மறிகடலின் அலையந்தக் கடலின் வேறோ?
… மானிடரொவ் வொருவருமிவ் வுலகின் வேறோ?
உறுகின்ற அடிப்படையுள் ளுணர்வு தன்னில்
… ஒன்றாவோம் அல்லோமோ நாமெல் லோரும்?
சிறுவட்டத் துள்ளிருந்தென் குடும்பம் என்றன்
… தேசமென நமக்குள்ளே மோத லாமோ?
நெறிகளிலும் கொள்கையிலும் வேறு பட்டு
… நிதம்நிதமும் போராடி மடிய லாமோ?
பார்மேலே பல்வளங்கள் பெருக்கி ஓங்கும்
… பரிவார்ந்த இயற்கையதன் பூதம் ஐந்தாம்
நீரோடு வான்பூமி தீக்காற் றெல்லாம்
… நேர்த்தியுடன் ஒருங்கிணைந்தே இயங்கும் போது,
கார்வானம் போலிருண்ட மனத்தால் எங்கும்
… கலவரமே பெருக்குகின்ற மனிதன் மட்டும்
யாரோடும் போராடி எதிர்க்கின் றானே
… இதைப்போல இழிவுநிலை உலகில் உண்டோ?
வெயிலொளிபோல் விழிகளிலே அறிவை ஏற்றி
… வியனுலகம் முழுதினையும் ஒருங்காய்க் கண்டே
உயிர்களெலாம் உறவெனவே உணர்ந்து விட்டால்
… ஒருபொழுதும் பிரிவினைகள் தோன்றா தன்றோ?
துயர்விளைக்கும் சாதிமதப் பிணக்கைச் சாய்த்துச்
… சுகம்வளர்க்கும் சகோதரத் துவம்பின் பற்றி
அயலெனவும் பகையெனவும் வெறுத்தல் இன்றி
… அரவணைத்து வாழ்ந்திட்டால் அவலம் உண்டோ?
நாம்பலரென் றுள்ளத்தில் நினையா விட்டால்
… ஞாலத்தின் ஒருமைதனை மறவா விட்டால்
ஓம்புகின்ற நேர்மையுடை உழைப்பில் என்றும்
… உயர்வென்றும் தாழ்வென்றும் பாரா விட்டால்
தேம்பியழ மெலியாரை வாட்டா விட்டால்
… சிறுமையினால் பழஞ்சிறப்பே பேசா விட்டால்
பாம்பினைப்போல் பகையுணர்வைக் காட்டா விட்டால்
… பார்மிசையே தோன்றிடுமோ போராட் டம்தான்?
- இமயவரம்பன்
On 17 May 2026, at 4:20 PM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
“Conflict” என்னும் தலைப்பில் இன்று SAPNE என்னும் அமைப்பு நடத்தவிருக்கும் பன்மொழிக் கவியரங்கத்திற்காக நாம் எழுதிய கவிதை.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/34F2D323-3115-4474-8709-5302049FA3D6%40gmail.com.
அருமை! "மறிகடலின் அலையந்தக் கடலின் வேறோ?" என்கிற வரிகள், திருவாய்மொழி (1-1-2) “அடங்கெழில் சம்பத்து, அடங்கக் கண்டு, அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே” என்னும் பாசுரத்தின் உட்பொருளைப் ப்ரதிபலிக்கின்றன.
ஸௌந்தர்
திருவாய்மொழி (1-2-7)
“Conflict” என்னும் தலைப்பில் இன்று SAPNE என்னும் அமைப்பு நடத்தவிருக்கும் பன்மொழிக் கவியரங்கத்திற்காக நாம் எழுதிய கவிதை.போராட்டம்(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
...
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN8QojoLOtLVKY9%3Dyotp8-W9p4hzcuWmk%3Df7742Ah3X8g%40mail.gmail.com.