தங்கவேல் - பொன்மொழி திருமணக் கவிதைகள்

54 views
Skip to first unread message

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Aug 8, 2026, 4:28:12 PM (6 days ago) Aug 8
to சந்தவசந்தம்
தங்கவேல் - பொன்மொழி திருமணக் கவிதைகள் 

அனைவருக்கும் வணக்கம் 🙏

இறைவன் அருளாலும், பெரியோர்களின் நல்லாசியாலும்,
17-09-2026 அன்று காலை 7:30 முதல் 9:00 மணிக்குள் K. தங்கவேல் ஆகிய எனக்கும் – R.பொன்மொழி அவர்களுக்கும், காஞ்சிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

திருமண அழைப்பிதழ் வந்ததும், அதனை இக்குழுவில் பதிவு செய்கிறேன்.
அனைவரும் வருக! வந்து மணமக்களை வாழ்த்துக! 🙏

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, இலந்தை ஐயா அவர்கள் வழங்கிய
“வெண்பாவில் கொஞ்சம் விருந்து”
என்ற ஈற்றடியை வைத்து நான் ஒரு வெண்பா இயற்றியிருந்தேன்.

அதில், எனக்குத் திருமணம் நடைபெறும் நாளில் கவிஞர்கள் அனைவரும் வந்து, மணமக்களை வாழ்த்தி, வெண்பாவில் கொஞ்சம் விருந்து வைக்க வேண்டும் என்ற பொருளில் எழுதியிருந்தேன்.

அந்தக் கவிதையைப் படித்த பல கவிஞர்கள், எனக்குத் திருமணம் நடைபெற இருப்பதாக எண்ணி, அப்போதே வாழ்த்துக் கவிதைகளை வழங்கினர்.

அன்று அவர்கள் வழங்கிய வாழ்த்துகள் இன்று நனவாகியுள்ளன.
கவிஞர்கள் வாக்கு பலித்தது!
 🙏

அன்று நான் எழுதிய கவிதையையும், அதற்கு அன்புடன் வாழ்த்துக் கவிதைகள் வழங்கிய கவிஞர்களின் கவிதைகளையும் இங்கே நினைவாகப் பதிவு செய்கிறேன்.

இலங்கை ஐயா தந்த ஈற்றடி 

வெண்பாவில் கொஞ்சம் விருந்து.

முருகன் அருளால் முகூர்த்த தினத்தில் 
திருமணம் காணத் திரண்டு - வருகவே
வண்ணத் தமிழாலே வாழ்த்தித் தரவேணும்  
வெண்பாவில் கொஞ்சம் விருந்து.

- Kanchipuram K Thangavel

இலந்தை ஐயாவின் வாழ்த்துக் கவிதைகள் 

என்று திருமணம்? எவ்விடம்? யாரோடு
மன்றிலே ஏறும் மணமகனே - ஒன்றும்
உரைக்காமல் வாழ்த்தை உரையுங்கள் என்றால்
சிரிக்காமல் நானென் செய?(1)

வாழ்த்துண்டு, வாழ்த்த மனமுண்டு  எம்கவியில்
சூழ்ந்துவரும்  மங்கலச் சொற்களுண்டு- வாழ்கவென
ஒண்பாவாம் வெண்பாவில் உள்ளபடி வாழ்த்திடுவோம்
வெண்பாவில் காண்பீர் விருந்து (2)

திருமணம் செய்பவர்தான் தேர்ந்த வகையில்
விருந்து  கொடுத்திட  வேண்டும் - வருபவர்பால்
வெண்பா விருந்தை விழைகின்றீர், என்சொல்ல
வெண்பாவில் பொங்கும்  விருந்து (3)

காதலா, பெற்றவர் காட்டி அளிப்பவரா 
ஏதென்று சொல்லுங்கள் ஏற்றபடி - நீதமுடன்
நல்வாழ்த்துச் சொல்லிடுவோம் , நாமிங்கே  வெண்பாவில்
சொல்வாழ்த்தில் உண்டு சுகம். (4)

தேடுகிற போதே திருமண நல்வாழ்த்தா
ஏடெடுக்கும் முன்னே எழுதுவதா?-  நாடுவது
நல்லபடி சேரட்டும்  நங்கை கிடைக்கட்டும்
சொல்வோம்பின் வாழ்த்துத் தொடர். (5)

வேண்டும் விதத்தில் வேண்டியது கிட்டட்டும்
வேண்டும் அதுவும் விரைவாக-  ஈண்டு
வதுவைக்குத் தேவையெலாம் வாய்த்திடுக, சொன்னேன்
வதுவை வருமுன்னே வாழ்த்து (6)

திருச்சி புலவர் இராமமூர்த்தி ஐயாவின் வாழ்த்து

காஞ்சி  புரம்தங்க வேலே கனிவான
வாஞ்சை நிறைமனைவி வாய்த்தென்றும்  - பூஞ்சிறகின்
பண்புகளைக் கொண்ட பார்யா ளுடன்வந்தால்
வெண்பாபோல் வைப்பேன் விருந்து

யோகியாரின் வாழ்த்து 

வெண்பா மிக அருமை அன்பரே தங்கவேல். வாழ்க நீவிரும்  உம்மைத் துணிந்து மணக்க இருக்கும் துணைவியும். இப்போதே வாழ்த்துச் சொன்னேன் மகிழ்ந்து,
 
திரு. இமயவரம்பனின் வாழ்த்து 

தேன்பிலிற்றி நிற்கும் திருமலர்க் கற்பகம்போல்
தான்மணவாழ் வென்றும் தழைத்திடவே - வான்புகழ்சேர்
தண்ணார் கவிச்செல்வர் தங்கவே லர்க்களிப்போம்
வெண்பாவில் ஒண்சீர் விருந்து.

வெண்பா விரும்பியின் வாழ்த்து

தென்பொதியத் தேனின் தெவிட்டாச் சுவைநுகர்ந்
தின்பதன்வாய்த் துய்க்கும் இயற்றமிழ் - அன்பருக்குப்
பண்பார் கவிப்போக்கும் பாகார் இனிமையுஞ்சேர் 
வெண்பா வழங்கும் விருந்து.

திரு.நா. கணேசன் அவர்களின் வாழ்த்து

பெற்றோர் பார்த்துவைத்த திருமணம் எனக் கருதுகிறேன். முன்பு சாதகக் குறிப்பு எல்லாம் அனுப்பினார், கவி தங்கவேல். சைவர்.

மங்கலம் என்ப மனைமாட்சி, மற்றதன்
நன்கலம்  நன்மக்கட் பேறு 
                          - செந்நாப்போதார்

மணவிழாக் காணும் மணமகனும், மகளும் வாழ்க நூறாண்டு!

திரு. சுரேஜமீ ஐயாவின் வாழ்த்து

மங்கலம் பொங்க மனையில் மனமிரண்டும்
சங்கமிக்கச் சாற்றுதமிழ் ஆற்றொழுகி - தங்கவேல்
பொற்கரத்தைத் தான்பிடிக்கும் பொன்மகளை வாழ்த்துமச்
சொற்களெலாம் சுந்தரம் சூழ்!

வாழி மணமக்கள் வண்டமிழாய் வான்மழையாய்
வாழி நறுமலராய் வான்மதியாய் - வாழி
மனைசிறக்க மாண்புறவே மன்னுபுகழ் கொண்டு
மனமொன்றி நாளும் மலர்ந்து! 

பேர்சொல்லப் பிள்ளைகள் பேணுநற் சுற்றங்கள்
ஊர்சொல்லும் வாழ்த்துடனே உற்றார்பெற் றார்சொல்லும்
வாழ்த்தோடும் நாற்திசையும் வாகைகொண் டாளவென்று
வாழ்த்தும் சுரேஜமீ வாகு! 

அனைவரும் வருக!
மணமக்களை வாழ்த்துக! 🙏








Ram Ramakrishnan

unread,
Aug 8, 2026, 7:15:59 PM (6 days ago) Aug 8
to santhav...@googlegroups.com

மங்கலநாள் இங்குறவே மஞ்சளுடன் வந்தவளிப்

பங்கமிலாப் பொன்மொழியாம் பந்தமுறத்- தங்குநலம்

துங்கமுகன் கூடவரும் சோதரனின் ஆசியுடன்

தங்கவேல் வாழ்க தழைத்து!


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 8, 2026, at 16:28, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2e92536e-5c68-4af4-8be3-9b82678a8e54n%40googlegroups.com.

Siva Siva

unread,
Aug 8, 2026, 8:57:52 PM (6 days ago) Aug 8
to santhav...@googlegroups.com
மிகவும் மகிழ்ச்சி.
எல்லாம் இனிதே நடக்க!
என்றும் நீர் இருவீரும் இன்புற்று வாழ்க!

வி. சுப்பிரமணியன்

Swaminathan Sankaran

unread,
Aug 9, 2026, 12:05:49 AM (6 days ago) Aug 9
to santhav...@googlegroups.com
நல்ல, மகிழ்ச்சிகரமான செய்தி, திரு. தங்கவேல்!
நீவிர் இருவரும், நன்றே வாழ்க! நலமே வாழ்க! இன்புற்றே  வாழ்க!

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

Arasi Palaniappan

unread,
Aug 9, 2026, 4:23:56 AM (5 days ago) Aug 9
to சந்தவசந்தம்
கணந்தோறும் செந்தமிழைக் காதலிக்கும் தம்பி!
மணந்தபின்னும் காதல் வளர - மணந்(து)ஏற்கும் 
பெண்பாலும் காதலுற்றுப் பிள்ளைத் தமிழ்பிறக்க
வெண்பாத் தளைவேண்டா மே!

பாடுவதே நற்றொழிலாய்ப் பாவையுடன் நெஞ்சமொன்றி 
நீடூழி வாழ்க நிலத்து!

அன்புடன் வாழ்த்தும் 
அரசி. பழனியப்பன் 



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Aug 9, 2026, 5:59:26 AM (5 days ago) Aug 9
to santhav...@googlegroups.com
இலங்கை ஐயா தந்த ஈற்றடி

நான் எப்பொழுது இலங்கை ஐயா ஆனேன் என்பது தெரியவில்லை. பரவாயில்லை. இராமசாமிக்கும் இலங்கைக்கும் தொடர்புண்டே!

தங்கவேல் பொன்மொழி பேர்ப்பொருத்தம் நன்றாகும்
பொங்கட்டும் என்றும் புளகங்கள்--  சிங்கத்தில்
ஏறி வருபவள் இன்னருளால்  சேரட்டும்
பேறுகள் என்றும் பெரிது

இலந்தை

இமயவரம்பன்

unread,
Aug 9, 2026, 8:05:28 AM (5 days ago) Aug 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக இனிய செய்தி, திரு. தங்கவேல். எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Aug 12, 2026, 5:11:23 AM (2 days ago) Aug 12
to சந்தவசந்தம்
வாழ்த்தும் வாழ்த்து வெண்பா வழங்கிய  
மதிப்புக்குரிய புலவர்கள் கவிஞர்கள்  
1)ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்) -  வந்தவளிப் என்பது புரியவில்லை ( வந்தவள்ளியா?)
2)சிவசிவா வி. சுப்பிரமணியன்
3)சங்கரன்
4)அரசி. பழனியப்பன் -வெண்பாத் தளைவேண்டா மே! இவ்வரி புரியவில்லை ஐயா
5) கவிவேழம் இலந்தை சு இராமசாமி  ( மன்னிக்கவும் தட்டச்சு பிழை இலங்கை )
6) இமயவரம்பன் 
7) இனி வாழ்த்தும் அன்பர்களும்   நன்றி மலர்கள் பல💐💐💐💐

On 

Ram Ramakrishnan

unread,
Aug 12, 2026, 8:33:52 AM (2 days ago) Aug 12
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. தங்கவேல்.

வந்தவள் இப் பங்கையத்தாள் - இப்படிப் பிரித்துப் பொருள் கொள்க.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 12, 2026, at 05:11, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

வாழ்த்தும் வாழ்த்து வெண்பா வழங்கிய  
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 12, 2026, 5:27:45 PM (2 days ago) Aug 12
to santhav...@googlegroups.com

 

தங்கவேல் தாங்கும் வேலனுக்(கு) இங்கிதமாய்

மங்களப் பொன்மொழி மனையாதல் – இங்கே

மனக்கண்ணால் கண்டெனது வாழ்த்தளிப்பேன் வாழ்க

தினமுமிவர் இன்பமுடன் சேர்ந்து.


..அனந்த்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 12, 2026, 6:52:17 PM (2 days ago) Aug 12
to santhav...@googlegroups.com


தங்கவேல் தாங்கும் வேலனுக்(கு) இங்கிதமாய்

மங்களப் பொன்னாள் மனையாதல் – இங்கே

மனக்கண்ணால் கண்டெனது வாழ்த்தளிப்பேன் வாழ்க

தினமுமிவர் இன்பமுடன் சேர்ந்து.


..அனந்த்

Reply all
Reply to author
Forward
0 new messages