சன்மார்க்கக் கவிதைகள்

158 views
Skip to first unread message

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Oct 4, 2025, 2:36:15 PM10/4/25
to சந்தவசந்தம்

திருஅருட்பிரகாச வள்ளலார் 
வருவிக்க உற்ற நாள் அக்டோபர் 5 

சன்மார்க்கக் குறள் வெண்பா 

அல்லல் அகற்றும் அருட்பா அமுதத்தை
சொல்லித் துதிக்கச் சுகம் 1

ஆரமுதை உண்டார்க் கழிவில்லை ஆகவே
ஊரமுதை உண்ணா தொழி 2

அன்புடன் வாழ்வார்க் கழிவில்லை ஆருயிரைத்
துன்புறுத்த  துன்பம் துணை 3

வானுள்ளோர் போல மரணமில்லா வாழ்வுதரும்
ஊனுண்னார் வாழும் உலகு 4

சன்மார்க்கச் சங்கத்தைச் சார்வார்க் கழிவில்லை
இன்பமாய் வாழ்வார் இசைந்து 5

இயற்கை இறைவனை ஏத்தினார்க் கில்லை
செயற்கை மரணச் செயல் 6

கரிசாலை தூதுவளை காலை புசிப்பான்
மரிக்கா நிலைபெறு வான் 7

மதம்பிடியா மக்களெலாம் மாநிலத்தில் என்றும் 
இதமோடு வாழ்வார் இசைந்து 8

பயமின்றி பாருலகில்  பற்றனைத்தும் விட்டு
தயவுடன் நிற்றல் தவம் 9

கள்ளப் புலனால் கடவுளைக் காணச்செல்
வள்ளல் பெருமான் வழி 10

Ram Ramakrishnan

unread,
Oct 4, 2025, 9:47:46 PM10/4/25
to santhav...@googlegroups.com
மிக அருமையான குறட் பாக்கள், திரு. தங்கவேல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 5, 2025, at 00:06, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/fe18e3de-3d41-4729-ab8a-f305645a0036n%40googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Oct 5, 2025, 10:45:00 AM10/5/25
to சந்தவசந்தம்
சன்மார்க்கக் கலிவெண்பா 

AI தொழில்நுட்பத்தில் பாடலைக் கேட்க

அன்னை வயிற்றுள்ளே அல்லல் அடைந்தோமே
பின்னர் பிறந்து பிதற்றித் திரிந்தோமே
எல்லை  இலாத இறைவனே எங்குள்ளாய்
கல்லில் இருப்பாயோ காற்றில் இருப்பாயோ 
கண்ணில் படுவாயா காண விழைகின்றேன்
கண்டால் களிப்பேனே காணத் துடிக்கின்றேன்
கண்ணீர் விடுகின்றேன் கண்ணீர் விடுகின்றேன் 
மண்ணில் வரும்போரால் மாந்தர் பெருந்துன்பம்
பட்டே இறப்பாரே பச்சை மரமெல்லாம்
பட்டே விழுந்திடுமே பாவம் உயிரெல்லாம் 
மாயும் அதனாலே வள்ளல் பெருமான்போல் 
காயம் இறக்காத காலம் வரவேண்டும்
சாதி மதத்தாலே சண்டை இனிவேண்டாம் 
சோதி வடிவாகத் தோன்றி அருள்வாயே
அன்பே வடிவான ஐயா அருள்வாயே
துன்பம் இனிவேண்டாம் தூயா அருள்வாயே
என்றும் இறப்பில்லா இன்பம் அருள்வாயே
உன்னை மறக்காத உள்ளம் அருள்வாயே
உண்ண உணவின்றி உள்ள உலகோரும்
உண்டுப் பசியாறி உன்னைத் தொழவேண்டும்
ஊனே உணவென்றே உண்டுத் திரிவோரும் 
தானே மனம்மாறத் தாயே அருள்வாயே
தீய குணத்தார் திருந்தி விடவேண்டும் 
நேய மனத்தோடு நின்னைத் தொழவேண்டும்
ஊரமு துண்டுண் டொழியா தினிமக்கள் 
ஆரமு துண்ண அறிவைத் தரவேண்டும்
கள்ளுக் கடையில்லா காலம் வரவேண்டும் 
வள்ளல் பெருமானே மண்ணில் இனிமேலோர் 
போரும் நடந்தால் புவியில் உயிரெல்லாம்
சோரும் அதனாலே சோதி வடிவாய் 
இறைவா அருளாய் இசைந்து . 

On Sunday, October 5, 2025 at 7:17:46 AM UTC+5:30 Ram Ramakrishnan wrote:
மிக அருமையான குறட்பாக்கள், திரு. தங்கவேல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

மிக்க நன்றி ஐயா  

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jan 31, 2026, 8:47:05 PMJan 31
to சந்தவசந்தம்

சிந்தனை அமுதப் பத்து

https://youtu.be/wmvgqDyUc18?si=-VQawuRIBXCJMBO9

 👆Presenting the devotional song “Sinthanai Amutha Pathu”,
a Tamil devotional composition in Aruseer Virutham,
based on the Sanmarga philosophy of
Thiru Arutprakasa Vallalar.


சிந்தனை அமுதப் பத்து

       (அறுசீர் விருத்தம்) 


மன்னும் உலகில் மனிதர் வாழ

  வள்ளல் பெருமான் வழியில் சென்றால் 

துன்பம் நிறைந்த வாழ்வும் மாறும் 

   துணையாய் வருவார் அருளைத் தருவார்

இன்பம் பெற்று நலமாய் வாழ

   இனிக்கும் அருட்பா அமுதை நாளும் 

இன்னும் கொஞ்சம் சிந்திப் போமே

   இறப்பைத் தவிர்த்து வாழ்வோம் இனிதே 


சரணம் என்று சன்மார்க் கத்தில்

    சார்ந்து பயின்று ஞானம் பெற்று

மரணம் என்னும் செயலை மாற்ற

   வள்ளல் பெருமான் வழியில் செல்லும் 

தருணம் இதுவே தருணம் இதுவே

   தயக்க மின்றி வாரீர் வாரீர் 

அருட்பா என்னும் அமுதக் கடலை

   ஆழ்ந்து நாளும் சிந்திப் போமே 


சாதி மதத்தை முற்றும் விட்டு

   சன்மார்க் கத்தில் இணைவோம் இன்று 

சோதி வடிவ மான ஞான

  சுத்த சிவத்தைக் கருணை யாலே

ஓதி உணர்ந்தே உண்மை அறிவோம் 

     உடலை வளர்க்கும் உபாயம் அறிவோம் 

நீதி நிறைந்த  அருட்பா  அமுதை

   நித்தம் நித்தம் சிந்திப் போமே 


கரிப்பான் தூது முசுக்கை ஆரை

  காலை நாளும் உண்டே வந்தால்

சரியும் உடலின் பிணிகள் நீங்கித்

   தங்கம் போல மின்னும் மேனி

மரியா நிலையும் பெறுவாய் என்று

  வள்ளல் பெருமான் வகுத்துத் தந்த 

அரிய அறிய அருட்பா அமுதை

  அமரர் ஆகச்  சிந்திப் போமே


நெற்றிக் கண்ணைத் திறக்கும் சாவி

    நெஞ்சில் கருணை வந்தால் கிட்டும் 

கற்று மறவாக் கல்வி கற்றுக்

     காலம் கடந்து வாழ்வோம் வாழ்வோம்

சற்றும் தயக்கம் இன்றி என்றும் 

   சாகா வரத்தை அளிக்க வல்ல

வெற்றி வள்ளல் தந்த அமுதை

   மெல்லப் பருகிச் சிந்திப் போமே


பயந்து பயந்து வாழ வேண்டாம் 

   பணத்தில் மோகம் கொள்ள வேண்டாம் 

மயக்கம் கொண்டு வாழ வேண்டாம் 

  வள்ளல் பெருமான் வழியில் சென்று 

தயவு நிறைந்த மனிதர் ஆகிச்

  சன்மார்க் கத்தைச் சார்ந்து வாழ்வோம் 

உயர்ந்த அருட்பா அமுதை நாளும் 

   ஓதி உணர்ந்து சிந்திப் போமே


அள்ளிப் பருக அமுதம் இருக்க

    அழிவை அளிக்கும் கள்ளை உண்ணேல்

கள்ளம் நிறைந்த எண்ணம் வேண்டாம் 

     களவு காமக் குரோதம்  வேண்டாம்

உள்ளத் தினிலே ஒளியுண் டாக

    உண்மை ஞானத் தெளிவுண் டாக

வள்ளல் தந்த அருட்பா அமுதை

   வாழ்வு மலரச் சிந்திப் போமே


உறங்கும் போதும் கவனம் வேண்டும் 

     உணவில் என்றும் கவனம் வேண்டும் 

உறவின் போதும் கவனம் வேண்டும்

    ஒழுக்க முறையை ஓம்ப வேண்டும் 

அறத்தில் வழியில் நடத்தல் வேண்டும்

     அன்பு கொண்ட நெஞ்சம் வேண்டும் 

இறப்பை அறுக்கும் அருட்பா அமுதை

      இன்னும் கொஞ்சம் சிந்திப் போமே


இருளை அகற்றி இன்பம் அளிக்கும் 

    எல்லா உயிர்க்குள் உயிராய் இருக்கும் 

கருணை நிறைந்த கடவுள் தன்னை 

    காயத் தினிலே காணும் வழியை

அருளும் வள்ளல் வழியில் செல்வோம் 

    அன்பைப் பகிர்ந்து மகிழ்ச்சி கொள்வோம் 

பெருமை மிக்க அருட்பா அமுதை

      பேணிப் போற்றிச் சிந்திப் போமே


கொல்லா விரதம்  உலகில் எங்கும் 

    குடிகொண் டாலே  நலமே விளையும் 

எல்லா உயிரும் வாழும் வாழ்த்தும் 

  இன்னல் தீரும் இன்பம் பெருகும் 

அல்லல் அகற்றும் அருட்பா அமுதை

   அல்லும் பகலும் சிந்திப் போமே

சொல்லித் துதித்தால் வள்ளல் புகழைச்

   சொர்க்கம் ஆகும் இந்தப் புவியே


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

பிற்குறிப்பு


பாடல் விவரங்கள்:
பாடல் வரிகள் : காஞ்சிபுரம் க. தங்கவேல்
குரல் & இசை : Suno AI
படம் உருவாக்கம் : ChatGPT & Pika AI
வீடியோ எடிட்டிங் : YouCut

இந்தப் பாடல்“சந்தவசந்தம்” Google Group-இல்
நடைபெற்ற கவியரங்கத்திற்காக எழுதப்பட்டது.

Kaviyogi Vedham

unread,
Feb 1, 2026, 11:02:23 AMFeb 1
to santhav...@googlegroups.com
attagaasam. kavi vaazga,  yogiyaar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Swaminathan Sankaran

unread,
Feb 1, 2026, 11:50:48 AMFeb 1
to santhav...@googlegroups.com
நன்று.

சங்கரன் 



--
 Swaminathan Sankaran

இமயவரம்பன்

unread,
Feb 1, 2026, 2:23:30 PMFeb 1
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை, திரு. தங்கவேல்

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 13, 2026, 12:32:29 AMFeb 13
to சந்தவசந்தம்


திரு.யோகியார் , சங்கரன், இமயவரம்பன்  ஆகிய மூவருக்கும் நன்றிகள் 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 18, 2026, 12:36:38 AMFeb 18
to சந்தவசந்தம்
காய்கறி வைத்தியம் விருத்தம் 
  
அசைவத்தைத்  தின்னாதீர் ஆபத்தோ ஆபத்து
பசியெடுத்தால் காய்கறியைப் பக்குவமாய் உண்டுவர 
விசையுடனே வியாதிகளும் விட்டுடனே விலகிடுமே 
திசையெங்கும் சென்றுரைப்பீர் சிறப்புடன்நாம் வாழ்ந்திடவே  

ஈசனவன் அருளாலே எடுத்துரைப்பேன் கேளுங்கள் 
தேசமெங்கும் திருஷ்டிக்குத் தெருக்களிலே உடைக்கின்ற
பூசணிக்காய் வயிற்றிலுள்ள புண்ணெல்லாம் ஆற்றிவிடும்
ஆசனவாய் எரிச்சலையும் அகற்றிவிடும் அருமருந்தே

கத்தரிக்காய் கரையாத கற்களையும் கரைத்துவிடும்
நித்தமுமே உண்டுவர நீர்பிரியும் எளிதாகச்
சத்தியமாய் உரைக்கின்றேன் சத்துமிக நிறைந்ததுதான் 
அத்தகைய காயதனை அன்றாடம் உண்ணுங்கள் 

எத்தகைய நோயினையும் எளிதாகக் குணமாக்கும் 
கொத்தவரை உண்டுவர கோடிநன்மை பெறலாமே  
வத்தலென உண்ணாது வாயிலிட்டு மெல்லுங்கள் 
பத்திரமாய் நரம்புகளைப் பலப்படுத்திக் காத்திடுமே

புடலங்காய் உண்டுவர புத்துணர்ச்சி பெறலாமே
உடல்காக்கும்  வாயுவினை ஒழுங்காக வைத்திடுமே 
உடலுக்கு நிம்மதியாய் உறக்கத்தைத் தந்திடுமே
விடவேண்டாம் இதையுண்டு விரைவாக உறங்குங்கள்  

பரங்கிக்காய் என்றதனைப் பாரோர்கள் அழைக்கின்ற
அரசாணிக் காயுண்ண அற்புதங்கள் நிகழ்ந்திடுமே
தரமாக உறுப்புகளின் தசைமுழுதும் வலுப்படுத்தும்
வரம்பில்லாச் சத்துள்ள மஞ்சளான காய்தானே

கோவைக்காய் தோல்நோயைக் குணப்படுத்த உகந்ததுவே
கோவைக்காய் தேவையில்லாக் கொழுப்புகளை நீக்கிடுமே
கோவைக்காய் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்திடுமே
கோவைக்காய் உடலெடையைக் குறைப்பதற்கும் உதவிடுமே 

முருங்கைக்காய் சுவாசத்தை முறைப்படுத்தி நலம்தருமே
முருங்கைக்காய் உண்டுவர மூச்சிறைப்பு நீங்கிடுமே
இரும்பைப்போல் பலம்பெறலாம் இதனிலையை உண்டாலே   
இருமல்நோய் தீர்க்கின்ற இன்னமுதக் காய்தானே

சேர்க்காதீர் வெங்காயம் சேதாரம் உடலுக்குப் 
பீர்க்கங்காய் உண்டுவர பிணியேதும் அண்டாதே
பீர்க்கங்காய் சக்திதந்து பேணிநம்மை காத்திடுமே
பீர்க்கங்காய் உடலுக்குப் பேரழகைத் தந்திடுமே  

நீங்காத மூட்டுவலி நீக்கிவிடும் அருமருந்து 
தேங்காயை உண்டுவர தேயாது நம்மெலும்பு
தேங்காய்ப்பால் வாய்ப்புண்ணைச் சீராக்க வல்லதுவே
தீங்கில்லாத் தேங்காயைத் தினமுண்டு வாழுங்கள் 

எலுமிச்சை சுரப்பிகளை எழுச்சிபெற செய்திடுமே
எலுமிச்சை தோலுடனே எடுத்துண்ண ஏற்றதுவே
வலுவான நோயெதிர்ப்பை வழங்குகின்ற காயிதுவே
பலியாக இக்காயைப் பாழாக்கி எறியாதீர்

அண்டாது வியாதிகளே அன்றாடம் வெண்டைக்காய் 
உண்டாலே உயரழுத்தம் ஒழுங்காக மாறிவிடும்
வெண்டைக்காய் கொழகொழப்பு  வேண்டும்நம் உடலுக்கு
வெண்டைக்காய் உண்ணுங்கள் வியாதிகளை வெல்லுங்கள்

வாழைக்காய் இதயத்தை வலுப்படுத்தும் காயாகும் 
வாழைப்பூ பெரும்பாடு வலிநீக்கும் மாமருந்து
ஏழைக்குக் கிடைக்கின்ற எளிதான காய்தானே
வாழைக்காய் உண்பார்கள் வாழ்வாங்கு வாழ்வாரே

மிளகாயை உண்ணாது மிளகுக்கு மாறுங்கள் 
அளவாக உண்ணுங்கள் அவசரமாய்  உண்ணாதீர்
வளமாக நலமாக வாழ்ந்திடலாம் வையத்தில்
தளர்வில்லா உடலோடு தழைத்தோங்கும் சந்ததியே  

பனிரெண்டு காய்களையும் பக்குவமாய் உண்டுவர
பனிரெண்டு மண்டலமும் பலம்பெறுமே நார்ச்சத்தும்
இனியென்றும் கிடைத்துவிடும்  இளமையுடன்  வாழ்ந்திடவே 
அனைவர்க்கும் சொல்லுங்கள் ஆரோக்யம் பெற்றிடவே


பிற்குறிப்பு :

இந்தப் பாடல், காய்கறி வைத்தியம் அருண் பிரகாஷ் அவர்களின் YouTube சேனலைப் பார்த்து, அதன்படி காய்கறி உணவுமுறையைக் கடைப்பிடித்து உணர்ந்த அனுபவத்தின் பேரில் எழுதப்பட்டது.

இந்த காணொளியைக் கட்டாயம் காணுங்கள்


இக்கட்டுரை மேலேயுள்ள இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது 

      காய் இருக்க பயமேன். காய்கறிகளை சமைத்தால் உணவாகிறது. காய்கறிகளை அரைத்து சாறாக பருகினால் மருந்தாகிறது. காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் ஞானமாகிறது. மேன்மையான குணங்களை தன்னகத்தே பெற்றுள்ளதால் இறைவனுக்கு நன்றி செலுத்த காய்கறிகள் படைக்கப்படுகிறது. பிறவிக்குறைகளையும் நீக்கும் வல்லமை படைத்ததால் காய்கறிகளை நீத்தோருக்கு படையலாக்கி அவர்களுக்கு ஞாபகமூட்டப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளதால் உடலை கழிவில்லா பொக்கிஷமாக்கிறது. ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் உடலை பலமாக்குகிறது. அதாவது நோய் வராது வரும் முன் காக்கின்றது. ஆங்காங்கே கிடைக்கும் காய்கறிகள் தானியங்கிகளுக்கு மாற்றாக சத்தான உணவாகின்றது. காய்கறிகளின் கழிவுகளை கொண்டு சிறிய அளவில் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் உள்ள கழிவுகள் விவசாயத்திற்கு உரமாகின்றது. பிரித்தெடுத்த நார்ப்பொருட்களை கொண்டு பல தொழில் நுட்பத்தின் துணையால் பல்வேறு பொருட்களை தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றது. காய்கறிகளை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்த முடியும். அதற்கு உதாரணம் இராஜஸ்தானில் விளையும் கொத்தவரங்காயை ஏற்றுமதி செய்யப் படுவதால் அம்மாநிலத்தின் தனி நபர் வருமானம் மேம்பட்டுள்ளது. நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதில் காய்கறிகள் அங்கம் வகிக்கின்றது. இத்தனை சிறப்புகளை பெற்றுள்ள காய்கறிகளை முழுமையாக நாம் பயன்படுத்துகின்றோமா? என்றால் நிச்சயம் இல்லை. தேங்காயை வழிபடும் ஓர் இனம் அதன் மேல் தோஷம் போடுவது அறிவியலா? அல்லது அறியாமையா? என்று சிந்தித்து செயல்படவேண்டிய தருணம் இது. நாட்டுக் காய்கறிகள் வீர்யம் வாய்ந்தது.

 உதாரணத்திற்கு 

ஜீரண மண்டலத்திற்கு வெண் பூசணிக்காய், சிறுநீரக மண்டலத்திற்கு கத்திரிக்காய், நரம்பு மண்டலத்திற்கு கொத்தவரங்காய், வாயு மண்டலத்திற்கு புடலங்காய், தசை மண்டலத்திற்கு அரசாணிக்காய், தோல் மண்டலத்திற்கு கோவைக்காய், சுவாச மண்டலத்திற்கு முருங்கைக்காய், நிணநீர் மண்டலத்திற்கு பீர்க்கங்காய், எலும்பு மண்டலத்திற்கு தேங்காய், நாளமில்லா சுரப்பி மண்டலத்திற்கு எலுமிச்சை, நாளமுள்ள சுரப்பி மண்டலத்திற்கு வெண்டைக்காய், இரத்த ஓட்ட மண்டலத்திற்கு வாழைக்காய், என உடலின் முக்கியமான மண்டலத்திற்கு இந்த காய்கறிகளின் பங்கு அவசியமாகின்றது.

 முக்கியமாக பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மிக எளிமையான தீர்வுகள் உண்டு என்று அதனை 12 நாட்டு காய்கறிகளுடன் பட்டியலிட்டு காய்கறியும் பெண்மையும் என்ற தலைப்பில் கூறுகிறார். காய்கறியும் பெண்மையும் கர்பப்பையை கர்ப்பக்கிரஹமாக்கிட - தேங்காய் வழியில்லாத மாதவிடாய்க்கு வழிகாட்டிட – கொத்தவரங்காய் மலடை மலடாக்கி பெண்ணை தாயாக்கிட - கத்திரிக்காய் முடிவில்லா போக்கை முடித்து கட்டிட - பீர்க்கங்காய் முன்னதாக வரும் போக்கை வன்மையாக மறுக்கும் -வெண்பூசணிக்காய் தாமதமாகும் போக்கை முறித்துவிடத் துடிக்கும் – முருங்கைக்காய் அதிக இரத்தப் போக்கிற்கு நிவாரணம் - வாழைக்காய் அதிக வெள்ளைப்போக்கிற்கு பரிகாரம் - கோவைக்காய் தடையில்லாமல் தாய்ப்பால் சுரந்திட – புடலங்காய் தடைப்பட்ட மாதவிடாய் உடைத்தெறிந்திட - எலுமிச்சை கட்டியான உதிரப்போக்கை தட்டி கேட்டிட - வெண்டைக்காய் சுகமான பிரசவத்தை நிகழ்த்திக்காட்டிட – அரசாணிக்காய் பெண்மைக்கு வாழ்வு தரும் நாட்டுக்காய்கறிகளை பெண்களே விரும்பாமல், உண்ணாமல் மறுப்பதேன்? நோயைப்பற்றிய பயமில்லாத வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாத இந்த காலகட்டத்தில் நம்பிக்கையுடன் வாழவைக்கும் இக்காய்கறிகள் இருக்க நமக்கு பயமேன்… உலகிற்கு பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை ஒரு தாயாக இருந்து கற்ப்பித்த பூமி நம் பாரத பூமி. சைவத்தின் அடிப்படையில் உணவு, அறநெறிப்படி பொருள் மற்றும் அன்பு வழியில் உறவு, இம்மூன்றும் அல்லாத கருத்தைப்பற்றி அறியாதவர்கள் பாரதவாசிகள்.

 ஆரோக்கியத்திற்கு சைவ உணவை பின்பற்றினர். மனிதனுடைய பற்கள் மற்றும் குடல் அமைப்பானது நார்ச்சத்து இல்லாத மாமிச உணவிற்கு பொருத்தமாகாது. முகலாய மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் சைவ உணவை விட அசைவ உணவு தான் பலம் தரும் என்று வைக்கப்பட்டது உண்மையில். •
 நார்ச்சத்து நிறைந்த கொத்தவரங்காயில் உள்ள புரதம் மிக சிறந்தது. • நார்ச்சத்து நிறைந்த தேங்காயில் உள்ள கொழுப்பு மிகப் பாதுகாப்பானது. • நார்ச்சத்து நிறைந்த வாழையில் உள்ள மாவுச்சத்து முழுமையானது. • நார்ச்சத்து நிறைந்த முருங்கையில் உள்ள ஊட்டச்சத்து மிக வீர்யம் வாய்ந்தது. • நார்ச்சத்து நிறைந்த எலுமிச்சை தோலில் உள்ள கால்சியம் சக்தி வாய்ந்தது. • நார்ச்சத்து நிறைந்த அரசாணி விதையில் உள்ள மெக்னீசியம் பலம் படைத்தது. • நார்ச்சத்து நிறைந்த கோவைக்காயில் உள்ள வைட்டமின் ஏ எதற்கும் நிகரற்றது. • நார்ச்சத்து நிறைந்த கத்திரிக்காயில் உள்ள காரத்தன்மை சளி அறுப்பது. • நார்ச்சத்து நிறைந்த பீர்க்கங்காயில் உள்ள சதைப்பகுதி மென்திசு வளர்ப்பது. • நார்ச்சத்து நிறைந்த வெண்டையில் உள்ள நீர்ச்சத்துதான் உயிர் காப்பது. • நார்ச்சத்து நிறைந்த வெண்பூசணியில் உள்ள உப்புச்சத்து இரணம் காப்பது. • நார்ச்சத்து நிறைந்த புடலையில் உள்ள வேதிப்பொருள் அகத்தை சீராக்குவது. --------------------------------------------------------------------------- 

நார்ச்சத்து எவ்விதத்தில் தவிர்க்க இயலாதது என்பதை சற்று பார்ப்போம். 1. கரையக்கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. 2. கரையாத நார்ச்சத்து இரத்த கொதிப்பை சீராக்குகிறது. 3. நார்ச்சத்து உள்ள உணவானது நரம்பு மற்றும் தசை நார்களை வலிமையாக்குகிறது. 4. நார்ச்சத்து குடலில் வாயுக்களை நீக்கி வயிறு உப்புசத்தை தவிர்க்கிறது. 5. கரையாத நார்ச்சத்து குடலின் வேலை சுமையை குறைக்கின்றது. 6. நார்ச்சத்து உடலில் உள்ள கார அமிலத்தன்மையை சமநிலைப்படுத்துகிறது. இந்த ஆறு பணிகளையும் நார்ச்சத்து இல்லாத அசைவ உணவுகளால் முழுமையாக செயல்படுத்தமுடியாது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. --------------------------------------------------------------------------- 

நார்ச்சத்து இல்லாத அசைவ உணவால் உலக மக்கள் சந்திக்கும் மூன்று பெரும் பிரச்சனைகளை இயற்கை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு கூறுகின்றார்கள். அவை பின் வருமாறு:- 1. நீர் நிலைகள் அதிகம் வீணாக்கப்படுவது. 2. உணவு உற்பத்தி செலவு பல மடங்கு அதிகமாவது. 3. தீர்க்க முடியாத இருதய மற்றும் தோல் நோய்கள் பரவுவது. இம்மூன்று பிரச்சனைகளுக்கும் சைவ மற்றும் காய்கறி உணவு முறை மட்டுமே தீர்வாகும். காய்கறிகளை எடுக்கும் முறையில் மூன்று தவறுகளை செய்வதால் அதன் பலன் நமக்கு கிடைப்பதில்லை. அவை பின் வருமாறு:- 1. ஒன்று நாம் தேர்ந்தெடுக்கும் காய்கறிகள் வகை அதாவது வெண்பூசணி, கத்திரி, கொத்தவரை, புடலை, அரசாணி, கோவக்காய், முருங்கை, பீர்க்கங்காய், தேங்காய், எலுமிச்சை, வெண்டை மற்றும் வாழை என நம் நாட்டு காய்கறிகளாக இருக்கவேண்டும். கேரட், பீட்ரூட், உருளை ஆகியவை கிழங்கு வகையை சார்ந்தது. அவை நம் நாட்டு கிழங்கோ காய்கறியோ அல்ல. 2. இரண்டாவது, காய்கறிகளை வறுக்கக்கூடாது. பாதியளவு வேக வைக்கலாம் அல்லது அரைத்து சாறாக பருகலாம் அல்லது அப்படியே பச்சையாக சாப்பிடலாம். வறுத்து உண்பதால் முற்றிலும் அதன் ஊட்டச்சத்தை இழப்பது மட்டுமல்லாது. வாய்வு பிடிப்பு, சளி தொல்லை, ஒவ்வாமை, அஜீரணம், அசதி, மூச்சுத் திணறல் ஆகிய எதிர்மறை பலன்களைத் தர காரணமாகிறது. அதனால் சுவைக்கு முக்கியத்துவத்தை தவிர்த்து ஆரோக்கியத்தின் அடிப்படையில் சமைக்க பழக வேண்டும். 3. காயை மிளகுடன் சேர்த்து சமைப்பதால் காய்கறி என்ற சொல் உருவானது. மிளகு எந்த காயையும் செரிக்கவைத்துவிடும். மிளகை விட்டு விட்டு மிளகாயை போட்டு சமைத்தால் செரிப்பதற்கு பதிலாக உடலில் உள்ள பாகங்களை அரித்து தின்று விடும். அதனால் பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை பயன்படுத்தினால் நிச்சயம் நமக்கு நல்லது நடக்காது. இது சத்தியம். பெரும் சக்தி படைத்த காய்கறிகளை தவறான கருத்து மற்றும் தவறான முறையில் சமைப்பதால் அதன் பலன் அறியாது புரியாது உணராது இறுதியில் ஏமாற்றம் மற்றும் பண விரயத்தை மட்டுமே எதிர்கொள்கிறோம். அதனால் தேடுதலை நிறுத்திவிட்டு முறையாக செயல்பட ஆரம்பிப்போம். எந்த பண்பாடு மற்றும் கலாச்சாரம் நம்மை வாழவைத்ததோ அதே கலாச்சாரத்தை அறமாக கருதி நாம் அறந்தாங்கிகளாக மாறவேண்டும். எந்த பூமியின் மேல் நாம் நின்று கொண்டிருக்கிறோமோ அந்த பூமியானது நம்மை அரவணைத்து காப்பதில் தாயாக இருக்கிறாள். இதுவன்றி வேறு எந்த தொழில்நுட்பமும் நம்மை வல்லரசாக்காது. நம் மண்ணை மதிப்போம். நம் மண்ணை காத்திடுவோம். மண் வாசனையில் திளைத்திடுவோம். பாரதத்தாயை வணங்கிடுவோம்.


Siva Siva

unread,
Feb 18, 2026, 8:44:18 AMFeb 18
to santhav...@googlegroups.com
தொன்றுதொட்டு இருக்கும் காய்கறி வைத்தியத்தைப் பழவைத்தியம் என்று சொல்வது பொருத்தமன்றோ! :)

வி. சுப்பிரமணியன்

On Wed, Feb 18, 2026 at 12:36 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
காய்கறி வைத்தியம் விருத்தம் 
  
...
வாழைக்காய் இதயத்தை வலுப்படுத்தும் காயாகும் 
வாழைப்பூ பெரும்பாடு வலிநீக்கும் மாமருந்து
ஏழைக்குக் கிடைக்கின்ற எளிதான காய்தானே
வாழைக்காய் உண்பார்கள் வாழ்வாங்கு வாழ்வாரே
...

Ram Ramakrishnan

unread,
Feb 18, 2026, 10:00:16 AMFeb 18
to santhav...@googlegroups.com
அருமையான சன்மார்க்க விருத்தம், திரு. தங்கவேல்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 18, 2026, at 08:44, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 24, 2026, 8:39:46 PMFeb 24
to சந்தவசந்தம்
On Wednesday, February 18, 2026 at 8:30:16 PM UTC+5:30 Ram Ramakrishnan wrote:
அருமையான சன்மார்க்க விருத்தம், திரு. தங்கவேல்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


நன்றி ஐயா 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 24, 2026, 8:49:05 PMFeb 24
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏
On Wednesday, February 18, 2026 at 7:14:18 PM UTC+5:30 Siva Siva wrote:
தொன்றுதொட்டு இருக்கும் காய்கறி வைத்தியத்தைப் பழவைத்தியம் என்று சொல்வது பொருத்தமன்றோ! :)

வி. சுப்பிரமணியன்

பழ வைத்தியமா என்று அறியேன் , ஆனால் அனைவருக்கும் 
பழக வேண்டிய வைத்தியம் . மேலும் நாட்டுக் காய்கறிகளை
வேகவைத்து உணவாக உண்ணுவதைக் காட்டிலும் 
முடிந்த அளவு நாட்டுக் காய்கறிகளைப் பச்சையாக 
உண்பது மிக மிக நல்லது. 
நன்றி குருவே.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 28, 2026, 2:15:58 AMFeb 28
to சந்தவசந்தம்
காய்கறி வைத்திய விருத்தத்தில் முதல்
 பாடலில் அனைத்து அடிகளிலும் உள்ள
 முதற்சீரில் புளிமாங்காய் வருமாறு 
மாற்றம் செய்துள்ளேன். 

அசைவத்தைத்  தின்னாதீர் ஆபத்தோ ஆபத்து
பசிவந்தால் காய்கறியைப் பக்குவமாய் உண்டுவர 
விசைகொண்டு வியாதிகளும் விலகிடுமே  மக்களுக்குத்
திசையெங்கும் சென்றுரைப்பீர் சிறப்புடன்நாம் வாழ்ந்திடவே  


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 16, 2026, 3:39:41 AMMar 16
to சந்தவசந்தம்
சிறிய மாற்றம்
பரங்கிக்காய் என்பது தற்கால வழக்கில் கையாளப்பட்டு வந்தாலும் 
பறங்கிக்காய் என்பது அகராதியின் படி சரியாக உள்ளதாலும் 
முதல் வரியை மாற்றம் செய்துள்ளேன் 

பறங்கிக்காய் ( மஞ்சள் பூசணிக்காய்) பற்றிய பாடல் 

உரமிட்டு விவசாயி உற்பத்தி செய்கின்ற
அரசாணிக் காயுண்ண அற்புதங்கள் நிகழ்ந்திடுமே
தரமாக உறுப்புகளின் தசைமுழுதும் வலுப்படுத்தும்
வரம்பில்லாச் சத்துள்ள மஞ்சளான காய்தானே

On Wednesday, February 18, 2026 at 11:06:38 AM UTC+5:30 தங்கவேல் காஞ்சிபுரம் wrote:
காய்கறி வைத்தியம் விருத்தம் 
  
அசைவத்தைத்  தின்னாதீர் ஆபத்தோ ஆபத்து
பசிவந்தால் காய்கறியைப் பக்குவமாய் உண்டுவர 
விசைகொண்ட வியாதிகளும் விலகிடுமே  மக்களுக்குத்
திசையெங்கும் சென்றுரைப்பீர் சிறப்புடன்நாம் வாழ்ந்திடவே
பரங்கிக்காய் என்றதனைப் பாரோர்கள் அழைக்கின்ற
அரசாணிக் காயுண்ண அற்புதங்கள் நிகழ்ந்திடுமே
தரமாக உறுப்புகளின் தசைமுழுதும் வலுப்படுத்தும்
வரம்பில்லாச் சத்துள்ள மஞ்சளான காய்தானே

Siva Siva

unread,
Mar 16, 2026, 8:32:44 AMMar 16
to santhav...@googlegroups.com
மாபறங்கிக் காய்தானே - may possibly fit mOnai and will explicitly indicate the vegetable name.

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 17, 2026, 5:26:41 AMMar 17
to சந்தவசந்தம்
மிக்க நன்றி குருவே

On Monday, March 16, 2026 at 6:02:44 PM UTC+5:30 Siva Siva wrote:
மாபறங்கிக் காய்தானே - may possibly fit mOnai and will explicitly indicate the vegetable name.

V. Subramanian

வெகு சிறப்பாக உள்ளது 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 7, 2026, 6:27:39 AMApr 7
to சந்தவசந்தம்
https://youtu.be/wbU-fpFs8Ow?si=lRzIdGPkezfwHK6J
👆Kaaykari Vaithiya Virutham
A health-oriented Tamil poetic composition is presented.
This song is based on the lifestyle principles that
traditional vegetables help protect and strengthen our health.
Song Credits:
Lyrics: Kanchipuram K Thangavel
Voice & Music: Suno AI
Video Editing: YouCut

Ram Ramakrishnan

unread,
Apr 7, 2026, 1:53:31 PMApr 7
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. தங்கவேல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 7 Apr 2026, at 3:57 PM, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 13, 2026, 11:03:12 PM (10 days ago) Apr 13
to சந்தவசந்தம்
மதிப்பிற்குரிய திரு ராம் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி 

On Tuesday, April 7, 2026 at 11:23:31 PM UTC+5:30 Ram Ramakrishnan wrote:
மிக அருமை, திரு. தங்கவேல்.

நன்றி ஐயா 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 13, 2026, 11:04:29 PM (10 days ago) Apr 13
to சந்தவசந்தம்
தமிழ்த் புத்தாண்டு வெண்பா 

பராபவ வந்தது பாரிலினி போரும்
இராதபடி செய்வாய் இறைவா - இராசா
நிராகுலா மக்களினி நித்தியமாய் வாழ
வராம்ருதா வாராய் மகிழ்ந்து.

பொருள் 

பராபவ தமிழ் புத்தாண்டு வந்துவிட்டது இறைவனே இனி இவ்வுலகில் போர் நிகழாதபடி செய்வாய் , என் அரசனே, கவலை இல்லாதவனே மக்கள் இனி மரணமில்லாப் பெருவாழ்வில் நிலைத்து வாழ , வரம் தரும் வள்ளலே அழிவிலா அமுதே மகிழ்ச்சியுடன் வந்து அருள் புரிவாயாக.

14-04-2026
Kanchipuram K Thangavel


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 14, 2026, 8:34:08 AM (9 days ago) Apr 14
to சந்தவசந்தம்
இப்பாடலைக் கேட்டு மகிழ
https://youtu.be/IWyI87OnSR0?si=T8dgCiaBtopogUNR

N. Ganesan

unread,
Apr 14, 2026, 10:48:14 AM (9 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
ரா எதுகை சிறப்பு.

தமிழ் நாட்டில் பலவருடங்கள் உயர்ந்த கட்டடம் எல்.ஐ.சி. கட்டடம் தான். தமிழகம் கொணர்ந்தவர் இருமொழிகளில் நல்ல தேர்ச்சியாளர். தமிழ்ப் புரவலர். நாராயணசாமி அவர்கள். அவரது மகள் உஷா திருமணத்தின்போது பாரதிதாசன் பாடிய ஒரு விருத்தம்
ரா வர்க்க எதுகையை நினைவூட்டுகிறது. 

ஒரேகாதல் பாட்டுப் பாடும்
    இரண்டுள்ளம் ஒன்றை ஒன்று
சரேலெனத் தழுவக் கண்டோம்
    தங்கத்து மணவ றைக்குள்!
வரா இன்பம் வரப்பெற் றார்கள்
   மணமக்கள் குறைவோ ஒன்றும்
இராஇல்ல றத்தேர் தன்னை
   இழுப்பார்கள் புகழூர் நோக்கி

இணையப் பல்கலைத் தளத்தில் பல பக்கங்கள் திறப்பதில்லை. அரசாங்க வேலைதானே!

----------------

போப்பையர் அறிவுறூஉ அமெரிக்க ஜனாதிபதி செவியேறின்  உங்கள் விழைவு நிறைவேறும்.

தமிழ்ப் புது வருட வாழ்த்துடன்,
நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 14, 2026, 12:49:17 PM (9 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
ரா எதுகை, ஞானக்குறள், 

தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார்.
பர, அபர வித்தைகள் காணாதோருக்குத் சொல்ல முடியாத தூரமாயும், கண்டவருக்கு வெகு அருகிலும் இருக்கும்.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 14, 2026, 8:41:12 PM (9 days ago) Apr 14
to சந்தவசந்தம்
ஐயா வணக்கம் 

ஞானக்குறள் அருமை.
மேலும் ஒரு ரா எதுகை.

பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை
ஆராய்ந் துணர்வு பெறின். 87

இடம் பெயராமல் செய்த தவத்தின் பயன்தான் மறுபிறப்பு இல்லாத பேறு. ஆராய்ந்து உணர்ந்தால் இது புலப்படும்.

On Tuesday, April 14, 2026 at 10:19:17 PM UTC+5:30 N. Ganesan wrote:
ரா எதுகை, ஞானக்குறள், 

Nice website 
தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார்.
பர, அபர வித்தைகள் காணாதோருக்குத் சொல்ல முடியாத தூரமாயும், கண்டவருக்கு வெகு அருகிலும் இருக்கும்.

On Tue, Apr 14, 2026 at 9:47 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
ரா எதுகை சிறப்பு.

தமிழ் நாட்டில் பலவருடங்கள் உயர்ந்த கட்டடம் எல்.ஐ.சி. கட்டடம் தான். தமிழகம் கொணர்ந்தவர் இருமொழிகளில் நல்ல தேர்ச்சியாளர். தமிழ்ப் புரவலர். நாராயணசாமி அவர்கள். அவரது மகள் உஷா திருமணத்தின்போது பாரதிதாசன் பாடிய ஒரு விருத்தம்
ரா வர்க்க எதுகையை நினைவூட்டுகிறது. 

ஒரேகாதல் பாட்டுப் பாடும்
    இரண்டுள்ளம் ஒன்றை ஒன்று
சரேலெனத் தழுவக் கண்டோம்
    தங்கத்து மணவ றைக்குள்!
வரா இன்பம் வரப்பெற் றார்கள்
   மணமக்கள் குறைவோ ஒன்றும்
இராஇல்ல றத்தேர் தன்னை
   இழுப்பார்கள் புகழூர் நோக்கி

இணையப் பல்கலைத் தளத்தில் பல பக்கங்கள் திறப்பதில்லை. அரசாங்க வேலைதானே!

----------------

போப்பையர் அறிவுறூஉ அமெரிக்க ஜனாதிபதி செவியேறின்  உங்கள் விழைவு நிறைவேறும்.

 நல்லது நடக்கட்டும்.

தமிழ்ப் புது வருட வாழ்த்துடன்,
நா. கணேசன்

 தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா 
On Mon, Apr 13, 2026 at 10:04 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
தமிழ்த் புத்தாண்டு வெண்பா 

பராபவ வந்தது பாரிலினி போரும்
இராதபடி செய்வாய் இறைவா - இராசா
நிராகுலா மக்களினி நித்தியமாய் வாழ
வராம்ருதா வாராய் மகிழ்ந்து.


Kanchipuram K Thangavel



K.R. Kumar

unread,
Apr 14, 2026, 9:25:59 PM (9 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
ஆமாம், கணேசன் ஐயா,

பல நாட்களாக இணையப் பல்கலைக் கழகத்தின் 'திருவருட்பா' பகுதியின் பக்கங்கள் திறப்பதில்லை. அடியேனும் கிடைத்த சில முகவரிக்கு ஈமெய்ல் அனுப்பினேன். பதில் ஒன்றும் கிட்டவில்லை ; பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் அந்தக் குழுவில் இருந்தால் அவர்களுடன் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கொண்டு தரும்படி ஏற்பாடு செய்ய முடியுமா ?

அன்புடன்,
குமார் (சிங்கை)



N. Ganesan

unread,
Apr 14, 2026, 10:06:28 PM (9 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
பலரை அறிவேன். எலெக்‌ஷன் முடியட்டும்.

N. Ganesan

unread,
Apr 14, 2026, 10:09:13 PM (9 days ago) Apr 14
to santhav...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com
ஞானக்குறள் நன்று.

திருப்புகழில், ஏதாவது வடசொல்லில் முதற்சீர் தொடங்கும். அதில் ரா எதுகை இருக்கும். தேடித் தரவும்:
http://tamilconcordance.in/TABLE-TPGZ.html

விராலிமலை என்றதும், அங்குள்ள அழகன் மீது ரா எதுகையில் திருப்புகழ் பாடினார்:

நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிக ப்ரபை ஆகி
     நிராச சிவ ராஜ தவ ராஜர்கள் பராவிய நிராயுத புராரி அச்சுதன் வேதா
சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூப இவர் ஆதியை குறியாமே
     துரால் புகழ் பராதின கரா உள பராமுக துரோகரை தரை ஆசையுற்று அடைவேனோ
இராகவ இராமன் முன் இராவண இரா வண இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற
    இராகன் மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொல வாரணர்க்கு இளையோனே
விராகவ சுராதிப பொராது தவிராது அடு விராயண பராயண செரு ஊரா
    விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 14, 2026, 10:24:18 PM (9 days ago) Apr 14
to santhav...@googlegroups.com

ஷண்முகன் என்பதால், ஒவ்வோர் அரையடியிலும் ஆறுமுறை ரா எதுகை.
Reply all
Reply to author
Forward
0 new messages