ஜீவ ஒளி. - மீ. விசுவநாதன்

3 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Feb 24, 2026, 2:01:11 AM (2 days ago) Feb 24
to M. Viswanathan, Santhavasantham
"ஜீவ ஒளி"
(மீ. விசுவநாதன்)

கிழக்கு வானைச் சிவப்பாக்கிக்
கீறி மெல்ல வருகிறவன்
பழக்க மான நம்கதிரோன்
பார்க்கப் பார்க்கப் பரவசந்தான்
தழைக்க வேண்டும் தரணியென
தகத கவென ஒளிபொழிவான்
உழைக்க ஊக்க மருந்தாகி
உயிருக் கேற்ற சூடாவான்

குப்பை செத்தை அழுக்கெல்லாம் 
குறைக ளின்றிப் பொசுக்கிடுவான் 
துப்பும் சுடரைப் பதமாக
புல்லும் கல்லும் கொளவைப்பான்
உப்புச் சுவையாம் கடல்நீரை
உயரே எடுத்து மழைபொழிவான்
எப்பு விக்கும் சமமான
இறைவ னென்றே புகழ்வேனே.

அறிவுத் தெளிவை அளிக்குமொளி 
அகந்தைச் சூட்டை தணிக்குமொளி 
நெறித வறாத நியாயவொளி
நீருள் நெருப்பாய் மறைந்தவொளி
குறித வறாது பாயுமொளி
கோள்க(ள்) அரச னானவொளி
அறிவ தற்க ரியவொளி
அகத்தில் வாழும் ஜீவவொளி.
      (24.02.2026 11.37 am)

Arasi Palaniappan

unread,
Feb 24, 2026, 3:41:35 AM (2 days ago) Feb 24
to சந்தவசந்தம், M. Viswanathan
அருமை அண்ணா!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-veN6gnXao%3DP7jo751FCWhTMKk%2B3%3Dk5fy7NsuL6Q4eFEg%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
Feb 24, 2026, 9:12:10 AM (2 days ago) Feb 24
to Arasi Palaniappan, சந்தவசந்தம்
மிக்க நன்றி கவிஞரே..

Kaviyogi Vedham

unread,
Feb 24, 2026, 11:17:16 AM (2 days ago) Feb 24
to santhav...@googlegroups.com

Swaminathan Sankaran

unread,
Feb 24, 2026, 11:21:59 AM (2 days ago) Feb 24
to santhav...@googlegroups.com, M. Viswanathan
மிக அருமையான, அழகான கவிதை.
ஜீவ ஒளியின் சாரத்தை முழுமையாக, தெளிவாகக் காட்டியுள்ளீர்கள்.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-veN6gnXao%3DP7jo751FCWhTMKk%2B3%3Dk5fy7NsuL6Q4eFEg%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

Ram Ramakrishnan

unread,
Feb 24, 2026, 11:38:34 AM (2 days ago) Feb 24
to santhav...@googlegroups.com
அற்புதம் திரு. மீ. வி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 24, 2026, at 11:22, Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:



M. Viswanathan

unread,
Feb 24, 2026, 1:08:43 PM (2 days ago) Feb 24
to Santhavasantham
அன்புக் கவிஞர் பெருமக்களின் கருத்துக்கு மகிழ்ச்சி. நன்றி.

அன்பன்
மீ. விசுவநாதன்


Parthasarathy S

unread,
Feb 24, 2026, 9:48:50 PM (2 days ago) Feb 24
to santhav...@googlegroups.com
ஆழமான கருத்து, அழகான வரிகள்,  அருமை அருமை.

S. Parthasarathy

+91 98441 24542

Reply all
Reply to author
Forward
0 new messages