கணபதியின் கழல்பணிந்தேன்
(தரவு கொச்சகக் கலிப்பா)
கணபதியின் அருள்நினைந்தேன் கவலையெனும் இருளொழிந்தேன்
கணபதியின் நலம்புகழ்ந்தேன் கடுவினையாம் பிணிதணிந்தேன்
கணபதியின் பெயர்மொழிந்தேன் கமலமென மனமலர்ந்தேன்
கணபதியின் கழல்பணிந்தேன் பிறவியெலாம் கடந்துவிட்டேன். (1)
எழில்விளங்கும் மணிவிழியும் அசைந்தியங்கும் இருசெவியும்
புழைவிளங்கும் துதிக்கரமும் புவியொடுங்கும் பெருவயிறும்
கழல்விளங்கும் மலரடியும் பொலிந்திலங்கும் கணபதியின்
தழல்விளங்கும் திருவுருவைத் தலைவணங்கித் தொழுமனமே. (2)
கணபதியின் கழல்பணிந்தேன்
(தரவு கொச்சகக் கலிப்பா)
...
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/A65FBAAC-393B-4663-9276-F9AEE4E627A0%40gmail.com.
On Aug 7, 2026, at 07:56, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
--
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/56973AA9-599F-408B-AA38-0FE4C46DA91E%40gmail.com.
On Aug 7, 2026, at 8:38 PM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
bhahuth achchaa hai,yo..