பாட்டு

24 views
Skip to first unread message

rathnam

unread,
Nov 28, 2022, 2:42:02 AM11/28/22
to santhav...@googlegroups.com

பாட்டு

எழுதவே கூடா தென்னும் போதெல்லாம்  எழுத வைத்து

எழுதுவே னென்றே நின்ற போதெல்லாம் இழுத்துத் தள்ளிப்

பழகுவாய் பழகா திருப்பாய்  படிந்தாற்போல் படியா

திருப்பாய்

பழையதாய்ப் பூத்த புதுமை யாயாடிப்  போவாய் வருவாய்

வழியிலே நின்று வாரி யணைத்தெடுத்து  மாய மாவாய்

விழியிலே ஒளியாய் விந்தை பலகாட்டித் தானாய் விளைவாய்

மழலையாய் வருவாய் வண்ண இருளாவாய் மதர்த்துத் திரிவாய்

நிழலிலே சுடராகி  நினைவுள் ளுணர்வாகி  நெருக்கித் தகர்ப்பாய்

அழகிய அடமாய் அடங்கா அற்புதமாய்க் கதிக்குங் கவியே

விழுமிய பொருளாய் விரவும் வித்தகமாய் விளங்கும் விடையே

Rajja Gopalan

unread,
Nov 28, 2022, 3:20:56 AM11/28/22
to santhav...@googlegroups.com
அருமை.  

எண்ணி எண்ணி எழுத்து கூட்டிப்
பின்னி வைக்கும் புலமை ஏன்!
கண்ணில் உந்தன் கருணை காட்டி
கணக்கிலாத கவிதையைப்
வண்ண வண்ண வடிவிலாக்க
வைக்கும் தாயுன் காலடி
எண்ண எண்ண எழுதும் கைகள்!
எனக்கு ஏது புலமையே!

மீ. ரா

Sent from my iPhone

On 28 Nov 2022, at 07:42, rathnam <irathin...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAHhWE8sp01w19bJ%2BdyhwXs0mZuRWzY-iBOfUGffWSONKm7PNhQ%40mail.gmail.com.

rathnam

unread,
Nov 28, 2022, 4:08:47 AM11/28/22
to santhav...@googlegroups.com

தேசிகர் பாட்டு?

Anand Ramanujam

unread,
Nov 28, 2022, 6:43:10 AM11/28/22
to santhav...@googlegroups.com
 நிழலிலே சுடராகி  நினைவுள் ளுணர்வாகி  நெருக்கித் தகர்ப்பாய்”

அருமை!

- இரா. ஆனந்த்

Siva Siva

unread,
Nov 28, 2022, 8:40:55 AM11/28/22
to santhav...@googlegroups.com
Nice.
படுவது பாடு என்றால், படுத்துவது பாட்டு ? :) 🙂

V. Subramanian

On Mon, Nov 28, 2022 at 2:42 AM rathnam <irathin...@gmail.com> wrote:

rathnam

unread,
Nov 28, 2022, 8:55:49 AM11/28/22
to santhav...@googlegroups.com
ஆனந்த் ஐயாவுக்கு என் அன்பான வணக்கம்.

rathnam

unread,
Nov 28, 2022, 8:57:43 AM11/28/22
to santhav...@googlegroups.com
ஐயாவுக்கு அன்பான வணக்கம். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 28, 2022, 9:34:30 PM11/28/22
to santhav...@googlegroups.com
> அழகிய அடமாய்..
ஆகா, அற்புதப் புலமை! 

அனந்த்

On Mon, Nov 28, 2022 at 2:42 AM rathnam <irathin...@gmail.com> wrote:
--.

rathnam

unread,
Nov 28, 2022, 11:56:11 PM11/28/22
to santhav...@googlegroups.com
ஐயாவுக்கு என் பணிவாள வணக்கங்கள். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

rathnam

unread,
Nov 29, 2022, 12:58:14 AM11/29/22
to santhav...@googlegroups.com

அறுந்த நரம்பில் விளைந்த நாதம் யாழும் அறியுமோ

உறங்கி எழுந்த துண்மை என்று என்று விளங்குமோ

மறந்த கதையை நினைத்த பின்பு மறதி மறக்குமோ

பிறங்கு மொளியில் திணரும் விழியில் பார்வை பிறக்குமோ

அறத்தில் மறத்தில் கலங்கும் மனத்தில் வழியுந் தெரியுமோ

புறத்தி லகத்தில் புனையும் புனைவில் மயக்கந் தெளியுமோ

கறங்கும் பிறவி வெள்ளத் துள்ளே பிடியுங் கிடைக்குமோ

இறங்கும் போதும் சிகர மடைவ தருளின் விளக்கமோ

Siva Siva

unread,
Nov 29, 2022, 9:14:42 AM11/29/22
to santhav...@googlegroups.com
/அறுந்த நரம்பில் விளைந்த நாதம் யாழும் அறியுமோ/

Reminded me some proverb that goes something like - சுட்ட சட்டி சுவையை அறியுமா?

V. Subramanian

Anand Ramanujam

unread,
Nov 29, 2022, 9:27:32 AM11/29/22
to santhav...@googlegroups.com
சிவவாக்கியரின் இந்தப் பாடலில் இப்பழமொழி பயின்று வருவதாகத் தெரிகிறது:

நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில் 
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

- இரா. ஆனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

lns2...@gmail.com

unread,
Nov 29, 2022, 9:39:38 AM11/29/22
to சந்தவசந்தம்
"சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ" என்பது சிவவாக்கியர் வாக்கு என்று கேட்டிருக்கிறேன். சித்தர்களின் சில வாக்கியங்கள் அப்படியே (புத்த) தம்மபதத்தின் அடிகள் போலத் தோன்றும். தம்மபதத்தில் பாலவக்கோ (அறிவிலி வருக்கம்) என்ற அத்தியாயத்தில் இதே போல் ஓர் உவமை வருகிறது.

யாவஜீவம்பி சே பா³லோ பண்டி³தம்ʼ பயிருபாஸதி .
ந ஸோ த⁴ம்மம்ʼ விஜானாதி த³ப்³பீ³ ஸூபரஸம்ʼ யதா² .

அதாவது, வாழ்நாள் முழுவதும் அறிவிலியானவன் பண்டிதனுக்கு சேவை செய்தாலும் சட்டுவம் சூபரசத்தின் ருசியை அறியாதது போல் அவனும் (புத்த) தம்மத்தை அறிய மாட்டான்.

சூபரசம் என்றால் (dal என்ற) பருப்பு ரசம்.

Regards,
Srini

rathnam

unread,
Nov 29, 2022, 9:41:45 AM11/29/22
to santhav...@googlegroups.com
ஆமாம் ஐயா🙏🏻

rathnam

unread,
Nov 29, 2022, 9:47:21 AM11/29/22
to santhav...@googlegroups.com
சிவவாக்கியரின் வரி போல இருந்தாலும் சொல்ல வந்த விஷயம் வேறு ஐயா!

நரம்பு அறுந்த மறுகணம் யாழ் எனும் இருப்பு மறைகிறது. அவ்வாறு மறைகையில் முடிவான தொனியை அறிய யாழ் இல்லை.🙏🏻

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

rathnam

unread,
Nov 30, 2022, 6:06:16 AM11/30/22
to santhav...@googlegroups.com

ஆதார மேதுமின்றி அந்தரத்தி லாடுகிறேன்

பாதாளந் தாண்டியவுன் பாதமெங்கே தேடுகிறேன்

சூதான மனத்தோடு சூதாடி  ஓடுகிறேன்

வாதாடி வழிதேடி வளையுள்ளே வாடுகிறேன்

ஏதாகி  லுஞ்செய்தே எனையாள வந்திடுவாய்

வேதாந்த வெளிகடந்த வேதியனே வென்றிடுவாய்

வாடாத மலராலே வார்கழலைத் தொழுவேனே

பாடாத பண்ணாலே பண்ணவனாய்ப் பணிவேனே

ஆடாத அகத்துள்ளே ஆடியுன்னை  அணைவேனே

கோடாத நெறியாலே குணக்குன்றே புணர்வேனே

தேடாத சிந்தனையுட் செங்கரும்பின் சாறானாய்

காடாளுங் கண்மணியே கண்ணிறைந்த பேறானாய்

Anand Ramanujam

unread,
Nov 30, 2022, 7:43:01 AM11/30/22
to santhav...@googlegroups.com
 ஆடாத அகத்துள்ளே ஆடியுன்னை  அணைவேனே”

அருமை!

- இரா. ஆனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

rathnam

unread,
Nov 30, 2022, 8:02:50 AM11/30/22
to santhav...@googlegroups.com
ஆனந்த் ஐயாவுக்கு என் அன்பான வணக்கம். 

Siva Siva

unread,
Nov 30, 2022, 9:14:33 AM11/30/22
to santhav...@googlegroups.com
/ காடாளுங் கண்மணியே  /
Nice phrase.

V. Subramanian

On Wed, Nov 30, 2022 at 6:06 AM rathnam <irathin...@gmail.com> wrote:

....

rathnam

unread,
Nov 30, 2022, 9:51:48 AM11/30/22
to santhav...@googlegroups.com
உங்களுக்கு இந்த வரி பிடித்ததில் வியப்பே இல்லை. 'காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன் நாட்டிற் பரிபாகன்'

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 30, 2022, 4:48:09 PM11/30/22
to santhav...@googlegroups.com
சூபரசம் சமைத்தல் அரதப் பழசு எனத் தெரிகிறது:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

rathnam

unread,
Dec 1, 2022, 12:58:16 AM12/1/22
to santhav...@googlegroups.com

எதுவு மறியா தெதையுஞ் சொல்வேன்

இதுவோ எனைநீ இழைத்த விதமே

மதுவாம் மமதை மாந்தி மயங்கிப்

பொதுவில் விளங்கும் பொழிலைக் காணேன்

விதியென் பாயோ விலகா வருளே

மதியும் வாழ மதர்த்த சிவமே

கதியாய் நஞ்சைக் கணத்தில் கொண்ட

பதியே வருவாய் பழிவா ராதே

நிதியு மாவாய் நினையாப் போதும்

நதியு மாடி நனைக்குஞ் சடையோய்

துதிக்கும் முறையுந் தொழும்பு மறியேன்

பொதியு மன்பால் புகலா வாயே

rathnam

unread,
Dec 1, 2022, 1:03:49 AM12/1/22
to santhav...@googlegroups.com
correction:
பொதியு மன்பாற்

Siva Siva

unread,
Dec 1, 2022, 8:38:41 AM12/1/22
to santhav...@googlegroups.com
/துதிக்கும் முறையுந் தொழும்பு மறியேன்
பொதியு மன்பாற் புகலா வாயே/

Nice.
அடைக்கலப்பத்துப் பாடலை நினைவூட்டியது.
8.24.9

V, Subramanian

rathnam

unread,
Dec 4, 2022, 10:57:38 AM12/4/22
to santhav...@googlegroups.com

நரையுந் திரையுந் தவிர்க்கு மறிவை தமியன் அறியும் வகையேது

கரையை அடைய பயணம் முடிய கலமுங் கிடைத்தால்

குறைவேது

உரையில் நினைவில் உடலில் உயிரில் உண்மை உறைந்தால் பயமேது

வரையைப் பிளந்து விரவு மெழிலைப் பணியும் மனத்தில் மருளேது

எதையோ சொல்ல விழைந்துன் திருமுன் நின்ற பொழுதில் மறந்தேனே

அதையு மிதையு மறியு மருளே மௌனங் கலைத்தால் மகிழ்வேனே

புதையா நிதியாய்ப் புலனு மறிய பொள்ளா மணியாய்ப் பொலிவோனே

கதையை எழுதுங் கவியே கதியே கடைக்கண் அசைந்தாற் பிழைப்பேனே

Rajja Gopalan

unread,
Dec 5, 2022, 2:07:41 AM12/5/22
to santhav...@googlegroups.com
குறைவேது! நிறைவோடு மறையோதும் முறை வாழின்
சிறையேது! கறையேது!  பிறைசூடன் அடிபாடு!

மீ. ரா

Sent from my iPhone

On 4 Dec 2022, at 15:57, rathnam <irathin...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

rathnam

unread,
Dec 5, 2022, 4:30:55 AM12/5/22
to santhav...@googlegroups.com
நல்லோர் மனத்துள்ளே நின்றருளும் பெருமான்🙏🏻

rathnam

unread,
Dec 5, 2022, 10:55:08 PM12/5/22
to santhav...@googlegroups.com
அன்றோர் அழலா யெழுந்தே இருள்துடைத்து
வென்றானென் அண்ணா அளிந்து
Reply all
Reply to author
Forward
0 new messages