iiRRadikaL

6 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Feb 25, 2026, 4:29:55 PM (9 hours ago) Feb 25
to santhavasantham
முன்பு சந்த வசந்தத்தில் கொடுத்த கட்டளைக் கலித்துறை ஈற்றடிகள் சில

கூச்சலை விட்டுக் குழந்தாய் வருக கொடுமுடிக்கே!

தின்னாத போதிலும் தின்றது போலத் திகட்டியதே!

ஆறுக்கு மேலே அதிசயம் காட்டும் அழகிதுவே!

ஓடாத ஓட்டமும் உண்டடி, காணிவ் வுலகத்திலே!

யார்போற்ற  மீனுக் கழகு கடலதன் ஆழத்திலே

தட்டிக் கொடுத்துச் சமத்தெனக் கிட்டிடும் சம்மதமே

இலந்தை

முயன்று பாருங்கள்

M. Viswanathan

unread,
Feb 25, 2026, 4:33:22 PM (9 hours ago) Feb 25
to Santhavasantham
ஆஹா...அருமையான ஈற்றடிகள்.
மீ.வி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBA%2BZ8KadO%3D1afVZAuEGcO%3DyDEc%2BCebbmBGhBxZpeLhT%2Bw%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
Feb 25, 2026, 5:17:01 PM (9 hours ago) Feb 25
to santhav...@googlegroups.com, santhavasantham
மிக அருமையான ஈற்றடிகள். 
ஒன்றை முயன்று பார்த்தேன்:

உன்னாத போதிலும் உண்ணின் றொளிரும், ‘ஒழிக்கவிடர்’
என்னாத போதிலும் என்பால் இரங்கும், இரும்புகழைப்
பன்னாத போதிலும் பன்னலம் சேர்க்கும், பரமனருள்
தின்னாத போதிலும் தின்றது போலத் திகட்டியதே!

இமயவரம்பன்

unread,
Feb 25, 2026, 8:34:25 PM (5 hours ago) Feb 25
to Santhavasantham, santhavasantham
மற்றோர் ஈற்றடிக்கு என் முயற்சி :

வாடாத வாட்டமும் மாறா மருளும் மலிபிறப்பில்

ஆடாத ஆட்டமும் அற்றிருப் பார்க்(கு),ஓர் அவமிகுபொய்ந் 

நாடாத நாட்டமும், ஞான நெடுவான் நகர்கதிர்போல்

ஓடாத ஓட்டமும் உண்டடி, காணிவ் வுலகத்திலே!

(வாடாத வாட்டம் = முன்னம் அடைந்திராத துன்பங்கள்; அவம் = அழிவு; நாட்டம் = கண்கள் / பார்வை / நோக்கம்;  கதிர்போல் ஓடாத ஓட்டம் = கதிரவன் நகர்வது போல் தெரிந்தாலும் உண்மையில் நகராமல் கோள்களின் நடுநாயகமாக விளங்குவதால் ஓடாமல் ஓடும் ஓட்டத்திற்கு உவமையாகிறான். )

On Feb 25, 2026, at 5:16 PM, இமயவரம்பன் <AnandBl...@gmail.com> wrote:

Arasi Palaniappan

unread,
Feb 25, 2026, 10:24:17 PM (4 hours ago) Feb 25
to சந்தவசந்தம்
அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Feb 25, 2026, 10:27:07 PM (3 hours ago) Feb 25
to சந்தவசந்தம்
சிறப்பு 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Feb 25, 2026, 11:14:40 PM (3 hours ago) Feb 25
to santhav...@googlegroups.com

Sai Ganesan H

unread,
1:25 AM (1 hour ago) 1:25 AM
to santhav...@googlegroups.com
எனது முயற்சி! 

இன்னாதான் என்செய்தேன் என்ரத்தச் சர்க்கரை ஏறியதே

தன்னால் அதுமாறத் தட்டிலே அன்புடன் தந்தபல

அன்னாசி வண்ணம்கொள்  அல்வாவைப் போன்றினிப் பண்டமெல்லாம்

தின்னாத போதிலும் தின்றது போலத் திகட்டியதே. 

—சத்ய வேழன் H சாயி கணேசன்
26-02-2026

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages