வண்ணம் நண்ணும்: திருப்புகழ் வண்ணம்

610 views
Skip to first unread message

ramaNi

unread,
Jul 16, 2020, 1:20:04 AM7/16/20
to சந்தவசந்தம்
#ரமணி_வண்ணப்பாடல்_முன்னுரை
வண்ணம் நண்ணும்: திருப்புகழ் வண்ணம்

அடியேன் முன்னர்த் தொடங்கிய 'வண்ணம் நண்ணும்' இழையில் இயற்பா வகைகள், பாவினங்களை அன்பர்களும் முயன்றுபார்க்கும் வண்ணம், வண்ணச் சந்தப் பாவகை/பாவினங்களாகச் செய்துகாட்டி வருகிறேன். வண்ண விருத்தங்கள் தொடரும் இவ்விழை முடிவுறும் தருவாயில் உள்ளது.

வண்ண இயற்பா அமைப்பும், இசைப்பாவாகப் பாடப்பெறும் வண்ணப்பாடல் அமைப்பும் வெவ்வேறு வகைத்த என்பதால், வண்ணப்பாடல் அமைப்பில் காணும் வண்ணச் சந்தங்களை அன்பர்கள் முயன்றுபார்க்க இப்புதிய இழையைத் தொடங்குகிறேன்.

வண்ணப்பாடல் அமைப்பின் மூலவர் அருணகிரிநாத சுவாமிகளாவார். அவரது திருப்புகழ் பாடல்கள் அனைத்தும் வண்ணச் சந்தங்கள் குறித்த இராக-தாளங்களில் ஒலிக்கும் வண்ணப்பாடல்களே. அவர் வரலாற்றைப் பற்றிய நூல்கள் பலவற்றை ஆராய்ந்து , சுவாமி சிவானந்தரின் சீடர் திரு. N.V.கார்த்திகேயன் எழுதிய வரலாற்று நூலை இங்கே தரவிறக்கலாம்.

அருணகிரியாரின் வண்ணப்பாடல்களை ஆராய்ந்துபார்த்துத் தம் 'வண்ணத்தியல்பு' நூலில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் நமக்கு வண்ணப்பாடல் இலக்கணம் தந்தார். அவ்விலக்கணத்தைப் பின்னர் தம் 'அறுவகை இலக்கணம்' நூலில் மற்ற இலக்கண வகைகளுடன் சேர்த்து விரிவாகச் செய்தார். இந்நூல்களிற் காணும் வண்ணச் சந்த, வண்ணப்பாடல் இலக்கணத்தைப் பசுபதியார் தம் 'கவிதை இயற்றிக் கலக்கு' நூலில் விரிவாகத் தருகிறார்.

வண்ணச் சந்த வரையறைத் தொகுப்பை அடியேன் இக்குழுமத்தில் முன்னர் PDF ஒருங்குறிக் கோப்பாக இணைத்ததை, இவ்விழையில் மீண்டும் இணைப்பாகத் தருகிறேன். பசுபதியார் நூலிற் காணும் வண்ணப்பாடல் அமைப்பு கீழே.

• வண்ணப்பாடல் அமைப்பு
  • வண்ணப்பாடல் அமைப்பைத் திருப்புகழ் முதற் பாடலிற்
          காணும் கீழ்க்கண்ட அடிகளால் விளக்குவோம்

  • தத்தன தனதன தத்தன தனதன
          தத்தன தனதன ...... தனதான

  • கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
               கப்பிய கரிமுக ... னடிபேணிக்
            கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
               கற்பக மெனவினை ... கடிதேகும்
  • மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
               மற்பொரு திரள்புய ... மதயானை
            மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
               மட்டவிழ் மலர்கொடு ... பணிவேனே
  • முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
               முற்பட எழுதிய ... முதல்வோனே
            முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
               அச்சது பொடிசெய்த ... அதிதீரா
  • அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
               அப்புன மதனிடை ... இபமாகி
            அக்குற மகளுட னச்சிறு முருகனை
               அக்கண மணமருள் ... பெருமாளே.

• துள்ளல் = சந்தங்கள் சேர்க்கையாக வந்து திரும்பும் அடிப்படை
     தத்தன தனதன = இரண்டு சந்தங்களின் சேர்க்கை = துள்ளல்
     கைத்தல நிறைகனி = துள்ளல்

• குழிப்பு = துள்ளல்கள் சேர்க்கை
     (ஒன்று அல்லது மூன்று துள்ளல் பொதுவாக)
     கைத்தல, மத்தமு, முத்தமி, அத்துய
     கைத்தல நிறைகனி | யப்பமொ டவல்பொரி |
       கப்பிய கரிமுக  = குழிப்பு (3 துள்ளல்கள்)

• தொங்கல் = குழிப்பின் பின் தனிச்சொல் போல் வருவது
     தனதானா சந்தம்
     னடிபேணிக், கடிதேகும்,

• கலை = குழிப்பு + தொங்கல்
     கைத்தல ... னடிபேணிக் = கலை

• அடி = கலை + கலை (மோனையால் இணைந்து)
     கைத்தல ... கடிதேகும்

• வண்ணப் பாடல் = நான்கு அடிகள், ஓரெதுகை

★★★★★

அருணகிரியார் தம் திருப்புகழ் நூலில் இப்போது நமக்குக் கிடைத்துள்ள 1326 பாடல்களில் 1070 ஒருதனி (unique) வண்ணச் சந்தக் குழிப்பு வாய்பாடுகளைப் பயன்படுத்துகிறார். இவை பெரும்பாலும் ஒன்று முதல் மூன்று துள்ளல்கள் குழிப்பில் அமைந்துள்ளன. சில பாடல்களில் இவற்றுக்கு மேற்பட்ட துள்ளல்கள்--அதிக எண்ணாகப் பன்னிரண்டு--பயில்கின்றன.

இவ்விழையில் நாம் திருப்புகழ் நூலிற் காணும் வண்ணச் சந்த வாய்பாடுகளில் இயன்றவற்றைப் பயன்படுத்தி வண்ணப் பாடல்கள் புனைய முயல்வோம். குறைந்தபட்சம் வேறுபட்ட ஐம்பது வாய்பாடுகளாவது முயன்று எழுதினால் வண்ணப்பாடல்களைச் சரளமாக எழுதவியலும் என்று தோன்றுகிறது. சந்தவசந்தம் குழுமத்தில் வண்ணம் சரளமாக எழுதும் அன்பர்கள் சிவசிவா, அனந்தனார், இலந்தையார், கோபால் போன்றோர் இவ்விழையிற் காணும் வண்ணச் சந்த வாய்பாடுகளில் தம் வண்ணப்பாடல் படைப்புகளைத் தந்தும், என் பாடல்களில் காணும் பிழைகளைத் திருத்தியும், அடியேனின் இம்முயற்சியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பின்னர் நாம் இவற்றையெல்லாம் ஒரு நூலாகத் தொகுக்கலாம். 

நம் குழுமத்தில் வண்ணம் சரளமாக எழுதும் அன்பர்கள் சிவசிவா, அனந்தனார், இலந்தையார், கோபால் போன்றோர்

★★★ ★★★ ★★★

ramaNi

unread,
Jul 16, 2020, 1:21:19 AM7/16/20
to santhav...@googlegroups.com
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
நம் திருப்புகழ் வண்ணப் பயிலிழைகளில் முதலாவதாக ஒரு துள்ளல் வரும் குழிப்பொன்றைக் கொண்டோர் கணபதி துதி புனைவோம். திருப்புகழ் பாடல் எண்கள் Project Madurai வலைதளத்தில் காணும் திருப்புகழ் பதிவிற் காண்பன.

திருப்001. தத்தத் தத்தத் —— தனதான
கணபதி துதி
(வண்ணப்பாடல்)

பித்துப் பற்றித் —— தமிழோசை
. பிட்டுக் கட்டுப் —— பிதிராக
மெத்திக் கட்டிப் —— புதிதாக
. மெட்டுக் கட்டப் —— புகுவேனே
சித்தத் திற்குட் —— களியாடத்
. தெட்பச் செற்றைத் —— தருவோனே
அத்திப் பட்டத் —— தலையோனே
. அச்சுக் கட்டத் —— தருவாயே!

[மெத்துதல் = நிரப்புதல், அப்புதல்; தெட்பம் = தெளிவு, முதிர்ச்சி; செற்று = செறிவு, நெருக்கம்; 
அத்திப் பட்டம் = ஆனை(முகன்) என்ற பட்டப்பெயர்; அச்சுக்கட்டுதல் = சித்திரம் வரைவோனின் தூலரேகை (ஸ்கெட்ச்)]

★★★
பாடல் 330 ( காஞ்சீபுரம் )
ராகம் - பெஹாக்; தாளம் - அங்கதாளம் (6)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தத்தத் தத்தத் ...... தனதான

முட்டுப் பட்டுக் ...... கதிதோறும்
. முற்றச் சுற்றிப் ...... பலநாளும்
தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச்
. சற்றுப் பற்றக் ...... கருதாதோ
வட்டப் புட்பத் ...... தலமீதே
. வைக்கத் தக்கத் ...... திருபாதா
கட்டத் தற்றத் ...... தருள்வோனே
. கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.

★★★★★
 
Message has been deleted

ramaNi

unread,
Jul 16, 2020, 3:15:35 AM7/16/20
to சந்தவசந்தம்
இணைப்பு
வண்ணச் சந்த வரையறைக் கோப்பு
ரமணி
vaNNach chantam varaiyaRai.pdf

Siva Siva

unread,
Jul 16, 2020, 6:17:55 PM7/16/20
to santhavasantham
வல்லொற்றுகள் அருகருகே வரும் இவ்வகைச் சந்தம் சற்றுக் கஷ்டமோ?

அடிகள் 2, 4-இல் மோனை அமைக்க முயன்றிலீரோ?


On Thu, Jul 16, 2020 at 1:21 AM ramaNi <sai...@gmail.com> wrote:
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
நம் திருப்புகழ் வண்ணப் பயிலிழைகளில் முதலாவதாக ஒரு துள்ளல் வரும் குழிப்பொன்றைக் கொண்டோர் கணபதி துதி புனைவோம். திருப்புகழ் பாடல் எண்கள் Project Madurai வலைதளத்தில் காணும் திருப்புகழ் பதிவிற் காண்பன.

திருப்001. தத்தத் தத்தத் —— தனதான
கணபதி துதி

பித்துப் பற்றித் —— தமிழோசை
. பிட்டுப் கட்டுப் —— பிதிராக
வைத்துக் கட்டிப் —— புதிதாக
. மெட்டுக் கட்டப் —— புகுவேனே
சித்தத் திற்குட் —— களியாடத்
. தெட்பச் செற்றைத் —— தருவோனே
அத்திப் பட்டத் —— தலையோனே
. தட்டிக் கட்டத் —— தருவாயே!

[தெட்பம் = தெளிவு, முதிர்ச்சி; செற்று = செறிவு, நெருக்கம்; 
அத்திப் பட்டம் = ஆனை(முகன்) என்ற பட்டப்பெயர்; 
தட்டிக்கட்ட = விரல்களால் விசைப்பலகையில் தட்டிப் பாக்கட்ட]


ramaNi

unread,
Jul 17, 2020, 1:19:21 AM7/17/20
to சந்தவசந்தம்
திருத்திய பாடல்:
திருப்001. தத்தத் தத்தத் —— தனதான
கணபதி துதி

பித்துப் பற்றித் —— தமிழோசை
. பிட்டுப் கட்டுப் —— பிதிராக
மெத்திக் கட்டிப் —— புதிதாக
. மெட்டுக் கட்டப் —— புகுவேனே
சித்தத் திற்குட் —— களியாடத்
. தெட்பச் செற்றைத் —— தருவோனே
அத்திப் பட்டத் —— தலையோனே
. அக்க ரத்தைத் —— தருவாயே!

[மெத்துதல் = நிரப்புதல், அப்புதல்; தெட்பம் = தெளிவு, முதிர்ச்சி; செற்று = செறிவு, நெருக்கம்; 
அத்திப் பட்டம் = ஆனை(முகன்) என்ற பட்டப்பெயர்; அக்கரம் = (வண்ணச் சந்த) எழுத்து.]

16/07/2020
★★★★★



On Thursday, July 16, 2020 at 10:51:19 AM UTC+5:30, ramaNi wrote:
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
நம் திருப்புகழ் வண்ணப் பயிலிழைகளில் முதலாவதாக ஒரு துள்ளல் வரும் குழிப்பொன்றைக் கொண்டோர் கணபதி துதி புனைவோம். திருப்புகழ் பாடல் எண்கள் Project Madurai வலைதளத்தில் காணும் திருப்புகழ் பதிவிற் காண்பன.

திருப்001. தத்தத் தத்தத் —— தனதான
கணபதி துதி

பித்துப் பற்றித் —— தமிழோசை
. பிட்டுப் கட்டுப் —— பிதிராக
மெத்திக் கட்டிப் —— புதிதாக
. மெட்டுக் கட்டப் —— புகுவேனே
சித்தத் திற்குட் —— களியாடத்
. தெட்பச் செற்றைத் —— தருவோனே
அத்திப் பட்டத் —— தலையோனே
. தட்டிக் கட்டத் —— தருவாயே!

[மெத்துதல் = நிரப்புதல், அப்புதல்; தெட்பம் = தெளிவு, முதிர்ச்சி; செற்று = செறிவு, நெருக்கம்; 
அத்திப் பட்டம் = ஆனை(முகன்) என்ற பட்டப்பெயர்; 
தட்டிக்கட்ட = விரல்களால் விசைப்பலகையில் தட்டிப் பாக்கட்ட]

Vis Gop

unread,
Jul 17, 2020, 4:27:11 AM7/17/20
to santhav...@googlegroups.com
. அக்க ரத்தைத் —— தருவாயே!
.அப்பற் கம்மைக் ——-குறுசேயே!  ?
கோபால்


Sent from my iPhone

Vis Gop

unread,
Jul 17, 2020, 5:08:53 AM7/17/20
to santhav...@googlegroups.com
அம்மை: குழிப்புப் பிழையாகும். மன்னிக்கவும்

அப்பற் கொப்பற் ——-றுறுசேயே!
என்பது பொருந்தலாம். 
அப்பனுக்குக் கிட்டிய ஒப்பற்ற மகவே!

கோபால். 
Sent from my iPhone

ramaNi

unread,
Jul 17, 2020, 8:28:45 AM7/17/20
to சந்தவசந்தம்
> அப்பற் கொப்பற் ——-றுறுசேயே!
> என்பது பொருந்தலாம். 
> அப்பனுக்குக் கிட்டிய ஒப்பற்ற மகவே!

அழகு! ஆயின் அடியேன் அக்கரத்தைத் தருவாயே என்றதில் கொஞ்சம் பேராசையும் சேர்ந்துள்ளது.

• அக்கரத்தை, வண்ணப் பாடல்களில் முக்கியமான சந்த எழுத்துகளைத் தருவாயே என்பது நேர்பொருள்.
• அக்கரத்தை, அதாவது நீ வியாசர் முன்னமர்ந்து கோடொடித்து எழுதிய அக்கரத்து ஐ (அக்கரத்தின் அழகு, நுண்மையை)க் கொஞ்சம் எனக்கும் அருள்வாயே!
• அக்கு, அரத்தை —— வண்ணப் பாடல் சந்தங்களைக் கூர்ந்து நோக்கும் கண்ணும், அதை எழுதும் அரமும் (விரைவும்) தருவாயாக!

அன்புடன்,
ரமணி


On Friday, July 17, 2020 at 2:38:53 PM UTC+5:30, Vis Gop wrote:
அம்மை: குழிப்புப் பிழையாகும். மன்னிக்கவும்

அப்பற் கொப்பற் ——-றுறுசேயே!
என்பது பொருந்தலாம். 
அப்பனுக்குக் கிட்டிய ஒப்பற்ற மகவே!

கோபால். 
Sent from my iPhone

On 17-Jul-2020, at 1:57 PM, Vis Gop <vis...@gmail.com> wrote:

. அக்க ரத்தைத் —— தருவாயே!
.அப்பற் கம்மைக் ——-குறுசேயே!  ?
கோபால்

On 17-Jul-2020, at 10:49 AM, ramaNi <sai...@gmail.com> wrote:

Vis Gop

unread,
Jul 17, 2020, 8:46:55 AM7/17/20
to santhav...@googlegroups.com
ஆனால் “அக்க ரத்தைத்” என்பது “தத்தத் தத்தத்” குழிப்பன்றே!
கோபால்.


Sent from my iPhone

ramaNi

unread,
Jul 17, 2020, 9:20:35 AM7/17/20
to சந்தவசந்தம்
உண்மை, கவனிக்கத் தவறினேன்! (என் பேராசைக்கு இங்கு இடமில்லை!)

நீங்கள் தருவதுபோல் ’அப்பற் கொப்பற் ——-றுறுசேயே!’ என்று மாற்றலாந்தான். ஆயின், இதற்கு முன்னுள்ள மூன்று அரையடிகளில் கணபதி புகழ் பாடியும் என் வேண்டுதலைக் கேட்டேனில்லை. அதை நான் இறுதி அரையடியிற் கேட்டாக வேண்டுமே! 

எனவெ அவ்வரையடியை  ’அச்சுக் கட்டத் —— தருவாயே!’ என்று திருத்திக்கொள்கிறேன். அச்சுக்கட்டல் என்றால் ஸ்கெட்ச் வரைதல், உருவம் அமைத்தல். தவிர, அச்சு என்றால் ஆதாரம் என்றும் பொருள். எனவே அந்த ஆதாரம் தந்து வண்ணச் சித்திரம் வரையப் பிள்ளையார் அருளை வேண்டுகிறேன். அச்சு என்றால் அச்சம் என்றும் பொருள்படுவதில் அவ்வச்சத்தைக் கட்டத் தருவாயே என்பதும் பொருந்துகிறது. உரையாடலுக்கு நன்றி, கோபால்ஜி. நீங்களும் இக்குழிப்பில் முயன்றோர் பாடல் தாருங்களேன்!

திருப்001. தத்தத் தத்தத் —— தனதான
கணபதி துதி
(வண்ணப்பாடல்)

பித்துப் பற்றித் —— தமிழோசை
. பிட்டுக் கட்டுப் —— பிதிராக
மெத்திக் கட்டிப் —— புதிதாக
. மெட்டுக் கட்டப் —— புகுவேனே
சித்தத் திற்குட் —— களியாடத்
. தெட்பச் செற்றைத் —— தருவோனே
அத்திப் பட்டத் —— தலையோனே
. அச்சுக் கட்டத் —— தருவாயே!

[மெத்துதல் = நிரப்புதல், அப்புதல்; தெட்பம் = தெளிவு, முதிர்ச்சி; செற்று = செறிவு, நெருக்கம்; 
அத்திப் பட்டம் = ஆனை(முகன்) என்ற பட்டப்பெயர்; அச்சுக்கட்டுதல் = சித்திரம் வரைவோனின் தூலரேகை (ஸ்கெட்ச்)]

16/07/2020
அன்புடன், ரமணி


Siva Siva

unread,
Jul 17, 2020, 6:56:29 PM7/17/20
to santhavasantham
/ சித்தத் திற்குட் —— களியாடத்  /

சித்தம் - சித்தத்துள், சித்தத்தினுள் - என்றெல்லாம் வரும்.

சித்தத்திற்குள் என்பதும் ஏற்புடைத்தோ? அன்றேல், இயன்றவரை தவிர்க்கலாமோ?.


Vis Gop

unread,
Jul 17, 2020, 7:04:08 PM7/17/20
to santhav...@googlegroups.com

தங்கள் சொல்பணிந்து நானும் முயன்றேன். 


புசியாயே!

[காகத்தை அழைத்துச் சோறிடுதல்]

[தத்தத் தத்தத் தனதான]



கத்திக் கத்திக் கரையாதே!

......கப்புக் கட்டிற் குடிவாழ்வே!

கொத்திக் கப்பற் கிதுசோறு!

......கொத்துக் குத்திப் புசியாயே!

சொத்தைக் குப்பைக் கலையாதே!

......சுத்தச் சத்துக் கிவணேகு!

மெத்தச் சுற்றத் தவரோடு

......மிக்கச் சொக்கத் தருவேனே!


கப்பு = மரக்கிளை;  கப்புதல் = உண்ணுதல்; கொத்து = கவளம். 


நல்வாழ்த்துகள்.  

கோபால். 

Sent from my iPhone

ramaNi

unread,
Jul 17, 2020, 11:19:41 PM7/17/20
to சந்தவசந்தம்
சித்தத்திற்குள் என்பது இந்நாட்களில் கிறித்துவப் பிரயோகமாக இருப்பதால் தவிர்க்கவேண்டும். தேடியதில் அருணகிரியார் சித்தத்துக்குள் என்று பயன்படுத்தியிருப்பது கண்டேன்.
எனவே அவ்வரையடியை சித்தத் துக்குட் —— களியாடத் என்று மாற்றிக்கொள்கிறேன்.
ரமணி

ramaNi

unread,
Jul 18, 2020, 9:55:14 AM7/18/20
to சந்தவசந்தம்
பாடலும் வண்ணமும் அருமை! இதுபோல் இனியும் இவ்விழையில் தொடர வேண்டுகிறேன்.
ரமணி

ramaNi

unread,
Jul 19, 2020, 12:39:11 AM7/19/20
to santhav...@googlegroups.com
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
கணபதி வண்ணத்துதி செய்தபின், வண்ண மூலனான வண்ணமயில் முருகனுக்கோர் வண்ணத்துதி செய்வோம். தொடரும் அன்பர்கள் தாம் விழையும் பொருளில் பாடலாம் (விரசம் தவிர்த்து).

திருப்002. தத்தத் தனான —— தனதான
முருகன் துதி

கட்டுக் கெடாத —— அழகோனே
. கப்பித் ததோகை —— மயிலோனே
சுட்டுச் சுடாத —— பழம்வீழும்
. துப்புக் கெடாத —— வொருலீலை
விட்டுக் கொடாத —— நெறியாரே
. வித்துக் குகாவுன் —— அடியாரே
தொட்டுக் கெடாத —— மொழியாலே
. சொற்கட் டுவாகை —— அருள்வாயே!

[கப்பித்தல் = பெருத்தல், மிகுதல்; துப்பு = சாமர்த்தியம், நன்மை;
தொட்டுக் கெடாதா = நான் தொட்டுச் சிதையாத; வாகை = வாகு, வெற்றி]

16/07/2020
★★★
பாடல் 1297 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - கானடா
தாளம் - சதுஸ்ர ஜம்பை (7)
தத்தத் தனான ...... தனதான

பட்டுப் படாத ...... மதனாலும்
. பக்கத்து மாதர் ...... வசையாலும்
சுட்டுச் சுடாத ...... நிலவாலும்
. துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான்
தட்டுப் படாத ...... திறல்வீரா
. தர்க்கித்த சூரர் ...... குலகாலா
மட்டுப் படாத ...... மயிலோனே
. மற்றொப்பி லாத ...... பெருமாளே.

★★★★★


On Thursday, July 16, 2020 at 10:51:19 AM UTC+5:30, ramaNi wrote:

Siva Siva

unread,
Jul 19, 2020, 5:21:40 PM7/19/20
to santhavasantham
தொடர்முயற்சி வெல்க!

/ கப்பித் தகோகை —— மயிலோனே / 
Any typo here?

(By the way, I wrote and posted today one in this pattern in "வண்ணப் பாடல் - 2" thread.)


On Sun, Jul 19, 2020 at 12:39 AM ramaNi <sai...@gmail.com> wrote:
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
கணபதி வண்ணத்துதி செய்தபின், வண்ண மூலனான வண்ணமயில் முருகனுக்கோர் வண்ணத்துதி செய்வோம். தொடரும் அன்பர்கள் தாம் விழையும் பொருளில் பாடலாம் (விரசம் தவிர்த்து).

திருப்002. தத்தத் தனான —— தனதான
முருகன் துதி

கட்டுக் கெடாத —— அழகோனே
. கப்பித் தகோகை —— மயிலோனே

ramaNi

unread,
Jul 19, 2020, 10:17:31 PM7/19/20
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, சிவசிவா. கப்பித்த என்ற சொல் அருணகிரியார் பயன்படுத்தியதுதான் (கப்பித்த தனத்து அந்தரி). உங்கள் பாடலும் அருமை.
ரமணி

Siva Siva

unread,
Jul 19, 2020, 10:19:03 PM7/19/20
to santhavasantham
/ கோகை  / = ?

ramaNi

unread,
Jul 19, 2020, 10:53:58 PM7/19/20
to சந்தவசந்தம்
நன்றி. இதுவரை கண்படவில்லை! தோகை என்று மூலத்தில் திருத்திக்கொண்டேன்.
ரமணி

Vis Gop

unread,
Jul 20, 2020, 4:17:46 AM7/20/20
to santhav...@googlegroups.com
தத்தத் தனான தனதான 
முருகன் துதி

பிச்சைக்கிடு!


பித்தர்க்கு மோது குருநாயேன்

......பிச்சைக்கி டாத தினுமேனோ?

பத்தர்க்க றாது னருளீயப்

......பக்கிப்பி னேறி அலைவோனே!

சித்தர்க்கு ழாமி னிடைவாழத்

......தெற்கத்து மாம லையிலேகும்

வித்தர்க்கொ ணாத பெருவாழ்வே!

......வெற்றிக்கு மார வடிவேலே!


பதம் பிரித்து


பித்தர்க்கும் ஓதும் குரு, நாயேன்

......பிச்சைக்கு இடாதது இனும் ஏனோ?

பத்தர்க்கு அறாது உன் அருள் ஈயப்

......பக்கிப்பின் ஏறி அலைவோனே!

சித்தர்க்  குழாமின்  இடைவாழத்

......தெற்கத்து மாமலையில் ஏகும்

வித்தர்க்கு ஒணாத பெருவாழ்வே!

......வெற்றிக் குமார வடிவேலே!


பொருள் விளக்கம்


[பக்கி = பட்சி, பறவை, மயில்; வித்தர் = தவசி]


பித்தனான தந்தைக்கும் உபதேசம் செய்த குருவான நீ, கீழ்நிலையிலிருந்து நான் கேட்கும் பிச்சைக்கு இன்னும் இடாதது ஏனோ? பத்தர்களுக்கு இடையறாது அருள் புரிவதற்காகப் பறவையொன்றின் முதுகில் ஏறி அலைபவனே! சித்தர்களின் கூட்டத்தில் வாழும் பொருட்டுத் தெற்கில் உள்ள பெரிய மலை(பழநி)க்குச் சென்று, தவசிகளுக்கும் கிட்டாத பெரிய நிலையில் திகழ்பவனே! வெற்றியே ஆகும் (பெறும்) குமரனே! வடிவேலனே!



Sent from my iPhone

On 19-Jul-2020, at 10:09 AM, ramaNi <sai...@gmail.com> wrote:

#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை

Vis Gop

unread,
Jul 20, 2020, 4:48:50 AM7/20/20
to santhav...@googlegroups.com
முந்தைய பாடலின் சந்தக் குழிப்பு 
தத்தத்த தான தனதான 
என்றிட்டிருக்க வேண்டும்.  மன்னிக்கவும். 
இதுவே தத்தத் தனான தனதான என்ற அமைப்புக்கும் பொருந்தும். 
கோபால். 


Sent from my iPhone

Subbaier Ramasami

unread,
Jul 20, 2020, 1:21:58 PM7/20/20
to santhavasantham
கட்டுப் பட்டுச் சிலநாளே
   கற்கக் கற்கக் கவிபாடி
இட்டப் பட்டுச் சிறையாக
    எட்டுக் குச்சுச் சுவரூடே
கொட்டக் கொட்டத் தனியாளா
   கொத்துக் கொத்துக் கதிமாறி
தட்டுக் கெட்டுத்   திரிபோது  
     சத்துக் கொட்டித் தருதாயே!
 

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/5B9E7930-849A-4F37-A708-5F346234BF7C%40gmail.com.

ramaNi

unread,
Jul 20, 2020, 10:06:38 PM7/20/20
to சந்தவசந்தம்
அருமை, தலைவரே. நீங்கள் கற்கக் கற்கக் கவிபாடினால் அடியேன் கற்றுக் கற்றுக் கவிபாடுவேன்!
ரமணி

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 21, 2020, 9:55:24 AM7/21/20
to சந்தவசந்தம்

தத்தத் தத்தத் தனதான

 

கட்டப் பட்டுக் கவியாப்பின்

..கட்டுக் குட்பட் டொருபாடல்

கட்டித் தட்டச் சினிலேற்றக்

.. கற்றுச் சொற்குச் சுவைசேர

இட்டப் பட்டுத் தொடுவானை

.. எட்டப் பற்றுக் கொளுவாயே

நட்டத் திற்குப் பெரியோனை

..நச்சக் கற்றுத் தெளிவாயே.

 

..அனந்த் 20-7-2020

..

 


ramaNi

unread,
Jul 21, 2020, 10:13:11 AM7/21/20
to சந்தவசந்தம்
பரிந்துரைகள் அருமை, அனந்த் ஸார்! தொடுவானை, கொளுவாயே என்பன தொடு-வானை, கொளு-வாயே என்றும் இருபொருள்படுவது சிறப்பு.
ரமணி

ramaNi

unread,
Jul 21, 2020, 10:21:13 AM7/21/20
to சந்தவசந்தம்
தத்தத்த தான ...... தனதான
தத்தத் தனான ...... தனதான
என்று இரட்டைச் சந்தம் பயில எழுதியது அழகு!

முதல் குழிப்பில் காண்பது போல் ஒரே ஒரு துள்ளல் அதன் பின் தொங்கல் என்ற அமைப்பை அருணகிரியார் திருப்புகழில் காண்பதற்கில்லையெனத் தேடியதில் தெரிகிறது. இருப்பின் அறிந்தோர் சொல்லலாம்.

அன்புடன்,
ரமணி

Vis Gop

unread,
Jul 21, 2020, 11:11:59 AM7/21/20
to santhav...@googlegroups.com
திரு சிவசிவாவின் பாடலை இதே சந்தத்தில் காணலாம். 
நல்வாழ்த்துகள் 
கோபால். 

Sent from my iPhone

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 21, 2020, 1:08:57 PM7/21/20
to சந்தவசந்தம்
 நன்றி ரமணி. பரிந்துரைகளைச் சொல்பவர் அவற்றை மீற அனுமதி உண்டு என்றாலொழிய, முன்னிட்ட பாடலில்,  தனியஞ்சலில் திரு. கோபால்  சுட்டிய  பிழைகளை நான் திருத்தியாக வேண்டும்!  திருத்திய வடிவம் கீழே: 

கட்டப் பட்டுத் தளையாதி

..கட்டுக் குட்பட் டொருபாடல்

கட்டித் தட்டச் சிடமேலுங்

.. கற்றுச் சொற்குச் சுவைசேர

இட்டப் பட்டுத் தொடுவானை

.. எட்டப் பற்றுக் கொளுவாயே

நட்டத் திற்குப் பெரியோனை

..நச்சக் கற்றுத் தெளிவாயே. 


... அனந்த்

Vis Gop

unread,
Jul 22, 2020, 5:26:44 AM7/22/20
to santhav...@googlegroups.com
என் இன்னொரு முயற்சி:

மச்சக் கண்ணி (மீனாட்சி)
[தத்தத் தத்தத் தனதான]

பச்சைப் பட்டுத் திருமேனி!

......பச்சைத் தத்தைக் களிதோளி!

கச்சைச் சுத்தப் பொனிலாகக்

......கட்டுக் கொப்பற் றதுமாலை!

நச்சைக் கப்பிச் சதிபோடும்

......நட்டச் சொக்கர்க் கிடமாகும்

மச்சத் தொப்புக் கணிராணி

.....வட்டப் பொட்டுச் சிவையாளே!


பதம்பிரித்து:


பச்சைப் பட்டுத் திருமேனி!

......பச்சைத் தத்தைக் களி தோளி!

கச்சைச் சுத்தப் பொ(ன்)னில் ஆகக்

......கட்டுக்கு ஒப்பற் றதுமாலை!

நச்சைக் கப்பிச் சதி போடும்

......நட்டச் சொக்கர்க்கு இடமாகும்

மச்சத்து ஒப்புக் கண் இராணி

.....வட்டப் பொட்டுச் சிவையாளே!


பொருள் விளக்கம்:


[தத்தை = கிளி; கப்பி = விழுங்கி; நட்டச் சொக்கர் = நடமாடும் சொக்கநாதர்; மச்சம் = மதஸ்யம் = மீன்]


பச்சையான (மரகதப்) பட்டு மேனியள் நீ!

பச்சைக்கிளி மகிழ்ந்திருக்கும் தோளை உடையவள் நீ!

உன் கச்சை (ஒட்டியாணம்) சுத்தப் பொன்னாலானது!

ஒப்பற்ற அழகுடன் கட்டப் பட்டது நீ அணிந்திருக்கும் மாலை!

விடத்தை விழுங்கிவிட்டுச் சதி (=ஜதி) போடுகிற

நடமாடும் சிவனாகிய சொக்கநாநரின் இடப்புறம் இருக்கும்

மீனுக்கொப்பான கண்ணை உடைய (அங்கயற்கண்ணி) அரசி நீ!

(நெற்றியில்) வட்டமான பொட்டணிந்த சிவையானவள் நீயே!


நல்வாழ்த்துகள் 

கோபால். 

Sent from my iPhone

Vis Gop

unread,
Jul 22, 2020, 6:16:51 AM7/22/20
to santhav...@googlegroups.com

மச்சம் = மத்ஸ்யம் = மீன்]


Sent from my iPhone

On 22-Jul-2020, at 2:56 PM, Vis Gop <vis...@gmail.com> wrote:

என் இன்னொரு முயற்சி:

மச்சக் கண்ணி (மீனாட்சி)
[தத்தத் தத்தத் தனதான]

பச்சைப் பட்டுத் திருமேனி!

......பச்சைத் தத்தைக் களிதோளி!

கச்சைச் சுத்தப் பொனிலாகக்

......கட்டுக் கொப்பற் றதுமாலை!

நச்சைக் கப்பிச் சதிபோடும்

......நட்டச் சொக்கர்க் கிடமாகும்

மச்சத் தொப்புக் கணிராணி

.....வட்டப் பொட்டுச் சிவையாளே!


பதம்பிரித்து:


........

ramaNi

unread,
Jul 22, 2020, 9:41:32 AM7/22/20
to சந்தவசந்தம்
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
கணபதியையும் கந்தனையும் துதித்தபின் வண்ணச்சந்த குரு அருணகிரியாரைப் போற்றி வேண்டிக்கொள்ள வொரு பாடல்.
.
திருப்003. தனனா தனனா —— தனதான
குருவாய் வருவீர்!
.
உருவாய் இலதாய் —— உறைவோனை
. உமையாள் அரனார் —— புதல்வோனை
மருவாம் மலராம் —— முருகோனை
. மணியாய் நிலமேல் —— ஒளிர்வோனை(க்)
கருவாய் அருணா —— கிரியாரே
. கதியாய் மனமார் —— துதிசெய்தீர்!
குருவாய் வருவீர் —— வழிமேவி
. குகனோ டருள்வீர் —— மொழியேரே!
.
[அருணா = சந்தம் பொருட்டெழுந்த அருண என்பதன் விகாரம் (கீழுள்ள பாடலில் வரும் பழனாபுரி என்பதுபோல்]
.
16/07/2020
★★★
பாடல் 194 ( பழநி )
ராகம் - ராமப்ரியா; தாளம் - அங்கதாளம் (6 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2
தனனா தனனா ...... தனதான
.
வரதா மணிநீ ...... யெனவோரில்
. வருகா தெதுதா ...... னதில்வாரா
திரதா திகளால் ...... நவலோக
. மிடவே கரியா ...... மிதிலேது
சரதா மறையோ ...... தயன்மாலும்
. சகலா கமநூ ...... லறியாத
பரதே வதையாள் ...... தருசேயே
. பழனா புரிவாழ் ...... பெருமாளே.
.
★★★★★

Vis Gop

unread,
Jul 22, 2020, 9:06:50 PM7/22/20
to santhav...@googlegroups.com
அருமை!
உருவாய் இலதாய் 
உருவாய் அருவாய் என்பது வழக்கமான இரட்டை.   உளதாய் இலதாய் என்பது இன்னொன்று. மாற்றக் காரணமுண்டா?
நல்வாழ்த்துகள் 
கோபால். 
Sent from my iPhone

On 22-Jul-2020, at 7:11 PM, ramaNi <sai...@gmail.com> wrote:

#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை

ramaNi

unread,
Jul 22, 2020, 10:23:07 PM7/22/20
to சந்தவசந்தம்
உளதாய் இலதாய் என்பன பரம்பொருள் உண்மை (existence) பற்றியன. உருவாய் அருவாய் என்பன அது உருவோடும் உருவின்றியும் இருப்பது குறிப்பன. இலதாய் என்பது நாத்திகம். உருவாய் என்பது ஆத்திகம். அருவாய் என்பது ஆன்மீகம். இவற்றுள் ஆத்திக-நாத்திக எதிர்மறைகளாக நான் உருவாய் இலதாய் என்று கொண்டேன்.

அன்புடன்,
ரமணி


Vis Gop

unread,
Jul 23, 2020, 4:32:15 AM7/23/20
to santhav...@googlegroups.com
விளக்கத்திற்கு நன்றி திரு ரமணி.
கோபால்.


Sent from my iPhone

> On 23-Jul-2020, at 7:53 AM, ramaNi <sai...@gmail.com> wrote:
>
> உளதாய் இலதாய் என்பன பரம்பொருள் உண்மை (existence) பற்றியன. உருவாய் அருவாய் என்பன அது உருவோடும் உருவின்றியும் இருப்பது குறிப்பன. இலதாய் என்பது நாத்திகம். ....

ramaNi

unread,
Jul 24, 2020, 9:20:02 PM7/24/20
to santhav...@googlegroups.com
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்004. தத்தத் தனதான தத்தத் —— தனதான
ஆசை தொலையேனே!
.
கற்றுத் தெரியாத கற்பிற் —— களியாசை
உற்றுத் தெளியாத உச்சத் —— தினிலாசை
அற்பத் தினிலாடும் அச்சுத் —— தொலையேனே
நெற்றிக் கனலாரும் நிர்த்தப் —— பெருமானே!
.
பொருள்
கற்றுத் தெரியாதே உணர்வில் எழுவதாகவுள்ள தியானத்தில் (கற்பு) ஆசை ஒரு பக்கம்.
உற்று நோக்கித் தெளியாத உள்ளத்தில் உச்சக் களிப்பை அனுபவிக்க ஆசை யொருபக்கம்.
அற்பமாகிய சிறுமைகளைப் பெருமைகளாக கொண்டாடி அவற்றின்
. அச்சாணியைத் தொலையாதவனாக வாழ்கிறேன்.
நெற்றியுள் கனல்நிறைந்த நடனப் பெருமானே (நான் என் செய்வேன்)!
.
17/07/2020
★★★
பாடல் 329 ( காஞ்சீபுரம் )
ராகம் - பாகேஸ்ரீ; தாளம் - ஸங்கீர்ண சாபு (4 1/2)
தக-1, திமி-1, தகதகிட-2 1/2
தத்தத் தனதான தத்தத் ...... தனதான
.
அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை
பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா
கற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே.
.
குறிப்பு:
இப்பாடலின் வண்ணச் சந்தக் குழிப்பை
• தத்தத் தனதான தத்தத் —— தனதான
• (ஒன்றரைத் துள்ளல் + தொங்கல்)
• என்று கொண்டால் இது வண்ணப் பாடலாகும்.
.
வண்ணக் குழிப்பை
• தத்தத் தனதான தத்தத் தனதான
• என்று தொங்கலில்லாமல் கொண்டால்
• பாடல் வண்ணக் கலிவிருத்த மாகும்.
.
★★★★★

Siva Siva

unread,
Jul 25, 2020, 4:21:32 PM7/25/20
to santhavasantham
/ கதியாய் மனமார் —— துதிசெய்தீர்! / = ?

/ குகனோ டருள்வீர் —— மொழியேரே! / = ?


முன்னர் இச்சந்தத்தில் எழுதிய பதிகம்: https://madhisudi.blogspot.com/2015/11/0233.html


On Wed, Jul 22, 2020 at 9:41 AM ramaNi <sai...@gmail.com> wrote:
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை

Siva Siva

unread,
Jul 25, 2020, 4:27:23 PM7/25/20
to santhavasantham
ஒருவாசை - இயன்ற அளவு ஒரு என்பதை உயிரெழுத்தில் தொடங்கும் சொல் எனில் தவிர்க்கலாம்.

/ தத்தத் தனதான தத்தத் —— தனதான /

"தத்தத் .. தனதான" என்று நோக்குக.

இச்சந்தத்தில் முன்னர் எழுதிச் சமீபத்தில் புதுப்பொலிவு பெற்ற பாடல்: https://madhisudi.blogspot.com/2020/07/0305102.html

On Fri, Jul 24, 2020 at 9:20 PM ramaNi <sai...@gmail.com> wrote:
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்004. தத்தத் தனதான தத்தத் —— தனதான
ஆசை தொலையேனே!
.
கற்றுத் தெரியாத கற்புக் —— கொருவாசை

ramaNi

unread,
Jul 26, 2020, 1:25:48 AM7/26/20
to சந்தவசந்தம்
> ஒருவாசை - இயன்ற அளவு ஒரு என்பதை உயிரெழுத்தில் தொடங்கும் சொல் எனில் தவிர்க்கலாம்.
திருத்திய பாடல்:
திருப்004. தத்தத் தனதான தத்தத் —— தனதான
ஆசை தொலையேனே!

கற்றுத் தெரியாத கற்பிற் —— களியாசை
உற்றுத் தெளியாத உச்சத் —— தினிலாசை
அற்பத் தினிலாடும் அச்சுத் —— தொலையேனே
நெற்றிக் கனலாரும் நிர்த்தப் —— பெருமானே!

> "தத்தத் .. தனதான" என்று நோக்குக.
அவ்வாறு நோக்கின் எழும் சிக்கல்கள்:
• தனதான என்பது தொங்கல் ஆகையால் வண்ணப்பாடலில் இரண்டு தொங்கல்கள் வரலாமா? வரலாமெனில் சான்று?
• தனதான என்பது தொங்கல் எனில், தத்தத் என்பது துள்ளலா, குழிப்பா?
• ஒரு துள்ளல் கொண்ட குழிப்பு உண்டெனினும் பொதுவாகக் குழிப்பில் மூன்று துள்ளல்களே.

வண்ணயாப்பு அளவால் பெரியது. அதன் பிற்பாதியாகிய நான்கு கலைகளே துறைப்பொருள் கூறப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. ஒரு கலை என்பது மூன்று துள்ளல்களையும் ஒரு தொங்கலையும் கொண்டதாகும். எவ்வளவு சிறிய வண்ணக்குழிப்பு எடுத்துக் கொண்டாலும் ஒரு கலை கிட்டத் தட்ட இரு கட்டளைக் கலித்துறை அளவு அமையும். எனவே எந்த ஒரு துறையைச் சற்றேறக் குறைய எட்டு கட்டளைக் கலித்துறைகளாக விரித்துக் கூற முடியுமோ அந்தத் துறையே வண்ணத்தில் இடம்பெற முடியும். 
--அறுவகையிலக்கணம் பக்.217

எனவேதான் தத்தத் தனதான தத்தத் —— தனதான சந்தத்தை வண்ணக் கலிவிருத்தமாக நோக்கலாம் என்றேன்.

அன்புடன்,
ரமணி

*****

ramaNi

unread,
Jul 27, 2020, 1:27:33 AM7/27/20
to santhav...@googlegroups.com
திருப்005. தத்ததன தானத் —— தனதான
சிற்றறிவு!
.
கட்டவிழும் மோனப் —— பொருளோனைக்
. கற்பனை-யில் ஞானத் —— தெளிவோனை
மட்டவிழும் மாலைப் —— பொழுதோனை
. வட்டமொளிர் காலைக் —— கதிரோனை
விட்டுவிடும் ஆவிப் —— புதிரோனை
. மித்தையுல காகப் —— புணர்வோனை
இட்டெரியும் மேனிக் —— குதிர்மேயும்
. சிற்றறிவில் நேடப் —— புகுவேனே!
.
[கற்பனை-யில் = கற்பனை இல்லாத; மித்தை = சத்-அசத்திற்கு இடைப்பட்ட தற்காலிக உண்மை]
22/07/2020
★★★
பாடல் 1281 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - அஸாவேரி
தாளம் - ஆதி
(எடுப்பு - 3/4 இடம்)
தத்ததன தானத் ...... தனதான
.
இத்தரணி மீதிற் ...... பிறவாதே
. எத்தரொடு கூடிக் ...... கலவாதே
முத்தமிழை யோதித் ...... தளராதே
. முத்தியடி யேனுக் ...... கருள்வாயே
தத்துவமெய்ஞ் ஞானக் ...... குருநாதா
. சத்தசொரு பாபுத் ...... தமுதோனே
நித்தியக்ரு தாநற் ...... பெருவாழ்வே
. நிர்த்தஜெக ஜோதிப் ...... பெருமாளே.
.
★★★★★

Siva Siva

unread,
Jul 27, 2020, 6:20:31 PM7/27/20
to santhavasantham
ஈற்றடியில் மோனை முயன்றிலீரோ?

/ பொருளோனை / 
அடுத்த சொல்லோடு நோக்கிப் புணர்ச்சியைக் கைக்கொள்க.

On Mon, Jul 27, 2020 at 1:27 AM ramaNi <sai...@gmail.com> wrote:
திருப்005. தத்ததன தானத் —— தனதான
சிற்றறிவு!
.
கட்டவிழும் மோனப் —— பொருளோனை

ramaNi

unread,
Jul 27, 2020, 10:09:30 PM7/27/20
to சந்தவசந்தம்
சிற்றறிவில் என்ற சொல் முக்கியம் என்பதால் இ-சி உயிர்மோனையாகக் கொண்டேன்.
தொங்கல் ஈற்றில் சந்தம் பிறழலாம் அல்லவா? சான்றாக, கீழுள்ள அருணகிரியார் வரிகளில்

தத்தத் தனான ...... தனதான
சுட்டுச் சுடாத ...... நிலவாலும்
. துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான்

நிலவாலுந் துக்கத்தி என்று புணர்ச்சியில் சந்தம் பிறழ்கிறது.

ரமணி

Siva Siva

unread,
Jul 27, 2020, 10:20:07 PM7/27/20
to santhavasantham
/கட்டவிழும் மோனப் —— பொருளோனை
. கற்பனை-யில் ஞானத் —— தெளிவோனை/

பொருளோனை*க்* கற்பனையில்

சந்த அமைப்பின் ஈற்றில் வல்லொற்று, மெல்லொற்று, எது வரினும் அது சந்தத்தை மாற்றாது,. 
ஆனால் பாடலில் புணர்ச்சி, வல்லொற்று மிகும்/மிகா இடங்களை எப்பொழுதும் கவனத்திற்கொள்ளவேண்டும்.

ramaNi

unread,
Jul 28, 2020, 12:14:33 AM7/28/20
to சந்தவசந்தம்
புரிந்தது. பொருளோனைக் என்று ஒற்று மிகுத்துக்கொள்கிறேன்.
ரமணி

Vis Gop

unread,
Jul 28, 2020, 5:03:25 AM7/28/20
to santhav...@googlegroups.com
என் முயற்சி:

எப்பொழுதும் ஓதித் தொழுவேனோ?

[தத்ததன தானத் தனதான]


பச்சைமயி லேறிப் பரிவாகப்

......பத்தரிடை யேகிக் கனிவோனே!

பிச்சைதனை ஊரிற் பெறுமீசன்

......பெற்றதொரு ஞானப் பழமேயென்

எச்சமுள ஆயுட் குனையானும்

......எப்பொழுதும் ஓதித் தொழுவேனோ?

கச்சையென நீளப் பணிமேவக்

......கட்டுமொரு யானைக் கிளையோனே!


நல்வாழ்த்தகள்

கொபால். 

Sent from my iPhone

Vis Gop

unread,
Jul 28, 2020, 5:12:44 AM7/28/20
to santhav...@googlegroups.com
> "தத்தத் .. தனதான" என்று நோக்குக.
அவ்வாறு நோக்கின் எழும் சிக்கல்கள்:

சிவசிவாவின் பரிந்துரைப்படி உங்கள் பாடல் இவ்வாறு அமையவேண்டும்:

கற்றுத் தெரியாத
..கற்பிற்  களியாசை
உற்றுத் தெளியாத
..உச்சத் தினிலாசை
அற்பத் தினிலாடும்
..அச்சுத் தொலையேனே
நெற்றிக் கனலாரும்
..நிர்த்தப் பெருமானே!

நல்வாழ்த்துகள்
கோபால். 
Sent from my iPhone

On 26-Jul-2020, at 10:55 AM, ramaNi <sai...@gmail.com> wrote:

ramaNi

unread,
Jul 28, 2020, 9:38:53 AM7/28/20
to சந்தவசந்தம்
அவ்வாறு அமைந்தால் அது வண்ணக் கலிவிருத்த மாகும், வண்ணப்பாடல் ஆகாது (தொங்கல் இல்லாததால்). அருணகிரிநாதர் சான்றுப் பாடலை Project Madurai, Kaumaram வலை தளங்களில் நான் தந்தவாறே பதிப்பித்துள்ளனர்.

வண்ணப்பாடலில் எட்டுக் கலைகள் அமையவேண்டும் என்பார் வண்ணச்சரபம் சுவாமிகள். அதை இலக்கணமாகக் கொண்டால் அருணகிரிநாதரின் இதுபோன்ற சிறு சந்தக்குழிப்புகளில் அமைந்த பாடல்களை வண்ண இயற்பாவகைகள், இனங்களில்தான் வடிவம் காட்டவியலும். ஆயின், அருணகிரியாரின் பாடல்கள் யாவும் வண்ணப்பாடலாகவே கொள்வது வழக்கம் என்பதால், இவ்வகைப் பாடல்களை சிறு வண்ணப்பாடல்களாகக் கொள்ளலாம்.

அன்புடன்,
ரமணி

ramaNi

unread,
Jul 28, 2020, 9:41:07 AM7/28/20
to சந்தவசந்தம்
அருமை. பிள்ளையார் பூணூல் வருணனை அழகு!
ரமணி

Vis Gop

unread,
Jul 28, 2020, 1:22:49 PM7/28/20
to santhav...@googlegroups.com
கற்றுத் தெரியாத
என்பதில் தெரியாத என்பதைத் தொங்கலாகக் கொள்வது தவறா? ஏன்?
கோபால்.
Sent from my iPhone

Vis Gop

unread,
Jul 28, 2020, 1:33:24 PM7/28/20
to santhav...@googlegroups.com
நன்றி.
அது கச்சை.
கோபால்.
Sent from my iPhone

ramaNi

unread,
Jul 28, 2020, 10:52:43 PM7/28/20
to சந்தவசந்தம்
தவறில்லை. அவ்வாறு கொண்டால் எட்டுக் கலைகளும் அமையும். ஆயின், பாடலை ஏன் நான் தந்துள்ளவாறு PM, Kaumaram வலைதளங்களில் பதிப்புள்ளார்கள்? இதற்கு ஏதேனும் ராக-தாள தொடர்புண்டா என்று அறிந்தோர் விளக்கலாம்.
ரமணி

Vis Gop

unread,
Jul 28, 2020, 11:20:58 PM7/28/20
to santhav...@googlegroups.com
பசுபதி சிவா வாக்யம் அருள்வாரே!
பணிவுடன் கோபால். 
Sent from my iPhone

ramaNi

unread,
Jul 29, 2020, 12:16:31 AM7/29/20
to santhav...@googlegroups.com
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்006. தந்தன தானன —— தனதான
திருக்கடையூர் அபிராமி!
.
அஞ்சன வேல்விழி —— அபிராமி
. அங்கவள் மாலவன் —— மகளானாள்!
அஞ்சலி யாயொரு —— குருதேவர்
. அன்றவள் மேலொரு —— துதிமேவ
அஞ்சன மாயிருள் —— அமவாசை
. அன்ற வளால்மதி —— நிறைநாளாம்
நஞ்சுணி யார்மனை —— தொழுவேனே
. நன்றலர் பூவொடு —— கடையூரே!
.
[அபிராமி வரலாறூ; மாலவன் மகள் = விஷ்ணு தன் ஆபரணங்களைக் கழற்றிவைத்து தியானம் செய்தபோது அவற்றினின்று தோன்றியவள் என்று மகளானாள். குருதேவர் = அபிராமி பட்டர்; அமவாசை = குறுக்கல் விகாரம்]
.
24/07/2020
(ஆடிப் பூரநாள்)
★★★
பாடல் 883 ( தஞ்சை )
ராகம் - ....; தாளம் -
தந்தன தானன ...... தனதான
.
அஞ்சன வேல்விழி ...... மடமாதர்
. அங்கவர் மாயையி ...... லலைவேனோ
விஞ்சுறு மாவுன ...... தடிசேர
. விம்பம தாயரு ...... ளருளாதோ
நஞ்சமு தாவுணு ...... மரனார்தம்
. நன்கும ராவுமை ...... யருள்பாலா
தஞ்சென வாமடி ...... யவர்வாழத்
. தஞ்சையில் மேவிய ...... பெருமாளே.
.
★★★★★

 

Vis Gop

unread,
Jul 29, 2020, 5:17:51 AM7/29/20
to santhav...@googlegroups.com
அழகு. 

நஞ்சுணி யார்மனை
முதன்முறையாகக் காண்கிறேன். 

அங்கவள் மாலவன் —— மகளானாள்!
ன்     குழிப்பை மாற்றுமன்றோ?
மாலுடை?

அன்றவள் தாளிணை —— துதிமேவ
தாளிணைத்? ஒற்று வேண்டாவா? 
அன்றவள் மேலொரு துதிபாட?

நஞ்சுணி யார்மனை —— தொழுவேனே
. நன்றலர் பூவொடு —— கடையூரே!
நஞ்சுணி யார்மனை கடையூரில்
.நன்றலர் பூவொடு  தொழுவேனே!  ?

நல்வாழ்த்துகள்
கோபால். 

Sent from my iPhone

On 29-Jul-2020, at 9:46 AM, ramaNi <sai...@gmail.com> wrote:

#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்006. தந்தன தானன —— தனதான
திருக்கடையூர் அபிராமி!
.
அஞ்சன வேல்விழி —— அபிராமி
. அங்கவள் மாலவன் —— மகளானாள்!
அஞ்சலி யாயொரு —— குருதேவர்
. அன்றவள் தாளிணை —— துதிமேவ

ramaNi

unread,
Jul 29, 2020, 9:18:20 AM7/29/20
to சந்தவசந்தம்


On Wednesday, July 29, 2020 at 2:47:51 PM UTC+5:30, Vis Gop wrote:
அழகு. 

நஞ்சுணி யார்மனை
முதன்முறையாகக் காண்கிறேன். 

காளமேகப் புலவர் சொல்லாட்சி. 
சிரித்துப் புரமெரித்தான் சிந்துரத்தைப் பற்றி 
உரித்துதிரம் பாய வுடுத்தான் - வருத்தமுடன் 
வாடுமடி யாருடனே வானவரும் தானவரும் 
ஒடுபயந் தீர்த்தநஞ் சுணி
 
அங்கவள் மாலவன் —— மகளானாள்!
ன்     குழிப்பை மாற்றுமன்றோ?
மாலுடை?
மாலவன் => னகரவொற்றீற்றால் தானன சந்தம் மாறாது. (தவறிருந்தால் சுட்டவும்).
உதாரணமாக, இதன் என்பது தன(ச்) சந்தம். தானிதன் என்பது தானன சந்தம்.

அன்றவள் தாளிணை —— துதிமேவ
தாளிணைத்? ஒற்று வேண்டாவா? 
அன்றவள் மேலொரு துதிபாட?

தாளிணை துதிமேவ = தாளிணை(யைத்) துதிமேவ என்று இரண்டாம் வேற்றுமைத் தொகையாவதால் ஒற்று மிகாது.
மேலொரு என்பது இன்னும் சிறப்பு, கொள்கிறேன். நான் பாதம் மட்டும் சொன்னால் நீர் பாதாதி கேசமே சொல்லிவிட்டீர்! அழகு.
 
நஞ்சுணி யார்மனை —— தொழுவேனே
. நன்றலர் பூவொடு —— கடையூரே!
நஞ்சுணி யார்மனை கடையூரில்
.நன்றலர் பூவொடு  தொழுவேனே!  ?
எனக்குக் கடையூரே என்பது பாடல் ஈற்றில் வரவேண்டும். 

Vis Gop

unread,
Jul 29, 2020, 12:28:09 PM7/29/20
to santhav...@googlegroups.com
மாலவன் => னகரவொற்றீற்றால் தானன சந்தம் மாறாது. (தவறிருந்தால் சுட்டவும்).
உதாரணமாக, இதன் என்பது தன(ச்) சந்தம். தானிதன் என்பது தானன சந்தம்.
தயவு செய்து இதை மீண்டும் கவனிக்கவும். 
எடுத்துக் காட்டு தந்தால் எனக்குப் பயனாகும். 
கோபால். 
Sent from my iPhone

On 29-Jul-2020, at 6:48 PM, ramaNi <sai...@gmail.com> wrote:

ramaNi

unread,
Jul 30, 2020, 12:12:56 AM7/30/20
to சந்தவசந்தம்
திருப்புகழில் சில எடுத்துக்காட்டுகள் கண்டேன்.

திருப்புகழ் காட்டுகள்
தானன சந்தம் ஈற்றில் மெல்லொற்றும் வரும்சீர் மென்தொடக்கமுமாக அமைவன
226 ( சுவாமி மலை )
குறமக ளானைமின் மருவிய பூரண
குருகிரி மேவிய ...... பெருமாளே.

 712 ( திருப்பேர்ருர் )
போதன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொழு
போரி மாநகர் மேவிய ...... பெருமாளே

713 ( திருப்பேர்ருர் )
தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
சிவசு தாவரி நாரணன் ...... மருகோனே

தானன சந்தம் ஈற்றில் மெல்லொற்றும் வரும்சீர் இடைதொடக்கமுமாக அமைவன
1255. பொதுப்பாடல்கள்
வாழினும் வறுமை கூரினு நினது
வார்கழ லொழிய ...... மொழியேனே

443 ( திருவருணை )
சகல லோகமும் வலம தாகியே
தழைய வேவருங் ...... குமரேசா
...
அருணை மீதிலே மயிலி லேறியே
அழக தாய்வரும் ...... பெருமாளே.

--ரமணி

*****

Vis Gop

unread,
Jul 30, 2020, 5:16:03 AM7/30/20
to santhav...@googlegroups.com
நன்றி திரு ரமணி. 
அவ்வாறாயின் மாதவன் என்பதை தானன, தானனந் என இருவாறாகவும் சொல்லலாமா? அன்றி அதைத் தானன என்று கொள்வது ஒரோவழி வரும் விதிவிலக்கா?
மேலும் உங்கள் காட்டுகளில் ன் ஐத்தொடர்வது மென்மை. வன்மையும் வரலாகுமா என்று காண்பது பயன்தரும். 
ன், ம் இடையின ஒற்றுகளுக்குள்ள சுதந்திரத்தைப் பெற முடியாது என்று எனக்குப் படுகிறது. 
தண்டையணி வெண்டையம்  திருப்புகழ் காண்க. 

வாழினும் வறுமை
லோகமும் வலம
வேவருங் ...... குமரேசா
தாய்வரும் ...... பெருமாளே.
இவை யாவற்றிலும் மெல்லொற்றுகள் மறைந்து விடும். அவை பொருள் விளங்குவதற்காகச் சேர்க்கப் ட்டவை எனக் கொள்ளலாம். 

கோபால். 

Sent from my iPhone

ramaNi

unread,
Jul 30, 2020, 9:26:34 AM7/30/20
to சந்தவசந்தம்
நான் தந்த காட்டுகளில் தாய்வரும் ...... பெருமாளே என்ற சீர்களின் சந்தம் தானதந் தனதான (பெ என்பது வல்லினமாதலால்). இச்சந்தம் திருப்புகழில் பொதுவாகத் தானனந் என்று குறிக்கப்பட்டுள்ளது. எனவே வல்லினம் தொடர்ந்தால் தானதந்/தானனந்; மெல்லினம் இடையினம் தொடர்ந்தால் தானன என்று கொள்ளவேண்டும். தானனன் என்று ஏதும் சந்தக்குழிப்பில்லை.

அன்புடன்,
ரமணி

Vis Gop

unread,
Jul 30, 2020, 10:42:20 AM7/30/20
to santhav...@googlegroups.com
நன்றி. 
ஐயம் நீங்கியமாதிரி இருக்கிறது. 
கோபால். 


Sent from my iPhone

ramaNi

unread,
Jul 31, 2020, 10:48:32 PM7/31/20
to சந்தவசந்தம்
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்007. 0567. தத்தனா தானனத் —— தனதான
திருக்கடையூர் அபிராமி!
.
சித்தமா மாயையைக் —— களைவாளே
. சிற்பமாம் ஆலயத் —— தபிராமி!
சத்தியாய் ஞானமெய்ப் —— பொருளாவாள்
. சத்தவாள் ஏழ்வகைத் —— திரளாவாள்
புத்தியால் யானுருத் —— தெளியாமல்
. புற்றரா தேவியைத் —— தெரியேனே
பத்தியால் நாண்மலர்த் —— தொடையாலே
. பற்றிவாழ் வேனருட் —— கொடையூரே.
.
[சத்தியாய் = பிரபுசத்தி, மந்திரசத்தி, உற்சாகசத்தி யாகிய மூவகை அரசாளாற்றல்கள். சத்தவாள் = சத்தமும் வாளும் = ஒலியும் ஒளியும்; ஏழ்வகை ஒலியும் ஒளியும். புற்றரா = புற்றுவாழ் பாம்பு; நாண்மலர் = அன்றலர்ந்த மலர், இங்கு பாடல்; தொடை = பூமாலை, இங்கு பாமாலை, சந்தத் தொடை]
28/07/2020
★★★
பாடல் 567 ( இரத்னகிரி )
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - ஆதி (எடுப்பு - 3/4 இடம்)
தத்தனா தானனத் ...... தனதான
.
பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
. பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
. முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே
உத்தமா தானசற் ...... குணர்நேயா
. ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
. வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.
.
★★★★★

Siva Siva

unread,
Jul 31, 2020, 10:54:20 PM7/31/20
to santhavasantham
Does the sthalam name occur in the verse?

/ புற்றரா தேவியைத் /
sandhi ignored for sound conformance?

By the way, " புற்றரா தேவி " = ?


On Fri, Jul 31, 2020 at 10:48 PM ramaNi <sai...@gmail.com> wrote:
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை

ramaNi

unread,
Aug 1, 2020, 12:41:02 AM8/1/20
to சந்தவசந்தம்
> Does the sthalam name occur in the verse?
I know why you are asking this question. Yes, it occurs suggestively, as you know.

/ புற்றரா தேவியைத் /
> sandhi ignored for sound conformance?

புற்றரா தேவி என்பதில் அரா தமிழ்ச்சொல்லாயினும் வரும்சீர் தேவி என்பது வடமொழியாவதால் ஒற்று மிகுமா?

By the way, " புற்றரா தேவி " = ?
புற்றரா என்ற அடைமொழி ஈசனுக்கு மட்டுந்தானா? அம்மன் கோவிலில் பாம்புப் புற்றில் பாலூற்றி வழிபடுவது வழக்கமாயிற்றே! எனவே தேவியும் புற்றரா தேவிதானே!

அன்புடன்
ரமணி



On Saturday, August 1, 2020 at 8:24:20 AM UTC+5:30, siva siva wrote:
 

Siva Siva

unread,
Aug 1, 2020, 9:05:40 AM8/1/20
to santhavasantham
கீழ்க்காண்க.

On Sat, Aug 1, 2020 at 12:41 AM ramaNi <sai...@gmail.com> wrote:
> Does the sthalam name occur in the verse?
I know why you are asking this question. Yes, it occurs suggestively, as you know.

/ புற்றரா தேவியைத் /
> sandhi ignored for sound conformance?

புற்றரா தேவி என்பதில் அரா தமிழ்ச்சொல்லாயினும் வரும்சீர் தேவி என்பது வடமொழியாவதால் ஒற்று மிகுமா?

--> நான் அறிந்த அளவில்: இருசொற்களும் வடமொழிச்சொல்லாயின் வல்லொற்று மிகாது. ஒன்று மட்டுமே வடமொழிச்சொல் எனின், வல்லொற்று மிகும்.
 
By the way, " புற்றரா தேவி " = ?
புற்றரா என்ற அடைமொழி ஈசனுக்கு மட்டுந்தானா? அம்மன் கோவிலில் பாம்புப் புற்றில் பாலூற்றி வழிபடுவது வழக்கமாயிற்றே! எனவே தேவியும் புற்றரா தேவிதானே!

--> ஈசன் திருமேனியில் சடையில், மார்பில், அரையில், எனப் பல பாம்புகளை அணிந்திருக்கிறான். அவனைப் புற்றரவன் என்று வர்ணிப்பது உண்டு. தேவியை அப்படி  வர்ணிப்பரா என்று அறியேன்.

அப்பர் தேவாரம் - 5.79.6
குற்ற மில்லியைக் கோலச் சிலையினால்
செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப்
புற்ற ரவனைப் புள்ளிருக்கு வேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே . 
 

 

அன்புடன்
ரமணி



On Saturday, August 1, 2020 at 8:24:20 AM UTC+5:30, siva siva wrote:
 
--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Vis Gop

unread,
Aug 1, 2020, 10:18:02 AM8/1/20
to santhav...@googlegroups.com
அவனைப் புற்றரவன் என்று வர்ணிப்பது உண்டு. தேவியை அப்படி  வர்ணிப்பரா என்று அறியேன்.

புற்றரவைத் தேவியாக எண்ணி ஆராதிக்கும் நம்பிக்கை பரவலானது. முதன்முறை ஆயினும் அந்த வருணனை உண்மையாதலினால் சரியென்றே கருதப்பட வேண்டும் என்று எனக்குப் படுகிறது.  
கோபால். 
Sent from my iPhone

ramaNi

unread,
Aug 3, 2020, 9:26:44 AM8/3/20
to சந்தவசந்தம்
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்008. 1030. தான தான தானான தானத் —— தனதான
திருக்கடையூர் அபிராமி!
.
கால பீட மேலாளும் நேயத் —— தபிராமி
. காம மாக மேவாத வாழ்விற் —— கருள்வாயே
தூல மாக ஏராளம் நேரிற் —— கடைமேவும்
. தூய னாகும் வேரோடு வாழற் —— கருள்வாயே
ஓல மாக ஓர்கூளி ஈமத் —— தலையாடும்
. ஓசை காதில் ஏறாமல் ஈனத் —— தளைவேனே
மூல நாக மேலாழும் நேமத் —— தினைநாட
. மோன மாக வீழ்வேன்முன் னாலிக் —— கடையூரே.
.
[கடைமேவும் = கீழ்மை கொள்வதாய் என் வாயிலில் பொருந்தும்; ஈமம் தலையாடும் = ஈமமாம் எரிவனத்திடம் ஆடும் (தலை=இடம்); மூலநாகம் = மூலாதாரத்தினின்று எழும் குண்டலினி சக்தி]
.
பாடல் 1030 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ஹிந்தோளம்
தாளம் - அங்கதாளம் (10 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தான தான தானான தானத் ...... தனதான
.
பேர வாவ றாவாய்மை பேசற் ...... கறியாமே
. பேதை மாத ராரோடு கூடிப் ...... பிணிமேவா
ஆர வார மாறாத நூல்கற் ...... றடிநாயேன்
. ஆவி சாவி யாகாமல் நீசற் ...... றருள்வாயே
சூர சூர சூராதி சூரர்க் ...... கெளிவாயா
. தோகை யாகு மாரா கிராதக் ...... கொடிகேள்வா
தீர தீர தீராதி தீரப் ...... பெரியோனே
. தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
.
★★★★★
 

Vis Gop

unread,
Aug 4, 2020, 11:05:17 PM8/4/20
to santhav...@googlegroups.com
என் முயற்சி
[தான தான தானான தானத் - தனதான]


நீடுனோடு


தேயும் ஊனை மேலான தாகக் கொடுபேணித்

......தீப மாக நீஆக(ம்) மேவப் புரியாமல்

தாயு மான ஈசான! மாவிற்(கு) இணையானேன்!

......தாளை நாடி ஓடோடி ஏகிச் சரணானேன்!

நீயு நானு வேறான தாகித் திரியாமல்

......நீடு னோடு மாறாது கூடிக் கரைவேனோ!

வாயு(ன்) நாமம் ஓயாமல் ஓதற்(கு) அருளாயோ!

......வாமி கூட வேயாடும் ஆடற் பெருமானே!


நல்வாழ்த்துகள்

கோபால். 

Sent from my iPhone

ramaNi

unread,
Aug 5, 2020, 1:24:04 AM8/5/20
to சந்தவசந்தம்
மிக அருமை! பொதுவான துதிகளுடன், தேவாரத் தலங்களில் மேவும் சிவனை, கோவிலுக்கொரு வண்ணச் சந்த வாய்பாட்டில் துதிசெய்தல் இன்னும் சவாலாக இருக்கும்.
ரமணி

Vis Gop

unread,
Aug 5, 2020, 7:58:43 AM8/5/20
to santhav...@googlegroups.com
நன்றி திரு ரமணி.
சவால் எடுக்கும்/விடும் திறமை நிச்சயம் எனக்கில்லை. நீங்கள் முயலும் சில சந்தங்கள் எளிமையானவையாக இருப்பதால் அவற்றை நானும் முயல முயல்கிறேன்/முயல்வேன். அதுவும் சிவசிவா போன்ற உதவிக் கரங்கள் கிட்டுவதால்.
நல்வாழ்த்துகள்
கோபால்.
Sent from my iPhone

ramaNi

unread,
Aug 6, 2020, 9:10:14 AM8/6/20
to சந்தவசந்தம்
திருப்009. 0225. தனதன தனதன ...... தனதான
ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி!
.
கணபதி மகவெதிர் —— விளையாடக்
. கலையறி குழவியுன் —— முதுகேறத்
தணலுறு சினமழி —— அனையாகத்
. தலமுறு சிவமயம் —— அகிலாம்மா!
மணியடி பொழுதினில் —— எதிரேநான்
. மலரொடு கனியொடு —— வினையோடு!
பிணையென மலரடி —— கொளுவேனே
. பிறவியின் உததியில் —— அமிழேனே!
.
[மணியடி பொழுது = மாலை தீபாராதனை நேரம்; உததி = கடல்]
.
முதலிரண்டு அடிகளில்:
அன்னை அகிலாண்டேஸ்வரியின் உக்கிரத்தைத் தணிக்க ஆதி சங்கரர் ஶ்ரீசக்ரம் பதித்த தாடங்கங்களை அன்னைக்கு அணிவித்து, அவள் எப்போதும் ஓரன்னையின் கனிவுடன் திகழவேண்டும் என்பதற்காக அவளுக்கு முன்னால் பிள்ளையார் சந்நிதியும், பின்னால் முருகன் சந்நிதியும் நிறுவினார்.
.
இங்ஙனம் அவள் முன்னே கணபதி குழந்தையும், உப்பு மூட்டையாக அவள் முதுகில் ஏறி முருகன் குழந்தையும் விளையாடும்போது அன்னை தன் சினத்தை முற்றும் அழித்துச் சிவமயமாக எப்போதும் காட்சி தருகிறாள் என்பது கற்பனை. கலையறி புலவன் என்று முருகனுக்கொரு பெயருண்டு.
.
★★★
பாடல் 225 ( சுவாமி மலை )
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - ஆதி
தனதன தனதன ...... தனதான
.
நிறைமதி முகமெனு ...... மொளியாலே
. நெறிவிழி கணையெனு ...... நிகராலே
உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ
. உனதிரு வடிவியினி ...... யருள்வாயே
மறைபயி லரிதிரு ...... மருகோனே
. மருவல ரசுரர்கள் ...... குலகாலா
குறமகள் தனைமண ...... மருள்வோனே
. குருமலை மருவிய ...... பெருமாளே.
.
★★★★★

Vis Gop

unread,
Aug 6, 2020, 11:11:03 PM8/6/20
to santhav...@googlegroups.com
என் முயற்சி 

கருமை!
[தனதன தனதன தனதான]

சரியிட மமைசதி கருநீலம்!
......சதிரர சுடைமிட றதுகார்மை!
எரிவிழி இறைவிழை வதுபோலும்!
......எனதிட ரகலவு முதவாயோ!
கரியது குயிலுன தெழில்மேனி!
......கரியிரு ளெனகதி கலியாலே!
அரியவொர் இசையுடன் அரன்நாடி
......அடிநிழல் அருளிட உரையாயே!

பதம் பிரித்து:

சரி இடம் அமை சதி கருநீலம்!
......சதிர் அரசுடை மிடறு அது கார் மை!
எரிவிழி இறை விழைவு அதுபோலும்!
......எனது இடர் அகலவும் உதவாயோ!
கரியது குயில் உனது எழில் மேனி!
......கரியிருள் என கதி கலியாலே!
அரியவொர் இசையுடன் அரன் நாடி
......அடிநிழல் அருளிட உரையாயே!

பொருள் விளக்கம் 
குயிலே! 
இறைவன் சரிபாதி இடம் பிடித்த சதி அன்னை கருநீல நிறம் உடையவள் .
சதிர் அரசன் (ஆடலரசன்) மிடறு (கழுத்து) மையாய்க் கறுத்தது!
அக்கினிக் கண்ணுடைய இறைவன் விரும்புவது அது (கருமை) போலும்!
உனது அழகான மேனியும் கரிய நிறம் உடையது!
கலியின் விசையால், என்னுடைய கதியும் காரிருளாய்த் தெரிகிறது!
எனது இடர் அகல நீ ஒரு உதவி செய்வாயா?
அரிதான உன் குரலால் ஒரு இசைபாடி அரனை நாடிச் சென்று 
அவனுடைய திருவடி நிழலை எனக்கு அருளுமாறு சொல்லுக!

[இறைவன் கருமையை விரும்புகிறான். உன் நிறமும் என் கதியும் கருமைதான். உன் குரலால் என் கதியை அவன் திருவடியின் (கரு) நிழலில் சேர்த்துவிட ஒரு தூது செல், குயிலே!]

நல்வாழ்த்துகள் 
கோபால். [7/8/2020]

Siva Siva

unread,
Aug 7, 2020, 11:27:05 AM8/7/20
to santhavasantham
பாடலில் தலப்பெயர் அமையவில்லை எனில் பொதுப்பாடலாகவும் கருதலாம் அன்றோ?

இச்சந்தத்தில் முன்னர் எழுதிய பாடல்களுள் ஒன்று: 

ramaNi

unread,
Aug 7, 2020, 9:32:29 PM8/7/20
to சந்தவசந்தம்
கருதலாம்தான். ஆயினும் அகிலா என்ற பெயரும், அவளுக்கு முன்னால் கணபதி, பின்னால் முருகர் என்ற விவரமும் ஆனைக்கா தலம் சுட்டுவன என்பது தெளிவு.
ரமணி

ramaNi

unread,
Aug 7, 2020, 9:34:15 PM8/7/20
to சந்தவசந்தம்
கருமை, அருமை!
ரமணி

ramaNi

unread,
Aug 8, 2020, 11:37:42 PM8/8/20
to santhav...@googlegroups.com
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்010. 0544. தான தத்த | தான தத்த | தான தத்த ...... தனதான
ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி!
.
ஞான சக்தி யாயு ருத்திந் நாளி லுக்ர —— மிலைதாயே
. ஞால முற்ற தீத ழிக்க ஞாய முக்ர —— மடைநீயே
வான முற்ற கோள றத்தை வாழ வைக்கும் —— அகிலாம்மா
. ஈனு ருத்த தீய ரக்கர் தீனர் எற்று —— தினவோர்கள்
ஆனை முத்தி கோவி லெட்ட காவ னிற்ற —— சிவனாரால்
. ஆகம் முற்றும் நோய்வ ருத்தி ஆவி விட்ட —— ழியவேணும்
கான கத்தி லாட லுற்ற காளி வெற்றி —— கொளுவாய்நீ . கால றுத்து மீள லற்ற காலம் நிற்க —— வருள்தாயே!
[காவன் = சிலந்தி]
.
பொருள்:
சக்தி பீடங்களில் ஞானபீடமாகத் திகழும் ஆனைக்கா தலத்தில் ஞான சக்தியாய்
. நீயிலங்க உனக்கு இந்நாளில் ஏதும் உக்கிரம் . இல்லை தாயே!
எனினும், ஞாலத்தில் இன்று காணும் தீயனவற்றை அழிப்பதற்கு
. நியாயமான அளவில் நீ உக்ரம் கொளுவாய் தாயே!
.
வானத்தில் இருக்கும் கோள்களின் வாழ்வறத்தை ஆண்டு நிலைநிறுத்தும்
. அகிலாண்டேஸ்வரியே, அம்மா!
இவ்விடத்தில் (ஈன்) உருப்பெற்று வாழும் தீய அரக்கர்கள் தீனர்களின் வாழ்வை
. அடித்துத் தம் வாழ்வை உயர்த்திக்கொள்வோராய் உள்ளனரே. இத்தினவெடுத்தோர்...
.
சிவகணங்கள் இருவருக் கிடையே நேர்ந்த போட்டியில் ஆனையாகப் பிறந்த
. கணத்துக்கு இக்கோவிலில் முத்தியும், அதைத் துன்புறுத்திய சிலந்தியாகப்
. பிறந்த கணத்துக்கு முத்தி கெடச்செய்து அதை மறுபிறப்பில் கோச்செங்கணாச் ]
. சோழனாகப் பிறக்கச் செய்த சிவனாரால்
.
மேற்சொன்ன கொடியவர்கள் உடல் (ஆகம்) முழுதும் நோய்கண்டு வருத்தத் தம்
. ஆவியை விட்டு அழியவேண்டும்.
.
கானகமாகிய எரிவனத்தில் ஆடல் கொண்ட காளியே, நீ வெற்றியுடன் . அவர்கள் வழிகளை அறுத்து, அவை மீளல் இல்லாத காலம் நிலைக்க அருள்வாயே!
.
★★★
பாடல் 544 ( திருக்கழுக்குன்றம் )
ராகம் - பீம்பளாஸ்; தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)
தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான
.
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
. வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ...... புயநேய
. ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ...... புகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாமா
. காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ...... யிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ...... முநிநாண
. ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ...... பெருமாளே.
.
★★★★★
 

Siva Siva

unread,
Aug 9, 2020, 9:32:16 AM8/9/20
to santhavasantham
தொடர்முயற்சி சிறக்க!

/வையாய்நீ/
சந்தம்?

/றுத்து ஊழ/
புணர்ச்சி?


On Sat, Aug 8, 2020 at 11:37 PM ramaNi <sai...@gmail.com> wrote:
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்010. 0544. தான தத்த | தான தத்த | தான தத்த ...... தனதான
ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி!
.
ஞான சக்தி யாயு ருத்திந் நாளி லுக்ர —— மிலைதாயே
. ஞால முற்ற தீத ழிக்க ஞாய முக்ர —— மடைநீயே
வான முற்ற கோள றத்தை வாழ வைக்கும் —— அகிலாம்மா
. ஈனு ருத்த தீய ரக்கர் தீனர் எற்று —— தினவோர்கள்
ஆனை முத்தி கோவி லெட்ட காவ னிற்ற —— சிவனாரால்
. ஆகம் முற்றும் நோய்வ ருத்தி ஆவி விட்ட —— ழியவேணும்
கான கத்தி லாட லுற்ற காளி கொற்ற —— வையாய்நீ
. கால றுத்து ஊழ லற்ற காலம் நிற்க —— வருள்தாயே!

ramaNi

unread,
Aug 9, 2020, 11:16:40 PM8/9/20
to சந்தவசந்தம்
நன்றி, சிவசிவா. திருத்திய பாடல்:

திருப்010. 0544. தான தத்த | தான தத்த | தான தத்த ...... தனதான
ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி!

ஞான சக்தி யாயு ருத்திந் நாளி லுக்ர —— மிலைதாயே
. ஞால முற்ற தீத ழிக்க ஞாய முக்ர —— மடைநீயே
வான முற்ற கோள றத்தை வாழ வைக்கும் —— அகிலாம்மா
. ஈனு ருத்த தீய ரக்கர் தீனர் எற்று —— தினவோர்கள்
ஆனை முத்தி கோவி லெட்ட காவ னிற்ற —— சிவனாரால்
. ஆகம் முற்றும் நோய்வ ருத்தி ஆவி விட்ட —— ழியவேணும்
கான கத்தி லாட லுற்ற காளி வெற்றி —— கொளுவாய்நீ
. கால றுத்து மீள லற்ற காலம் நிற்க —— வருள்தாயே!
[காவன் = சிலந்தி]

*****

ramaNi

unread,
Aug 12, 2020, 8:48:21 AM8/12/20
to santhav...@googlegroups.com
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்011. 0950. தத்த தானன | தத்த தானன | தானா தானா | தானா தானா —— தனதான
ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி!
.
அத்தன் ஆடவள் அத்த னாயனை
. . ஆகா! தாதா வேதா கோடா —— தருள்வீரே
. அப்பு சாமிபெ ருக்கு காவிரி
. . யாறாம் நீரே தேவீ மாநீ —— துதிமேவச்
.
சத்தன் மாமண யிச்சை யோடுனைச்
. . சாரார் வாரார் சேரார் தீரார் —— எனவேநீ
. தட்சன் மாமகள் உக்ர மாயினை
. . சாவார் காளீ நீலீ சூலீ —— உருவோகொல்!
.
சத்தி யேயுன துக்ர மேகிநீ
. . தாயாய் மோயாய் நோய்தீர் தேவீ —— எனவாகச்
. சத்தி தேசிகர் சக்ர காதணி
. . தாரா வாளாய் மேலோர் பூவாய் —— ஒளிவீசும்!
.
தத்து மாயையின் அர்த்த நேடலிற்
. . தானார் ஊணார் தீயார் ஊனார் —— சுழலாழ்வேன்
. தக்க வேளையில் அப்பு கேசுரம்
. . தாளார் காராய் மோயே காவாய் —— அகிலாம்மா!
.
[அனை = அன்னை என்பதன் இடைக்குறை; தாதா, வேதா = பிரம்மன்; அப்புசாமி = ஆனக்கா சிவனார் பெயர்;
சத்தன் = சத்தியுடைய சிவன்; சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம்--தேவாரம்; சாவார் = சாவு (மரணம்) நிறை; மோய் = தாய்;
சத்தி தேசிகர் = சத்தி அருள்பெற்ற ஆதி சங்கரர்; சக்ர காதணி = ஶ்ரீசக்ரம் பதித்த தாடங்கம்; தாரா வாளாய் = விண்மீன் ஒளியாய்; மேலோர் = தேவர்கள்;
தத்து மாயை = ததும்பும் மாயை; நேடல் = தேடல்; அப்பு கேசுரம் = அப்பு தலமாம் திருவானைக்கா; தாளார் காராய் = கால்களாகப் பரந்து பெய்யும் மழை]
.
குறிப்பு:
கோடா தருள்வீரே: பிரம்மன் தான் படைத்த பெண்ணையே மணந்ததால் உண்டான் தோஷம்நீக்கி, அவர் மனம் மீண்டும் அவ்வண்ணம் வளையாதிருக்க அருள்வீரே.
.
18/07/2020
★★★
பாடல் 950 ( பேருர் )
ராகம் - ....; தாளம் -
தத்த தானன தத்த தானன
தானா தானா தானா தானா ...... தனதான
.
மைச்ச ரோருக நச்சு வாள்விழி
. . மானா ரோடே நானார் நீயா ...... ரெனுமாறு
. வைத்த போதக சித்த யோகியர்
. . வாணாள் கோணாள் வீணாள் காணா ...... ரதுபோலே
.
நிச்ச மாகவு மிச்சை யானவை
. . நேரே தீரா யூரே பேரே ...... பிறவேயென்
. நிட்க ராதிகண் முற்பு காதினி
. . நீயே தாயாய் நாயேன் மாயா ...... தருள்வாயே
.
மிச்ச ரோருக வச்ர பாணியன்
. . வேதா வாழ்வே நாதா தீதா ...... வயலூரா
. வெற்பை யூடுரு வப்ப டாவரு
. . வேலா சீலா பாலா காலா ...... யுதமாளி
.
பச்சை மாமயில் மெச்ச வேறிய
. பாகா சூரா வாகா போகா ...... தெனும்வீரா
. பட்டி யாள்பவர் கொட்டி யாடினர்
. . பாரூ ராசூழ் பேரூ ராள்வார் ...... பெருமாளே.
.
★★★★★

Siva Siva

unread,
Aug 12, 2020, 9:03:46 AM8/12/20
to santhavasantham
Check some places for conformance.

For example: 
யோடுனைச் . . சாரார்
துக்ர மேகிநீ  
நேடலிற். . தானார்
கேசுரம் . . தாளார்

ramaNi

unread,
Aug 12, 2020, 9:41:15 AM8/12/20
to சந்தவசந்தம்
நன்றி, சிவசிவா. திருத்திய பாடல்

திருப்011. 0950. தத்த தானன | தத்த தானன | தானா தானா | தானா தானா —— தனதான
ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி!

அத்தன் ஆடவள் அத்த னாயனை
.  .  ஆகா! தாதா வேதா கோடா —— தருள்வீரே
. அப்பு சாமிபெ ருக்கு காவிரி 
.  .  யாறாம் நீரே தேவீ மாநீ —— துதிமேவச்

சத்தன் மாமண யிச்சை யோடிவர்
.  .  சாரார் வாரார்  சேரார் தீரார் —— எனவேநீ
. தட்சன் மாமகள் உக்ர மாயினை
.  .  சாவார் காளீ நீலீ சூலீ —— உருவோகொல்!

சத்தி யேயுன துக்ர மேகிநீ
.  .  தாயாய் மோயாய் நோய்தீர் தேவீ —— எனவாகச்
. சத்தி தேசிகர் சக்ர காதணி 
.  .  தாரா வாளாய் மேலோர் பூவாய் —— ஒளிவீசும்!

தத்து மாயையின் அர்த்த மாயுரு
.  .  தானார் ஊணார் தீயார் ஊனார் —— சுழலாழ்வேன்
. தக்க வேளையில் அப்பு கேசுரர்
.  .  தாளார் காராய் மோயே காவாய் —— அகிலாம்மா!


ramaNi

unread,
Aug 16, 2020, 9:06:33 AM8/16/20
to சந்தவசந்தம்
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்012. 0689. தனனத் தனதன ...... தனதான
மதுரை மீனாட்சி துதி
.
மலயத் துவசனின் —— மகளே!நான்
. மகிழத் திருவருள் —— தருவாயே
வலயத் தரிமலர் —— ஒளிவீசி
. மகரத் திருவிழி —— எனையாளும்
நிலயத் தினிலிது —— சிவலோகம்
. நிகரற் றவிருவர் —— மகவாயென்
கலபத் தினிலுறு —— நிறமாயை
. கலைதற் குறுதினம் —— விரைவாமே!
.
[வலயம் = குளம்; அரி = வண்டு; நிலயம் = கோவில்; கலபம் = மயிற்றோகை, இங்கு மனம்]
12/08/2020
★★★
பாடல் 689 ( திருமயிலை )
ராகம் -....; தாளம் -
தனனத் தனதன ...... தனதான
.
அயிலொத் தெழுமிரு ...... விழியாலே
. அமுதொத் திடுமரு ...... மொழியாலே
சயிலத் தெழுதுணை ...... முலையாலே
. தடையுற் றடியனு ...... மடிவேனோ
கயிலைப் பதியரன் ...... முருகோனே
. கடலக் கரைதிரை ...... யருகேசூழ்
மயிலைப் பதிதனி ...... லுறைவோனே
. மகிமைக் கடியவர் ...... பெருமாளே.
.
★★★★★
 

ramaNi

unread,
Aug 19, 2020, 9:02:25 AM8/19/20
to santhav...@googlegroups.com
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்013. 0472. தந்தனத் தானதன | தந்தனத் தானதன | தந்தனத் தானதன ...... தந்ததான
மதுரை மீனாட்சி துதி
.
அங்கயற் கானவிழி பைந்தளிர்த் தாழுமுரு
. . அஞ்சனக் கோலவிழி —— சிந்தைமேவும்
. அம்பணைத் தோளிலுறை வந்திகைக் கானமொழி
. . அஞ்சலைக் கோறுமருள் —— எந்தநாளும்
.
அங்கதப் பாவையென இங்கிதத் தோடுபலர்
. . அஞ்சுபத் தானமொழி —— சிந்தையாழ்வார்
. அந்தகர்க் கானவொளி மந்த்ரிணிப் பீடநிலை
. . அம்பலத் தாடுபவர் —— வந்துநாடி
.
மங்கலத் தாலியுடன் பைந்தமிழ்ப் பாவையுனை
. . மன்றினிற் பாரியென —— நங்கைநீயும்
. மன்பதைக் காக்கமருள் அங்கயற் றாயுருவில்
. . வந்தெமைக் காமதுரை —— விந்தையாவாய்.
.
பங்கயத் தாளிணையை வண்டமிழ்ப் பாவிலுரு
. . பந்தணத் தோடுமலர் —— கொண்டுநானும்
. பைந்தமிழ்த் தாயினுரு இந்தியத் தாயினுரு
. . பண்டிகைக் கோலவுரு —— என்றுசார்வேன்!
.
[பைந்தளிர் தாழுமுரு = பசுமை தளிர்த்து ஆழமாகக் காணும் உருவம்; அம்பணைத்தோள் = அழகிய, மூங்கில் போன்ற தோள்; வந்திகை = அவந்திகை முதற்குறை, கிளி; கோறுமருள் = அழிக்கும் அருள்; அங்கதப் பாவை = நாகப் பாம்பை ஆளும் அணங்கு; இங்கு குண்டலினி; இங்கிதம் = இனிமை; அஞ்சுபத் தானமொழி = 15 எழுத்துகள் கொண்ட பஞ்சதசாட்சரீ என்னும் ஶ்ரீவித்யா மந்திரம்; மந்த்ரிணிப் பீடம் = சக்தி பீடங்களில் இவள் தலப் பெயர்; பாரியென = மனைவி என்றுகொள்ள; விந்தை = துர்க்கை; பந்தணம் = பற்று;]
.
12/08/2020
★★★
பாடல் 472 ( சிதம்பரம் )
ராகம் - ஆபோகி; தாளம் - கண்டசாபு (2 1/2)
தந்தனத் தானதன தந்தனத் தானதன
தந்தனத் தானதன ...... தந்ததான
.
நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
. . நம்புதற் றீதெனநி ...... னைந்துநாயேன்
. நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை
. . நங்களப் பாசரண ...... மென்றுகூறல்
.
உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல்
. . உன்சொலைத் தாழ்வுசெய்து ...... மிஞ்சுவாரார்
. உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர்
. . உம்பருக் காவதினின் ...... வந்துதோணாய்
.
கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு
. . கண்களிப் பாகவிடு ...... செங்கையோனே
. கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு
. . கஞ்சுகப் பான்மைபுனை ...... பொன்செய்தோளாய்
.
அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம்
. . அந்தரத் தேறவிடு ...... கந்தவேளே
. அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை
. . அம்பலத் தாடுமவர் ...... தம்பிரானே.
.
★★★★★

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 19, 2020, 9:05:30 PM8/19/20
to சந்தவசந்தம்
நல்ல வண்ணம். 
>>மன்பதைக்* காக்கமருள் அங்கயற் தாயுருவில்- மன்பதை காக்கருள் அங்கயற் றாயுருவில்?
... அனந்த்

 



On Wed, Aug 19, 2020 at 9:02 AM ramaNi <sai...@gmail.com> wrote:
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்013. 0472. தந்தனத் தானதன | தந்தனத் தானதன | தந்தனத் தானதன ...... தந்ததான
மதுரை மீனாட்சி துதி
.
அங்கயற் கானவிழி பைந்தளிர்த் தாழுமுரு
. . அஞ்சனக் கோலவிழி —— சிந்தைமேவும்
. அம்பணைத் தோளிலுறை வந்திகைக் கானமொழி
. . அஞ்சலைக் கோறுமருள் —— எந்தநாளும்
.
அங்கதப் பாவையென இங்கிதத் தோடுபலர்
. . அஞ்சுபத் தானமொழி —— சிந்தையாழ்வார்
. அந்தகர்க் கானவொளி மந்த்ரிணிப் பீடநிலை
. . அம்பலத் தாடுபவர் —— வந்துநாடி
.
மங்கலத் தாலியுடன் பைந்தமிழ்ப் பாவையுனை
. . மன்றினிற் பாரியென —— நங்கைநீயும்
. மன்பதைக் காக்கமருள் அங்கயற் தாயுருவில்

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/51d659fb-85fe-4ec4-90eb-b9ee9bed8a41o%40googlegroups.com.

ramaNi

unread,
Aug 19, 2020, 9:21:00 PM8/19/20
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, அனந்த் ஸார். முதல் சந்தம் தந்தனத் என்பதால் மன்பதை காக்கவருள் என்று அமைத்தல் இயலாது. எனவே மன்பதைக் காக்கமருள் (மன்பதைக்கு ஆக்கம் அருளும்)! எனினும் அங்கயற் றாயுருவில் என்று திருத்திக்கொள்கிறேன்.

அன்புடன்,
ரமணி

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 19, 2020, 9:47:51 PM8/19/20
to சந்தவசந்தம்
நல்ல விளக்கம்; நான் தவறாகச் சொல் பிரித்துப் பொருள் கொண்டேன். 

... அனந்த்


Vis Gop

unread,
Aug 21, 2020, 7:33:17 AM8/21/20
to santhav...@googlegroups.com
மிக அருமை திரு ரமணி. 

அங்கயற் தாயுருவில்? 
கயல் என்றாலே கயற்கண்ணி என்று கொள்ளவியலுமோ?

கோபால். 
Sent from my iPhone

On 19-Aug-2020, at 6:32 PM, ramaNi <sai...@gmail.com> wrote:

#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்013. 0472. தந்தனத் தானதன | தந்தனத் தானதன | தந்தனத் தானதன ...... தந்ததான
மதுரை மீனாட்சி துதி
.
அங்கயற் கானவிழி பைந்தளிர்த் தாழுமுரு
. . அஞ்சனக் கோலவிழி —— சிந்தைமேவும்
. அம்பணைத் தோளிலுறை வந்திகைக் கானமொழி
. . அஞ்சலைக் கோறுமருள் —— எந்தநாளும்
..
..

ramaNi

unread,
Aug 21, 2020, 8:52:52 AM8/21/20
to சந்தவசந்தம்
இங்கு கயல் என்பது மீனாளின் கண்ணல்ல. மீனாகிய தாய் உருவில் என்று பொருள். மீன் தன் குஞ்சுகளைக் கண்ணால் காப்பதுபோல் மீனாள் மன்பதையைக் காக்கிறாள். மீனாகிய தாய் என்றாலே கண்காப்பு தானாக வந்து அமைகிறது அல்லவா?

அன்புடன்,
ரமணி

Vis Gop

unread,
Aug 21, 2020, 9:09:50 AM8/21/20
to santhav...@googlegroups.com
ஓ! அற்புதம்.
கோபால்.
Sent from my iPhone

ramaNi

unread,
Aug 21, 2020, 9:25:55 PM8/21/20
to சந்தவசந்தம்
திருப்014. 0571. தனாதன தனாதன | தனாதன தனாதன | தனாதன தனாதனத் ...... தனதான
மதுரை மீனாட்சி துதி
.
தடாதகை வினோதினி இமாலய மனோன்மணி
. . தயாளும துராபுரிச் —— சிவராணி
. ஜலேசர விலோசனி சியாமளை சுபாஷிணி
. . சனாதன விலோதினிச் —— சகன்மாதா
.
கொடாதகை யிலாதவள் அனாதையு பகாரகி
. . குடாசகர் பொறாதழித் —— தருள்நீலி
. குமாரசென் மகாரணி நராயணர் சகோதரி
. . குசாலினி சடாதரிப் —— பதம்மேவ
.
படாதகை வல்மூவினை கடீயுறும் நம்வாழ்வினில்
. . பகாலியின் உமாவருட் —— சுடராலே
. பராபரன் மனோன்மணி நிராமய மனோபலம்
. . பவானியை அவாவுவோர்க் —— கிலைவீழ்வே
.
விடாதகை யின்மேதகை கொளேல்வரும் உபாசனை
. . வினாவறும் மனோபலத் —— துருவேறும்
. விடாதுறும் இம்மாயையில் விழாதருள் நம்மாலினி
. . விழாவுரு வின்மோகனப் —— பொழிவாமே!
.
[தடாதகை = மீனாள் பிறந்தபோது பெற்றோர் இட்ட பெயர்; வினோதினி = லீலைகள் செய்பவள், (மூன்று தனத்துடன் பிறந்ததால்) வேறுபட்டவள்; மனோன்மணி = பார்வதி; தயாளு = கருணையுள்ளவள்; ஜலேசர விலோசனி = ஜலத்தில் அசையும் மீனுருவில் கண்களைக் கொண்டவள்; சியாமளை = மீனாளின் ஒரு பெயர்; சுபாஷிணி = இன்மொழியாள்; சனாதன விலோதினி = சனாதனக் கொடியேந்துபவள்;
.
கொடாதகை யிலாதவள் = இல்லையென்னாமல் வழங்கும் கரத்தினள்; அனாதை உபகாரகி = திக்கற்றோர்க்கு உதவுபவள்; குடாசகர் = கபடர், ஏமாற்றுவோர்; குமார சென்ம காரணி = குமரன் பிறப்புக்குக் காரணமானவள்; குசாலினி = மனங்களிப்பவள்; சடாதரி = பார்வதி;
.
படாதகை = படாது அகைக்கும் = பட்டுப்போகாமல் துன்புறுத்தும்; வல்மூவினை = வலிய, மூவகை வினைகள்; வல்மூவினை கடீயுறும் = வல்மூவினைகளின் தீமையுறும்; நிராமய மனோபலம் = நோயற்ற மனவலிமை;
.
விடாதகையின் மேதகை = விடாமுயற்சியாம் மேன்மை; விழாவுரு = விழாக்கோலம்.]
.
16/08/2020
★★★
பாடல் 571 ( விராலிமலை )
ராகம் - தேஷ்; தாளம் - ஆதி - கண்டநடை (20)
(எடுப்பு - அதீதம்)
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனத் ...... தனதான
.
நிராமய புராதன பராபர வராம்ருத
. . நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி
. நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
. . நிராயுத புராரியச் ...... சுதன்வேதா
.
சுராலய தராதல சராசர பராணிகள்
. . செர்ருபமி வராதியைக் ...... குறியாமே
. துரால்புகழ் பராதின கராவுள பராமுக
. . துரோகரை தராசையுற் ...... றடைவேனோ
.
இராகவ இராமன்முன் இராவண இராவண
. . இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென்
. றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை
. . யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே
.
விராகவ சுராதிப பொராதுத விராதடு
. . விராயண பராயணச் ...... செருவூரா
. விராவிய குராவகில் பராரைமு திராவளர்
. . விராலிம லைராஜதப் ...... பெருமாளே.
.
★★★★★
 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 21, 2020, 9:37:52 PM8/21/20
to சந்தவசந்தம்
அழகிய எதுகை நயம்! Challenging chandahm. 

 

ramaNi

unread,
Aug 21, 2020, 10:15:04 PM8/21/20
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, அனந்த் ஸார்!
ரமணி

Siva Siva

unread,
Aug 21, 2020, 11:08:00 PM8/21/20
to santhavasantham
Impressive effort.
/ மனோன்மணி /
I prefer the correct spelling - மனோன்மனி.

On Fri, Aug 21, 2020 at 9:25 PM ramaNi <sai...@gmail.com> wrote:

ramaNi

unread,
Aug 22, 2020, 12:31:46 AM8/22/20
to சந்தவசந்தம்
Thanks a lot, Sivasiva.
ramaNi

ramaNi

unread,
Aug 24, 2020, 9:59:42 PM8/24/20
to சந்தவசந்தம்
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்015. 0949. தானாத் தனதான தானாத் —— தனதான
காஞ்சி காமாட்சி துதி
(வண்ணக் கட்டளைக் கலிவிருத்தம்)
.
காமாட் சியைநாடு காதாற் —— றுதிகேளு
மாமாத் தழிஞான மாணாக் —— கியனாகு
சோமாக் கினிரூபி சோணாச் —— சலர்தேவி
ஏமாச் சலவாமை ஏமாப் —— பருளேழே!
.
[மாமாத்து = பெருஞ்செருக்கு, மாய்மாலம்; சோமாக்கினி ரூபி = நிலவின் ஒளி ததும்பும் அழகி; ஏமாச்சலம் = ஏமாசலம் = மேரு, வலித்தல் விகாரம்; ஏமாப்பு = காப்பு; ஏழே = ஏழு பிறவிகள்]
.
20/08/2020
★★★
.
பாடல் 949 ( பேருர் )
ராகம் - சாருகேசி
தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2)
தகதிமிதக-3, தகிட-1 1/2
தானாத் தனதான தானாத் —— தனதான

தீராப் பிணிதீர சீவாத் —— துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் —— கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் —— கிரிராசே
போராற் பெரியோனே பேருர்ப் —— பெருமாளே.
.
★★★★★
 

ramaNi

unread,
Aug 28, 2020, 12:41:19 AM8/28/20
to santhav...@googlegroups.com
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்016. 0928. தந்தன தனன தனதாத்தன | தந்தன தனன தனதாத்தன | தந்தன தனன தனதாத்தன —— தனதான
காஞ்சி காமாட்சி
.
மன்பதை சுரரை இறுமாப்பொடு பண்டசு ரனுயிர் இலராக்கினன்
.. வந்தது விதியும் அரிவாக்கினில் —— அருளாக
. மண்டையில் வனதி வயமேற்றவர் தந்தவ ரமதை வலுவாக்கினன்
. . வந்தவு லகிவன் அரசாட்சியில் —— மிகவாட
.
ஒன்பது வயதின் உருபார்ப்பதி பண்டனை உலகில் இலனாக்கினள்
.. உந்திய எரியின் வசமாக்கினள் —— ஒருபோழ்தில்!
. ஒன்றலர் அழியும் உருவாய்க்கொள வந்தவ ளையிவர் அறிவாய்ப்பிலை
. . உம்பரின் உலகு திகையாட்கொள —— அசரீரி!
.
மன்பதை உலகில் எழிலார்ப்பொடு மந்திர மகிமை ஒலியார்ப்பினில்
. . மண்டபம் வனைக எதிர்பார்ப்பொடு —— வருவேன்நான்!
. வந்தனள் ஒளியின் எழிலாய்ச்சிறு பெண்டென உமையின் ஒருவார்ப்புரு
.. வந்தனை செயலின் அறைபூட்டலில் —— மறைவாளே!
.
அன்பொளிர் சனனி விழைநேத்திரி சுந்தர வதனி அடியார்க்கருள் .. அம்புய மலரென் மனவாக்கினில் —— ஒளியாகும்! . அந்தரி மகிமை மனமாட்சியில் வந்தனை செயலில் வினைவீழ்ச்சியை . . வந்திகை கழையை அணியாக்கினள் —— அருளூரே!
.
[மன்பதை = மக்கட்குலம்; சுரர் = தேவர்; பண்டசுரன் = பண்டாசுரன்; வனதி = வானதி (கங்கை) குறுக்கல்; ஒன்றலர் = பகைவர்; மந்திர மகிமை ஒலியார்ப்பினில் = காயத்ரீ மந்த்ரத்வனியின் ஓசை நிறைவில்; அறைபூட்டலில் = சிறுமியை வந்தித்தபின் அவள் அறையைப் பூட்டிவிடக் கட்டளையில்; விழைநேத்திரி = காமம் கண்ணானவள் = காமாக்ஷி; சுந்தரவதனி = அழகு முகத்தினள்; அம்புய மலர் = தாமரைப் பாதம், மலர் உருவகம்; மகிமை மனமாட்சியில் = மகிமை போற்றும் மனத்தின் இயல்பில்; மகிமை மனம்-ஆட்சியில் என்றும் கொளலாம்; வந்திகை = அவந்திகை முதற்குறை = கிளி; கழை = கரும்பு; அணியாக்கினள் = அணியாக ஆக்கிக் கொண்டவள்; அருளூர் = காஞ்சி, குறிப்பாக.]
.
23/08/2020
.
★★★
பாடல் 928 ( கருவூர் )
ராகம் - ....; தாளம் -
.
தந்தன தனன தனதாத்தன
தந்தன தனன தனதாத்தன
தந்தன தனன தனதாத்தன —— தனதான
.
சஞ்சல சரித பரநாட்டர்கள் மந்திரி குமரர் படையாட்சிகள்
. . சங்கட மகிபர் தொழஆக்கினை —— முடிசூடித்
. தண்டிகை களிறு பரிமேற்றனி வெண்குடை நிழலி லுலவாக்கன
. . சம்ப்ரம விபவ சவுபாக்கிய —— முடையோராய்க்
.
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையி லிசையாத்திரள்
. . கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய —— மியல்கீதங்
. கொங்கணி மகளிர் பெருநாட்டிய நன்றென மனது மகிழ்பார்த்திபர்
. . கொண்டய னெழுதும் யமகோட்டியை —— யுணராரே
.
பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர் வென்றிட சகுனி கவறாற்பொருள்
. . பங்குடை யவனி பதிதோற்றிட —— அயலேபோய்ப்
. பண்டையில் விதியை நினையாப்பனி ரண்டுடை வருக்ஷ முறையாப்பல
. . பண்புடன் மறைவின் முறையாற்றிரு —— வருளாலே
.
வஞ்சனை நழுவி நிரைமீட்சியில் முந்துத முடைய மனைவாழ்க்கையின்
. . வந்தபி னுரிமை யதுகேட்டிட —— இசையாநாள்
. மண்கொள விசையன் விடுதேர்ப்பரி யுந்தினன் மருக வயலு¡ர்க்குக
. . வஞ்சியி லமரர் சிறைமீட்டருள் —— பெருமாளே.
.
★★★★★

Vis Gop

unread,
Aug 28, 2020, 3:07:55 AM8/28/20
to santhav...@googlegroups.com
அம்மாடி!
அச்சம் தரும் வண்ணம்; அபயம் தரும் அன்னை!

வந்துன கவிதை அழகாக்கினள் அருளாலே!

நல்வாழ்த்துகள் 
கோபால். 
Sent from my iPhone

Vis Gop

unread,
Aug 28, 2020, 6:35:35 AM8/28/20
to santhav...@googlegroups.com
காமாட்       சியினாத
......



Sent from my iPhone
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

unread,
Aug 28, 2020, 6:44:31 AM8/28/20
to santhav...@googlegroups.com
மன்னிக்கவும்.
இவ்விழையில் எனது முந்தைய இடுகை பிழையானது.
கோபால்.


Sent from my iPhone

Siva Siva

unread,
Aug 28, 2020, 4:36:36 PM8/28/20
to santhavasantham
Impressive effort.

/மனவாக்கினில் —— தொழுவேனே!/
May need tweaking - due to effect of sandhi.


On Fri, Aug 28, 2020 at 12:41 AM ramaNi <sai...@gmail.com> wrote:
#ரமணி_வண்ணப்பாடல்_பயிலிழை
திருப்016. 0928. தந்தன தனன தனதாத்தன | தந்தன தனன தனதாத்தன | தந்தன தனன தனதாத்தன —— தனதான
காஞ்சி காமாட்சி
.
மன்பதை சுரரை இறுமாப்பொடு பண்டசு ரனுயிர் இலராக்கினன்
.. வந்தது விதியும் அரிவாக்கினில் —— அருளாக
. மண்டையில் வனதி வயமேற்றவர் தந்தவ ரமதை வலுவாக்கினன்
. . வந்தவு லகிவன் அரசாட்சியில் —— மிகவாட
.
ஒன்பது வயதின் உருபார்ப்பதி பண்டனை உலகில் இலனாக்கினள்
.. உந்திய எரியின் வசமாக்கினள் —— ஒருபோழ்தில்!
. ஒன்றலர் அழியும் உருவாய்க்கொள வந்தவ ளையிவர் அறிவாய்ப்பிலை
. . உம்பரின் உலகு திகையாட்கொள —— அசரீரி!
.
மன்பதை உலகில் எழிலார்ப்பொடு மந்திர மகிமை ஒலியார்ப்பினில்
. . மண்டபம் வனைக எதிர்பார்ப்பொடு —— வருவேன்நான்!
. வந்தனள் ஒளியின் எழிலாய்ச்சிறு பெண்டென உமையின் ஒருவார்ப்புரு
.. வந்தனை செயலின் அறைபூட்டலில் —— மறைவாளே!
.
அன்பொளிர் சனனி விழைநேத்திரி சுந்தர வதனி அடியார்க்கருள்
.. அம்புய மலரை மனவாக்கினில் —— தொழுவேனே!
. அந்தரி மகிமை மனமாட்சியில் வந்தனை செயலில் வினைவீழ்ச்சியை
. . வந்திகை கழையை அணியாக்கினள் —— அருளூரே!
.
[மன்பதை = மக்கட்குலம்; சுரர் = தேவர்; பண்டசுரன் = பண்டாசுரன்; ஒன்றலர் = பகைவர்; மந்திர மகிமை ஒலியார்ப்பினில் = காயத்ரீ மந்த்ரத்வனியின் ஓசை நிறைவில்; அறைபூட்டலில் = சிறுமியை வந்தித்தபின் அவள் அறையைப் பூட்டிவிடக் கட்டளையில்; விழைநேத்திரி = காமம் கண்ணானவள் = காமாக்ஷி; சுந்தரவதனி = அழகு முகத்தினள்; அம்புய மலர் = தாமரைப் பாதம், மலர் உருவகம்; மகிமை மனமாட்சியில் = மகிமை போற்றும் மனத்தின் இயல்பில்; மகிமை மனம்-ஆட்சியில் என்றும் கொளலாம்; வந்திகை = அவந்திகை முதற்குறை = கிளி; கழை = கரும்பு; அணியாக்கினள் = அணியாக ஆக்கிக் கொண்டவள்; அருளூர் = காஞ்சி, குறிப்பாக.]
.
23/08/2020
.

ramaNi

unread,
Aug 31, 2020, 9:02:32 AM8/31/20
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, சிவசிவா. திருத்திய அடி:

அன்பொளிர் சனனி விழைநேத்திரி சுந்தர வதனி அடியார்க்கருள் 
.. அம்புய மலரென் மனவாக்கினில் —— ஒளியாகும்!
. அந்தரி மகிமை மனமாட்சியில் வந்தனை செயலில் வினைவீழ்ச்சியை
. . வந்திகை கழையை அணியாக்கினள் —— அருளூரே! 

அன்புடன்,
ரமணி
It is loading more messages.
0 new messages