கோடைக் காலம் கொடியதம்மா
(அறுசீர் ஆசிரிய விருத்தம் - மா மா காய்)
அலைநீர்க் கடலின் களியாட்டம்
… அலர்சேர் பொழிலின் அணித்தோற்றம்
ஒலிசேர் குயிலின் அரங்கேற்றம்
… உவப்பாய் இவைபோல் கொடுத்தாலும்
குலவும் காலம் குறைந்திடவும்
… குளிர்கா லம்தான் நெருங்கிடவும்
கொலைவாள் போல்நாள் அறுப்பதனால்
… கோடைக் காலம் கொடியதம்மா.
(குலவும் = உல்லாசமாகத் திரியும்)
- இமயவரம்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/26CE5272-D230-4B93-B478-B84E0B8CF003%40gmail.com.
--
ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 417-வது திருநாமமான ருது: என்பது காலத்தைக் குறிக்கும்; இதன் பொருள்: பருவங்கள் வடிவிலான காலமாக இயற்கையில் இருப்பவன் ; பக்தர்களுக்கு உயர்ந்த ஆன்மிக நன்மைகளைத் தரும் பக்குவக் காலமாகவும் இருப்பவன். எனவே, கோடைக் காலத்தைக் கொடிது என்று எவ்வாறு கொள்வது? அவனே ‘பயக்ருத்’ (அச்சத்தைக் கொடுப்பவனாகவும்), ‘பயநாஶன:’ (அச்சத்தைத் தவிர்ப்பவனாகவும்) இருக்கிறான். கோடையாய் இருப்பவன், தொடர்ந்து உலகம் வாழப்பெய்யும் மழையாகவும் இருப்பான்.
ஸௌந்தர்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNQjTcvtSDnDxZpO2NRxZX1%2BSxyvEs4J6daoGOUiO%2BJZw%40mail.gmail.com.