திருவேங்கடக் கும்மி

30 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
May 22, 2024, 4:18:37 PM5/22/24
to santhavasantham
திருவேங்கடக் கும்மி

(பல்லவி)
வேங்கட வாவெனத் தீங்கறுமாம் - மனம் 
   வேண்டிடு மோர்நலம் வாய்ந்திடுமாம்
வேங்கட நாதனின் தாள்தொழுதால் - நமை 
   மேவிடு தீவினை நீங்கிடுமாம்.

(சரணங்கள்)
செங்கம லத்தலர் மேலுறைவாள்  - அவள்
   சேர்ந்திடு பொன்னொளிர் மார்புடையான்
வெங்கொடுந் தீயவர் வாழ்வொழியத் - தழல் 
   வீசிடு சக்கரத் தோர்படையான். (வேங்கட வாவென)  (1)

பூங்கயல் ஆமை வராகமுமாய் - எரி
   பொங்கிடு கோளரி வாமனனாய்
ஓங்குமி ராமர்அம் மூவருமாய்க் - குழல்
   ஊதியும் கற்கியும் ஆகிநின்றான் . (வேங்கட வாவென)   (2)

குன்றினை வான்குடை யாய்ப்பிடித்தே - எழிற்
   கோகுலத் தாநிரை காத்துநின்றான்
நன்றுயர் வேங்கட மாமலைமேல் - நின்று
   நானில மீதருள் நாட்டுகின்றான்.   (வேங்கட வாவென)  (3)

சந்ததம் ஓர்சரண் தான்புகுந்தே - அவன்
   தாள்நிழல் சார்ந்திடக் கேடறுப்பான்
அந்தமில் சீர்தனைப் பாடிநின்றார் - அவர் 
   ஆருயிர் காத்தொரு வீடளிப்பான்.  (வேங்கட வாவென)  (4)

- இமயவரம்பன்

சௌந்தர்

unread,
May 22, 2024, 8:52:50 PM5/22/24
to சந்தவசந்தம்
தேங்குநீர்ச் சுனைமிகு மாமலையான்  - அருள்
. . சீர்மிகு தாளிணை போற்றுதுமே!
வேங்கட வாணனை ஏத்துமிக்-கும்மி
. . வேண்டிடு வரந்தனைத் தந்திடுமே!

ஸௌந்தர் 

Anand Ramanujam

unread,
May 22, 2024, 9:04:15 PM5/22/24
to santhav...@googlegroups.com
அருமையான கும்மியினால் அடியேனுக்கு வாழ்த்துரைத்த  திரு. ஸௌந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி!
….

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/c0e0c773-5014-48dd-983a-81460101031cn%40googlegroups.com.

குருநாதன் ரமணி

unread,
May 22, 2024, 10:34:21 PM5/22/24
to சந்தவசந்தம்
கும்மி மிகவும் அழகு.
ரமணி

Ram Ramakrishnan

unread,
May 22, 2024, 10:53:28 PM5/22/24
to santhav...@googlegroups.com
ஆகா, தசாவதாரங்களை முழுமையாக
திருவேங்கடக் கும்மியில் கொணர்ந்தது அதி அற்புதம். கவிதையின் சரளநடை பாடிக் கூத்தாட வைக்கிறது.

மிகவும் ரசித்தேன், திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 23, 2024, at 01:48, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

வெண்கொற்றன்

unread,
May 23, 2024, 3:13:45 AM5/23/24
to சந்தவசந்தம்
இனிய கும்மிப்பாடல் ஐயா, நன்று நன்று!

அன்புடன்,
வெண்கொற்றன்

வியாழன், 23 மே, 2024அன்று 8:23:28 AM UTC+5:30 மணிக்கு Ram Ramakrishnan எழுதியது:

Anand Ramanujam

unread,
May 23, 2024, 5:52:47 AM5/23/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ரமணி!


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
May 23, 2024, 5:53:47 AM5/23/24
to santhav...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி, திரு. ராம்கிராம்! நனிநன்றி!

Anand Ramanujam

unread,
May 23, 2024, 5:54:31 AM5/23/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. வெண்கொற்றன்!

Subbaier Ramasami

unread,
May 23, 2024, 7:00:24 AM5/23/24
to santhav...@googlegroups.com
அருமை

இலந்தை

Anand Ramanujam

unread,
May 23, 2024, 7:09:29 AM5/23/24
to santhav...@googlegroups.com
இலந்தையார் அவர்களுக்கு மிக்க நன்றி!

Imayavaramban

unread,
9:34 AM (7 hours ago) 9:34 AM
to சந்தவசந்தம்
இந்தக் கும்மிப் பாட்டை Youtube-ற்காக  இன்னும் எளிமையான சொற்களைக் கொண்டு வேறுவிதமாக எழுதிப் பார்த்தேன்:

வேங்கட நாதனை நாடிடுவோம்
(கும்மிப் பாட்டு)

(பல்லவி)
வேங்கட நாதனை நாடிடுவோம் - அவன்
… வீறுபெ ரும்புகழ் பாடிடுவோம்

(அனு பல்லவி)
வேங்கட மாமலை சேர்ந்திடுவோம் - நமை
… மேவிடும் வேதனை தீர்ந்திடுவோம்

(சரணம்)
வான்முகில் போல்நிற மேனியனாம் - திரு
… மாலவன் சோதியில் ஆழ்ந்திடுவோம்
தேன்மலர்த் தாமரை யாள்கணவன்  - அவன்
… சீர்மிகு சேவடி சார்ந்திடுவோம். (வேங்கட நாதனை) (1)

ஆயிரம் நாமங்கள் கூறிடுவோம் - அருள்
… ஆரமு தத்தினில் ஊறிடுவோம்
கோயில் நிலைப்படி யாய்க்கிடப்போம் - எழில்
… கொஞ்சும் இதழ்களைப் பார்த்திருப்போம். (வேங்கட நாதனை) (2)


- இமயவரம்பன்

Ram Ramakrishnan

unread,
10:04 AM (6 hours ago) 10:04 AM
to santhav...@googlegroups.com
வழக்கம் போல் அற்புதம் திரு. இமயவரம்பன்.



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 18, 2026, at 09:34, Imayavaramban <anandbl...@gmail.com> wrote:

இந்தக் கும்மிப் பாட்டை Youtube-ற்காக  இன்னும் எளிமையான சொற்களைக் கொண்டு வேறுவிதமாக எழுதிப் பார்த்தேன்:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
3:28 PM (1 hour ago) 3:28 PM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு. ராம்கிராம்

இமயவரம்பன்

unread,
3:28 PM (1 hour ago) 3:28 PM
to Santhavasantham, santhavasantham
சிறு மாற்றங்களுடன்

(பல்லவி)

வேங்கட நாதனை நாடிடுவோம் - அவன்

… வீறு பெரும்புகழ்  பாடிடுவோம்


(அனு பல்லவிi)

வேங்கட மாமலை சேர்ந்திடுவோம் - நமை

… மேவிடும் வேதனை தீர்ந்திடுவோம்


(சரணம்)

வான்முகில் போல்கரு மேனியனாம் - திரு

… மாலவன் சோதியில் ஆழ்ந்திடுவோம் 

தேன்மலர்த் தாமரை யாள்கணவன்  - அவன்

… சீர்மிகு சேவடி சார்ந்திடுவோம். (1)


ஆயிரம் நாமங்கள் கூறிடுவோம் - அருள்

… ஆரமுதம் தனில் ஊறிடுவோம் 

கோயில் நிலைப்படி யாய்க்கிடப்போம் - எழில்

… கொஞ்சும் சுடர்முகம் பார்த்திருப்போம். (2)


  • இமயவரம்பன் 
Reply all
Reply to author
Forward
0 new messages