருவ னன்றோ
திருநாள் உனையான் தெரிந்த நாளே
வருநாள் வைகுந்த வாழ்வு தானே  1

   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
May 27, 2026, 9:24:19 PMMay 27
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய( 28.05.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

இருளது இல்லை ஒளியது நீயே
பொருளது கொள்ள அருளதும் நீயே
தெருளது காட்டி மருளதை மாற்றும்
அருபொருள் ஆளும்  ஆயனே ஆறே                2


   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

இமயவரம்பன்

unread,
May 28, 2026, 3:09:43 AMMay 28
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை!

அருபொருள் = அரும்பொருள் ?

Parthasarathy S

unread,
May 28, 2026, 6:46:49 AMMay 28
to சந்தவசந்தம்
அடியேன் நன்றி இமயவரம்பரே! அருபொருள் - அரும் பொருள் என்றும் கொள்ளலாம்.  கண்ணுக்குப் புலப்படாத ஆன்மாவையும் குறிக்கும். தாஸன்

Parthasarathy S

unread,
May 29, 2026, 2:05:00 AMMay 29
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய( 29.05.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

இருவினை தீர்ந்தால் இருக்குமோ சன்மம்
ஒருவினை ஆழ்ந்தே உயர்ந்தடி  சேர்ந்தால்
திருவினை மார்வில் திறம்பட வைத்தான்
வருவினை காப்பான் வழக்கினி யுண்டோ   
          3

 
   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
May 30, 2026, 9:08:21 PMMay 30
to சந்தவசந்தம்

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(31.05.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –*_ 🪷🪷🪷


பெருமழைக் கருணையில் நனைப்பான் இன்றே
அருகதை அவனடி அணைத்த வாழ்வே
பருகிடப் பலகதைப் பகர்வோர் உண்டே
திருமகள் துணையனைத் துதிப்போம் நன்றே              4



 
   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 30, 2026, 11:04:45 PMMay 30
to santhav...@googlegroups.com
அருமை. 
> > ... பலகதை*ப்* பகர்வோர் உண்டே - ஒற்று மிகை
அனந்த்

On Sat, May 30, 2026 at 9:08 PM Parthasarathy S <spart...@gmail.com> wrote:

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(31.05.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –*_ 🪷🪷🪷


பெருமழைக் கருணையில் நனைப்பான் இன்றே
அருகதை அவனடி அணைத்த வாழ்வே
பருகிடப் பலகதைப் பகர்வோர் உண்டே
திருமகள் துணையனைத் துதிப்போம் நன்றே              4

 
   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

அடியேன் நன்றி இமயவரம்பரே! அருபொருள் - அரும் பொருள் என்றும் கொள்ளலாம்.  கண்ணுக்குப் புலப்படாத ஆன்மாவையும் குறிக்கும். தாஸன்


On Thursday, 28 May 2026 at 12:39:43 pm UTC+5:30 இமயவரம்பன் wrote:
அருமை!

அருபொருள் = அரும்பொருள் ?

> On May 27, 2026, at 3:24 PM, Parthasarathy S <spart...@gmail.com> wrote:
>
> அருபொருள் ஆளும் ஆயனே ஆறே

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/181fa06f-a0c2-4a48-bd94-d07aa4baf268n%40googlegroups.com.

Parthasarathy S

unread,
May 31, 2026, 12:27:28 AMMay 31
to சந்தவசந்தம்
நன்றி திரு ஆனந்த், இரண்டாம் வேற்றுமைத்தொகையில் ஒற்று மிகாது. எனது கோப்பில் திருத்திக்கொள்கிறேன். தாஸன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 31, 2026, 9:03:00 PMMay 31
to santhav...@googlegroups.com
Thanks. என் பெயர் அனந்த், ஆனந்த் அன்று. அது அனந்தநாராயணன் என்பதன் சுருக்கம். 
அனந்த்
For your amusement, my name as given in my passport when my wife and I entered Canada (1966) is Vettaikkorumagankavu Sankaranarayanan Ananthanarayanan (conforming to first, middle and last names!! 😄 

---------------------------------

Parthasarathy S

unread,
May 31, 2026, 9:39:35 PMMay 31
to santhav...@googlegroups.com
அடியேன் தவறுக்கு மன்னிக்க!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
S. Parthasarathy
 98441 24542/9980794542

Sai Ganesan H

unread,
Jun 1, 2026, 11:28:17 AMJun 1
to santhav...@googlegroups.com
பாடல்கள் அனைத்தும் அருமை! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Parthasarathy S

unread,
Jun 1, 2026, 9:07:30 PMJun 1
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(01.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

கருமையன் காதலன் கற்பகத் தேவன்
பெருமையன் போற்றுவர் புண்ணியர் அன்றோ
திருமையன் நெஞ்சதில் தேக்கியும் வைத்தே
ஒருமையன் ஓங்கருள் ஓதுதல் நன்றே                    5

(திருமை- அழகு; ஒருமை- தனிமை)

 
   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 1, 2026, 9:08:01 PMJun 1
to சந்தவசந்தம்
நன்றி திரு சாய் கணேஷ் அவர்களே!

On Monday, 1 June 2026 at 8:58:17 pm UTC+5:30 Sai Ganesan H wrote:

Parthasarathy S

unread,
Jun 1, 2026, 9:10:06 PMJun 1
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(02.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு – 🪷🪷🪷

இருநிலம் படைத்தவென் இறைவனே ஈண்டே
ஒருமுறை குணமெலாம் ஏத்திடல் ஆமோ
தெருமரல் துடைத்தெமைத் தெவிளிடும் தேவே
அருமறை ஆதியா அண்டினேன் அருளே!


(தெருமரல் – மனச்சுழற்சி,அச்சம்; தெவிள்-நிறைதல்)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 1, 2026, 10:40:20 PMJun 1
to santhav...@googlegroups.com
>  தெருமரல் துடைத்தெமைத் தெவிளிடும் தேவே  
அருமை!
அனந்த்

--

Parthasarathy S

unread,
Jun 1, 2026, 11:46:29 PMJun 1
to சந்தவசந்தம்
நன்றி அனந்த்!!!!

Parthasarathy S

unread,
Jun 2, 2026, 8:40:53 PMJun 2
to சந்தவசந்தம்

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(03.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷


வருதுயர் விலக்கும் வரந்தரும் விமலா
இருவினை விலங்கை இறுத்திடும் இன்பா
திருவுடை மார்வுடன் துலங்கிடும் தூயா
பருவரல் மாற்றுமுன் பாதமென் பற்றே                   7


(
பருவரல் – துன்பம்)



    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 3, 2026, 11:53:50 PMJun 3
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(04.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

ஒருபகல் ஆனவுன் உலகதில் எனைவை
நெருடிடும் வினைகளை நீக்கிட அருள்செய்
கருகிடும் வாழ்வினைக் காத்திட எனையே
ஒருமுறை சரணனாய் உவந்தளி உனையே                         8



    புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_


Parthasarathy S

unread,
Jun 4, 2026, 9:14:54 PMJun 4
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(05.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

நிருதரை நீறுசெய் நின்மலா நெடியா
நிருமிசெய் நித்தியா  நேடலும் நன்றோ
நிருமல நெஞ்சினாய் நேயத்தோ டென்னை
நிருமியுன் நிழற்கீழ் நேயத்தில் நீளவே 9

( நிருமி- சங்கற்பம்; நிருமலம் – நிர்மலம்)


    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 6, 2026, 11:09:18 AMJun 6
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(06.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு – 🪷🪷🪷

அருவியாய் அருளும் ஐம்பூ தமேநீ
கருவியாய் நின்றுசெய் காரியம் வேறோ
உருவமாய் அருவமாய் உளதெலாம் நீயே
கருமுதல் காத்திடும் காரணா காப்பே                             10


    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

இமயவரம்பன்

unread,
Jun 6, 2026, 11:42:55 AMJun 6
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான கருத்து அமைந்த கலிவிருத்தம்!

- இமயவரம்பன்

Parthasarathy S

unread,
Jun 7, 2026, 1:57:04 AMJun 7
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(07.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

ஒருமுறை சரணென உன்கழல் சேரவே
திருமகள் பரிந்துரை தீர்க்குமுன் கோபமே
வருநலம் யாவையும் வழங்கிடு வள்ளலே
கருவறை இலையெனக் காத்திடும் கண்ணனே                          11

                           
    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 7, 2026, 1:57:48 AMJun 7
to சந்தவசந்தம்
நன்றி திரு இமயவரம்பன்!!!!

On Saturday, 6 June 2026 at 9:12:55 pm UTC+5:30 இமயவரம்பன் wrote:

Rajagopalan Soundararajan

unread,
Jun 7, 2026, 7:40:22 AMJun 7
to சந்தவசந்தம்

திருமகள் பரிந்துரையானது கோபத்தைத் தீர்க்கும் (புருஷகாரம்) , நலம் யாவையும் வழங்கிடும் வள்ளன்மை (வாத்ஸல்யம்), கருவறை இலையெனக் காத்தல் (மோக்ஷப்ராதனத்வம்), அனைத்தையும் உள்ளடக்கிய ஶரணாகத வத்ஸலனைப் பாடியுள்ளீர். நன்று.

ஸௌந்தர்

Parthasarathy S

unread,
Jun 7, 2026, 8:43:41 PMJun 7
to சந்தவசந்தம்
நன்றி திரு ஸௌந்தர்!!!

Parthasarathy S

unread,
Jun 7, 2026, 8:45:35 PMJun 7
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(08.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

இருமையன் நமக்காய் எடுப்பனே பல்லுரு
பெருமையன் தோன்றுதல் பேரருள் கொண்டே
அருமையன் இலங்குவன் ஆழுநல் அன்பினில்
கருமையன் காப்பனே கழலிணை சேர்வாய்                                12

(இருமை – மகிமை)

                       
  _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_


Parthasarathy S

unread,
Jun 8, 2026, 10:58:41 PMJun 8
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(09.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

இருக்கினில் என்றும் இருப்பான் ஆழ்வார்
இருத்திடும் பாவில் இன்குணம் காட்டுவான்
அருத்திய அனைத்தும் அறிந்துடன் அளிப்பான்
மருத்துவன் ஆகியே வரும்பிறப் பறுப்பான்                    13

( இருக்கு –ரிக்- இலக்கணையால் வேதத்தைக் குறித்தது)


    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

இமயவரம்பன்

unread,
Jun 9, 2026, 3:33:39 PMJun 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com

அருமை! “இருக்குவாய் முனிக்கணங்கள் ஏத்த நானும் ஏத்தினேன்” - திருமழிசை ஆழ்வார் பாசுர வரியை நினைவுறுத்துகிறது 🙏

Parthasarathy S

unread,
Jun 9, 2026, 11:40:40 PMJun 9
to சந்தவசந்தம்
நன்றி!  இமயவரம்பரே! இருக்கார் மொழியால் என்று திருவிருத்தத்தில் நம்மாழ்வாரும் எடுக்கிறார். 

Parthasarathy S

unread,
Jun 9, 2026, 11:42:37 PMJun 9
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(10.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

நிருதராம் நெஞ்சினை நீக்கிடும் நித்தியா
தருவரம் யாவுமே தாயெனத் தருபவா
குருவினைக் காட்டிடும் கோடிநல் குணத்தவா
திருவினைப் பிரிந்திடாத் தீர்த்தனே காக்கவா               14


    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Govindaraju Arunachalam

unread,
Jun 10, 2026, 4:28:04 AMJun 10
to santhav...@googlegroups.com
பாடல் 13 வாய்பாடு என்ன?


rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Parthasarathy S

unread,
Jun 10, 2026, 7:25:14 AMJun 10
to சந்தவசந்தம்
அடியேன் அளவடிகள் நான்கும். அனைத்தடிகளிலும் ஒரே எதுகை வரும்படியாகவும் அமைத்துள்ளேன். அவ்வளவே! தாஸன்

Ram Ramakrishnan

unread,
Jun 10, 2026, 8:27:29 AMJun 10
to santhav...@googlegroups.com
விருத்தங்களில் அடிகளிடையே சீர்கள் பொருந்தி இருக்க வேண்டும். முதல் இரண்டு அடிகளில் (13 ம் பாட்டு), சீர்கள், 3, 4 இவற்றை கவனிக்க வேண்டுகிறேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 10, 2026, at 07:25, Parthasarathy S <spart...@gmail.com> wrote:

அடியேன் அளவடிகள் நான்கும். அனைத்தடிகளிலும் ஒரே எதுகை வரும்படியாகவும் அமைத்துள்ளேன். அவ்வளவே! தாஸன்

Parthasarathy S

unread,
Jun 10, 2026, 10:46:29 PMJun 10
to சந்தவசந்தம்

திரு கோவிந்தராஜ் அவர்களுக்கும் திரு. ராம்கிராம் அவர்களுக்கும் அடியேனின் மனமார்ந்த நன்றி!

பதிமூன்றாம் பாவை விளம் மா விளம் மா என்ற வாய்பாட்டில் மாற்றி அமைத்துக் கீழே மீள்பதிவிடுகிறேன். தாஸன்

இருக்கினில் என்றும் இருப்பவன் ஆழ்வார்

இருத்திடும் பாவில் இருத்துவன் நலனே

அருத்திய அனைத்தும் அறிந்துடன் அளிப்பான்

மருத்துவன் என்றே வரும்பிறப் பறுப்பான்                13

 

( இருக்குரிக்- இலக்கணையால் வேதத்தைக் குறித்தது)


Parthasarathy S

unread,
Jun 11, 2026, 10:24:49 PMJun 11
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(12.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

பெருமை உன்றன் பெயரெலாம் பாடுதல்
பெருமை மாலுன் பெருங்கதை பேசுதல்
பெருமை அடியார் பெருந்திரள் கூடுதல்
பெருமை உனைச்சேர் பேறெலாம் பேசவே 15


    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 13, 2026, 11:23:55 AMJun 13
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(13.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

உருவில் வாமனன் ஓங்கிய உத்தமன்
மருவும் மாதவன் மாட்சிமை மையனே
பெருகும் காதலில் பிதற்றவும் குணங்களே
தருவன் வீடதைத் தகவுடைத் தாயனே 16


    புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 13, 2026, 9:47:08 PMJun 13
to சந்தவசந்தம்

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(14.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

திருவெட் டெழுத்தில் திகழும் தேவா
ஒருவெட் டுனையே உறவாய்க் கொளவே
வருவெட் டெனவே வளர்குணம் சேரும்
மருவெட் டுன்பதம் மாந்துதல் என்றோ? 17

(திரு எட்டெழுத்து – அக்ஷ்டாக்ஷரம்
ஒரு எட்டு – ஒருமுறை நெருங்கி
வரு எட்டு – வருகின்ற எட்டு( ஆசை)
மருவு எட்டு– தழுவிக் கிடைக்கும்)



    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 14, 2026, 10:47:38 PM (13 days ago) Jun 14
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(15.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

திருநா ரணனே திகழ்நல் தீர்த்தன்
அருளோ டுறைவான் அருட்கோ யிலிலே
திருநா டுனக்குத் திடமாய் உடனே
தருநா யகனைச் சதிர்ப்பாய் நெஞ்சே           18

(சதிர் – பெறும் பயன்; அருள்- கருணை; பொலிவு)

    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_


Parthasarathy S

unread,
Jun 16, 2026, 1:14:35 PM (12 days ago) Jun 16
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(16.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

வருகா லமெலாம் வளமே பெருகக்
குருகை யிறையைக்  குறுகாய் மனமே
திருவேங் கடனே திகழும் ஒளியாய்
இருளே களைவான் இணைதாள் ஈவான்  19


    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 17, 2026, 1:14:38 PM (11 days ago) Jun 17
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(17.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

பாருடை வயிற்றுடன் பச்சிலை துயில்பவா
நீருடை கொண்டளை நீளெயி றெடுத்தவா
நாருடை நாயகா நற்பிறப் பெடுப்பவா
ஊருடை உத்தமா ஓங்கவை யென்னையே 20

( நார்- அன்பு; எயிறு- கோடு,தந்தம்)


    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 18, 2026, 12:06:55 AM (10 days ago) Jun 18
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(18.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

கருவென உலகினில் காலமும் நிற்பனே
தருமொழி கீதையாம் தாரணி போற்றுமே
ஒருமுறை சரணமே உயர்பதம் ஈயுமே
இருவினை தீர்க்கவே இன்னமென் வேண்டுமோ                21



    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 18, 2026, 11:36:09 PM (9 days ago) Jun 18
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(19.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

வருகையை வண்ணமாய் வைக்குமென் வள்ளலே
இருநிலம் இருத்திடும் இன்னருள் ஈசனே
தருவனம் காத்திட தவமுனி ஆளெனப்
பொருசரம் விடுத்திடு புண்ணியா போற்றினேன் 22


    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 20, 2026, 4:46:51 AM (8 days ago) Jun 20
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(20.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

இருமலர்க் கணைகளை எழில்மனம் ஏந்தியா
இருவுடல் ஒளியுடன் எழுந்தருள்  உத்தமா
இருநிலம் கரந்ததில் இருந்திடும் கற்பகா
இருவென எம்மையே எழிலடி இருத்தியா 23

(இருமலர்க் கணைகள் – தாயாரின் இரண்டு தாமரைத் திருக்கண்கள்; இருவுடல் – கரிய திருமேனி; இருநிலம் – பெரிய உலகம்; இருவென – உண்டாயிரு, சத்தைபெறு; இருத்தியா – தங்கவைத்தவா; கரந்து -  மறைந்து)


    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 21, 2026, 12:33:22 AM (7 days ago) Jun 21
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(21.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

பருவினைத் தூக்கியே பத்தரைக் காத்தவன்
பருவெனப் பெருவினை பாற்றியே அருள்பவன்
பருவலை விழுமெனைப் பரிந்துமீட் டெடுத்துடன்
பருவினை தீர்த்தெனைப் புகுத்துவாய் பதமே 24

(பரு- மலை; பரு – சிறுபுண்; பரு- சிலந்தி; பரு – வளரும்)


    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 23, 2026, 6:57:31 AM (5 days ago) Jun 23
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(22.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

பருவமே பார்த்துடன் பயிர்செயும் உழவனே
கருமமே  காத்தலாய்க் கண்ணிடும் கண்ணனே
தருமமே வாடிடின் தகவுடன் வருவனே
தெருளுமே குருவழித் திருவெனத் தருவனே 25
(தெருள் – ஞானம்)


    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

Parthasarathy S

unread,
Jun 23, 2026, 6:59:41 AM (5 days ago) Jun 23
to சந்தவசந்தம்

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(23.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

உருளும் சகடம் உதைத்த பாதா
மருளில் வாழ்வை மடுக்க வைப்பாய்
இருளில் எம்மை யாண்டு மிடாதே
அருளை ஈந்(து) கமிருப் பாயே                                     26

(மருளில்மயக்கமில்லாத)



    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 23, 2026, 11:00:44 PM (4 days ago) Jun 23
to santhav...@googlegroups.com
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(24.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

விருந்தாய் விரைவான் விதுரரின் மனைக்கே
அருந்தும் அமுதே அருமுனி யவர்க்கே
திருந்தா நமையே திருத்திட வருவான்
மருந்தாம் அவனை மறப்பதும் அழகோ?                  27


    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_


--
S. Parthasarathy
 98441 24542/9980794542

Parthasarathy S

unread,
Jun 27, 2026, 10:35:31 AM (18 hours ago) Jun 27
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(26.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு – 🪷🪷🪷

குருந்தம் ஒசித்த கோவலா எமையே
குருந்தாய்க் காக்கும் குழகனே நினைவால்
வருந்தும் அடியார் வல்வினை களைய
பருந்தில் விரையும் பரமனே பரிவாய்!*                                          28

( குருந்தம் – முதலடி மரவகை;இரண்டாமடி -குழந்தை;  நினைவு- சங்கல்பம்)


    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jun 27, 2026, 10:36:57 AM (18 hours ago) Jun 27
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(27.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

கருத்த கம்சனைக் கொன்று நின்றவன்
கருத்தில் அடியரை என்றும் வைப்பவன்
கருக்குள் வினைவழிக் கல்லா  திருப்பவன்
கருப்பொ ருளவனின் கருத்த றிந்திடு                       29

( கல்லாது– பயிலாது)


    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_
Reply all
Reply to author
Forward
0 new messages