--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAEZ19QySQERw0wEGT32FgYsvQg8UyPiQezKEOv4Mg5AJwg2j%2BA%40mail.gmail.com.
ஸ்ரீவள்ளி தாலாட்டுஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோஅல்லிமலர் தான்மலரும் அழகான மாலையிலேமல்லிநிறை தொட்டிலிலே வந்துறங்கு வள்ளியம்மா 1தரமான தந்தத்தில் தந்தைசெய்த தொட்டிலிலேவரமாக வந்தவளே வந்துறங்கு வள்ளியம்மா 2வள்ளிமலைக் காட்டினிலே வந்துதித்த கண்மணியேபிள்ளைமதி வந்துதித்தான் பெண்ணரசி தாலேலோ 3
காலையிலே கமலையொலி தாலாட் டுத்தான்
கரையாற்றின் சலசலப்பும் தாலாட் டுத்தான்
சோலையிலே குருவிகளின் கிசுகி சுப்பும்
சுகங்கொடுக்கும் குயில்பாட்டும் தாலாட் டுத்தான்
சேலையிலே தூளிக்குள் உறங்கும் சேய்க்குத்
தென்றலிசை பாடுவதும் தாலாட் டுத்தான்
மாலையிலே பேசாத கண்ண சைப்பில்
வருமழைப்பின் அமுதயிசை தாலாட் டுத்தான்
( களத்து மேட்டுக்குப் பக்கத்திலே ஒரு செல்வருடைய மாளிகை அந்த வீட்டிலே ஒரு குழந்தை.
அணிமணிகள்
போட்டு அழகாக நடை பயில்கிறது. அதன் அருகேயுள்ள வேப்பமரத்தில் தூளிகட்டித் தன்குழந்தையைத்
தூங்கவைக்கிறாள் களத்து மேட்டில் வேலை செய்யும் ஒருதாய். தன் குழந்தைக்கு அணிமணிகள் இல்லையே
என்று
வருந்தினாலும் அவளே அணிமணிகளக் கற்பனை செய்து குழந்தையைச் சமாதானப் படுத்துகிறாள்)
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு
வண்ண மருக்கொழுந்தே
மல்லிகையே கண்ணுறங்கு
வேப்ப மரக் காத்துப்பட்டா
வேறுவினை சேராது
காப்பா மகமாயி
கண்ணுறங்கு என்மகனே
பஞ்சு மெத்தை சூடாகும்
பாளம்பாளம் கொப்புளிக்கும்
எஞ்சாமி பஞ்சுமெத்தை
ஏதுக்கடா நம்மளுக்கு?
மஞ்சள்வெயில் தங்கமடா
மரகதமாம் பச்சையிலை
பிஞ்சுக் குழந்தே -உன்
பேர்கூட மாணிக்கம்
உன்பல்லு நல்முத்து
உன்னுதடு செம்பவளம்
என்னருமைப் பொன்மகனே
எனக்கேத்த வைரமணி
தெக்கேருந்து காத்துவரும்
சீராமன் சன்னதிக்கே
மொக்குமல்லி தான்வெடிக்கும்
மூக்கெல்லாம் தான்மணக்கும்
தூக்கம் கலைஞ்சுபுட்டா
சுத்துமுத்தும் நீபாரு
மூக்கு மரங்கொத்தி
முன்கிளையில் தான்கொத்தும்
காக்கா கதைசொல்லும்
கருங்குயிலி தான்பாடும்
நேக்கா அணிற்பிள்ளை
நின்னு பருப்பொடைக்கும்
பாலுனக்கு வேணுமின்னு
பாடுபடப் போறேண்டா
காலுதைச்சு நீயழுதா
கண்ணீர் வருகுதடா
நாலெழுத்து நீபடிச்சு
நஞ்சை புஞ்சை வாங்கோணம்
பால்குடுத்த ஆத்தாவுக்குப்
பட்டுச் சேலை எடுக்கோணம்
நீசிரிச்சா நான்சிரிப்பேன்
நீயழுதா நானழுவேன்
ஆசைவச்சேன் உன்மேலே
அழாவேணாம் கண்மணியே
ஆத்தாடி நேரமாச்சு
அழைக்குறாக பொம்பளைக
ஆத்தாநான் போய்வாரேன்
ஆம்பளைநீ கண்ணுறங்கு
(கண்ணுறங்கு..)
ஆராத அமுதே என் அன்பே
தாலேலோ
அழகுமிகக்
கொண்டவளே அரசி தாலேலோ
வாராகி வார்த்தாளி வரமே தாலேலோ
வராகமுகி
வராகமுகி வடிவே தாலேலோ
வாராத செல்வமென வந்தாய் தாலேலோ
வாழ்விக்க வந்தவளே மகவே தாலேலோ
கூரான தந்தங்கள் கொண்டோய் தாலேலோ
குலம்விளங்க வந்தவளே கோவே தாலேலோ
அன்னைலலி
தாம்பிகையின் செல்லம் தாலேலோ
ஆயுதங்கள்
கையெடுக்கும் அருளே தாலேலோ
மின்னுமொளி கண்களிலே கொண்டோய் தாலேலோ
வேகமுடன்
காலுதைக்கும் மின்னே தாலேலோ
சின்னதொரு தூளிக்குள் சேர்ந்தாய் தாலேலோ
திரிலோகம்
வளர்சக்தி பெற்றோய் தாலேலோ
முன்னொளிரும் நெற்றிக்கண் கொண்டோய் தாலேலோ
முக்கண்ணி
மோகினியே முத்தே தாலேலோ
ஆனைபலம் கொண்டவள்நீ
ஆனாலும் கைக்குள்
அடங்கியொரு
குழந்தையென ஆனாய் தாலேலோ
சேனைநடத் திடுவதென பொம்மைகளை யெல்லாம்
செப்பமுடன் அணிவகுக்கும் திருவே
தாலேலோ
வானமழும் மண்ணுமழும் வளரண்ட மெல்லாம்
வருந்தியழும் நீயழுதால் அழவேண்டாம்
கண்ணே
ஆனவிந்தை அண்டத்தைக் கிலுகிலுப்பை ஆக்கி
ஆட்டுகிறேன் நீகேட்டு மகிழ்வாய் என்
கண்ணே!
பால்தருவேன் பழந்தருவேன் பரமே தாலேலோ
பாரடியில்
கிழங்கெடுத்துத் தருவேன் தாலேலோ
கோல்தருவேன் உலக்கையென வைத்துக்கொள் பெண்ணே
கொடுங்கலப்பை வில்லம்பு
நான்தருவேன் கண்ணே
மேல்சுழலும் சக்கரமும்
கதையோடு பூவும்
விளையாட
நான் தருவேன் ஆடிடுவாய் கண்ணே
கால்விரித்து நீபடுத்தால் துணிகிழிந்து போகும்
கால்மடக்கிப் படுத்துக்கொள்
என்செல்லப் பெண்ணே!
உன்விழிகள் சிவப்பதுமேன்
என்னருமைக் கண்ணே
ஓங்குசினம்
கொள்ளுவதேன் வாராகிப் பெண்ணே
உன்கழுத்தில் போடுதற்கு நவரத்ன மாலை
உனக்காக அனுப்பியுளாள் லலிதாம்பா
தேவி
என்னயிது வரம்கொடுப்ப தென்ன உன்றன் கையை
இப்படிவைத் துள்ளாயோ,
என்
தெய்வம் நீயே
என்னரசி என் தெய்வம் இதமே தாலேலோ
எங்கள்குல நாயகியே இறையே தாலேலோ
தாலேலோ தாலேலோ ஓ தண்ட நாதா
தாலேலோ தாலேலோ நீயெல்லாம் தாதா!
On Jul 23, 2024, at 20:31, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
அருமையான தாலாட்டுப் பாடல் திரு. தங்கவேல்.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
ஸ்ரீவள்ளி தாலாட்டுஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோஅல்லிமலர் தான்மலரும் அழகான மாலையிலேமல்லிநிறை தொட்டிலிலே வந்துறங்கு வள்ளியம்மா 1
சந்த வசந்தத்தின் சிறப்பே அதுதான்! எல்லாரும் எல்லாப் பாட்டுக்களையும் எழுதுவார்கள்; ரசிபாபாராகள்;வாழ்க!
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBD2mscFPNtHzekPSuBJzD6W_dEH%3DotRb7yA-kXEvBJ_Kg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/e82f8098-97e9-48e0-aecc-12e0662c692en%40googlegroups.com.
தாலாட்டு எல்லாரும் விரும்புவது. அருமை!
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-LFFMCskwdEy6yrjrmxkau%3Dd8UHrgnTVmWc302_64MkSA%40mail.gmail.com.
On Sep 12, 2024, at 12:09, Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB%3D0VtVZfk3dHnyn2nTpeEOSbaedMrrjNAOJX5Uwjoup0FDg2w%40mail.gmail.com.
மிக அருமை, திரு. தங்கவேல்.
..
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/538ef5a9-ad14-4303-acb0-6e0405db855fn%40googlegroups.com.
ThAlAttu arumai anna...
யோகியார் அவர்களுக்கும், இமயவரம்பன் அவர்களுக்கும் நன்றி மலர்கள் பல 💐💐💐
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/61d5f8ec-658c-4b4b-9bbe-ebe674cfe54an%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1c4f8fa7-0d4b-43eb-9549-896f816bf595n%40googlegroups.com.
சிறப்பு தம்பி!